திரைப்படம் குறித்த சில சொற்கள், விளக்கங்கள்
திரைப்படம் குறித்த சில சொற்கள், விளக்கங்கள்
தமிழில்: லாய்ட்டர் லூன், சார்லி ட்ராம்ப்
1.பல வகையான நிலைகள்
Author இயக்குநர்/ எழுத்தாளர்
ப்ரெஞ்ச்சிலிருந்து
உருவான வார்த்தை ஆதர் என்பதாகும். ஆதர் எனும் கருத்து புதிய அலை ப்ரெஞ்ச் விமர்சகர்களால்
1940 1960 வரை மிகப்புகழ்பெற்றதாக இருந்தது. மேலும் இயக்குநர் திரைப்படக்கலையில் முக்கியமான
தலைமை கர்த்தா என்பதை உறுதியாக கூறியது இந்த காலகட்ட வரலாறு. சிறந்த உறுதியான மனநிலை கொண்ட இயக்குநர், எழுத்தாளர்/
ஆசிரியர் திரைப்படத்தில் தனது பார்வையை அழுத்தமாக பதிய வைப்பதோடு, தயாரிப்பாளர்கள்
மற்றும் ஸ்டூடியோ ஆகியவற்றின் மீதான அழுத்தங்களையும் சுமக்கவேண்டிய பொறுப்பு உள்ளது.
Exterior
காட்சியானது
கதவுக்கு வெளிப்புற வெளியில் படமாக்கப்படுவது எக்ஸ்டீரியர் எனப்படும். வெளிப்புறம்
போல ஸ்டூடியோவில் அல்லது அதற்கான இடம் தேடி அதிலும் படமாக்கப்படுவது உண்டு.
Eyeline
ஒரு
கதாபாத்திரத்தின் விருப்பம், நோக்கம் எதனை விரும்புகிறார் என்று குறிப்பிடப்படுவது
ஆகும்.
Genre
திரைப்படத்தின் வகை எதுவென புரிந்துகொள்ளும்படியான
மரபான காட்சிகள், மற்றும் பொருட்களைக்கொண்டு அறியலாம். பொதுவாக அமெரிக்க திரைப்படங்கள்
குழு வன்முறை, திகில் , இசை, துப்பறியும் சாகசம் உள்ளிட்டவற்றை தன் மையப்பொருளாக பின்னணியாக
கொண்டிருந்தது. பொதுவாக வன்முறைக்குழுக்களைப்
பற்றிய படத்தில் அதனை நாம் எளிதில் அறியும் வகையில் நகரதின் அமைப்பு, வேகமாக செல்லும்
கார்கள், மது அருந்துவது, துப்பாக்கிகள், எந்திரத்துப்பாக்கிகள், அடர்த்தியான வண்ணங்கள்
கொண்ட பளிச்சிடும் உடைகள் பயன்படுத்தப்பட்டிருக்கும்.
Interior
உட்புறக்காட்சி என்பது ஒரு வீடு அல்லது ஸ்டூடியோ
அரங்கு போன்றவற்றில் படமாக்கப்படும்.
Intertitles
படக்காட்சிகளினூடே அல்லது நடுவில் எழுத்துக்கள்
பயன்படுத்தப்படுவது. ஊமைப்படங்களில் பார்வையாளர்களுக்கு தேவையான விஷயங்களைக் கூற, வசனங்களை
புரிந்துகொள்ள இம்முறை பயன்படுத்தப்பட்டது.
Zoom
ஒரு கண்ணாடி வில்லையின் மூலம் விரிவான காட்சியிலிருந்து சாதாரணமாக மாற்றுவது, பின் அதிலிருந்து
தொலைவிலுள்ள பொருளைப்பார்ப்பது, அல்லது அதனை தலைகீழாக்கிப் பார்ப்பது என உதவுவது இந்த
நுட்பமாகும். கேமராவினை நகர்த்தாமலே இந்த ஜூம் லென்ஸ் மூலம் ஒரு பொருளை மிக அருகில்
செல்லவும், அதிலிருந்து விலகிச்செல்லவும் உதவுகிறது.
Optical printer
படத்தின் காட்சிகளில் காட்சி இருள்வது, இருளிலிருந்து
காட்சி ஒளிர்வது, இருகாட்சிகள் ஒன்றோடொன்று கலப்பது என பல்வேறு சிறப்புத்தோற்றங்களை
காட்சிகளில் உருவாக்க இந்தக்கருவி பயன்படுகிறது. இன்று பெருமளவு இவை கணினி வரைகலை மூலம்
உருவாக்கப்படுகிறது.
