இடுகைகள்

சந்திரயான் 2 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிட்ஸ் எக்ஸ்ட்ரா - சந்திரயான் 2 புதிய தகவல்கள்!

படம்
பிட்ஸ் - சந்திரயான் 2  சந்திரயான் 2 விண்கலனில் மூன்று முக்கியப் பகுதிகள் உண்டு. ஆர்பிட்டர், லேண்டர் (விக்ரம்), ரோவர் (பிரக்யான்) ஆகியவையே அவை. இந்திய விண்வெளி ஆராய்ச்சி திட்டத்திற்கு அடித்தளமிட்ட டாக்டர் விக்ரம் சாராபாய் நினைவாக, லேண்டருக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. சந்திரயான் 2 வுக்கான அல்காரிதத்தை முழுக்க இந்தியாவைச் சேர்ந்த அறிவியலாளர்கள் எழுதி உருவாக்கி உள்ளனர். சந்திரயான் 1 போன்று இல்லாமல் சந்திரயான் 2 நிலவின் தரையில் சுமுகமாக இயங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. லேண்டர் விக்ரம், ஆறு சக்கரங்களைக் கொண்ட ரோவர் பிரக்யான் மூலம் பல்வேறு அறிவியல் சோதனைகள் செய்யப்படவிருக்கின்றன.  சந்திரயான் 2 இல் செயல்படும் ஆர்பிட்டரின் ஆயுட்காலம் ஓராண்டு ஆகும். சந்திரயான் 2 நிலவின் தரைப்பரப்பை ஆராய்வதோடு அதன் சூழலையும் ஆராயும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆர்பிட்டர் வட்டப்பாதையில் நூறு கி.மீ. தள்ளி இருந்தாலும் லேண்டர், ரோவர் செய்யும் சோதனைகளை ரிமோட் முறையில் அறிய முடியும். சந்திரயான் 2 வில் உள்ள பல்வேறு ஆய்வுப் பொருட்கள் மூலம், நிலப்பரப்பு, நில அதிர்வு, கனிம

பிட்ஸ் - இஸ்ரோவின் சாதனைகள்!

படம்
இஸ்ரோ - சாதனைத் துளிகள் 1981ஆம் ஆண்டு, இஸ்ரோவின் ஆப்பிள் செயற்கைக்கோள் மாட்டுவண்டியில் வைத்துக் கொண்டுவரப்பட்டது. மோட்டார் வண்டிகளில் கொண்டு வரும்போது, அதிலுள்ள உலோகங்களோடு ஆன்டெனாவின் சிக்னல் பிரச்னைகளை ஏற்படுத்தும் என ஆராய்ச்சியாளர்கள் கருதினர். 2013 ஆம் ஆண்டு இஸ்ரோ, செவ்வாயை ஆராய்வதற்கான விண்கலமாக மங்கல்யானை விண்ணில் ஏவியது. முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்ற இத்திட்டத்தின் செலவு 450 கோடி ரூபாய். 2008ஆம் ஆண்டு நிலவுக்குச் சென்ற சந்திரயான் 1, நிலவில் தடம் பதித்த நாடுகளில் நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியாவுக்குக் கொடுத்தது. இஸ்ரோ கடந்த நாற்பது ஆண்டுகளாக செய்த பணிகளுக்கான செலவுத்தொகை, நாசாவின் ஓராண்டு பட்ஜெட்டில் அடங்கிவிடும். இஸ்ரோவின் வர்த்தக ராக்கெட் ஏவும் நிறுவனமான ஆன்ட்ரிக்ஸ் (Antrix), 2008 ஆம் ஆண்டு இந்திய அரசின் மினி ரத்னா அந்தஸ்து பெற்றது. 2016 -2019 வரையில் 239 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி, 6,289 கோடி ரூபாய் வருமானத்தைப் பெற்றுள்ளது.  இஸ்ரோ, பாகிஸ்தானின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான சுபார்கோ தொடங்கியபிறகு ஆறு ஆண்டுகள் கழித்து தொடங்கப்பட்டது. இன்று இஸ்ர

நிலவுக்குச் செல்லும் தீவிரம் ஏன்?

