நூல் வெளி

நூல் வெளி
 ஒரு தடா கைதிக்கு எழுதிய கடிதங்கள்
                                சுந்தர ராமசாமி
                                           கான்ஞ்ஞா
     இந்தப்புத்தகம் முழுக்க தடாகைதி ஒருவருக்கு சு.ரா எழுதிய கடிதங்களைப்பற்றிப்பேசுகிறது. இதில் இதற்கு முன் படித்தவர் பல கோடுகளைப்போட்டு மேற்கோள் திரட்டி புத்தகமே பள்ளி மாணவன் தேர்வுக்கு தயார் செய்ய பயன்படுத்தியது போலாகிவிட்டது. சு.ரா எளிய மனிதனாய் தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள உதவும் ஒரு படைப்பு என்று இதனைக்கொள்ளலாம்.
     இயல்பான தன் மனப்போக்கில் தன் தவறுகளை உணர்ந்துகொள்கிற ஒரு மனிதனின் தடத்தை இந்த எழுத்துகளில் தரிசிக்க முடிகிறது. அதுதான இந்நூலின் பெரிய பலமே.
     கடிதங்கள் என்றால் இருவரும் எழுதியதைப் பதிவு செய்திருந்தால் அது படிப்பவர்களுக்கு இன்னும் வாசிப்பு அனுபவம் உருவாக உதவியிருக்கும். இந்த கடிதத்திலிருந்து சு.ராவுக்கு கடிதம் எழுதியவரின் கடிதங்கள் என்னவாக இருக்கும் என்பதை புரிந்துகொள்ள முடியும் என்பது காலச்சுவடின் நோக்கமா என்று தெரியவில்லை.
     சு.ராவின் எழுத்துக்களை வெகுநாட்களாக வாசிக்காமல் இருந்து இப்போது வாசித்ததில் புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளது என்பது என்னவோ மறுக்க முடியாத உண்மை.



நூல்வெளி

மூன்று தடியர்கள்
                           யூரி அலெஷா
                                           சின்னமோன்.
     குழந்தைகளுக்கான ரஷ்யமொழியிலிருந்து தமிழில் எழுதப்பட்ட நாவல். கலகம், புரட்சி, ஏழைகள், பணக்காரர்கள், பசி, ரத்தம் என பல விஷயங்களை தொட்டுச்செல்கிறது கதை.
     மூன்று தடியர்கள் எனும் நாட்டை சுரண்டி வாழும் ஆட்சியாளர்கள் இருவருக்கு எதிராக கலகம் செய்யும் இரு வீரர்களைப் பற்றிய கதை இது. மிக உறுதியான வருத்தமுறும் கதையான இந்த கதைத்தளத்தினை இவ்வளவு கொண்டாட்டமாக மாற்ற முடியுமா என்று ஆச்சர்யமாக இருந்தது. ஆசிரியர் அதனை சாதித்திருக்கிறார்.
     திபூல், கருமான் புரொப்போவா என இருவரின் நாட்டைக்காப்பாற்றும் வீரதீரங்களில் சுவாக் எனும் சிறுமி இணைந்துகொள்கிறார். ஒரு விஞ்ஞானியும் உதவுகிறார். மக்களின் போராட்டம் வேகமெடுத்துப்பாய, தடியர்கள் என்ன ஆனார்கள்? கலகம் அடக்கப்பட்டதா? சுவாக் யார்?, அவளின் தம்பி யார்?, அவர்களின் தந்தை இறந்துகிடக்கிறார் எப்படி? என பரபரவென தடதடக்கும் சுவாரசியங்கள் சிந்திக்கிடக்கும் நூலின் ஓவியங்கள் அற்புதமாக வரையப்பட்டுள்ளன.
     உட்கார்ந்து படிக்க நேரமிருக்கும் குழந்தைகளுக்கு இந்நூல் அற்புதமான உலகைக் கட்டமைத்துக் காட்டும் ஒன்று என்பதை மறுக்க முடியாது.


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்