Overexposure
படப்பிரதியில்
அதிக அளவு வெளிச்சத்தை பாய்ச்சுவதின் மூலம் சாதாரண காட்சியைவிட அதிக ஒளிர்வுத்தன்மை
கொண்டதாக மாறுகிறது.
Rack focus
ஒரு
காட்சியில் பொருளின் மீது குவிந்திருக்கும் துல்லியமான கவனத்தை, கூர்மையை அதன் பின்னணிக்கும்
அதற்கும் ஒரே காட்சியில் மாற்றிக்காட்டுவது. இதனால் பார்வையாளரின் கவனம் ஒன்றிலிருந்து
ஒன்றிற்கு மாறும்.
Soft focus
ஒளியினை
படத்தில் படரச்செய்து, லென்சின் துல்லியத்தன்மையை, கூர்மையை குறைப்பது.
Superimposition
இருவேறுபட்ட
காட்சி பிம்பங்கள் திரைப்படத்தில் ஒரே நேரத்தில் தோன்றுவது. ஒவ்வொரு காட்சி மறைந்து
புதிய காட்சி தோன்றி இரு பிம்பங்கள் கலப்பதை சூப்பர்இம்போசிசன் எனலாம். டிசால்வ் கூட
சுருக்கமாக இத்தகைய தன்மையைக்கொண்டவைதான்.
Lighting
அரங்கத்தை அலங்கரிப்பது லைட்டிங் ஆகும்.
அதாவது ஒளிஅமைப்பு என்பதை அரங்கத்தில் முன்புறம், பின்புறம், பக்கவாட்டில், குறுக்காக
எப்படி அமையவேண்டும் என்பதே ஒளிஅமைப்பு (Lighting) ஆகும். ஒளி அமைப்பு என்பதை ஒளி,
நிழல் ஆகியவற்றுக்கான வேறுபாடு எனலாம். முக்கியமான (ஹைகீ லைட்டிங்) மேல் நிலை விளக்குகள்
மூலம், ஒளியினை கலைந்து போகச்செய்வது (பிரிப்பது) சில நிழல்வடிவங்களை உருவாக்குவது
போன்றவற்றை (நடுநிலை அல்லது பக்கவாட்டு விளக்குகளால் செய்யமுடியும்). லோகீ லைட்டிங்
(வேறுபட்ட ஒளி அமைப்பை, அரங்கத்தின் சில இடங்களை வெளிச்சம் குவித்தும், மற்ற இடங்களை
இருளாகவும், நிழலாகவும் வைத்திருக்கலாம்) ஒரு இடத்தில் ஒளியைக் குவித்து வைப்பது கதாபாத்திரத்தின்
முடி அல்லது கண்களை பார்க்கவைப்பதற்கும், கவனம் குவிய வைப்பதற்காகவும் இருக்கலாம்.
Voiceover
திரைப்படத்தில் கதாபாத்திரம்
திரையில் தோன்றாத போது பின்னணியில் ஒலிக்கும் குரல் வாய்ஸ் ஓவர் ஆகும். திரையில் தோன்றியபிறகு,
பின்னணிக்குரலுக்கு கதாபாத்திரத்தின் உதடுகள் பொருந்தாத போது, வாயசைக்காதபோது, கூறப்படும் கருத்துக்கள் அவரின் மனதில் தோன்றுபவை
என்று புரிந்துகொள்ளலாம்.
2.காட்சி குறித்த சொற்கள்
Take
கேமராவினை இயக்கி அதனை
நிறுத்துவதற்கு இடையில் எடுக்கப்படும் காட்சிகளே டேக் ஆகும். எந்த வெட்டும் இல்லாமல்
நீண்டு செல்லும் காட்சி லாங் டேக் ஆகும். குறிப்பிட்ட காட்சியை பலமுறை தொடர்ந்து எடுப்பது
ஒவ்வொன்றும் ஒரு டேக் ஆகும்(குறிப்பிட்ட உணர்வுபூர்வ மொழியினை நடிகர்களிடமிருந்து கொண்டுவர
முயற்சித்தல்).