படம்
சந்திரயான் சிறப்பிதழ்! நிலவுக்குச்செல்ல ஏன் இந்த அவசரம்? அமெரிக்கா அப்போலோ 11 விண்கலம் மூலம் நிலவுக்கு சென்று வந்த வரலாற்று நிகழ்ச்சி நடந்து அரைநூற்றாண்டு ஆகிவிட்டது. ஆனால் இன்றும் அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் நிலவுக்குச் செல்ல பேரார்வத்துடன் செயற்பட்டு வருகின்றன. இதற்கு என்ன காரணம்? பூமியைப் போல மற்றொரு மனிதர்கள் வாழும் சூழல் கொண்ட கோளைக் கண்டுபிடிப்பதுதான். இந்தியா நிலவை ஆராய முடிவெடுத்து சந்திரயான் -1 விண்கலனை விண்ணில் செலுத்தியபோது பல்வேறு விமர்சனங்கள் கிளம்பின. ஆனால், நிலவின் பரப்பில் நீர் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்ததும்தான் விமர்சகர்கள் அமைதியானார்கள்.  சந்திரயான் 1 இல் வட்டப்பாதையைச் சுற்றிவரும் ஆர்பிட்டர் மட்டுமே உண்டு. அமெரிக்கா, ரஷ்யா ஆகியோர் செலவழித்த தொகையில் பாதிக்கும் குறைவாக 386 கோடி ரூபாயை மட்டுமே இந்தியா கொண்டு புதிய கண்டுபிடிப்பை சாதித்தது. சந்திரயான் 2 இல் ஆர்பிட்டர், ரோவர், லேண்டர் ஆகிய சாதனங்களும் இடம்பெற்றுள்ளன. சோவியத் ரஷ்யா 1959ஆம் ஆண்டு செப்டம்பர் 14 அன்று லூனா 2 என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இதுவே நிலவுக்குச் சென்ற முதல்

சந்திரயான் ஸ்பெஷல்!- நோக்கம் என்ன?

படம்
சந்திரயான் 2 ஏவப்பட்டதன் நோக்கம்! இஸ்ரோ நிறுவனம், சந்திரயான் 1யை விண்ணுக்கு அனுப்பி நிலவில் நீர் இருப்பதைக் கண்டுபிடித்து பத்து ஆண்டுகளுக்கு மேலாகிறது. தற்போது உலக நாடுகள் நிலவை ஆராய்வதற்கான முயற்சிகளை எடுத்து வருகின்றன. காரணம், வெப்பமயமாதலால் பூமி பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வருகிறது. பூமியில் நீராதாரம் குறைந்து வருவதும், மக்கள் வாழ்வதற்கான இயற்கை வளங்கள் அரிதாகி வருவதும் முதன்மைக் காரணங்கள். இந்தியா, நிலவை ஆராய சந்திரயான் 2 வை அனுப்பி வைக்க 2018 ஆம் ஆண்டிலிருந்து  முயற்சித்து வருகிறது. ஆனால், தொழில்நுட்பக் குறைபாடுகள் காரணமாக சந்திரயான் விண்ணுக்கு ஏவப்படுவது தள்ளி வைக்கப்பட்டு வந்தது. விண்ணில் ஏவப்பட்டு 52 நாட்களுக்குப் பிறகு நிலவின் தரைப்பரப்பில் சந்திரயான் 2 விண்கலம் இறங்கும். நாசா ஆய்வுக்கு அனுப்பிய விண்கலங்கள் ஈக்குவடார் பகுதியில் இறங்கின. சீனாவின் சாங் 4 விண்கலம் தெற்குத் துருவப் பகுதியில் இறங்கி நிலவின் மறுபுறத்தை சோதித்தது. இந்தியாவும் சீனாவின் வழியைப் பின்பற்றவிருக்கிறது. விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 2, பதினாறு நாட்கள் பூமியின் வட்டப்பாதையை வலம் வரும்.

