இளைய இந்தியாவிற்கான புதிய கற்றல் முறைகள்

ளைய இந்தியாவிற்கான புதிய கற்றல் முறைகள்
                                                ஆங்கிலத்தில்:
                                                                                                அனில் முல்சந்தினி
                                                                                                கெவின் பிரகன்சா
                                                                தமிழில்: தியோ வான்யா

மோடி அரசின் தூய்மையான பாரதம் திட்டம் மூலம் காந்தியின் சிந்தனைகள் நாட்டின் மேடையில் அண்மையில் இடம்பிடித்து இருக்கின்றன. ஆனால் 1947 ஆம் ஆண்டிலிருந்தே காந்தியின் சிந்தனைகள் அகமதாபாத்திலிலுள்ள பள்ளியொன்று மாணவர்களுக்கு கற்பித்து வருகிறது.

காந்தியின் தத்துவமான தூய்மையான இந்தியா, மரியா மாண்டிசோரி குழந்தைகளுக்கான செயல்பாடுகளில் ஏற்படுத்த மாற்றம் தந்த வாய்ப்புகள், தாகூரின் இயற்கையோடு இணைந்த கல்வி என இவை அனைத்தையும் தனது பள்ளியான ஸ்ரேயாவில் நிகழ்த்தியிருக்கிறார் அதன் நிறுவனரான ¦னா சாராபாய். தற்போது அந்நிறுவனத்தை இவரது பேரனான 50 வயதாகும் அபய் மங்கள்தாஸ் அவர்கள், நிர்வாக அறங்காவலராக இருந்து ஸ்ரேயாஸ் அமைப்பினை தன்மை மாறாது நடத்திவருகிறார்.

‘’1940ல் எனது பாட்டி காந்தி, ரவீந்திரநாத் தாகூர், மரியா மாண்டிசோரி இன்னும் பலரின் கருத்துக்கள், சிந்தனைகளின் முழுமையைக் கொண்ட கல்விமுறையினை பின்பற்றி, குழந்தைகளுக்கான பள்ளி, தொடக்கப்பள்ளி ஆகியவற்றைத் தொடங்கினார். அவருக்கு நன்றி கூறவேண்டும். ஸ்ரேயாஸ் வளாகமானது பசுமையான 50 ஆண்டுகளுக்கு மேல் வயது கொண்ட மரங்களைக்கொண்டுள்ள தோட்டங்களைக் கொண்டு அகமதாபாத்தின் இதயத்தில் உள்ளது. சில ஆண்டுகளுக்கு பிறகு பாட்டி இறந்துவிட்டார். தற்போது இருக்கும் நிர்வாகக்குழு, பள்ளியின் கொள்கைகளை தொடர்ந்து மேம்படுத்தியதோடு வளாகம், சுற்றுப்புறம் பசுமையாக இருக்க பாடுபட்டு வருகிறது என்கிறார் மங்கள்தாஸ்.

பள்ளியைத்தாண்டி ஸ்ரேயாஸ் அகமதாபாத்தில் கலை மற்றும் விளையாட்டுக்களை மேம்படுத்த நாடக அரங்குகள், கலைமையங்கள், பொருட்காட்சி சாலை நாட்டுப்புற கலைப்பொருட்கள்) நூலகம் மற்றும் விளையாட்டு வசதிகள் கொண்ட மைதானங்கள் என அமைக்கப்பட்டு அனைத்து பள்ளி மாணவர்களும் பயன்படுத்தும் வண்ணம் செயல்பட்டுவருகிறது.

‘’ இது போன்ற வட்டவடிவ அரங்குகள் சில பயனற்று சில சமயம் இருப்பதால் அவற்றை மீண்டும் மறுபுனரமைக்க முயன்று வருகிறோம்’’ என்கிறார் மங்கள்தாஸ்.

ஸ்ரேயாஸிலுள்ள பல்வேறு வகுப்பறைகள் மரங்களைக் காணும் வகையில் பாதி திறந்தவெளியாக இயற்கையோடு இணைந்த சூழல் இருக்க அமைக்கப்பட்டுள்ளது. இயல்பு  மாறாமல் பராமரிக்கப்படுகிறது. வளாகத்திலுள்ள பெரும்பாலான மரங்கள் கட்டிடத்தின் உயரத்தைத் தாண்டி வளர்ந்துள்ளன.

1940 ல் ¦னா சாராபாய் மேடம் மாண்டிசோரியை  அகமதாபாத்திற்கு சென்னையிலிருந்து வர அழைப்பு விடுத்தார். 1947 ல் அவரை தலைவராகக் கொண்டு ஸ்ரேயாஸ் பள்ளி தொடங்கப்பட்டது என்று பள்ளியின் வரலாற்றை அபய் கூறுகிறார்.
1961 ல் ஸ்ரேயாஸ் தற்போது இருக்கும் 28 ஏக்கர் மரங்கள் சூழ்ந்த இடத்திற்கு மாறியிருக்கிறது. தாகூரின் கல்வி குறித்த தத்துவங்களை அடிப்படையாகக்கொண்டு இயற்கையின் அரவணைப்பில் புகழ்பெற்ற வடிவமைப்பாளரான பாலகிருஷ்ண தோஷி மூலம் கட்டமைக்கப்பட்டு உருவாகியிருக்கிறது இப்பள்ளி.