Shot
டேக் என்பது பகுதியாக அல்லது
முழுவதுமாக இறுதியாக தணிக்கை செய்யப்பட்ட படத்தில் பயன்படுத்தப்படுகிறது. இரு வெட்டுகளுக்கு
இடையேயுள்ள ஒரு துண்டு படம் ஷாட் எனப்படும். தணிக்கை செய்யப்பட்டு வெட்டப்படுகிற படம்
கதையினை வெவ்வேறு இடம் அல்லது நேரத்திற்கு மாற்றுகிறது; எடுத்துச்செல்கிறது. ஷாட்டிலுள்ள
இயக்கங்கள் தொடர்கின்றன. நாம் ஷாட் என்பதை நேரத்தின் சிறுபகுதி எனலாம்.
ஒரு பொருளிலிருந்து
இருக்கின்ற தூரத்தைப் பொறுத்து (ECU, CU, MCU, MS, MLS, LS, ELS), கேமரா கோணங்களைப்
பொறுத்து (Low, High, Eyelevel) , காட்சியைப்பொறுத்து (Two shots, Three shots,
Establishing shot) கேமரா இயக்கங்களான (Pan, Track, Dolly, Crane, Tilt) ஒரு திரைப்படம்
400 லிருந்து 1000 ஷாட்டுகளை தோராயமாக கொண்டிருக்கும்.
Scale
காட்சிப்படுத்தப்படும் பொருளிற்கும் அல்லது கதாபாத்திரத்திற்கும்
கேமராவிற்கும் இடையே உள்ள தூரம் ஆகும்.
Extreme CloseUp(ECU)
குளோசப் காட்சிகளை விட
இன்னும் நெருக்கமாக பொருளின் அல்லது கதாபாத்திரத்தின் அண்மையில் எடுக்கப்படும் காட்சி.
படத்தின் பொருளில் விவரங்கள் தெளிவாக அதிகம் காட்டமுடியும். எ.கா. வாய், துப்பாக்கி.
சில சமயங்களில் நுட்பம் இன்செர்ட் என்றும் கூறப்படுகிறது.
CloseUp(CU)
கேமரா பொருளினை
நெருக்கமாக திரையில் காட்டுவது ஆகும். முகம் அதன் உணர்ச்சிகள், அல்லது தொடர்புடைய வேறு
ஒன்றினைக்காட்டுவது.
Medium CloseUp(MCU)
மீடியம் ஷாட் மற்றும் குளோசப் இரண்டிற்கும் இடைப்பட்ட
காட்சி. கதாபாத்திரத்தின் மார்பிற்கு மேலே காட்டப்படும் காட்சி.
Medium Shot(MS)
கதாபாத்திரங்களை இடுப்பிற்கு
மேலாக காட்டுவது. அதோடு பின்னணி சூழலையும் முக்கியமாக கொண்டால் இருஷாட்களை பயன்படுத்தமுடியும்.
Medium Long Shot(MLS)
கதாபாத்திரங்களை
முழங்கால்களிலிருந்து மேலே காட்டும் காட்சி. இதனை அமெரிக்கன் ஷாட் என்றும் குறிப்பிடக்காரணம்,
1930 – 1940 களில் பெருமளவு திரைப்படங்களில் பயன்படுத்தியதுதான்.
Long Shot(LS)
கேமரா படம் பிடிக்கும்
கதாபாத்திரத்திடமிருந்து குறிப்பிட்ட தொலைவில் இருந்து படமாக்குவது. கதாபாத்திரத்தின்
தலை முதல் கால் வரை தெரிவதோடு, அதனை சுற்றியுள்ள பரப்பும் சிறப்பாக வெளித்தெரியும்படி
அமையும்.
Extreme Long Shot(ELS)
கேமரா தான் படம்பிடிக்கவேண்டிய
கதாபாத்திரம் அல்லது பொருளிலிருந்து அதிக தூரம் தள்ளி இருந்து படம்பிடிப்பது. இதன்
மூலம் பரந்த காட்சி, கோணம் கிடைக்கும். புதிய காட்சி ஒன்றிற்காக தொடக்கத்திற்கு பயன்படுகிறது.
Camera Angle
கேமராவின் நிலை
எவ்வளவு உயரத்தில் உள்ளது என்பது, படமாக்கும் கதாபாத்திரத்தோடு சம்பந்தம் கொண்டதாகும்.