இஸ்ரோ சாதனை மைல்கற்கள்!

படம்
சந்திரயான் புறப்பட இன்னும் 11 நாட்கள்தான் உள்ளன. இந்த நேரத்தில் இஸ்ரோவின் சாதனைகள் என்னவென்று பார்த்துவிடலாமா? 1969 ஆக.15 இஸ்ரோ அமைப்பு தொடங்கப்பட்டது. 1971 ஆம் ஆண்டு SHAR மையம் செயல்படத் தொடங்கியது. இன்று இதன் பெயர் SDSC. 1975 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 - இஸ்ரோ முதல் செயற்கைக் கோளான ஆர்யபட்டாவை விண்ணில் செலுத்தியது. 1977 ஆம் ஆண்டு ஜனவரி 1 அன்று, தகவல் தொடர்பான சோதனைகள் தொடங்கப்பட்டன. இதன்விளைவாக கிராமங்களுக்கு டிவிகள் சென்றன. 1979 ஆம் ஆண்டு ஜூன் 7 அன்று, பாஸ்கரா எனும் சோதனை முறை செயற்கைக் கோள் ஏவப்பட்டது. 1993 ஆம் ஆண்டு செப்.20 அன்று பிஎஸ்எல்வி மாதிரி சோதிக்கப்பட்டது. 2008 ஆம் ஆண்டு அக்.22 அன்று, இஸ்ரோ சந்திரயான் 1 விண்ணில் ஏவப்பட்டது. 2014 ஆம் ஆண்டு செப்.24 அன்று இஸ்ரோவின் மாம், செவ்வாயின் வட்டப்பாதையில் நுழைந்தது. 2019 ஜூலை 15 ஆம் தேதி சந்திரயான் 2 விண்ணில் ஏவப்படவிருக்கிறது. நன்றி: டைம்ஸ் - சேத்தன் குமார்

நிலவுக்கு போகலாமா?

படம்
இஸ்ரோ சந்திரயானைத் தொடர்ந்து அதன் அடுத்த பார்ட்டுக்கு சென்றுவிட்டது. வரும் ஜூலை 15 ஆம் தேதி நிலவுக்கு அடுத்த பயணம் தொடங்குகிறது. சந்திரயான் 1 2008 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது. இத்திட்ட மதிப்பு 978 கோடி ரூபாய். ஜிஎஸ்எல்வி 3 சந்திரயான் 2 செயற்கைக்கோளை விண்ணில் கொண்டு செல்லவிருக்கிறது. 3.8 டன் எடை கொண்ட செயற்கைக்கோள் இது. ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செல்லும் இந்த ராக்கெட்டில் ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய கருவிகள் உண்டு. சந்திரயான் 2 செயற்கைக்கோளை சுமக்கும் ஜிஎஸ்எல்வி 4 டன் எடையைத் தூக்கிச்சுமக்கும் சமர்த்து கொண்டது. இதனை பாகுபலி என்று அழைக்கின்றனர். நிலவில் நிலவும் அசாதாரண சூழல்களைச் சமாளித்து ரோவர் அங்கு சரியாக இறங்குவது சாதனை. அத்தனை தகவல் தொடர்பையும் சரியாக ஒருங்கிணைப்பதும் அடுத்த சாதனை. இதில் இந்தியாவில் உருவாக்கப்பட்ட 14 கருவிகளும், நாசாவின் கருவி ஒன்றும் உள்ளது. விக்ரம் எனும் ஆர்பிட்டரில் உள்ள ரோவர் நிலவில் இறங்கி 14 நாட்கள் சோதனை செய்ய உள்ளது. ரோவர் ஆர்பிட்டர் வழியே தகவல்களையும் படங்களையும் அனுப்ப உள்ளது. நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா