கடனால் பாதிக்கப்பட்ட விவசாயியை அடையாளம் காண்பது இனி ஈஸி!- நபார்ட் வங்கியின் விவசாயிகளுக்கான தொகுப்பு பட்டியல்(FDI)

 








நபார்ட் வங்கியை கேள்விப்பட்டிருப்பீர்கள். விவசாயத்திற்கான கடன்களை வழங்கிவரும் வங்கி இது. தற்போது பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கான தொகுப்பு பட்டியல் ஒன்றை உருவாக்க உள்ளது. இதன் மூலம் உண்மையில் உதவி தேவைப்படும் விவசாயிகளை எளிதாக அடையாளம் காண முடியுமாம். 

சின்ன டேட்டாவைப் பார்த்துவிடுவோம். 


தேசிய முற்போக்கு கூட்டணி அரசு வழங்கிய கடன் தள்ளுபடி தொகை

ரூ.60 ஆயிரம் கோடி - 2008

2012 - 2013 ஆம் ஆண்டில் கடன் தள்ளுபடியை அறிவித்த மாநிலங்களின் எண்ணிக்கை 13

2019ஆம் ஆண்டு உ.பி அரசு அறிவித்த கடன் தள்ளுபடி தொகை 

36 ஆயிரம் கோடி

2017இல் மகாராஷ்டிர அரசு அறிவித்த கடன் தள்ளுபடி தொகை

30 ஆயிரம் கோடி 


இத்தனை தள்ளுபடி கொடுத்தபிறகுதான் ஒன்றிய அரசுக்கு உண்மை ஒன்று தெரிந்தது. நாம் சரியான ஆட்களுக்குத்தான் கடனை தள்ளுபடி செய்தோமா இல்லையா என்று. பஸ்ஸை விட்டு இறங்கியபிறகு கண்டக்டரிடம் மீதி சில்லறையை வாங்கவே இல்லையே என்பது போலத்தான் இதுவும். இருந்தாலும் அரசு யோசிக்கிறதே, அந்த மட்டில் அதனை பாராட்டித்தான் ஆக வேண்டும். 

கடன் தள்ளுபடி அறிவிப்பை அரசு வழங்கினாலும் கூட 60 சதவீத சிறு குறு விவசாயிகள் இப்பயன்களை பெற முடியவில்லை என நபார்ட் வங்கி செய்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதுவும் கடன் தள்ளுபடி அறிவிக்கத் தொடங்கிய பல்லாண்டுகளாக எந்த பயனும் இல்லாமல் விவசாயிகள் விரக்தியில் காலம் தள்ளியுள்ளனர். 

மகாராஷ்டிராவில் இந்த வகையில் 42 சதவீத விவசாயிகளும், உ.பியில் 47 சதவீத விவசாயிகளும் உள்ளனர். அரசின் குறைந்தபட்ச விலை வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்ட சர்க்கரையை விளைவிக்கும் விவசாயிகள் கூட கடன் தள்ளுபடியை பயன்படுத்திக்கொண்டிருக்கின்றனர். ஆனால் நீர் பாய்ச்சுவதற்கான வசதியின்றி குறைந்த வருமானம் தரும் பயிர்களை பயிரிட்ட விவசாயிகளுக்கு அரசின் கடன் தள்ளுபடி பயன் கிடைக்கவில்லை. 

புதிய தொகுப்பு பட்டியலில் பயிருக்கான காப்பீடு, பருவகால மழை, வெயில் அளவு, சந்தை, அரசின் ஒழுங்குமுறை விற்பனைக் கூட தகவல்கள், மண்ணின் தரம், நிலப்பரப்பின் வெப்பநிலை ஆகியவற்றை பற்றிய தகவல்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ் 





கருத்துகள்