இடுகைகள்

இமயம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நூறு நிலங்களின் மலை - மனதில் கற்பனைகளை பெருகச் செய்யும் நிலவெளியின் வரலாறு! - ஜெயமோகன் - கிழக்குப் பதிப்பகம்

படம்
  நூறு நிலங்களின் மலை ஜெயமோகன் கிழக்கு பதிப்பகம் மின்னூல் எழுத்தாளர் ஜெயமோகன் ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய பகுதிகளுக்கு தனது நண்பர்களுடன் சென்ற பயண அனுபவமே நூறு நிலங்களின் மலை என்ற நூலாக மாறியிருக்கிறது.  இமயமலையில் பொதுவாக மலையேற்ற வீரர்கள் அல்லது டிடிஎஃப் வாசன் போன்றோர் சென்று தங்கள் அனுபவத்தை பதிவு செய்வார்கள். ஆனால் எழுத்தாளர் சென்றால், அந்த அனுபவத்தை சேற்றுப்படிவ பாறைகளை, ஆற்றின் கடும் குளிரை, அறையில் வீசும் தழைமணம் கொண்ட ஆப்பிள் மணத்தை பதிவு செய்தால் எப்படி இருக்கும் என்பதுதான் இங்கு வேறுபடுகிறது.  ஐந்து மாநிலங்களின் வழியாக காரில் சமண மடாலயங்களுக்கு சென்று வந்த அனுபவங்களை ஜெயமோகன் முன்றே எழுதியிருக்கிறார். இந்த நூலிலும் அப்படியொரு இலக்கை எட்டியிருக்கிறார். இமயமலை பகுதிகளில் உள்ள ஏராளமான புத்த மடாலயங்களுக்கு சென்று அங்குள்ள விதவிதமான வடிவங்களில் பெயர்களில் உள்ள புத்தர் சிலைகளைப் பற்றி நமக்கு விளக்குகிறார். கூடவே அந்த நிலப்பரப்புகளில் வாழும் மக்கள், அங்கு நிலவும் அரசியல் ஆகியவை பற்றியும் எழுதுகிறார். இது, நூலுக்கு தனிப்பட்ட ஈர்ப்பை வழங்கியுள்ளது.  ஷியா,சுன்னி முஸ்லீம் அரசியலை விட அங்