Low angle Shot(LA)
கதாபாத்திரத்திற்கு
கீழே கேமரா நிறுத்தப்பட்டு, மேல் நோக்கி காட்சிகள் எடுக்கப்படும். இந்த நுட்பம் சக்திவாய்ந்ததாக
குழந்தையிலிருந்து, இளைஞனாக மாறும் காட்சி போன்றவற்றுக்கு பயன்படுத்தலாம். எக்ஸ்ட்ரீம்
லோ ஆங்கிள் (ELA) இதிலிருந்து பெரிதும் வேறுபட்டதாகும்.
Eyelevel Shot
கேமரா
சாதாரணமாக கதாபாத்திரத்தின் கண்களின் அளவிற்கு ஏற்ப அமைக்கப்படும்( நிலப்பரப்பிலிருந்து
5 அல்லது 6 அடிகள் உயரம்) திரைக்கதையில் கேமராவின் கோணம் குறிப்பிடாதபோது, காட்சி கதாபாத்திரத்தின்
கண்அளவிற்கு தன்னிச்சையாக பொருத்தப்படும். காட்சிகளை ஆராயும்போது, கண் அளவிற்கான காட்சிகள்
பெரிதாக குறிப்பிடப்பட்டிருக்காது, பார்வையாளர் கேமராவின் கோணத்தை குறிப்பிடாதபோது,
தன்னியல்பாக பொருத்தப்படும் கோணம் இதுவென கொள்ளலாம்.
Highangle Shot(HA)
கேமரா
கதாபாத்திரம் அல்லது பொருளுக்கு மேலாக இருந்து கீழ்நோக்கி அதனை படமாக்குவது. எக்ஸ்ட்ரீம்
ஹைஆங்கிள் இதிலிருந்து பெரிதும் வேறுபட்டது. பறவைக்கோணத்தில் எடுக்கப்படும் காட்சியில்
கேமரா கதாபாத்திரம் அல்லது பொருள் வெகு தொலைவு தள்ளியிருக்க மேலிருந்து கீழாக படம்பிடிக்கப்படுவது
ஆகும்.
Dutch or Oblique angle shot
கேமரா
ஒரு புறமாக சாய்த்து வைத்து படமாக்குவது. இந்த முறை கதாபாத்திரத்தின் மனச்சோர்வு, மது
அருந்திருத்தல் அல்லது போதைப்பொருட்களை பயன்படுத்தியிருத்தல் ஆகியவற்றைப் உணர்த்த பயன்படுத்தப்படுகிறது.
Two shots
மீடியம் ஷாட் அல்லது மீடியம் லாங் ஷாட்டின் இரு கதாபாத்திரங்களை
படம்பிடிக்க உதவுவது.
Three Shot
மீடியம்
அல்லது மீடியம் லாங் ஷாட்டின் மூலம் மூன்று கதாபாத்திரங்களை படம்பிடிப்பது.
Moving Shot
கேமரா
நகர்வதைக் குறிக்கிறது. கேமரா பொருத்தப்பட்டு பக்கவாட்டில் கிடைமட்டமாக சுழலும்படி
அமைக்கப்படுவது பேன் எனப்படும். அது நேர்வாட்டில் செங்குத்து மட்டமாக இயங்குவது டில்ட்
எனப்படும். கேமரா பொருளுக்கு அருகே அல்லது அதைத்தாண்டி விலகி தொலைவாக செல்வது டாலி
ஷாட் ஆகும். கேமரா செங்குத்தாக இயங்கினால் அது கிரேன் அல்லது பூம் ஷாட் ஆகும்.
Crane shot
காட்சி
கிரேன் அல்லது பூம் மூலம் எடுக்கப்படுவது. பெரியஎந்திரத்தின் முனையில் கேமரா, ஒளிப்பதிவாளர்
ஆகியோரைக்கொண்டு முன்னும், பின்னும், செங்குத்தாக குறுக்கான இயக்கங்களை இதன் மூலம்
செய்ய முடியும்.
Tracking shot
கேமரா
டாலி அல்லது வண்டியில் பொருத்தப்பட்டு பக்கவாட்டில் சக்கரங்கள் மூலம் நகர்த்தப்படுவது(
ரயில்பாதைபோல) இதன் மூலம் காட்சிகள் படம்பிடிக்கப்படுகிறது.
