நாவலின் வடிவம் வேறு சினிமாவின் வடிவம் வேறு




சாத்கூன் மாஃப், ஹேப்பி நியூ இயரில் நடித்த விவான் ஷா இப்போது நாவல் ஆசிரியராக மாறியிருக்கிறார். கொலை குறித்த மர்மங்களைக் கொண்ட லிவிங் ஹெல் என்ற நூலை பெங்குவின் பிரசுரித்துள்ளது. அதுபற்றி விவானிடம் பேசினோம்.


இந்த நாவலை எழுத உங்களைத் தூண்டியது எது? 

நான் சிறுவயதிலிருந்து துண்டு துக்காடவாக எழுதிக்கொண்டிருக்கிறேன். முதலில் நாடகங்கள் சிலவற்றை எழுதினேன். பின்னர், கட்டுரைகளுக்கு நகர்ந்தேன். நான் இலக்கியம் படித்தவன் என்பதால் இது எளிதாக சாத்தியமானது. நான் கலைப்படைப்புகளை உருவாக்க பேனாவும் பேப்பரும் இருந்தாலே போதும்.


சாத் கூன் மாஃப் படத்தின் ஆக்கத்திலும் பங்களித்திருக்கிறீர்கள். அதோடு எட்கர் ஆலன்போவின் கதைகளை நாடகமாக்கிய திறமையும் கொண்டவர். இருண்ட கதைகள் ஏன் உங்களுக்கு பிடித்தமானதாக இருக்கிறது. 


காரணம், நான் தொடக்கத்தில் கற்ற படித்த இலக்கியங்கள் நேர்மறையான தன்மை கொண்டவை அல்ல. அறிவியல் ஆய்வாளன் கண்டுபிடித்த ஆய்வு உண்மையைப் போலவே கலைஞனும் உண்மையைத் தேடவேண்டும். நம் வாழ்க்கையைப் பாருங்கள். அவ்வளவு எளிதில் நேர்மறையான விஷயங்களை நீங்கள் அடையாளம் கண்டுவிட முடியாது. கலை என்பது ஆன்மிக ரீதியான குணப்படுத்துதலைக் கொண்டதாக நான் நினைக்கிறேன்.


நாவலை சினிமாவுக்கு ஏற்றமாதிரி மாற்ற முடியும் என நினைக்கிறீர்களா?

நிச்சயமாக இல்லை. நான் எழுதியது முழுக்க நாவலுக்கான பிரேம்களை அமைத்து எழுதியுள்ளேன். கதை எழுதியுள்ளது, அதன் விதம் எல்லாம் எழுத்துக்கான வகையில் தான் உள்ளது. சினிமாவுக்கான நோக்கில் எழுதவில்லை. நாவலைப் படித்து ஒருவர் ஆர்வமாக சினிமா செய்ய முன்வந்தால் அவருக்கு நான் உதவுவேன்.


அடுத்து எழுத உள்ளது?

பேய்க்கதைகளை எழுதி பதிப்பித்ததை நூலாக மாற்ற உள்ளேன். அடுத்து, லிவிங் ஹெல் என்ற இந்த நாவலின் அடுத்த பாகத்தை எழுத முடிவெடுத்துள்ளேன். 

நன்றி: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - இன்டல்ஜ்(சிமார் பாசின்)


பிரபலமான இடுகைகள்