இடுகைகள்

பருவநிலை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பருவநிலை மாற்றம் பற்றிய இளைஞர்களின் எதிர்வினைகள்!

படம்
  சூழல் பற்றிய கருத்து மேகேக் ஆனந்த், 16 வசந்த் வேலி பள்ளி, டெல்லி நாம் பயன்படுத்தும் பொருட்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கவேண்டும். அதிக நுகர்வு சூழலை நிச்சயமாக பாதிக்கும். தங்களது வாழ்க்கை முறையை மாணவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை இப்போதே தொடங்குவது நல்லது. நாளை என்று சொல்லாதீர்கள். இன்றே தொடங்குங்கள் ஸெனப் ஹபீப், 20 பி.டெக் மாணவி மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவது , குப்பைகளை குப்பைத்தொட்டியில் போடுவது, கழிவுகளை மறுசுழற்சி செய்வது ஆகியவற்றை செய்தால்தான் நாம் வாழும் பூமியை, தாய்மடியை காப்பாற்ற முடியும். இது எதிர்காலத்தில் நமது குழந்தைகளைக் காப்பாற்ற உதவும். எனவே சூழலைக் காப்பாற்ற இப்போதே செயல்படலாம்.  தனிஷ்கா பேடி, 17 ஹெரிடேஜ் எக்ஸ்பரிமென்டல் பள்ளி குருகிராம் அதிகரித்து வரும் மக்கள்தொகைதான் பிரச்னை. இவர்களுக்கு தேவையான ஆதாரங்கள் குறைவாகவே உள்ளன. எனவே இப்பிரச்னையைத் தீர்க்க சரியான நடவடிக்கை எடுக்கவேண்டும். உள்ளூரில் கிடைக்கும் உணவுப்பொருட்களை சாப்பிடுவதால், தேவையில்லாமல் உணவு வீணாகுவது நடைபெறாது. இதுதான் இன்னும் நீண்டநாள் உலகை நடத்திச்செல்ல உதவும். ஆரண்யக் கோஷ் மஜ

பருவநிலை மாற்றங்களால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள்தான்! - பேராசிரியர் மைக்கல் அப்பன்ஹெய்மர்

படம்
  மைக்கேல் அப்பன்ஹெய்மர் பருவநிலை மாற்றம் உலகில் பருவநிலை மாற்றத்திற்கு அதிக விலை கொடுக்கவேண்டியிருப்பவர்கள், குழந்தைகள்தான். இப்போது அவர்களே பிறருக்கும் சேர்த்து பேசத் தொடங்கியிருக்கிறார்கள். யுனிசெப்பின் கணக்கீடுப்படி, ஒரு பில்லியன் குழந்தைகள் இதனால் பாதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது. உலகிலுள்ள அனைத்து குழந்தைகளுமே பஞ்சம், வெப்ப அலைகள், வெள்ளம் ஆகியவற்றால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.  1960ஆம் ஆண்டை ஒப்பிடும்போது, எதிர்வரும் ஆண்டுகளில்  குழந்தையின் பிறப்பு கூட மேற்சொன்ன சிக்கல்களால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. காற்று மாசுபாட்டால் குழந்தைகள் 90  சதவீதம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதில் ஏழைக்குழந்தைகள் அதிக விலையைக் கொடுக்கவேண்டும். 2030ஆம் ஆண்டில் 132 மில்லியன் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. 82.4 மில்லியன் மக்கள் வேறுவழியின்றி பிற இடங்களுக்கு இடம்பெயரும் சூழ்நிலை ஏற்படும். உணவு, நீர் பற்றாக்குறை காரணமாக குழந்தைகளின் வீடுகள் இல்லாமல் போகும். கூடவே இயற்கை பேரிடர்களாக பஞ்சம், வறட்சி, வெப்ப அலைகளின் தாக்கமும் இருக்கும். 2 மைக்கேல் அப்பன்ஹெய்மர் மைக்கேல் அப்பன்

பருவநிலை வேறுபாடுகளால் பாதிக்கப்படும் குழந்தைகளின் நிலை! - டேட்டா ஜங்ஷன்

படம்
  டேட்டா ஜங்ஷன் கரிம எரிபொருட்களால் உலகில் 90 சதவீத குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெப்ப நிலை உயர்வால் 820 மில்லியன் குழந்தைகள் ஆபத்தை எதிர்கொண்டுள்ளனர். அதாவது மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் எனலாம்.  920 மில்லியன் குழந்தைகள் நீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். பருவநிலை மாறுபாட்டால் பஞ்சம், வறட்சி, நீரைப் பெறுவதற்கான போட்டி ஆகியவை எதிர்காலத்தில் ஏற்படும்.  மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இதில் 600 மில்லியன் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்கில் ஒரு குழந்தை என தோராயமாக மதிப்பிடலாம்.  நானூறு மில்லியன் குழந்தைகள் புயல்களால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. கடல்சார்ந்த வெள்ளத்தாலும் ,புயல்களாலும் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.  2020இல் 33 மில்லியன் குழந்தைகள் கட்டாயமாக இடமாற்றம் செய்யப்பட பருவநிலை மாற்றம் காரணமாக உள்ளது.  டைம்ஸ் எவோக் 2 பிற இடங்களை விட ஆர்க்டிக் இருமடங்கு வேகத்தில் வெப்பமாகி வருகிறது. இதனால் கடந்த பத்தாண்டுகளில் 14 சதவீத பனிக்கட்டிகள் கரைந்துள்ளன. உணவுக்கும், நீருக்கும் பனிக்கட்டிகளை துருவக்கரடிகள் சார்ந்துள்ளன. அவை அழிந