இளைஞன் தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு திருமணம் செய்ய பெண் தேடினால்....
மேரேஜ் வைப்ஸ் சபரீஷ், மகிமா director - harish வைரலி தமிழ் யூட்யூப் சேனல் ஒரு மணி நேரத்தில் பார்த்துவிடக்கூடிய சிறிய வெப் படம். முதல் காட்சியில் சபரி, தன்னுடைய நிறுவனத்தின் உரிமையாளரிடம் வேலையை விட்டு நின்றுகொள்வதாக கடிதம் கொடுக்கிறான். அந்த நேரத்தில் அவனுக்கு பெண் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். வீட்டில் அம்மா மட்டும்தான் இருக்கிறார். அவருக்கு மகன் மீது பிரியம். சபரிக்கு பள்ளி, கல்லூரி, அலுவலகம் என சக்கரம் போல சுற்றும் கடிகார வாழ்க்கை போரடிக்கிறது. எனவே, அதில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்கிறான். பெண் பார்க்கும் சடங்கு எல்லா இடத்திலும் ஒன்றுபோல்தான். பையனது வேலை, சம்பளம், சொத்து என அனைத்தையும் கேட்கிறார்கள். இதில் சபரிக்கு வேலை இல்லை என்றதும் பெண் பார்க்கும் தரகர்கள் அனைவரும் போனை உடனே துண்டிக்கிறார்கள். அந்த நேரத்தில் ஒரு பெண் மட்டுமே அவனை சந்திக்க வருகிறாள். அவள்தான் மகிமா. உண்மையில் அவள் ஏன் சபரியை சந்திக்க விரும்பினாள் என்பதுதான் இறுதிக்காட்சி. தமடா மீடியாவின் யூட்யூப் சேனல்களில் ஒன்றுதான் வைரலி தமிழ். நடித்துள்ள நடிகர்கள் சபரி, மகிமா என இருவருமே சிறப்பாக நடித்த...