Hand held shot
கேமராவினை
ஒளிப்பதிவாளர் கையில் கொண்டு காட்சிகளை படம் பிடிப்பது, எடை குறைவான கேமராக்களை கண்டுபிடித்தபின்
இவை எளிதில் சாத்தியமாயின. ஸ்டெடிகேம் அமைப்பு மூலம் டாலி அல்லது கிரேன் மூலம் எடுக்கப்படும்
காட்சிகளைவிட நேர்த்தியாக மேம்பட்ட இயக்கத்தைக்
கொண்டுள்ளது. ஹேண்ட் ஹெல்ட் என்பது ஒரு கதாபாத்திரம் நடக்கும்போது அவரின் பார்வையில்
தெரியும் காட்சிகள் போன்றவற்றை உருவாக்க பயன்படுகிறது. இது படத்திற்கு இயல்புத்தன்மையையும்,
(அ) ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் உருவாக்க உதவுகிறது.
Zoom shot
கேமரா
நகராமல், ஜூம் லென்ஸ் மூலம் எடுக்கப்படுகிற இயக்கமில்லாத காட்சி. 1960 களில் ஜூம் காட்சிகள்
புகழ்பெற்றன. திரையில் ஜூம் காட்சி டாலி ன் போல ஒத்திருந்தாலும், டெலிபோட்டோ லென்ஸ்
கதாபாத்திரத்தை (அ) பொருளை மேலும் இயல்பானதாக, அழகானதாக டாலி (அ) ஹேண்ட் ஹெல்ட் காட்சி
போல உருவாக்கப்படுகிறது.
Pan shot
பார்வையானது
இடதிலிருந்து வலதிற்கு (அ) வலதிலிருந்து இடதிற்கும் மாறுவது. டிராக்கிங் ஷாட்டிலிருந்து
வேறுபடுவது, கேமரா நகரும் இயக்கம் கொண்ட பொருளில் பிணைக்கப்பட்ட ஓரிடத்தில் நிலையாக
பொருத்தப்படுகிறது. கிடைமட்ட அச்சில் இயங்குகிறது இதனை குறிக்க பனோரமா எனலாம். ஃப்ளாஷ்
பேன் (அ) ஃஜிப் பேன் இயக்கம் வேகமாக இருப்பதால், இதில் படமாக்கப்படும் காட்சிகள் திரையில்
மங்கலான தோற்றத்தைக்கொண்டிருக்கும்.
Tilt
இதுவும்
பேன் போன்றதுதான். கேமரா மேலேயும், கீழேயும் செங்குத்து நிலையில் இயங்கும்.
Stock shot
இந்தக்காட்சிகள்
ஸ்டூடியோவில் உள்ள ஆவணப்பட காப்பகத்திலிருந்து பெறப்படுபவையாகும். இவை மற்றொரு படத்திற்காக
உருவாக்கப்பட்டது, அல்லது ஆவணப்படமாக இருக்கலாம். எ.க வெள்ளை மாளிகை, இரண்டாம் உலகப்போர்
பற்றிய காட்சிகள்.
Subjective shot
கேமரா
குறிப்பிட்ட கோணத்தில் பொருத்தப்பட்டு (அ) அதன் உள்ளடக்கத்தைப்பொருத்து காட்சி (தெளிவில்லாத
துல்லியம் குறைந்த காட்சி அல்லது வேறுபட்ட நிறம் கொண்ட காட்சிகள்) குறிப்பிட்ட கதாபாத்திரத்தின்
நிலையைக் குறிக்க பயன்படலாம்.. கதாபாத்திரம் வேறுபட்ட மனநிலையில் உள்ளது என்பதைக்கூற
பயன்படுத்தப்படுவது( குடிபோதை (அ) பயம், தீவிர உணர்ச்சிநிலை).
Longtake
காட்சி
அதிகநேரம் எடுக்கப்பட்டு படமாக்கப்படுவது.( இங்கு கேமரா உள்ளதொலைவை லாங் குறிக்கிறது)
Misc-en- scene
ப்ரெஞ்சிலிருந்து
வந்த தியரி இது. அரங்கம் குறித்தது. அரங்கத்தினை அதிகம் (அ) குறைவாக பயன்படுத்துவது
ஆகும். ஒரு காட்சியில் உள்ளதற்கு நேர்மாறாக அவற்றை தணிக்கை செய்வதில் பயன்படுகிறது.
