வாழ்வதற்கான உரிமை வேண்டிய நீண்ட போராட்டம்
வாழ்வதற்கான உரிமை வேண்டிய நீண்ட போராட்டம்
சதினாத் சாரங்கி
தமிழில்: ஃப்ரான்சிஸ் ரஞ்சா
போபால் விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கான
சட்டரீதியான தீர்வுக்காக முப்பது ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கிறார்கள். நிலத்தடி
நீரில் கலந்துவிட்ட நச்சுக்களினால் பாதிக்கப்பட்ட மக்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தங்களுக்கான
உரிமைகளைப் பெற போராட்டத்தினை தொடர்ந்து மேற்கொண்டு நடத்தி வருகிறார்கள்.
30 ஆண்டுகளுக்கு முன்பு போபாலில் உரத்தொழிற்சாலை ஒன்றிலிருந்து
விஷவாயு கசிந்ததில், நடந்த பேரழிவை அறிந்து பலரும் அதிர்ச்சியடைந்திருப்போம். இன்றும்
அதன் விளைவுகளை அம்மக்கள் தொடர்ந்து அனுபவித்து வருகிறார்கள். டிசம்பர் 1984 ல் நச்சுவாயுவினால்
பாதிக்கப்பட்ட பலர் இறந்துவிட்டாலும், தொடரும் போராட்டம் ஆனது, தொடரும் நச்சுவாயுவின்
கொடும் விளைவுகளால் இன்றுவரை 25000 பேரும் தொடர்ந்து இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
புற்றுநோய் மற்றும் மூச்சுக்குழல் புற்றுநோய், பிறக்கும்போதே குணப்படுத்த முடியாத உடல்நலக்கோளாறுகளுடனும்,
ஊனங்களுடனும் பிறக்கின்றனர்.
மேலும் ஒரு பேரழிவு
நிகழ்வானது, இந்த உரத்தொழிற்சாலை கட்டமைக்கப்பட்டு அதனை அமெரிக்க நிறுவனமான யூனியன்
கார்பைடு இயக்கத்தொடங்கியபோது, ஏறத்தாழ 50000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டது போபால்
தாண்டி பலரும் அறியாத ஒன்று. 24 ஆண்டுகளாக நிலத்தடி நீரில் யூனியன் கார்பைடு ஆலையின்
நச்சுக்களும் உலோகங்களும் கலந்துவிட்டதால், ஏற்பட்ட இரண்டாவது பேரழிவில் அந்நீரை குடித்த
மக்களுக்கு புற்றுநோய், பிறப்புக்குறைபாடுகள் கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல் மூளை
உள்ளிட்ட உள்ளுறுப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அரசு மற்றும் அரசுசாரா நிறுவனங்களின்
ஆராய்ச்சி முடிவுகளில் யூனியன் கார்பைடு நிறுவனம் கன உலோகங்கள் மற்றும் வேதிப்பொருட்களிலான
கழிவுப்பொருட்கள் ஆபத்தான முறையில் எவ்வித கவனமும் இல்லாமல் தொழிற்சாலையில், அதைச்சுற்றியுள்ள
பகுதியில் கொட்டியிருக்கிறார்கள் என்பது உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது பேரழிவானது
குழப்பமான சூழலில் நச்சுவாயுக்களின் பேரழிவாக பார்க்கப்படுகிறது. கடுமையான அடர்த்தி
கொண்ட நச்சுவாயுக்கள், எவ்வளவு வாயுக்கள் மக்களின் உடலில் தங்குகின்றதோ அதைப்பொறுத்தே
அவர்களின் உடலில் ஏற்படும் பாதிப்புகளின் விளைவுகளை அறிய முடியும். அனைத்து பதிவுகளிலும்
அறிவியல் பூர்வமாக நச்சுவாயு பேரழிவிற்கு முன்னே இவை பரவியதும், அதனால் மக்கள் தொடர்ந்து
பாதிக்கப்படுவதை பதிவு செய்துள்ளனர்.