            ‘’காந்திய தத்துவங்களான நெசவு செய்வது, விவசாய செயல்பாடுகள், உணவு தயாரிப்பது, உடல்நலத்தை மேம்படுத்துவதோடு மனநலத்தினை வளர்ப்பது, கற்கின்ற அறிவோடு, சுயசார்பு தன்மையைக் கற்றுக்கொள்ளுதல் ஆகியவையும் எங்களது கல்விக்கொள்கைகளில் உள்ளன. இதோடு காந்தியின் கொள்கையான அடித்தட்டு மக்களின் குழந்தைகளுக்கான விலையில்லாக் கல்வியையும் அளிக்கிறோம். காலத்திற்கேற்ப அதைத் தாண்டிய செயல்பாடுகளை மேற்கொள்ள முயற்சிக்கிறோம். எனது பாட்டி தொடக்கப்பள்ளி தொடங்கியபோதே ஐசிஎஸ்இ பாடத்திட்டத்தினைக் கொண்ட மேல்நிலைப்பள்ளி ஒன்றினை தொடங்க எதிர்காலத்திற்கான திட்டமிடுதலை தொடங்கினார்’’ என்று பெருமையாக கூறுகிறார் அபய் மங்கள்தாஸ். ஆசிரியர்களுக்கு மாண்டிசோரி முறையில் குழந்தைகளுக்கு கற்பிக்க பயிற்சியும் இங்கு அளிக்கப்படுகிறது.

            ஸ்ரேயாஸின் விளையாட்டு மையத்தில் நீச்சல், ஹாக்கி, கைப்பந்து, கால்பந்து, யோகா, ஜிம்னாஸ்டிக் உள்ளிட்ட பயிற்சிகளை குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு வழங்குவதில் சிறப்பான புகழ்பெற்றது.

            மகாராஷ்டிரத்தில் உள்ள மால்வனில் ஆதரவற்ற ஏழைக் குழந்தைகள் உள்ளிட்டவர்களுக்கு மற்ற பள்ளிகள் கல்வி அளிக்காத நிலையில் கல்வி கற்பிக்கிறார் சச்சின் தேசாய் என்பவர். 44 வயதாகும் சச்சின் அறிவியலாளராக இருந்து கல்வியாளராக மாறிய முனைவர். எஸ். கல்பக் மூலம் உத்வேகம் பெற்று மும்பையிலிருந்து தன் குடும்பத்தோடு 2006 ஆம் ஆண்டு கொங்கன் பிரதேசமான கிராமத்திற்கு வந்துவிட்டார். தனது பூர்வீகமான 80 வயதாகும் வீட்டினை பள்ளியாக மாற்றியிருக்கிறார். உள்ளூரில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தைச்சேர்ந்த இரு இளைஞர்களையும் சேர்த்து பரிசோதனை முயற்சியினை தொடங்கியிருக்கிறார். ஷியாமன்தக் என்றழைக்கப்படும் இப்பள்ளி இயற்கை வழியிலான கல்வி போதனைகளை நம்புகிறது.

            ‘’ஷியாமன்தக் பள்ளியில்  எதற்கும், எதையும் கற்பதற்கான தடைகள் இல்லை. இங்கு மாணவர்கள் பொறியியல், தச்சுவேலைகள், கால்நடை வளர்ப்பு, கணினி பணிகள் ஆகியவற்றைக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கித்தருகிறோம். இப்பள்ளியில் முறையான பள்ளியின் சொகுசான வசதிகள் இல்லையென்றாலும் மாணவர்கள் தங்கள் வாழ்விற்கான சிறப்பான தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கான அறிவைப்பெற உதவுகிறோம ¢’’ என்கிறார் சச்சின்.

            தொழில் முனைவுத்திறன் மற்றும் சுயசார்புத்தன்மையை வளர்க்க சிந்தித்தபோது, சிந்தனைகளை செயல்படுத்தும் ஆதார மையம் தோன்றியது. மண்புழுவை உரமாக தயாரிக்கும் திட்டம் பள்ளியில் செயல்படுத்தப்பட்டு இப்போது இயற்கை முறையிலான பொருட்களைக் கொண்டு துரித உணவு தயாரிக்கும் கூடம் ஒன்றினையும் செங்கற்கள் தயாரிக்கும் திட்டமும் தற்போது செயல்படுத்த முயன்று வருகிறார்கள்.

            செயல்வழிக்கற்றல், பல்துறை திறமைகளை வளர்த்தல், பொதுசேவைகள், தொழில்முனைவுத்திறன் ஆகியவை பள்ளியில் கொள்கைகளாக பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்த கல்வித் திட்டத்தை மகராஷ்டிரா மாநில கல்விக்கழகமும், டெல்லியில் உள்ள நேஷ்னல் இன்ஸ்டியூட் ஆஃப் ஓப்பன் ஸ்கூலும் அங்கீகரித்துள்ளன.

            ஷியாமன்தக் பள்ளிக்கான நிதியுதவி பல்வேறு தரப்பிலிருந்தும் கிடைக்கின்றன என்றாலும், குறிப்பாக சச்சினின் தனியார் துறை நண்பர்களான  பலரின் உதவியினால்தான் பெரும்பாலும் நிதி கிடைக்கிறது. இன்று 800 மாணவர்கள் சச்சினின் வழிகாட்டுதலால் தாங்கள் விரும்பிய தொழிலைத் தொடங்கியிருக்கிறார்கள்.

                                    நன்றி: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் 2 நவம்பர் 2014.

                                                           


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்