கேமரா இயக்கம், அரங்கவடிவமைப்பு, பொருட்கள், நடிகர்களை இயக்குவது, ஒளிஅமைப்பு பலவற்றையும்
ஒருங்கிணைப்பது. இத்தியரி இரண்டு முக்கியமான பகுதியைக்கொண்டுள்ளது. படம் வெட்டி ஒட்டுவதான
எடிட்டிங் அடுத்ததாகும்.
எடிட்டிங் மற்றும் படத்தொடர்ச்சி தொடர்பான சொற்கள்
Cross cutting
காட்சிகளை
முன்னும், பின்னுமாக ஷாட்களை இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்டவைகளாக வெட்டி காட்சிகள்
தொடர்ச்சியாக வருவதற்கு உதவுகிறது.
Cut
உடனடியான,
பொதுவான இரு ஷாட்களிடையே நிகழும் ஒன்று. லேபில் இந்தமுறையின் மூலம் எளிதில் ஷாட்களை
இணைக்க முடியும். திரையில் இரண்டாவது ஷாட் உடனடியாக முதலாவதை மாற்றுகிறது. கட் என்பது
வெட்டுதலை குறிக்கிறது. இது படமாக்கப்படும்போது,
கேமராவினை நிறுத்தப்பயன்படுகிறது.
Editing
ஷாட்களை
ஒன்றாக இணைத்து தொடர்ச்சியான நிகழ்வுகளாக அல்லது திரைப்படமாக தொகுக்க உதவுவது. இதில்
உள்ளடங்கியதாக படங்களுக்கு சரியான இசையை இணைப்பதும் நடைபெறுகிறது. ஐரோப்பாவின் வார்த்தையான
எடிட்டிங் என்பது மான்டேஜ் என்று அழைக்கப்படுகிறது. இது படத்தினை வெட்டி அழகாக ஒட்டும்
தன்மை என்று கூறலாம்.
Establishing shot
மாஸ்டர்
ஷாட் என்றழைக்கப்படுகிறது. காட்சியை தொடங்குவதற்கான பயன்பாட்டைக் கொண்டுள்ளது. கதாபாத்திரங்களை
அறிமுகப்படுத்தி, அவர்களின் உறவுகளை விளக்க உதவுவது, அண்மைக்காட்சிகள் மூலமாக விளக்கமாக
புரியவைக்க உதவுகிறது.
Insert
அசையாத
பொருள் ஒன்றினை புத்தகம், கடிதம், கடிகாரம், ஆயுதம், பணக்குவியல் ஆகியவற்றின் காட்சிகளை
கதாபாத்திரம் திரையிலிருந்து வேறொன்றினைப் பார்க்கும்போது, இரு ஷாட்களுக்கு இடையில்
பொருத்துவது, கதாபாத்திரம் பார்த்துக்கொண்டிருக்கும் விஷயத்தை என்னவென கூற உதவுவது.
Jumpcut
தொடர்ச்சியான
ஷாட்களிடையே இடைவெளி அல்லது வெட்டுவதன் மூலம் மிச்சமுள்ள காட்சிகளை தொடர்பாக புரிந்துகொள்ளமுடியும்.
இதன் முடிவாக காட்சிகள் தொடர்பில்லாது, திகைக்கும்படி இடம்பெறும். சிலபடங்களில் இவை
சிந்திக்குப்படியாக இடம்பெற்றிருக்கும். இரு அடுத்தடுத்த ஷாட்களுக்கிடையே ஏற்படும்
இடைவெளி என்று கூறலாம். எ.கா கதாபாத்திரம் காரின் கதவைத்திறந்து காரினை ஓட்டிச்செல்கிறார்.
வண்டி ஏறுவது, ஏறி காரினை ஓட்டத்தொடங்குவது ஏதும் காட்சிகளாக இடம்பெற்றிருக்காது. இது
ஒரு இடையூறு, திடீரென ஒரு மாறுதலை குறிக்கிறது.
Match cut
ஒரு
ஷாட்டிலிருந்து மற்றொன்றுக்கு நேரடியாக வெட்டி ஒட்டுதல் மூலம் கதாபாத்திரம் பொருள்
ஆகியவற்றுக்கான தொடர்பினை கூறுகிறது. இந்த மேட்ச் கட் மூலம் கதாபாத்திரம் இயக்கம் தொடர்ச்சியாக
நிகழ அனுமதிக்கப்படுகிறது. திரைப்படத்தொடர்ச்சி, இந்த ஓட்டத்தினை நம்பியே உள்ளது. மேட்ச்
கட்டிங் நுட்பமானது, மான்டேஜ் காட்சிகள் குறிப்பிட்ட நேரம் முழுக்க தொடர்வதை உறுதி
செய்கிறது.
Montage
வெட்டி,
ஷாட்களை ஒழுங்குபடுத்தி படத்தினை இயல்பானதாக்கி உதவுகிறது.
சிறிய
கவரக்கூடியவாறு காட்சிகளை குறிப்பிட்ட நேரத்திற்கு உருவாக்கி சிறியதாக ஒரு பொருளைப்பற்றியதாக
அல்லது நிகழ்ச்சி குறித்த குறிப்புகளை சுருக்கமாக தருகிறது.
சில
சமயங்களில் மான்டேஜ் ஆனது, mise- en- scene எனும் திரைப்படத்தின் யதார்த்த தன்மைகளை
பல ஷாட்களாக கொண்டதற்கு எதிரானதாக உள்ளது. இயக்குநர் அதிக அளவு வெட்டி ஒட்டுதலை விரும்புகிறார்,
எந்த காட்சிகளையும் வெட்டாமல் நீண்டதாக கொண்டு, அதிக கேமரா நகர்தலை உள்ளிட்டவற்றை விரும்புகிறார்
என்றால் அவர் mise – en – scene இயக்குநர் என்று கொள்ளலாம்.
Parallel editing
கிராஸ்
கட் நுட்பத்தினை ஒத்தது.
Reaction shot
இது
ஒரு கதாபாத்திரம் மற்ற ஒன்றிடம் பேசும்போது, அல்லது முந்தைய காட்சியில் உள்ள ஒன்றை
பார்ப்பது போன்றவற்றை கொண்டது.
Reverseangle shot
திரைப்பட
மொழியில் கிராஸ்கட் நுட்பத்திற்கு மாற்றானது என்று கூறப்படுவது. ஒவ்வொரு கதாபாத்திரத்தின்
தோள் மீது இருந்து படம்பிடிப்பது போல அமைவது. ஒவ்வொரு ஷாட்டுக்கும் ஒரு கதாபாத்திரத்தின்
முகத்தைக்காட்டும் அதே நேரம், எதிரேயுள்ள மற்றொரு கதாபாத்திரத்தின் தலை மற்றும் தோள்களை
காட்டும்.
Scene
குறிப்பிட்ட
நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் நிகழும் இயக்கங்களின் பகுதி. பல ஷாட்களின் தொகுப்பு
எனவும் கூறலாம்.
Sequence
படத்தின்
காட்சிகளை எந்த இடத்தில் இருந்து பார்த்தாலும் அதனிடையே இருக்கும் தொடர்ச்சியை, படம்
முழுக்க பார்க்காவிட்டாலும் புரியக்கூடியதை குறிக்கிறது. காட்சி பல இடங்களில் பல நேரங்களில்
படமாக்கப்பட்டிருக்கலாம்.
Splice
இரு ஷாட்களை பசை அல்லது டேப் கொண்டு வெட்டி இணைக்கப்படுதல்
ஆகும். இதற்கான கருவியின் பெயர் ஸ்ப்லைசர் ஆகும்.
காட்சி மாறுதலுக்கான சொற்கள்
Burn in
ஒரு
வெள்ளைத்திரை படத்தின் மீது தோன்றுவது.
Burn out
படம்
வெள்ளைத்திரையின் மீது தோன்றுவது.
Cut
ஒரு
ஷாட்டிலிருந்து இன்னொன்றிற்கு மாறுவதற்கு பயன்படுத்தப்படுவது. திரையில் இரண்டாவது ஷாட்
முதலாவது ஷாட்டினை உடனடியாக மாற்ற உதவுகிறது. இதனை பயன்படுத்தும்போது காட்சிகளில் ஒரு
தொடர்ச்சியை உருவாக்க முடியும். (முன்பு ஃபேட், டிசால்வ் ஆகியவை பயன்படுத்தப்பட்டன)
Dissolve
ஒரு
ஷாட் நிறைவடையும்போது, மற்றொன்று அதனூடே மெதுவாக தொடங்க, முதல் ஷாட் மங்கி மறைவது ஆகும்.