போபாலில் நடந்த இப்பேரழிவுகளுக்கும்
பல்வேறு பொருத்தமின்மை இருந்தாலும், அவற்றினால் ஏற்பட்ட விபரீதமான விளைவுகளுக்கிடையே
முக்கியத்துவமான தனித்துவ பொருத்தங்கள் உண்டு.
முதலாவது, 1972 ஆம் ஆண்டு போபால் மெத்தில் ஐசோ சயனைட் தொழிற்சாலைக்கு
இறந்துபோன வாரன் ஆண்டர்சன் மற்றும் 11 உறுப்பினர்கள் கொண்ட குழுவானது இயங்க அனுமதி
அளித்தது. வடிவமைப்பு மாற்றம், சோதித்துப்பார்க்காத தொழில்நுட்பம் ஆகியவற்றை பயன்படுத்துவதன்
மூலம் 20% - 30% செலவு குறையும் என்று கூறப்பட்டது. நச்சுவாயு பேரழிவு மற்றும் கழிவுகளை
முறையாக அழிக்காததினால் நிலத்தடி நீர் மாசடைவதற்கும் காரணமாக அமைந்தது. இதில் ஆச்சர்யம்
என்னவென்றால், வடிவமைப்பு காரணமாக ஏற்படும்
விபரீதமான விளைவுகளையும் அக்குழு கூறிய அறிக்கையிலேயே கூறப்பட்டு இருப்பதுதான்.
இரண்டாவது, உடல்நலம்
மற்றும் வாழ்வை காப்பாற்றும் வகையில் செயல்பட நினைத்திருந்தால் அந்நிறுவனம் முன்கூட்டியே
சரியான தடுப்பு எச்சரிக்கை முன்தடுப்பு நடவடிக்கைகள் மூலம் தடுத்திருக்க முடியும்.
1984 ல் மேற்கு வர்ஜீனியாவிலுள்ள ஒரு தொழிற்சாலையில் சிறிய அளவு கசிவு ஏற்பட்டபோதே
அது குறித்த எச்சரிக்கைகளை பெறும் படி செய்யப்பட்டிருந்தது. மே 1982 ல் டான்பரி, கனெக்டிகம்
யூனியன் கார்பைடு நிறுவன தலைமையகம் சூரிய சக்தி மூலம் கழிவுகளை தேக்கி அழிப்பதிலிருந்து
நச்சுவாயுக்கள் கசிகின்றன என்பதை அறிந்தே இருந்தது. இந்த இரு பிரச்சனைகளிலும் எந்த
பாதுகாப்பு அளவுகோல்களுக்கும் உட்படாது இந்த நிறுவனம் செயல்பட்டு வந்திருக்கிறது.
நச்சுவாயு பேரழிவு
வழக்கில், யூனியன் கார்பைடு நிறுவனம் நச்சுவாயுவினால் உடல் நலத்திற்கு ஏற்படும் பாதிப்புகளை
மறைக்கும்விதமாக வேகமாக செயல்படத்தொடங்கியது. யூனியன் கார்பைடு நிறுவனத்தின் அறிக்கைகள்
பிட்ஸ்பர்க் கார்னெகி மெலன் அமைப்பின் மூலம் மெத்தில் ஐசோ சயனைடின் நச்சுத்தன்மை உறுதி
செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதெல்லாம் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் உடல்நலம், பாதுகாப்பு,
சுற்றுச்சூழல் துணைத்தலைவரான ஜாக்சன் ப்ரௌனிங்கை மெத்தில் ஐசோ சயனைட் ஒரு கண்ணீர் புகை
குண்டு போலத்தான் என்று அநியாய பொய்யை கூறுவதிலிருந்து தடுக்கமுடியவில்லை.
இது தொடர்பாக அமெரிக்க
நீதிமன்றத்திற்கு சமர்பிக்கப்பட்ட ஆவணங்களை பார்வையிட்டபோது, யூனியர் கார்பைடு நிறுவனம்
நிலத்தடி நீர் மாசுபடுவது குறித்த பிரச்சனையிலும் இதுபோன்ற நிலைப்பாட்டினையே எடுத்துள்ளது
தெரிய வருகிறது.
