இடுகைகள்

உயிர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கலவரம் போர் என இரண்டிலும் தப்பி பிழைப்பது எப்படி?

படம்
எப்போதுமே ஆபத்து நேரும் என விழிப்புணர்வோடு இருங்கள் என ஹூவாய் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் நிறுவனர் ரென் கூறியுள்ளார். அப்படியான விழிப்புணர்வு சாதி, மதத்தால் உடைந்து நொறுக்கிப்போயுள்ள பெயரளவு ஜனநாயகம் கொண்ட இந்தியாவுக்கும் பொருந்தும். இங்கு எப்போது எந்த மேல்சாதிக்காரன், பழங்குடிகளை, தாழ்த்தப்பட்டவர்களை, தலித்துகளை தீ வைத்து எரிப்பான், அந்த இன பெண்களை வல்லுறவு செய்து கொன்று மரத்தில் தூக்கிக்கட்டுவான் என்று தெரியாது. பாதிக்கப்பட்டவர்களே குற்றவாளிகளாக்கி தண்டனை வழங்குவது இந்திய காவல்துறையின் தனிச்சிறப்பு. இப்படியான பண்பட்ட தேசத்தில் நீங்கள் விழிப்புணர்வோடு இருந்தால் மட்டுமே உங்களைக் காத்துக்கொள்ள முடியும். கூடவே சொத்துகள், குடும்பம் ஆகியவையும் அழியாமல் காக்கலாம். வாட்ஸ்அப் வழியாக மதவாத அரசு சுயமாகவே தனித்தனி குழுக்களை வைத்து போலிச்செய்திகளை பரப்பி வருகிறது. எனவே, இதைக்குறித்து அறிந்து கொண்டு கலவரத்தில் சிக்காமல், வீடு, தொழிற்சாலை, கடை எரிக்கப்படாமல் பார்த்துக்கொள்வது அவசியம். இந்தியாவில் இயற்கை பேரிடர்களை, மதவாதிகள் உருவாக்கும் பேரிடர்களே அதிகம். எனவே, விழிப்போடு மீதமுள்ள நேர்மையான ஊடகங...

பிழைத்திருப்போம் - எங்கே செல்லும் இந்தப்பாதை?- தங்குவதற்கான இடம், அவசியமான பொருட்கள்

படம்
    இறுதிப்பகுதி     பிழைத்திருப்போம் எங்கே செல்லும் இந்தப்பாதை? பேரிடர், கலவரம், வதந்தி, பொய் வழக்கு என எதுவாகவேண்டுமானாலும் இருக்கலாம். நிம்மதியாக இருக்க தலைக்கு மேலே கூரை வேண்டும். அதாவது தங்குவதற்கு இடம்வேண்டும். அது பாதுகாப்பாக இருக்கவேண்டும். அதேசமயம் அதற்கான செலவும் குறைவாக இருக்கவேண்டும். இடங்களை முன்னமே கண்டுபிடித்து வைத்துக்கொள்ளுங்கள். தூரம் போகும் தூரம் குறிப்பிட்ட தொலைவில் இருக்கவேண்டும். வண்டியில் நீங்கள் போய்க்கொண்டே இருக்கமுடியாது அல்லவா? பெட்ரோலும் வண்டியில் குறைவாக இருக்கும்போது ஏதாவது ஒரு இடத்தை உறுதி செய்து அதை நோக்கி சென்றே தீரவேண்டும். அல்லாதபோது உங்கள் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகிவிடும். பல்வேறு இடங்கள் ஒரு கெட்ட விஷயம் நடக்கும்போது, வீட்டின் கதவை மட்டும் திறக்காது, ஜன்னல்களையும் திறந்துகொண்டு வரும் என்பார்கள். மோசமான விஷயங்கள் நடைபெறும்போது, உடனே தப்பிக்க நான்கு திசைகளுக்கு நான்கு இடங்கள் என தயாரித்து வைத்துக்கொண்டால் உதவியாக இருக்கும். ஒரே இடத்தை மட்டுமே நம்பியிருக்க முடியாது. அது ஆபத்தும் கூட. தனிக்குரல் கலைஞரான குணால் கம்ரா, தனது பகடி...

கலவரச்சூழலில் தற்காப்பை உறுதிசெய்துகொள்வோம்!