இது மரபான முறையில் திரைப்படத்தில் தொடர்ச்சியை உருவாக்கித்தர பயன்படுத்தப்பட்டது.
Fade in
மெல்ல
கருப்பு நிற திரையிலிருந்து வெளிச்சம் ஆகி, இயல்பான தன்மையை படம் அடையும்.
Fade out
ஃபேட் இன்னிற்கு எதிரானது. திரை இருள்வது தொடர்ச்சி
முடிவடைந்ததை காட்டுகிறது.
Irish in
காட்சி
கருப்புநிறத்தோடான வட்டவடிவோடு தோன்றியபின் படம் தெரியும். ஊமைப்படங்களில் இது தொடர்ச்சியாக
பயன்படுத்தப்பட்டது.
Irish out
ஐரிஸ்
இன்னிற்கு, எதிரானது. இறுதியாக கருப்புநிற வட்டம் சூழ்ந்து நிறைவடைவது.
Jump cut, Match cut - இவை முன்பே விளக்கப்பட்டுவிட்டன.
Wipe
ஒரு
காட்சி முடிந்த பின் வரும் அடுத்த காட்சி முதல் காட்சியினை துடைத்தழிப்பது ஆகும். கார்களின்
வைப்பர் போல செயல்படுகிறது.
புகைப்படம் மற்றும் தொழில்நுட்ப விவரங்கள்
Aspect Ratio
காட்சிகளின்
நீள அகல விபரங்கள் பற்றியது. மரபான 35 மி.மீ படமானது, 1.33:1 என்பது அகாடமி அபெர்சர்
என்று கூறப்படுகிறது. விரிந்த திரையான சினிமாஸ்கோப் அளவு 1.65:1 லிருந்து 2.55:1 படத்திற்கான
அளவுகள் அவற்றின் உயரத்தை விட அகலமானவை என்பது இதன் தொகுத்தலை மாறுதலுக்கு உட்படுத்துகிறது.
Depth of Field
படத்தினை
குறிப்பிட்ட கோணத்தில் கூர்மையான குவியம் கொண்டதாக பொருத்துவது, (அதாவது கேமரா லென்ஸ் எந்த அளவு திறக்கிறது என்பதைக்குறிக்கிறது)
குறைந்த அழுத்தம் கொண்ட காட்சி முன்னனி, பின்னணி, நடுபரப்பு ஆகியற்றை காட்டினாலும்,
அதில் கூர்மையாக இருக்காது. ஆனால் கவனத்தோடு இம்மூன்றையும் காட்சிகள் தூரத்தில் இருந்தாலும்,
அவற்றை அருகிலிருப்பது போல தெளிவாக காட்டும்.
Film stock
படப்பிடிப்புக்கு
பயன்படுத்தப்படாமல் கேமராவில் நிரப்பப்பட்டிருக்கும் படச்சுருளைக் குறிக்கிறது. படச்சுருள்
என்பது வண்ணம், கருப்பு, வெள்ளை வேகம், அல்லது குறைவு ஆகியவற்றைக்கொண்டிருக்கலாம்.
Footage
படமாக்கப்பட்ட
காட்சிகளை உள்ளடக்கிய படச்சுருள்.
Frame
படச்சுருளில்
உள்ள ஒரு படம். ஊமைப்படங்களின் ப்ரேம் ஒரு நொடிக்கு 16 ஆகும். இன்றைய படங்களின் வேகம்
ஒரு நொடிக்கு 24 ப்ரேம் ஆகும்.
கேமராவின் லென்ஸ்கள்
Wideangle
சாதாரண பரப்பினை விரிவானதாக காட்ட உதவும்
லென்ஸ் இது. படத்தினை விரிவாக்கி காண உதவுகிறது என்றாலும் கதாபாத்திரம் கேமரா அருகில்
வரும்போது,ம படக்காட்சி குழப்பம் நிறைந்ததாக மாறும்.
Normal
Telephoto
வைட்
ஆங்கிள் காட்சிக்கு எதிரானது. படக்காட்சி பார்க்கின்ற யாருக்கும் நேரானதாக, தொலைவிலுள்ள
பொருள்களை அருகில் காட்டக்கூடியது.
நன்றி:
பிரித்வி பொன்னுராஜா, திண்டுக்கல்.
கருத்துகள்
கருத்துரையிடுக