போபால் யூனியன் கார்பைடு
நிறுவனத்தைச் சேர்ந்த அறிவியலாளர்கள் 1989 ல் பல்வேறு நிலத்தடி நீர் சோதனை மாதிரிகளை
எடுத்து சோதித்தபோது, 100 விழுக்காடு எந்தவகை மீன்களும் அதில் வாழ முடியாது இறந்துபோனதை
கண்டறிந்திருக்கிறார்கள். இந்த அறிக்கையும்
கார்னெகி மெலன் அமைப்பின் மெத்தில் ஐசோ சயனைட்
விளைவுகளை கூறிய அறிக்கைகளைப்போல இதுவும் ஒன்றுமில்லாமல் செய்யப்பட்டு அழுத்தப்பட்டுவிட்டது.மேலும்
ஒரு ஒற்றுமை, போபாலில் நடந்த பேரழிவு பிரச்சனைகளில் அறிவியல் அமைப்புகள் அவமானகரமான
செயல்பாட்டினை மேற்கொண்டதோடு, யூனியன் கார்பைடு நிறுவனத்தின் பொறுப்புகளை தட்டிக்கழிக்கவும்
ஆதரவாக இருந்தார்கள்.
மற்றொரு ஒற்றுமை,
அரசியல் சட்டப்படி, தன் நாட்டு மக்களை காக்கவேண்டிய மாறி மாறி ஆட்சிக்கு வரும் மாநில
அரசுகளும், மத்தியஅரசும் தனது கடமைகளை மறந்து தனது மக்களையே அவர்களுக்கான அரசியலமைப்பு
சட்டம் கூறியுள்ள எதையும் பின்பற்றி காப்பாற்ற முன்வரவில்லை. நச்சுவாயு வெளியேற்றத்தினால்
ஏற்பட்ட பாதிப்புக்கு நஷ்ட ஈடு கொடுக்க யூனியன் கார்பைடு நிறுவனத்தை அனைவரும் நிர்பந்தப்படுத்தியபோது,
அரசுகள் மெதுவாக ரகசியமாக அதில் நுழைந்து பாதிக்கப்பட்ட 95 விழுக்காடு மக்களுக்கு இழப்பீடாக
25000 ரூபாய் கொடுத்தது. மீதியுள்ள மக்களுக்கு குறைவான தொகை இழப்பீடாக கொடுக்கப்பட்டது.
நிலத்தடி நீரினை
அருந்தி கழிவுப்பொருட்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையான அதிகாரப்பூர்வ பதிவுகள்
இல்லாததினால் அவர்களுக்கு எந்த இழப்பீடும்
பெற முடியவில்லை.
இப்பேரழிவு நிகழ்வுகளில்
அதிகார வட்டாரங்கள் மக்களின் உடல்நலம் மற்றும் மறு குடியமர்த்துதல் உள்ளிட்டவைகளில்
அலட்சியமாக இருந்துள்ளனர் என்பதை எளிதில் உணர முடியும். இந்த நச்சு வாயுப்பேரழிவில்
உச்சநீதிமன்றம் நியமித்த கண்காணிக்கும் குழுவின் மூலமாக பற்றாக்குறையான மருத்துவர்கள்,
சிறப்பு நிபுணர்கள் போதாமை, முறையான சிகிச்சை அளிக்காதது, மற்றும் முக்கியமாக உயிர்பிழைக்க
போராடியவர்களுக்கு விலையில்லாத சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவமனைகள் என பல்வேறு உண்மைகளை
இந்த கமிட்டியின் அறிக்கைகள் வெளிக்கொண்டு வந்துள்ளன.
நிலத்தடி நீரின்
நச்சினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச மருத்துவம் செய்ய இந்த மருத்துவமனைகள் மறுத்துவிட்டன.
அரசு இயந்திரம் முறையான எச்சரிக்கையுடன் மறுகுடியமர்த்தல், சிகிச்சை நடவடிக்கைகளை செய்து
தந்திருந்தால் ஆயிரக்கணக்கான குழந்தைகள் கடுமையான குணப்படுத்த முடியாத பிறப்புக் குறைபாடுகளுடன்
பிறந்திருக்க வாய்ப்பு இருந்திருக்காது.
அரசின் உணர்ச்சியற்ற,
அலட்சியமான தன்மையினால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் தன்னிச்சையாக ஒன்றிணைந்து தங்களின்
வாழ்வினை மீட்க முயற்சித்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் அமைப்பாக ஒன்றிணைந்து தங்கள்
உடல்நலம், பொருளாதார புனரமைப்பு, சமூகத்திற்கான அங்கீகாரம் ஆகியவற்றை பெற கிளர்ச்சி
செய்தபடி உள்ளது. குடிநீரில் கலந்த நச்சுகளினால் பாதிக்கப்பட்ட மக்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நல்ல குடிநீர் கிடைக்கவேண்டுமென போராடி வருகிறார்கள்.
இந்த போராட்டக்காரர்கள் கைது, தாக்குதல், பலமுறையற்ற வழக்குகள் பதிவது என அமைதியான
ஜனநாயக முறையில் போராடுபவர்களின் மீது அரசின் அதிகார பயங்கரவாதம் பாய்கிறது.
அமெரிக்கா , இந்தியா
ஆகிய இரு நாடுகளின் நீதிமன்றங்களும் பாதிக்கப்பட்ட மக்களை கைவிட்டுவிட்டார்கள். நச்சுவாயு
பேரழிவு பிரச்சனையில் மாவட்ட அரசு நீதிமன்றமானது தேவையான ஆதாரங்களை இருந்தும், அதன்
நாட்டைச்சேர்ந்த ஒருவரின் மீதான நீதி விசாரணையை மறுத்துவிட்டது. இதே நீதிபதி, குடிநீரில்
நச்சுப்பொருட்கள் கலந்த பிரச்சனை ஒன்றில் அவ்வழக்கினை 5 முறை தள்ளுபடி செய்தார். மேல்
விசாரணை நீதிமன்றம் அவரது வழக்கு தீர்ப்பினை 4 முறை மாற்றி உத்தரவிட்டிருக்கிறது. இந்திய நீதிமன்றங்களிலும் இந்த வழக்கு தாமதப்பட்டுக்கொண்டே
உள்ளது. உச்சநீதிமன்றத்தில் நச்சுவாயு பேரழிவிற்கான இழப்பீடு குறித்த வழக்கு எந்த விசாரணையும்
இன்றி அப்படியே முடங்கி கிடக்கிறது. குடிநீரில் நச்சுப்பொருட்கள் கலந்த வழக்கு 10 ஆண்டுகளாக
எந்த தீர்மானத்திற்கும் வராமல் சென்றுகொண்டேயிருக்கிறது.
இந்தப்பேரழிவு சம்பவங்களில்
பொதுவான ஒற்றுமைகளோடு அமைப்புரீதியான குறைபாடுகளால் நீதி தடுமாறுகிறது. பன்னாட்டு நிறுவனங்கள்
லாபத்திற்கான திட்டமிட்ட சதி செயல்களில் ஈடுபட்டு, பிறகு அதிலிருந்து விடுபட அரசு அமைப்புகளை
நாட, அவற்றின் ஆசிர்வாதத்தோடு இவ்வாறே பன்னாட்டு நிறுவனங்களின் குற்றங்கள் தொடர்ந்து
நடைபெறுகின்றன. இந்த சூழலில் ஒரே ஒரு நம்பிக்கை கவிஞர் சீமஸ் ஹெனி கூறியது போல, இருக்கக்கூடும்.
வரலாறு கூறுகிறது நம்பிக்கை கொள்ளாதே
இங்கு இந்தப்பக்கம் கல்லறை உள்ளது.
ஆனால் வாழ்வில் ஒருமுறை
நீளமான கடல் அலைபோல
நீதி மேலே எழும்
நம்பிக்கையை வரலாறு இசைக்கும்.
நன்றி: தி இந்து ஆங்கிலம் நவம்பர்
30, 2014.
கருத்துகள்
கருத்துரையிடுக