படம்
  பாதுகாப்பு மனநிலை தீவிரவாத தாக்குதல் நடந்தாலும் அதை தடுக்க சில பலவீனமான அரசுகளால் முடியாது. பதிலுக்கு அரசை கேள்வி கேட்கும் சமூக செயல்பாட்டாளர்களை பிடித்து வழக்கு போட்டு சிறையில் அடைப்பார்கள். அவர்களின் விமர்சனங்களில் உண்மை இருப்பதுதான் காரணம். இது பாதுகாப்பான மனநிலை அல்ல. பேரிடர் காலங்களில் ஆயுதங்களை, வெடிமருந்துகளை வாங்கி குவித்துவிட்டால் உயிர் பிழைத்துவிடலாம் என நினைக்காதீர்கள். அது பிழை. மூளையைப் பயன்படுத்தி யோசிக்கவேண்டும். எப்படி அந்த சூழ்நிலையில் எதிர்வினையாற்றுவது என திட்டங்களை வகுக்க வேண்டும். பாதுகாப்பு மனநிலை கருத்தை அமெரிக்க விமானப்படையைச் சேர்ந்த ஜான் போய்டு உருவாக்கினார். வயிறு சொல்லும் அறிவுரை சண்டை போடுவதா, ஓடிவிடுவதா என்பதை உங்கள் புத்தி கூறும். தேவை கூர்மையான திறன் கொண்ட காது. சில நேரங்களில் நாம் அன்புக்குரியவர்களை பாதுகாக்கும் நெருக்கடியில் சிக்குவோம். ஒருவரோடு சண்டை போட்டுக்கொண்டே இன்னொருவரை பாதுகாப்பது எளிதான செயல் அல்ல. தாக்குவது, தப்பி ஓடுவது என இரண்டில் எதையும் நீங்கள் செய்யலாம். விபத்து, தாக்குதல் காலங்களில் மக்கள் பெரும்பாலும் திகைத்து என்ன செய்வதென தெரிய...

அப்பா தனது உயிரை தியாகம் செய்து காப்பாற்றிய சிறுமியே மகனின் காதலியாக வந்தால்..... ஃபிளேமிங் ஹார்ட்

படம்
  flaming hearts chinese drama rakutan viki தீயணைப்பு துறை சார்ந்த கதை. நாயகன் ஹூவா ரான். இவனின் தந்தையும் தீயணைப்பு வீரர்தான். கேப்டனாக இருந்தவர், 2000ஆம் ஆண்டு தொழிற்சாலையில் நடந்த விபத்தில் சிறுமியை காப்பாற்ற முயன்று அதில் வெற்றிகண்டு பதிலுக்கு தன்னையே தியாகம்செய்கிறார். அப்படி இறந்துபோனதால், ஹூவா ரான் நிலைகுலைந்து போகிறான். அப்பாவைப் போலவே படித்து தீயணைப்பு வேலைக்கு வருகிறான். தென்கிழக்கு மருத்துவமனையில் எமர்ஜென்சி பிரிவில் உள்ள இளம்பெண் பழக்கமாகிறாள். இருமுறை அவளது உயிரைக் காப்பாற்றுவது ஹூவா ரான்தான். அவளுடைய கடந்த காலத்தில் ஒரு ரகசியம் இருக்கிறது. அது நாயகனின் அப்பா இறப்பு சம்பந்தமானது. அது என்ன என்பதை சீன தொடர் ஜவ்வாக இழுத்து சொல்லுகிறது.  பொதுவாக தீயணைப்புத்துறை சார்ந்த தொடர் என்றால் தேசப்பற்று என மூக்கு சிந்த வைப்பார்கள். ஆனால் இந்த தொடர் தேசப்பற்று, காதல் என எந்தப்பக்கமும் போகாமல் இருபத்து நான்கு எபிசோடுகளில் முடிகிறது. ஆனால் என்ன சொல்லவருகிறது என ஒன்றும் புரியவில்லை. தொடரின் ஒரே பலம், நாயகன் ஹூவா ரானாக நடித்துள்ள சீன நடிகரின் முக வசீகரம்தான். அவருக்கு அடுத்து நர்சாக...

