லவ் இன்ஃபினிட்டி: காதல் சொல்லிப் பழகு!



You're Engaged! Now What?
weddingchicks.com




லவ் இன்ஃபினிட்டி
குமார் சண்முகம்
தொகுப்பு: இனியன், கவிதவன் பிரகாஷ்


கவிதைகள் பற்றி பேசினேன் அல்லவா? அதுதான் என்னை உயிரோடு வைத்திருப்பதாக வெகுநாள் நினைத்திருந்தேன். ஆனால் அப்படி அல்ல; அம்மா போட்ட சோறுதான் என்னை அப்படி நினைக்க வைத்திருந்தது என பின்னால் தெரிந்துகொண்டேன். கவிதை எழுதுகிறவர்கள் கண்டிப்பாக காதலிக்கவேண்டும் என்பது என்ன விதியோ? நான் என் மாமன் பொண்ணு பிரியா முதற்கொண்டு காதலிக்க முயன்று தோற்றுக்கொண்டே இருந்தேன்.

ஒருத்தரை பிடித்திருக்கிறதென சொன்னால், அவர் என்ன சாதி என்பது முதல் கேள்வி. அடுத்து, அவர் சொந்த சாதி என்றால் பொருளாதாரம் குறுக்கே நந்தியாய் நின்றால் என்ன செய்வது? அப்போது காலேஜில் ஒரே ஆறுதல், ஏடாகூட மூர்த்திதான். காலையில்  பேப்பர் போட்டுவிட்டு வேலைக்கு அசால்டாக வருபவன், படிப்பில் சாதிப்பான். ஆனால் எதுவுமே தெரியாது. சுறுசுறுவென ஓடுவான். நினைத்த நேரத்தில் மோட்டரோலா போனில் ஸ்டோர்மி டேனியல்ஸின் படத்தை மின்னலாக முடுக்கி பார்த்துக்கொண்டிருப்பான். எப்படிடா? அதெல்லாம் அப்படித்தான். என்பான்.

அவனுக்கு முரடன் செந்தில் பழக்கமானதிலிருந்திலிருந்து நிலைமை மாறிக்கொண்டே இருந்தது. சாப்பாட்டு கொண்டுவருவதையே ஒரு கட்டத்தில் மூர்த்தி நிறுத்திவிட்டு ரொட்டி, சோயாசங்க்ஸ் என வித்தியாச உணவுகளை கி.கி. கணக்கில் சாப்பிடத் தொடங்கியிருந்தான். சரி விடுங்க, நாம் அகல்யாவின் கயைப் பார்ப்போம்.


இவளை நினைத்துத்தான் கீழேயுள்ள கவிதைகளை எழுதினேன். வெயிலில் கறுத்துப்போய் எங்கவூரு புள்ளைகள் வாடிக்கிடக்க, இவள் நல்ல பெருங்கூட்டு பொம்பளைதான். உயரமும் வாளிப்பும் காலேஜையே பார்க்க வைத்தது. முகத்தை அல்ல; கழுத்துக்கீழே மட்டும். அப்படி ஒரு செழிப்பு.
 இவளுக்கு நெட்டையன் பிரகாஷிடம் என்ன பிடித்திருந்ததோ, நேரே கரும்பங்காட்டுக்குள் புகுந்து கதகளி ஆடிவிட்டனர். மேட்டர் லேட்டாகத்தான் பிரின்சிபாலுக்கு தெரிந்தது. ?ஃப்ரூப் எங்கே? என தேட, வீடியோ ரெக்கார்ட் பண்ணலீங்க சார் என்று ப்யூன் பரமு சொல்ல, பற்களை நறநறவென கடித்தவர் அவங்க பேரன்ட்ஸை கூட்டிட்டு வரச்சொல்லுங்க என பஞ்சாயத்து நடந்தது. இதைப்பற்றி பேசும்போது மூர்த்தி சொன்ன லாஜிக் அவனை ஐன்ஸ்டீனாகவே நினைக்க வைத்தது.

"கரும்பங்காட்டுக்குள்ள ஃப்ரீயா கசமுசா பண்ண முடியுமா? கை காலெல்லாம் அரிக்காது" என அதிரடி கேள்வி கேட்டான். உடனே அவன் பெண்ணாக நடிக்க ,சிம்பா சரவணன் ஆணாக மாற கிளாசில் ஹோ என்ற சிரிப்புச்சத்தம் உச்சமேறியது. கிருத்திகா மேம் ஏய் சத்தம் போடாதீங்கப்பா, நீங்க பாத்த வேலையில்தான் அங்க பஞ்சாயத்து நடக்குது. ..


இச்சையைப் பார்த்தா இலக்கியச்சாதனை எப்படி செய்வது? இப்போது கவிதை


உனக்குப் பிடித்ததெல்லாம்
எனக்கும் பிடிக்க
ஆரம்பித்து கடைசியில்
என்னையே எனக்குப்
பிடித்துப்போனது.

என்னை காதலிக்கத் தொடங்கியதிலிருந்து
பரிசுப் பொருட்களே வாங்கித்தரவில்லை
என்கிறாய்
வருந்துகிறேன்.
உன்னை இந்த உலகில் சிறந்த 
பரிசு எதையும் பார்க்கவில்லை என்பதற்காக!

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு
என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.

ஒவ்வொரு நொடியிலும் உனை சந்திக்கும் ஒவ்வொரு 
முறையும் உன் மீதுள்ள காதல் 
விஸ்வரூபமெடுத்துக் கொண்டுதான் செல்கிறதே!


எதிலும் நான்தான் முதல் என்றாய்.
ஒரு முத்தம் என்றேன்
ச்சீய் என்றாய்
அடடா முத்தத்திற்கு பதில் இன்னும்
கொஞ்சம் வெட்கத்தை கேட்டிருக்கலாமோ!


அன்பே 
உனக்கு தாஜ்மஹால் 
கட்டமாட்டேன்
தாலிதான். 

என் இதயத்துடிப்பின் 
நானோ இடைவெளியிலும்
மறக்க முடியாது 
உன்னை!


எனக்கு எல்லாமே நீதான்!
நீ இல்லாத ஒவ்வோர் நாளும்
தீதான். 

நோட்டை மைதிலியிடம் கொடுத்தேன். அவள் மோகனாவிடம் கொடுத்திருக்கிறாள். இப்போது பாருங்கள். பேப்பரில் யாரைக் காதலிக்கிறாய். என்னிடம் மட்டும் சொல் என்று கேட்கிறாள் மோகனா! என்ன பதில் சொல்லட்டும் மை டியர் மைத்து! 

(காதல் சொல்வேன்)