எனக்கு இன்ஸ்பிரேஷன் இசைதான் - ராபின் சர்மா
Pinterest/robin sharma |
அவர் ஒரு வழக்குரைஞர். ஆனால் திடீரென தன் வேலையைக் கைவிட்டு சுயமுன்னேற்ற பேச்சாளர் பிளஸ் எழுத்தாளராக மாறுகிறார். முதல் நூல், அறிமுகமில்லாதவர் என்பதால், தானே அச்சிடுகிறார். அவரது அம்மா அதனை திருத்துகிறார். முப்பது வயதில் அவர் எழுதிய அந்த நூல் தி மங் ஹூ சோல்டு ஹிஸ் ஃபெராரி என்ற நூல்.
மெகா வெற்றி அந்த நூலுக்குப் பிறகு அந்த எழுத்தாளர் திரும்பிப் பார்க்க நேரமில்லை. இதுவரை 15 நூல்களுக்கு மேல் எழுதிய சாதனையாளர். ஆம். ராபின் சர்மாவைத்தான் மேலே குறிப்பிட்டேன். இவர் எழுதிய பதினைந்து நூல்கள் 75 க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகி உள்ளது.
வழக்குரைஞராக இருந்தீர்கள். திடீரென சுயமுன்னேற்ற பேச்சாளர் பிளஸ் எழுத்தாளராக மாற்றம் எப்படி சாத்தியமானது என்று சொல்லுங்களேன்.
நான் வெற்றிபெற்ற வழக்குரைஞர்தான். ஆனால் என் பணியில் எனக்கு திருப்தியில்லை. உள்ளே ஒரு வெறுமையான சூழ்நிலை. அப்போது தத்துவார்த்தமான சிந்தனைகளையும் அனுபவங்களையும் தேடி வந்தேன். அதுவே நான் தேடிய விஷயங்களை எனக்கு கண்டுபிடிக்க உதவின. அதை விவரித்து எழுதியதுதான் என்னுடைய முதல் நூல்.
உங்கள் அப்பா இந்தியர். நீங்கள் கனடாவின் கிழக்கு கடற்கரையோடரம் பிறந்து வளர்ந்தவர். உங்களுடைய தந்தை வழியில் இந்திய தொடர்புகளை எப்படி புரிந்துகொள்கிறீர்கள்.
என் தந்தை காஷ்மீரைச் சேர்ந்தவர். நாங்கள் கனடாவில் வாழ்ந்தாலும் தத்துவம் சார்ந்த நூல்களே வீட்டின் வாசிப்பறையை நிறைத்திருந்தன. இந்தியாவின் பல்வேறு கலாசாரப் பன்மை எனக்கு மிகவும் பிடித்தமானது. மும்பைக்கு வரும்போதெல்லாம் இந்த கலாசாரத்தன்மையை சுதந்திரமாக, தனித்துவமாக உணர்கிறேன்.
தலைவர்கள் உருவாக்கப்படுகிறார்கள் அல்லது பிறக்கிறார்கள் இரண்டில் நீங்கள் எதனைத் தேர்ந்தெடுப்பீர்கள்.
இரண்டுமேதான். இயல்பாகவே தலைமைத்துவ பண்புகளைக் கொண்டவர்கள், தங்களை சூழ்நிலைகள் மற்றும் அனுபவங்கள் மூலம் பாலீஸ் ஆகிறார்கள். அப்படி இல்லை என்றாலும், உங்களை அதற்காக பயிற்சிகள் மூலம் தயாரித்துக் கொள்ள முடியும். நான் எழுதிய புதிய நூல் இதைப்பற்றிப் பேசுகிறது. சிறிய பழக்கம், அதிகாலையில் எழுதுவது. இப்படி எழுந்து திட்டமிட்டு சாதித்தவர்களைப் பற்றி எழுதி உள்ளேன். இதுவே உங்கள் வாழ்க்கையே பெருமளவு பிரமிப்பாக மாற்றும்.
ராபின் சர்மாவின் புத்தகங்கள் எங்களுக்குப் பிடிக்கும். ஓகே, ஆனால் ராபின் சர்மாவுக்கு இன்ஸ்பிரேஷன் எது?
எனக்கு என் வாசகர்களின் வெற்றிக்கதைகள்தான் பிடிக்கும். வெற்றிபெறுவதற்கான மாற்றங்களை துணிச்சலாக செய்வதே பெரிய விஷயம். ஒரு நூலை எழுத நான்கு ஆண்டுகளை செலவழிக்கிறேன். எனக்கு பிடித்தமானது கலை, பயணம், ஆன்மாவை செலவிட்டு எழுதிய நூல் அவ்வளவுதான்.
நீங்கள் உங்கள் நூல்களிலும் தொடர்ச்சியாக லேடி காகா, ஜே இசட், யூ2 மைல்ஸ் டேவிஸ் ஆகியோரை குறிப்பிட்டு வருகிறீர்கள். இசை உங்கள் வாழ்க்கையில் முக்கிய பங்காற்றுகிறதா?
நிச்சயமாக. என் கிரியேட்டிவிட்டிக்கான எரிபொருளே இசைதான். உன் சந்தோஷம், உற்சாகம் அனைத்திற்குமான ஊக்கப்பொருளே இசைதான்.
தமிழில்:ச.அன்பரசு
நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா(டெபாரதி சென்)