சீஸ் டேட்டா!



Image result for american cheese
target





ஃபிரான்ஸ் நாடு, உலகிலேயே சீஸ் தயாரிப்புக்கு புகழ் பெற்றது. தோராயமாக 300 வகை சீஸ்களை தயாரித்து வருகிறது. பர்கருக்கு பயன்படுத்துகிறார்களே அவ்வகை சீஸின் பெயர் ஃபிரோமேஜ் ஃபிரான்காய்ஸ். இதில் ஆரஞ்சு சுளை போன்று வசீகரிக்கும் அமெரிக்க சீஸ் என்பது தனிப்பட்டது.

பீட்ஸா, பர்கர் சாப்பிட்டுப் பழகியதால் இன்று இந்தியர்களே எக்ஸ்ட்ரா சீஸ் டாப்பிங்க்ஸ் கேட்டுவாங்கி சாப்பிட்டு பில் கொடுக்கிறார்கள். அப்போது அமெரிக்கர்கள் மட்டும் சும்மாயிருப்பார்களா?  ஜூன் 2018 இல் மட்டும் 840 பவுண்டுகள் அளவிலான சீஸை காலி செய்திருக்கின்றனர். இந்த ஆண்டின் ஜனவரியில் அதன் அளவு 805 பவுண்டுகளாக உள்ளன. ஒரு அமெரிக்கர் நான்கு பவுண்டுகள் சீஸ்களை லபக்குகிறார்.

கடந்த ஆண்டின் அமெரிக்க சீஸ் மார்க்கெட் மதிப்பு, 2.77 பில்லியன் டாலர்கள். 

கிராஃப்ட் சிங்கிள் எனும் சீஸ் பிராண்டை அமெரிக்கர்களில் 40 சதவீதம் பேர் விரும்பி வாங்குகின்றனர்.

கடந்த ஆண்டு பதப்படுத்தப்பட்ட சீஸ் விற்பனை 1.6% அளவுக்கு குறைந்தது.

அரைமணிநேரத்திற்கு குறைவான நேரத்தில் 65.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சீஸை வெப்பப்படுத்தினால், அது பதப்படுத்தப்பட்ட சீஸ் என்று எஃப்டிஏ வரையறுத்துள்ளது.


47 சதவீதம் உற்பத்தியாகும் சீஸ் அனைத்துமே பதப்படுத்தப்பட்ட சீஸ் வகைதான்.

கடந்தாண்டில் அமெரிக்கா ஏற்றுமதி செய்த சீஸ் அளவு 3 லட்சத்து 49 ஆயிரம் மெட்ரிக் டன்கள். ஏறத்தாழ 805 மில்லியன் டன்கள் சீஸை அமெரிக்கர்கள் உபரியாக தயாரித்து பாதுகாத்து வைத்துள்ளனர். இது ஜனவரி 2019 நிலவரம்.

அமெரிக்க சீஸ் பாக்கெட்டில் மொத்தம் 64 துண்டுகள் இருக்கும்.

நன்றி; க்வார்ட்ஸ்