உணர்ச்சிவசப்படும் முரட்டு இயக்குநன்
உணர்ச்சிவசப்படும் முரட்டு இயக்குநன்
ஹனிரியாஸ்
அனுகந்தனுடன் இயல்பாகவே வி.காபோவிற்கு
நல்ல நெருக்கம் ஏற்பட்டுவிட்டதோ என்று நினைக்கும்படி நிகழ்ச்சிகள் இருக்கிறது. ஆய்வு
செய்யவெல்லாம் எனக்கு விருப்பமில்லை. சமூகத்தின் மீது மாறாத கோபம் கனலும் ஒவ்வொரு உயிரும்
எனக்கு நண்பர்களே என வி.காபோ காற்றில் சபதமெடுப்பார். அவருக்கு அ.கவை மிகப்பிடிக்கும்.
ஆனால் இவருடன் இருப்பது தொடர்ந்து நம்மை நாமே துன்பத்தில் சிக்கவைத்துக்கொள்ள விரும்புகிறோம்
என்றே அர்த்தமாகும். வேசிகள், பிச்சைக்காரர்களிடம், எவரிடமும் எளிதாகப் பேசி பிரியம் கொள்ளும் துணிச்சல்காரர். மூச்சுவிடுவதற்கு
அடுத்து புகைபிடிப்பது தான் முக்கியம் என்று நம்பி கடைபிடித்து கழிவறையில் புகையாய்
நிற்க வைத்திருக்கும் மனித நேயம் கொண்ட நெஞ்சு அ.கவுடையது என்பார் வி. காபோ.
புகையிலிருந்து தப்பிக்க வி.காபோ
வேகமாக வெளியே வந்தார். வேகமாக மூச்சை விட்டார். மனச்சமநிலை பத்துக்கு பத்து என்ற அறையில்தான்
சமநிலைக்கு வந்துவிட்டது என்பதை உணர்ந்தார் வி.காபோ.
அறையின் வெம்மை கடுமையாக வி.காபோவை
வதைத்துவிட்டது போல. மனம் தவிப்பிலேயே இருந்தது. உள்ளங்கால்களில் இறங்கி வழிந்துகொண்டிருந்தது
வெம்மை. முரண் பிறப்பு அருகிலேயே இருந்தது தெரியாமல் வெகுநேரம் நடந்து அவரைப் பார்க்க
சென்றதாக வி.காபோ கூறினார். பாரியாளிடம் ஏதோ வாங்கியிருப்பார் போல கண்கள் ஜூனியர் விஜயகாந்த்
போல காட்டியது. உடல் ஏனோ ஒரு மாதிரியாயிருக்கிறது அவருக்கு. கள்ளமுள்ளம் கரைந்தழட்டும்.
அவதி சிறிது குறையலாமல்லவா? மாற்றம் ஏற்பட்டுத்தானே தீரவேண்டும்; கங்காணிச்சித்தனின்
பட்டறையில் பாடங்களைக் கற்ற சிஷ்யருக்கு.
கருத்துகள்
கருத்துரையிடுக