இந்தியாவின் சாதனைகளைப் பேசும் மின்னூல் இந்தியா 75! - சாதனைகளும் தற்போதைய நிலையும்- அமேஸான் வலைத்தளம்

 


















இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளைக் கடந்துவிட்டது. இந்த காலகட்டங்களில் இந்தியாவின் வரலாறு அனைவரும் அறியவேண்டியது முக்கியம். தேசிய நாளிதழ்களில் வெளியான கட்டுரைகளின் மொழிபெயர்ப்பு கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல். டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் இந்தியா 75 என்பதை பல்வேறு சாதனைகளாக அழகுற வடிவமைத்து சிறுசிறு கட்டுரைகளாக வெளியிட்டது. அதுதான் இப்படி நூலை எழுதி தொகுக்க உந்துதல் வழங்கியது. இந்த நூலை வாசிக்கும் ஒருவர் சுருக்கமாக இந்தியா இத்தனை ஆண்டுகளில் சாதித்தது என்ன, தற்போதுள்ள நிலை என்ன ஆகியவற்றை ஓரளவுக்கு உணர்ந்துகொள்ள முடியும். இந்தியாவில் சில நாட்கள் ஒருவர் தங்கினால் நூலு்ம், சில வாரங்கள் தங்கினால் கட்டுரையும், அங்கேயே ஆண்டுக்கணக்கில் தங்கினால் எதையும் எழுத முடியாது என ஓஷோ இந்தியா பற்றிய நூலில் கூறியிருப்பார். அது இங்கு நிலவும் பல்வேறு பன்மைத்துவம், முரண்பாடுகளின் கலவையாக முன்வைத்த கருத்து. நூலில் நாம் அறிந்துகொள்வது இந்தியாவைப் பற்றிய சில கோணங்களே. இது முழுமையானதல்ல. இந்தியா என்பது வெறும் வரைபடம் அல்ல. அது ஒரு மனநிலை. யாரையும் ஆளாத, ஆளும் அதிகாரம் கூட மனதில் எழாத ஆன்மாக்கள் வாழும் இடம். நூலை மகிழ்ச்சியுடன் வாசியுங்கள் நன்றி!


நூலை வாசிக்க 


https://www.amazon.com/dp/B09Y3P5ZLS


க்யூஆர் கோடை ஸ்கேன் செய்யுங்க..


அட்டைப்படம் 

Pinterest

அட்டை வடிவமைப்பு 

Canva.com




கருத்துகள்