சமரசம் செய்பவர்கள் எழுத்தாளராக முடியாது







Related image
எழுத்தாளர் பென்யாமின்










நேர்காணல்

சமரசம் செய்துகொண்டால் நிச்சயம் நான் எழுதியிருக்க முடியாது





எழுத்தாளர் பென்யாமின்




Image result for benyamin
தி இந்தியன் எக்ஸ்பிரஸ்








மலையாள எழுத்தாளர் பென்யாமின், ஜாஸ்மின் டேஸ் என்ற நூலுக்காக ஜேசிபி பரிசை 2018 ஆம் ஆண்டு வென்றிருக்கிறார். இந்த நூல் தந்த தைரியத்தில் தன் வேலையைக் கூட விட்டு விட்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ஏறத்தாழ 21 ஆண்டுகளாக செய்து வந்த வேலையைக் கைவிடச்செய்த தன்னம்பிக்கை இந்த நூல் பென்யாமினுக்கு கொடுத்திருக்கிறது.

அரபு வசந்தத்தை பின்புலமாக வைத்து எழுதிய உங்கள் நூலில் நீங்கள் சொல்லவருவது என்ன?

நீங்கள் எழுதுவது என்பது எதற்காக என்ற முடிவுக்கு வரவேண்டும். ஏனெனில் எதற்கு நாவல் அதில் நீங்கள் கூறுவது என்ன? நாம் சமூகத்திற்கு என்ன சொல்ல வருகிறோம் என்பதற்கான ஊடகமே எழுத்து.  நாவல், சிறுகதை, குறுநாவல் இந்த வடிவங்கள் கூட அதற்காகத்தான். ஷியா, சன்னி ஆகிய பிரச்னைகள் இதில் உள்ளதா என்று தெரியவில்லை. எனக்கு இருபிரிவிலும் நண்பர்கள் உண்டு. நாவலில் அரபு தேசத்தின் அரசியல் குறித்து இந்நூலில் பேசியுள்ளேன்.

ஏறத்தாழ உங்கள் நாவல் மூலம்தான் பஹ்ரைனிலிருந்து கேரளத்திற்கு வந்திருக்கிறீர்கள். 

நான் முதலில் எழுதிய கோட் டேஸ் என்பது சவுதி அரேபியா, அரபு அமீரகம் ஆகியவற்றில் தடைசெய்யப்பட்டது. நான் அவர்களுக்கு எதிராக எதையும் எழுதவில்லை. ஆனால் அவர்கள் அப்படி கருதினார்கள் என்பது எனக்கு விநோதமாக படுகிறது. எனவே பிறர் சென்சார் செய்வதைவிட நானே சென்சார் செய்து எழுதிவிடுவது சரியெனப்பட்டது. எனக்கு பிடித்த நான் சொல்லும் உண்மையைச் சொல்ல முடியவில்லையென்றால் நான் எழுதி என்ன புண்ணியம்? என்ன பிரயோஜனம்? சொல்லுங்கள். பஹ்ரைனில் வாழ்ந்தால் நான் நினைத்ததை எழுத முடியாத சூழல் என்று வந்தபோது, அங்கு பார்த்த வேலையை விடுவது கட்டாயமானது. என்னால் சமரசம் செய்துகொண்டு எழுத முடியாது என்று உறுதியாக முடிவானபோது, வேலையை விட்டு விலகினேன். கேரளத்திற்கு வந்துவிட்டேன்.


சர்வாதிகார கட்டமைப்பிற்குள் வாழ்வது அடிப்படைவாத நாட்டில் வாழ்வதை விட சிறந்தது என்று நாவலில் கூற முயற்சிக்கிறீர்களா?

இது மிகவும் சிக்கலான ஒன்று. சர்வாதிகாரத்திற்குள் இருக்கும்போது நீங்கள் நிறைய விஷயங்களை இழக்க நேரிடும். பல விஷயங்களை மக்களுக்கு கூறுவதற்கு உங்களுக்கு அனுமதி இருக்காது. எகிப்து, துனிசியா, லிபியா ஆகிய நாடுகளில் நிலைமை படுமோசமாக உள்ளது. இந்நிலையில் நீங்கள் இதனை எப்படி தேர்ந்தெடுப்பீர்கள்? இது என்னுடைய சொந்த வாழ்க்கையில் உணர்ந்த விஷயங்கள்தான்.

நன்றி: தி இந்து(எலிசபெத் குருவில்லா)