பிறக்கும் உயிர்களுக்கான நோக்கம் - எரிக் எரிக்சன்

படம்
  பிறந்த உயிர்களுக்கு குறிப்பிட்ட நோக்கம் இருக்கிறது. அதை நிறைவேற்றிக்கொள்ளவே உயிர்கள் முயல்கின்றன என உளவியலாளர் எரிக் எரிக்சன் கருதினார். மனிதர்களின் ஆளுமை எட்டு வகையான நிலைகளைக் கொண்டது. இந்த நிலை பாரம்பரியம், சூழல் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டு இயங்குகிறது என்று கூறினார்.   நம்பிக்கை/ அவநம்பிக்கை - ஒரு வயது குழந்தையின் தேவைகள் நிறைவேற்றப்பட்டால் நம்பிக்கை உருவாகிறது. அப்படி நிறைவேறாதபோது அவநம்பிக்கை உருவாகிறது. இந்த அவநம்பிக்கை குழந்தையின் எதிர்கால உறவுகளைப் பாதிக்கிறது.  சுயமான இயக்கம்/ சந்தேகம், அவமானம் - பதினெட்டு மாதம் முதல் 2 ஆண்டுகள் புதிய விஷயங்களை குழந்தை செய்யத் தொடங்குகிறது. ஆனால், செய்யும் செயலில் சந்தேகம், தோல்வியானால் அவமானம் அடைகிறது. வெற்றி, தோல்வி என இரண்டையும் குழந்தை வேறுபடுத்திப் பார்க்கிறது.  செயல்/குற்றவுணர்வு - மூன்று தொடங்கி ஆறு வயது வரை குழந்தை, குறிப்பிட்ட நோக்கத்துடன் செயல்களை செய்யத் தொடங்குகிறது.இந்த காலகட்டத்தில் செய்யும் செயல்களுக்கு தரப்படும் தண்டனை, கடுமையான குற்றவுணர்ச்சியில் தள்ளுகிறது.    செயலூக்கம்/ தாழ்வுணர்ச்சி - ...

பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு வெளியில் நேரும் உயிரிழப்புகளை தடுத்து புலிகளை காக்க முயல்கிறோம் - வீரேந்திர திவாரி

படம்
  வீரேந்திர திவாரி வீரேந்திர திவாரி தலைவர், வைல்ட்லைஃப் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா திவாரி, மகாராஷ்டிராவில் பணியாற்றி வருகிறார். காடுகளின் பாதுகாப்பு, அதில் வாழும் புலிகளின் அழிவு, அதை தடுக்க அமைப்பு செய்யும் முயற்சிகள் பற்றி பேசினோம். உங்கள் அமைப்பின் பங்களிப்பு பற்றி கூறுங்கள். நாட்டின் காடுகளிலுள்ள புலிகளைப் பாதுகாப்பது, அதன் எண்ணிக்கை பற்றிய ஆய்வுகளை செய்வது. இதன் அடிப்படையில் பல்வேறு கொள்கைகளை வகுப்பது ஆகியவற்றை வைல்ட் லைஃப் ஆஃப் இந்தியா அமைப்பு செய்கிறது. அடுத்து, புலிகள் வாழும் நிலப்பரப்பு, அதன் வரைபடம், அழிந்த புலிகளை மீட்பது, அதன் மரபணு சார்ந்த அடையாளம், தேவையான வனத்துறை ஊழியர்களை நியமிப்பது ஆகியவற்றையும் செய்து வருகிறோம். உங்களது பார்வையில் இந்திய மாநிலங்களில் எவை சிறப்பாக செயல்பட்டு வருகின்றன? கடந்த 50 ஆண்டுகளாக, மத்தியப் பிரதேசம், கர்நாடகா, உத்தராகண்ட், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் புலிகளைக் காப்பது தொடர்பாக பல்வேறு ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை முன்னெடுத்திருக்கிறார்கள். புலிகளைக் காப்பதில் உள்ள சவால்கள் என்னென்ன?   சட்டவிரோத வேட்டை, மின்சார வேலி, ...

வெளியில் அழகானவர் உள்ளே உறுமும் விலங்கு!

