சென்னை பயணித்தார் எழுத்தாளர் வின்சென்ட் காபோ!

சென்னை பயணித்தார் எழுத்தாளர் வின்சென்ட் காபோ!

                                          மெட்ரோ கார்னர் ‘முனி’

வின்சென்ட் காபோ (வி.காபோ), புத்தக மொழிபெயர்ப்பு ஒன்றிற்காக மடிக்கணினி ஒன்றினைப் பெற அனுகந்தன் என்னும் கடும் முரட்டுத்தனமும், துணிச்சலான அன்பும் கொண்ட துணை இயக்குநர் ஒருவரை சந்தித்தார். அவரின் அறையில் தங்க இடம் கிடைத்துவிட்டது. அறை பற்றிக்கேட்டால் வாய்திறக்க மறுக்கிறார் அனுகந்தன். பின் பேசியது இதுதான். ‘’ சோறு தின்னியான்னா கூட கேட்க மாட்டீங்கறான் என்ன ஊருடா இது? மிஷினு மாரி ஓடறானுவ, ஒடியாரானுவ ’’

பேபி ஏலப்பன் எனும் இயக்குநர் ஒருவரிடம்தான் அனுகந்தன் வேலை செய்கிறாராம். அவரிடம் கூட்டிச்சென்றார். பேபியின்அறை முழுக்க பல்வேறு சினிமா போஸ்டர் கட்டிங்குகளாலேயே தன் அறையின் சுண்ணாம்புச்செலவை தவிர்த்திருந்தார். சுண்ணாம்பிற்கு இடம் விட்டால்தானே! அறையின் ஒவ்வொரு கதவுகளிலும் ஒரு வாசகம் குறும்பாக எழுதப்பட்டிருந்தது. உ.தா கழிவறையில் தினசரி நான்கு காட்சிகள் என்ற வாசகம்.

நந்தம்பாக்கம் வர்த்தசபை சென்றிருந்த அனுபவம் வேறுமாதிரி. தினகரன் நாளிதழ் நடத்திய கல்வி குறித்த கண்காட்சி நடைபெற்றது. அனுகந்தன் குர்தா உடுத்தி படு சீரியசாக முகம் வைத்து இருந்ததால் எம்.ஜி.ஆர் கல்லூரி கருப்புக் கோட் ஒன்று ஓடிவந்து தேனிலவு ஜோடிகளிடம் கேட்பது போல் ஹவ் டூ யூ பீல்? என்றார். அனு அலட்டிக்கொள்ளாமால் பார்த்துவிட்டு வந்துவிடுகிறோம் என்றார். வி. காபோ, ஸமீரா என்றால் இந்நேரம் கழிவறைக்கு சென்று வந்து பதில்சொல்கிறேன் என்று  பத்து நிமிடம் நேரம் கேட்டிருப்பார் என்பதை நினைத்து சிரித்தார். இலவசமாய் தினகரன் நாளிதழ் ஒன்று கிடைத்தது.

                        

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்