காற்றிலிருந்து வார்த்தைகளுக்கு ஒரு பயணம்


காற்றிலிருந்து வார்த்தைகளுக்கு ஒரு பயணம்

                                                                ஆங்கிலத்தில்: ரோஹிணி நாயர்

                                                                தமிழில்: ஜோ ஃபாக்ஸ்

                நம் வாழ்வில் அனைவரும் மருத்துவரின் ஆலோசனையைப்பெற ