இடுகைகள்

அமுல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியாவின் சாதனைகளைப் பேசும் மின்னூல் இந்தியா 75! - சாதனைகளும் தற்போதைய நிலையும்- அமேஸான் வலைத்தளம்

படம்
  இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளைக் கடந்துவிட்டது. இந்த காலகட்டங்களில் இந்தியாவின் வரலாறு அனைவரும் அறியவேண்டியது முக்கியம். தேசிய நாளிதழ்களில் வெளியான கட்டுரைகளின் மொழிபெயர்ப்பு கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல். டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் இந்தியா 75 என்பதை பல்வேறு சாதனைகளாக அழகுற வடிவமைத்து சிறுசிறு கட்டுரைகளாக வெளியிட்டது. அதுதான் இப்படி நூலை எழுதி தொகுக்க உந்துதல் வழங்கியது. இந்த நூலை வாசிக்கும் ஒருவர் சுருக்கமாக இந்தியா இத்தனை ஆண்டுகளில் சாதித்தது என்ன, தற்போதுள்ள நிலை என்ன ஆகியவற்றை ஓரளவுக்கு உணர்ந்துகொள்ள முடியும். இந்தியாவில் சில நாட்கள் ஒருவர் தங்கினால் நூலு்ம், சில வாரங்கள் தங்கினால் கட்டுரையும், அங்கேயே ஆண்டுக்கணக்கில் தங்கினால் எதையும் எழுத முடியாது என ஓஷோ இந்தியா பற்றிய நூலில் கூறியிருப்பார். அது இங்கு நிலவும் பல்வேறு பன்மைத்துவம், முரண்பாடுகளின் கலவையாக முன்வைத்த கருத்து. நூலில் நாம் அறிந்துகொள்வது இந்தியாவைப் பற்றிய சில கோணங்களே. இது முழுமையானதல்ல. இந்தியா என்பது வெறும் வரைபடம் அல்ல. அது ஒரு மனநிலை. யாரையும் ஆளாத, ஆளும் அதிகாரம் கூட மனதில் எழாத ஆன்மாக்கள் வாழும் இ

பதப்படுத்துதல் முறையைக் கண்டுபிடித்து 160 ஆண்டுகள்!

படம்
  லூயிஸ் பாஸ்டர் அமுல் தாஸா என்ற பால் சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்கப்படுகிறது. 200 மி.லி. பதினைந்து ரூபாய்தான். இதனை காய்ச்சாமலேயே கடையில் வாங்கியவுடனே குடிக்கலாம். மொத்தம் 180 நாட்கள் கெடாது என கம்பெனியினர் சொல்லுகிறார்கள். எப்படி இந்த செயல்பாடு சாத்தியமானது.?  பதப்படுத்துதல்தான். அதன் முன்னேற்றம்தான் இந்த சாதனைக்கு காரணம். பாலில் உள்ள பாக்டீரியாக்களை கொல்லவே அதனை கொதிக்க வைக்கிறார்கள். ஆனால் பல்லாண்டுகளுக்கு முன்னர் இப்படி பாலை கொதிக்க வேண்டுமென யாருக்கும் தெரியாது.  பாலை 60 முதல் 100 டிகிரி செல்சியஸ் வரை கொதிக்க வைத்தால் அதிலுள்ள நுண்ணுயிரிகளைக் கட்டுப்படுத்த முடியும். இந்த முறையை கண்டுபிடித்தவர், பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர் லூயிஸ் பாஸ்டர். இவர், 1822ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் தேதி பிறந்தவர். ஈகோல் நார்மலே சுப்பீரியர் எனும் இடத்தில் படித்தார். படித்து முடித்து தொடக்க பள்ளி ஒன்றில் இயற்பியல் ஆசிரியராக வேலைக்கு சேர்ந்தார்.  1856ஆம் ஆண்டு லூயிஸைப் பார்க்க, உள்ளூர் மனிதர் ஒருவர் வந்தார். அவர் தான் தயாரித்த பீட்ரூட் ஜூஸ்  கெட்டுப்போனதைப் பற்றி சொன்னார். அதனை ஆராய்ந்த லூயிஸ், அதில

சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவில் ஏற்பட்ட பால் தட்டுப்பாடு! - இந்தியா 75

படம்
  பால் பொருட்களில் மிட்டாய் செய்யத் தடை! இந்தியா 75 மற்றும் அமுல் 75 1970ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் ஒரு சட்டம் நடைமுறையில் இருந்தது. காவல்துறை அதிகாரி அங்குள்ள எந்த வீட்டிலும் சென்று சோதனையிட அந்த சட்டம் அதிகாரம் வழங்கியது. அப்படி என்ன அங்கு ஊழல் நடந்துவிட்டது? திடீரென இப்படியொரு சட்டத்தை உருவாக்கி இருக்கிறார்கள் என அனைவருக்குமே தோன்றும். அந்த காலகட்டத்தில் பாலின் தேவை அதிகமாக இருந்தது. அதனை பிற மாநிலங்களுக்கு விற்க அல்லது மிட்டாய்களை, இனிப்புகளை செய்ய தடுப்பதே அரசின் நோக்கம்.  சட்டம் அதற்கெனவே உருவாக்கப்பட்டது. கோடைக்காலத்தில் பால் தட்டுப்பாட்டு ஏற்பட பனீர் அல்லது வேறு வகை இனிப்பு பலகாரங்கள் செய்வதைக் கூட அரசு தடுத்திருந்தது. 1956ஆம் ஆண்டு மேற்கு வங்க அரசு மேற்கு வங்க சன்னா சட்டம் என்பதன் பேரில் பாலில் பலகாரங்களை தயாரிப்பதை தடுத்திருந்தது. 1956ஆம் ஆண்டு பஞ்சாப் அரசு, ஜூன் மாதம் பால் பொருட்களில் ஏதேனும் இனிப்புகளை தயாரிக்கிறார்களா என்பதைக் கண்காணித்து தடுத்த தொடங்கியது.  1969ஆம் ஆண்டு மத்திய அரசு டெல்லி, மீரட், புலந்த்சார் ஆகிய பகுதிகளில் நடைபெறும் திருமண விழாக்களில் பால் பொருட்களில

பால் உற்பத்தியில் இந்தியா சாதித்த வெற்றிக்கதை! - இந்தியா 75

படம்
  இந்தியா 75 கூட்டுறவு நிறுவனங்களின் வெற்றிக்கதை.  குஜராத்திலுள்ள கைரா என்ற மாவட்டமே கூட்டுறவு அமைப்பு முறையில் பால் உற்பத்தியாளர் சங்கங்களை அமைக்க முக்கிய காரணம். இதனை நிர்வாகம் செய்த கேரளத்தை பூர்வீகமாக கொண்ட வர்க்கீஸ் குரியன், ஏழை மக்களை சுரண்டிய பால் நிறுவனங்களை விரட்டியடித்தார். தற்சார்பான பொருளாதாரத்தை அமுல் நிறுவனம் மூலம் சாத்தியப்படுத்தினார். இந்தியா 75 என்ற வரிசையில் அமுலின் கதை முக்கியமானது.  இந்தியா இன்று பால் உற்பத்தி துறையில் முக்கியமான நிறுவனமாக உள்ளது. அதுவும் தனியார் நிறுவனங்களை தாண்டி வெற்றித்தடங்களை பதித்துள்ளது. இந்த நிறுவனம் இப்போது பிஸ்கெட்டுகள், பிரெட், சாக்லெட் என பல்வேறு துறைகளிலும் கால் பதித்து வருகிறது. ஆனால் இதற்கான தொடக்கம் என்பது மிக எளிமையாகவே இருந்தது.  வர்க்கீஸ் குரியன், திரிபுவன்தாஸ் படேல், ஹெச்எம் தலாயா தற்போதைய ஆனந்த் என்ற இடத்தில் உள்ள கிராமங்களில் இருந்து தினசரி 250 லிட்டர் பாலை கைரா மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்கம் பெற்று விற்று வந்தது. ஆங்கிலேயர் காலத்தில் ஏகபோக நிறுவனமாக இருந்தது பாய்சன் டைரி என்ற நிறுவனம். இந்த நிறுவனம் பால் உற்பத்தியாளர்களுக்கு

கள்ளம் இல்லாத மனத்துடன் கலையை வளர்க்க முயல்பவனின் கதை! - கடிதங்கள்

படம்
  கள்ளம் -எழுத்தாளர் தஞ்சை ப்ரகாஷ் அன்பு நண்பர் முருகுவுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? ஆர்ச்சீவ்.ஆர்க் என்ற தளத்தில் பள்ளத்தாக்கு என்ற சிறுகதையைப் படித்தேன். மைதிலி என்ற பெண்ணின் சுதந்திர வாழ்கையைப் பேசுகிற கதை. தஞ்சை ப்ரகாஷின் மொழியில் பெண்கள் தைரியமாகவும், தனித்துவமாகவும் எழுந்து நிற்கிறார்கள். முக்கியமான அம்சம், மைதிலியைப் பெண் பார்க்க வரும் ஆண்கள் பற்றியது.  வர்க்கீஸ் குரியன் எழுதிய  எனக்கும் ஒரு கனவு  நூலை இரண்டாம் முறையாக படித்தேன். குரியன் போன்றவர்களின் அர்ப்பணிப்பு மீதான ஈர்ப்பு எனக்கு குறையவே இல்லை. திரிபுவன்தாஸ் படேலின் பேச்சைக் கேட்டு பணிபுரிய ஒப்புக்கொண்ட வர்க்கீஸின் முடிவு முக்கியமானது. விவசாயிகளை வலுவாக்கிய பொதுத்துறை நிறுவனங்களில் அமுலுக்கு முக்கியமான பங்குண்டு.  1950 முதல் 1988ஆம் ஆண்டுவரை மேலாளர் பதவியில் ரூ.5 ஆயிரத்தை சம்பளமாக வாங்கிக்கொண்டு வேலை செய்தார் என்பது ஆச்சரியமாக உள்ளது. அரசியல்வாதிகளில் சுயநலமாக செயல்பட்ட ஜெகஜீவன்ராம் போன்றோரை நேரடியாகவே விமர்சித்து எழுதியிருக்கிற துணிச்சல் பாராட்டத்தக்கது. குரோடி, ஜெகஜீவன்ராம், நேரு, ராஜீவ்காந்தி, இந்திராகாந்தி ஆகியோ

பால் மனிதர் குரியன்! - வர்க்கீஸ் குரியனின் சாதனை ’அமுல்!’

படம்
வெண்மைப்புரட்சியின் தந்தை வர்க்கீஸ் குரியன்  பிறந்த தினம் இன்று. இன்று பிராந்திய பொருளாதார ஒப்பந்தம் உள்நாட்டு வேளாண்துறையை, பால்துறையை பாதிக்கும் என்று கூறி அதனை தடுக்கின்றனர். இதேபோன்ற சிக்கலை அன்று அமுலின் தலைவரான வர்க்கீஸ் குரியன் சந்தித்தார். அறுபது ஆண்டுகளுக்கு முன்பு நியூசிலாந்திலிருந்தும், ஐரோப்பாவிலிருந்தும் பால் பொருட்கள் இந்தியாவில் இறக்குமதியாகிக் கொண்டிருந்தன. இவை அரசுக்கு உதவினாலும் விவசாயிகளுக்கும் பால் உற்பத்தியாளர்களுக்கும் எந்த ஆதரவையும் வழங்கவில்லை. காங்கிரசின் திரிபுவன்தாஸ் படேலின் ஆதரவில் கைரா மாவட்டத்தில் பல்வேறு ஊக்கமூட்டும் செயல்பாடுகளை குரியன் செய்தார். அனைத்தும் தன்னுடைய மேதமையை உலகிற்கு சொல்வது அல்ல. மக்களுக்கு உதவுவதாகவே அமைந்திருந்தன. கைரா பால் உற்பத்தியாளர் சங்கத்தை திரிபுவன்தாஸ் படேலின் ஆதரவுடன் வர்கீஸ் குரியன் உருவாக்கினார். இன்று அமுல் உலகின் முக்கியமான பால் பொருட்கள் விற்பனை நிறுவனமான உள்ளது. தனியார் நிறுவனம் போல செயல்பட்டாலும் கூட்டுறவு அமைப்பாக மக்களின் நலன்களுக்கானதாக உள்ளது. 1964ஆம் ஆண்டு, பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி கை