படம்
  சில பெற்றோர்கள் தங்களுக்கு பெண் பிள்ளை பிறக்கும் என நினைப்பார்கள். ஆனால் ஆண் குழந்தை பிறந்துவிட்டால், என்ன   செய்வது? ஆசையை எதிர்பார்ப்பை விட்டுவிட முடியாது. எனவே, ஆண் பிள்ளைக்கு பெண் பிள்ளை போல உடை உடுத்துவது, தலையில் பூ வைத்து புகைப்படம் எடுப்பது எல்லாம் உண்டு. இதெல்லாம் கொஞ்ச ஆண்டுகள்தான். அப்புறம் ஆண்களுக்கான உடைகளை உடுத்தக் கொடுப்பார்கள். ஆனால் சில பெற்றோர் ஆண் பிள்ளைகளுக்கு பெண் பிள்ளையின் உடைகளைக் கொடுத்து அணிய வைப்பார்கள், விருந்துகளில் பங்கேற்பார்கள். இதனால் பிள்ளைகளின் மனம் என்னவாகும் என்பதை அவர்க ள் யோசிப்பதில்லை. பாலின வேறுபாடு குழப்பம் பிள்ளைகளுக்கு ஏற்படுகிறது. சமூக அழுத்தம் அவர்களை ஆணா, பெண்ணா என இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வற்புறுத்துகிறது. இதில் பெற்றோரின் ஆசை வேறு தனி நெருக்கடியைத் தருகிறது. இதனால் கேலி, அவதூறு ஆகியவற்றை எதிர்கொள்ள வன்முறையைக் கையில் எடுக்கிறார்கள். தொடர்கொலைகாரர்கள் இப்படித்தான் உருவாகிறார்கள். பெரும்பாலும் தாய்கள்தான் ஆண் பிள்ளைகளுக்கு பெண் பிள்ளை போல உடை உடுத்தி பார்த்து மகிழ்கிறார்கள். இதனால் இப்படி வளரும் பிள்ளைகள், அம்மாவை கொல்வ...

மறைந்துள்ள பாலைவன நகரின் பொக்கிஷத்தை எடுக்க நடக்கும் போராட்டம்! - சாண்ட் சீ - சீன தொடர்

படம்
  சாண்ட் சீ - பிரதர் ஹாவோ   சாண்ட் சீ (2018) சீன டிவி தொடர் 53 எபிசோடுகள் ராகுட்டன் விக்கி ஆப் இயக்குநர்கள் – லீ ஸே லூ, மாவோ குன் யூ, சூ ஷி திரைக்கதை எழுத்தாளர்கள் – ஸாங் யுவான் ஆங்க், டாங்க் ஷி சென் அம்மா இல்லாமல் அப்பாவின் அடி, உதைகளை வாங்கி வளர்கிறான் லீ சூ, பல்கலைக்கழக தேர்வை எழுதவெல்லாம் விருப்பமில்லாத மனநிலை. இவனுக்கு இருக்கும் ஒரே தோழன், சூ வான். பணக்காரன். இவன் நன்றாக படிப்பவன். ஆனால் பெரும்பாலான நேரங்களில் தனது பள்ளியில் மாணவிகளை படமெடுத்து வைத்து, யாரோடு டேட்டிங் போகலாம் என யோசிப்பவன்.   அடுத்து, ஹாவோ. இவன் பள்ளியில் படிப்பவனல்ல. இறந்தவர்களுக்கு சடங்கு செய்யும் நிறுவனத்தை ஹாவோவின் பாட்டி நடத்திக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஹாவோ ஆதரவாக இருக்கிறான். இவனது வேலை சட்டவிரோதமாக போதைப்பொருட்களை விற்பது.   பிறகு பணக்காரன் பள்ளி மாணவனான சூ வானை ஏதோ ஒருவகையில் மிரட்டி காசைப் பிடுங்குவது… இந்த மூன்றுபேர்களின் நட்புதான் தொடரின் முக்கியமான அம்சம். இது கடந்த காலத்தில் நட்பாக இருந்த அயர்ன் ட்ரையாங்கில் என்ற மூவரை நினைவுபடுத்தும் விதமாக உள்ளது.   ...

அவசர சிகிச்சையில் நோயாளிகளிடம் கேள்வி கேட்கும் முறைகள்!

படம்
    மூச்சு விடுவதில் பிரச்னை, கண்பார்வை மங்கலாவது, சிறுநீர் வெளியேற்ற சிரமப்படுவது, சமநிலை குலைந்து மயக்கமாவது, உணர்வுநிலை தேய்வுநிலை அடைவது, கவனம், சிந்திப்பது தேக்கம் பெறுவது ஆகியவற்றை   அவசர சிகிச்சையில் சேர்க்கலாம்.   காய்ச்சல் குழந்தைகளுக்கு காய்ச்சல் அடிக்கடி ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளில் ஒன்று. ஆனால் பெற்றோர் குழந்தைக்கு வரும் காய்ச்சலைப் பார்த்து பதற்றமாவார்கள். வைரஸ், பாக்டீரியா நோய்த்தொற்று, சிறுநீரகத் தொற்று, நிம்மோனியா, காயங்களால் ஏற்படும் தொற்று, மலேரியா, அறுவை சிகிச்சை செய்த நிலை, புற்றுநோய், ஒட்டுண்ணி, ஆர்த்தரைட்டிஸ்   என பல்வேறு நோய் பாதிப்புகளின் போது காய்ச்சல் ஏற்படும்.     ரத்தப்போக்கு உடலில் நடைபெறும் ரத்தப்போக்கு சிலசமயங்களில் வலி அல்லது வலியற்ற தன்மையில் இருக்கலாம். காயங்களிலிருந்து ரத்தம் வெளியேறுதல், யோனியிலிருந்து ரத்தம் வெளியாகுதல், சிறுகுடலில் ரத்தகசிவு, ரத்தசோகை,   வான் வில்பிராண்ட் நோய் (ரத்தம் உறையாத நிலை) ஆகியவற்றின் மூலம் ரத்தம் உடலில் இருந்து வெளியேறும். சமூக காரணிகள் குடிநோயாளிகள், வீடற்றவர்கள், ஆத...

செத்தும் பிழைத்து வந்து எதிரிகளை அடித்து நொறுக்கும் அதிசாகச நாயகன்! யமுடிக்கி மொகுடு - சிரஞ்சீவி, ராதா, விஜயசாந்தி

படம்
  யமுடிக்கி மொகுடு சிரஞ்சீவி, ராதா, விஜயசாந்தி இயக்கம் - ராஜ் பினி செட்டி தமிழில் அதிசயப்பிறவி என்ற ரஜினிகாந்த் நடித்த படம் என நினைக்கிறேன். அதைத்தான் தெலுங்கில் ரீமேக் செய்து சிரஞ்சீவி அட்டகாசமாக நடித்து படமாக்கியிருக்கிறார்கள்.  சென்னையில் வாழும் காளி என்ற ரௌடிக்கும், சட்டவிரோத தொழில் செய்யும் இரு பணக்கார ர்களுக்கும் நேரும் பிரச்னைதான் படத்தில் வரும் முதல் பகுதி. இதில் பணக்கார ர்கள் விரோதிகளாக இருந்து பிறகு நண்பர்களாகி காளியை லாரி மூலம் விபத்துக்குள்ளாக்கி கொல்கிறார்கள். பிறகு, காளியின் ஆன்மா எமலோகம் சென்று தனக்கான நீதியைப் பெற்று திரும்ப வந்து எதிரிகளை அழிப்பதுதான் கதை.  இன்னொருபுறம், கிராமத்தில் பெரும் சொத்துள்ளவரின் வாரிசு, பாலு. இவரது சித்தப்பா. அதாவது பாபாய். பாலுவை பயந்தாங்கொள்ளியாக வைத்துக்கொண்டு அவரது சொத்தை அனுபவித்துக்கொண்டிருக்கிறார். பாலுவின் அம்மா பெரிய வீட்டில் இருந்தாலும் வேலைக்காரி போல வேலைகளை செய்துகொண்டிருக்கிறார். இந்த நிலையில் இறந்துபோன காளியின் ஆன்மா பாலுவின் உடலுக்குள் புகுந்தால் எப்படி இருக்கும்? அதேதான். ரவுசுதான். கூடவே அப்பிராணி பாலுவுக்கு பாவா...

பச்சை விரியனின் தாக்குதலுக்கு பலியாகும் மக்கள்!

படம்
   பச்சை விரியனின் விஷத் தாக்குதல்! இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் பாம்புகளால் மனிதர்கள் கடிபடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அங்கு, 64 பாம்புகள் வாழ்வதாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 15 பாம்பினங்கள் விஷத்தன்மை கொண்டவை. இதில் க்ரீன் பிட் வைப்பர் எனும் பாம்பினத்திலுள்ள பல்வேறு வகை பாம்புகளால் தான் மனிதர்கள் அதிகம் கடிபட்டுள்ளனர். இந்த பாம்பின் விஷத்தை ஹீமோடாக்ஸிக் ( Hemotoxic venom)என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.  கண்ணாடி விரியன், புல் விரியன் ஆகிய பாம்பினங்களை விட க்ரீன் பிட் வைப்பரின் விஷம் கடுமையானதல்ல. காணப்படும் நிலப்பரப்பைப் பொறுத்து பாம்பின் விஷம் மாறுபடுகிறது. மேற்குவங்கம், அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காணப்படும் பாம்புகள் ஒரே இனத்தில் பல்வேறு துணைப் பிரிவுகளைச் சேர்ந்தவை. பாம்புகள் பல்வேறு வகையான விஷத்தன்மைகளைக் கொண்டுள்ளன. ஹீமோ டாக்ஸின் (Hemotoxin) என்பது, சிவப்பு ரத்தசெல்களை அழிக்கிறது. உடலின் இயல்பான ரத்தம் உறைதலைத் தடுக்கிறது. நியூரோடாக்ஸின் (Neurotoxin), மனிதர்களின் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கிறது. மேலும், சைடோடாக்ஸின் (Cytotoxin), உடலி...

உயிரை ஆரோக்கியத்தை காக்கும் சில ஆப்கள்!

படம்
what3words இதனை இலவசமாக தரவிறக்கிக்கொள்ள முடியும். வாழ்க்கையை எட்டு எட்டாக பிரித்துக்கொள்ள சூப்பர்ஸ்டார் சொல்லியிருக்கிறார். இந்த ஆப் 3*3 என பிரித்துக்கொள்கிறது. இதில் உள்ளவர்களுக்கு மூன்று  வார்த்தைகளை அளிக்கிறது. உங்களுக்கு அவசரநிலை என்றால் இதைவைத்து அவர்களுக்கு தகவல் அளிக்கலாம். இங்கிலாந்தில் அதிகம் பயன்படுத்தப்படும் ஆப் இது. இதன்மூலம் ஏராளமான உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறார்கள்.  whatsapp வாட்ஸ்அப்பில் ஏராளமான சில்மிஷங்களை செய்திருப்போம். ஆனால் அதிலும் அவசரகால சங்கதிகள் உண்டு. ஆபத்தான சூழலில் ஒருவரின் சாட் பாக்ஸில் பிளஸ் கீயை அழுத்தி ஷேர் லைவ் லொகேஷன் அனுப்பலாம். அந்த சாட்டுக்கு உரிய நபர் உங்களது இடத்தை குறிப்பிட்ட நேரம் பார்க்க முடியும்.  skinvision ஸ்கின் விஷன் எனும் ஆப்பிற்கு காசு கட்டியே ஆக வேண்டும். இந்த ஆப் உங்களுக்கு தோல் புற்றுநோய் ஏற்பட்டிருந்தால் அதனை கண்டுபிடித்து சொல்லும். பாதிக்கப்பட்ட இடத்தை புகைப்படம் எடுத்து ஆப்பில் அனுப்பவேண்டும். இதனை அவர்கள் சோதித்து என்ன பாதிப்பு என்று சொல்லுவார்கள். இதற்கு 30 நொடிகள் போதும். இந்த முடிவுகளைக் கூட மருத்துவர்கள்தான்...

மறைந்து விளையாடும் விளையாட்டில் உயிர் தப்ப ஓடும் மணப்பெண்! - ரெடி ஆர் நாட் 2019

படம்
  ரெடி ஆர் நாட்  Directors :  Matt Bettinelli-Olpin ,  Tyler Gillett Screenplay :  Guy Busick , Ryan Murphy படம் வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகளைக் கொண்ட படம். பெரிய மாளிகை போன்ற வீடு. அங்கு ஒருவருக்கு திருமணம் ஏற்பாடு ஆகிறது. அந்த வீட்டைச் சேர்ந்த இளைஞனை மணம் செய்துகொள்ளும் பெண், ஆதரவற்றோர் காப்பகத்தில் வளர்ந்து வந்தவள். அவளின் காதலன் பெரும் பணக்காரன். அந்த குடும்பத்தின் வீட்டுக்கு வெளியே உள்ள இடத்தில் மணவிழா நடைபெறுகிறது. அந்த விழாவிற்கு பிறகு அவளை குடும்பத்தினர் அனைவரும் ஒரு இடத்தில் சந்தித்து விளையாட்டு ஒன்றை விளையாடுகின்றனர். கொடூரமான அந்த விளையாட்டு பற்றி தெரியாமல் மணப்பெண் அதில் சிக்கி எப்படி மீண்டு வருகிறாள் என்பதுதான் கதை.  சாத்தானை வழிபடும் குடும்பம். மணவிழாவை எப்படி விளையாட்டு போல மாற்றி மனிதர்களை வேட்டையாடி கொல்கிறார்கள் என்பதை ரத்தம் நமது முகத்தில் தெறிக்கும்படி எடுத்து வைத்திருக்கிறார்கள். படத்தை பார்க்கும் வேகத்தில் நமது அறைக்கே வேறு யாரும் வந்தால் கூட அருகிலிருக்கும் பொருளை எடுத்து பிளந்துவிடலாமா என யோசிக்க வைக்கும் அளவு வன்முறையை ப...