திசைகாட்டி எஸ்.வைதீஸ்வரன் நிவேதிதா பதிப்பகம் அந்துவன் அம்ருதா இதழில் நினைவோடை பகுதியில் எழுதிவரும் வைதீஸ்வரன் பக்கம் அவரது இளமைக்கால நினைவுகளை கூறும் பகுதியாக வசீகரிக்கும் தன்மை கொண்டது. அத்தகைய கட்டுரைகளைக் கொண்ட நூல்தான் இது. இதில் பெரும்பாலும் கவிதை குறித்த பகுதிகள் அதிகம் என்றாலும், அதனினூடே கட்டுரை தன் இளமைக்காலம், தன்பிறப்பு, பார்த்த படங்கள், கவிதைகள் குறித்த குறிப்புகள் கொண்ட புத்தகம் இது எனலாம். தனது வாழ்வில் சந்தித்த மனிதர்களின் குணவியல்பை கூறுவதில் அதிக ஆர்வம் கொண்டுள்ள இவர், தான் படிக்கச்செல்லும் இடம் பற்றியும், அர்த்தமற்ற வார்த்தை என்ற கட்டுரையில் விடுதலை ஆகப்போகும் வயது முதிர்ந்த ஒருவனின் மனநிலையையும் நுட்பமாக சுட்டிக்காட்டுகிறார். பார்வையற்ற ஒருவர் குறித்த கட்டுரை அற்புதமாக உள்ளது. பார்வையற்ற மனிதரின் கவிதைதான் இந்த கட்டுரைத்தொகுப்பின் தலைப்பும் கூட. 41 அவந்திகாவ