நிற்காத கரைச்சலப்பா !
நிற்காத கரைச்சலப்பா !
செட் புரோட்டாக்காரன்
நாள் முழுவதும் இப்படியே கழிந்துவிடும் என்று நான்கு கண்ணன் நினைத்திருக்கவில்லை.
நெல்லை தீபம் என்ற இனக்குழு உணவகத்தில் உணவு சாப்பிட்டபோதும், அவனின் கடாபுடா சத்தம்
பிறருக்கு கேட்குமளவு அதிகரித்துவிட்டது.
காலையில் இட்லி சாப்பிடத்தொடங்கியபோதே பெவிக்கால் கம்பெனியுடன்
இனக்குழு ஓட்டல்காரர் ஏதோ டைஅப் வைத்திருப்பாரோ என்று நினைக்கும்படி இட்லி வாழை இலையில்
கையில் பிய்க்க பிய்க்க வழுக்கி ஓடியது. நான்கு கண்ணன் ஓட்டல்காரரைப் பார்த்தபோது,
நாளைக்கு உலகம் உறுதியாக அழிந்துவிடும் என்பது போல் தனுஷ் படத்தை அவ்வளவு ஆர்வமாக பார்த்துக்கொண்டிருந்தார்.
கையில் பிட்டு சாப்பிட முடியாத பரிமாண முதிர்ச்சியைப் பெற்ற இட்லியை உள்ளே போட பெரும்
முயற்சி தேவைப்பட்டது.
சட்னி, சாம்பார் என்று பெயரிடப்பட்ட எதனோடும் இட்லி சேராது தனித்தியங்கும்
முடிவைக் கொண்டிருந்தது. வழுக்கிச் செல்லும் இட்லியைப் பிடிக்க இடது கையையும் பயன்படுத்தலாமா
என்ற சிந்தித்துக்கொண்டே நான்கு கண்ணன் உணவு உண்டார்.
தாராபுர எழுத்தாளரின் அணுக்கத்தொண்டர் துணை இயக்குநர் குமேஷ், கும்சா,
பரமகுரு ஆகியோருடன் ரமணாஸ்ரமம் போனதால் உடல் உஷ்ணவாதத்தால் சிரமப்பட்டதே ஒழிய நடந்தே
இறையனுபவ அனுபூதியை டோக்கன் போட்டு வாங்கிவிடும் கங்காணிச் சித்தன் போல கைகூடி
வரவில்லை. இதனால் பெல்விஸ் அண்டர் புரடக்ஷனே பாதிக்கப்பட்டுவிட்டது. உணவுன்பதை இரண்டு
வேளை தள்ளிவைக்க முடிவெடுத்துவிட்டார் நான்குகண்ணனார் அவர்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக