இடுகைகள்

நாய்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வளர்ப்பு பிராணிகளை வளர்க்கும் உரிமையாளர்கள் அதனை புரிந்துகொள்கிறார்களா?

படம்
      pxhere         பதில் சொல்லுங்க ப்ரோ? வின்சென்ட் காபோ வளர்ப்பு பிராணிகளை வளர்க்கும் உரிமையாளர்கள் அதனை புரிந்துகொள்கிறார்களா? மூன்றில் இருபங்கு பேர் புரிந்துகொள்வதாக கூறுகிறார்கள். இதனை தங்கள் பிள்ளைகளை புரிந்துகொள்வதாக கூறும் பெற்றோர்கள் அளவுடன் ஒப்பிட்டு சிலர் கிண்டல் செய்கின்றனர். நாய்கள் இயல்பாகவே பூனைகளை விட எஜமானவர்களின் உணர்ச்சிகளை புரிந்து நடந்துகொள்கின்றன. மேலும் அவை வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு நடப்பதை விட உடல்மொழியால் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டு நடந்துகொள்வதே அதிகம். அவற்றின் குரைப்பு, உடல்மொழி ஆகியவற்றை வைத்தும் அது என்ன சொல்லுகிறது என எஜமானர்கள் கூறுகிறார்கள். இந்த வகையில் பூனையின் உடல்மொழியை 50 சதவீதம் புரிந்துகொள்வதாக அதன் உரிமையாளர்கள் கூறுகி்ன்றனர். வளர்ப்பு பிராணிகள் பேசமுடியாது என்றாலும் குரல் மூலம் அவை தகவல்தொடர்பு கொள்கின்றன.   பாக்டீரியா எங்கெங்கு இருக்கும்?   பாக்டீரியா இல்லாத இடமே கிடையாது. காற்று, நீர், உணவு, நமது தோல், குடல் என அனைத்து இடங்களிலும் உள்ளது. அதிக திறன் கொண்ட மைக்ரோஸ்கோப் மூலம் பார்க்கலாம். இதில் ஆண், பெண் வேறுபாடுகள் கிடையாது. சூழலும் உண

நாய்களை எப்படி புரிந்துகொள்வது? - உடல்மொழி, செய்கைகள்!

படம்
டாக்டர். எக்ஸ் நாய்களைப் பற்றி நமக்கு என்ன தெரியும்? ஏறத்தாழ 50 ஆயிரம் ஆண்டுகளாக நம்மோடு இருக்கும் ஜீவன்களை இன்னும் வாய்பேசாத முடியாத ஆட்களைப் போலவே நடத்துகிறோம். நாய் வாலாட்டினால் உடனே சோற்றுத்தட்டை இழுத்து வைத்துவிட்டு செல்வது தவிர்த்து அதன் தேவை பற்றி நாம் அறிந்தது மிக குறைவு. நாய்கள் நக்குவதற்கு என்ன காரணம்? நாய்கள் தங்களின் தாயையும், எஜமானர்களையும் ஏன் அடிக்கடி பாசமாக பளிச் சென நக்குகின்றன. பாசத்தைக் காட்டுவதற்கும், கவனத்தை ஈர்க்கவும்தான். எனக்கு இப்படித்தான் இரவு நேரத்தில் எங்கள் வீட்டு நாய் விசுவாசம் காட்ட, சுரீர் என முதுகுத்தண்டில் குளிர் ஊடுருவியது போன்று இருந்தது. அட கருமம் புடிச்ச நாயே என்று கத்திய பின்தான் எனக்கு ஆத்திரம் தீர்ந்தது. இதுபோன்ற கோபத்தையும் நான் குறைத்துக்கொள்ள வேண்டும் என முடிவெடுத்துவிட்டேன். பொதுவாக நாய்கள் எஜமானரின் உடலை நக்குவது அவற்றின் மனச்சோர்வினை போக்கும் என்கிறார்கள் வல்லுநர்கள். தங்களின் உடலை நக்குவது, சலிப்பு அல்லது உடல் நோய் காரணம் என்று கூறுகிறார்கள். இடம்பார்த்து படுப்பது நாய்கள் ஓரிடத்தைக் கண்டதும் படுக்காது. அந்த இடத்தைப்

இந்திய தெருநாய்களுக்கு ஆதரவளிக்கும் பெண்மணி!

படம்
வீரா, ராணி, பொங்கி ஆகிய நாய்கள் இன்று அமெரிக்காவிலும் கனடாவிலும் வாழ்ந்த வருகின்றன. இத்தனைக்கும் அவை மதிப்பான உயர்ந்த ரக நாய்கள் கிடையாது. தெருவில் பிறந்து வளர்ந்தவைதான். அமெரிக்காவின் சியாட்டிலில் வாழ்ந்து வந்த ஜெசிகா ஹால்ட்ஸன், தன் வாழ்க்கையில் ஏற்பட்ட சில சிக்கல்களை பயணம் தீர்க்கும் என நம்பினார். அதற்காக இந்தியாவுக்கு வந்து டில்லியில் அறை எடுத்து தங்கினார். சொந்த சோகத்தை மறைக்க முயன்று தோற்ற நேரத்தில் தெருவில் அடிபட்டு அலறும் நாயின் குரலைக் கேட்டார். அந்த நாயை உடனே தூக்கிக்கொண்டு கால்நடை மருத்துவரைப் பார்த்தபோது, அந்நாய்க்கு இடும்பெலும்பு உடைந்திருப்பதோடு, தொற்றுநோய் பாதிப்பும் இருக்கிறது என்று கூறி மருந்து எழுதினார். இந்தியாவில் 30 இலட்சத்திற்கு மேற்பட்ட தெரு நாய்கள் இருப்பதை பின்னர் அறிந்துகொண்டார். தான் காப்பாற்றிய டெல்லி என்ற நாயை தன்னுடனே சிகிச்சை செய்து வைத்துக்கொண்டார். அதன் பெயரிலேயே காப்பகம் ஒன்றை உருவாக்கி செயல்பட்டு வருகிறார். இந்த அமைப்பு 2018 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு, இந்தியாவில் செயல்படும் பிற விலங்கு நல அமைப்புகளுடன் இணைந்து த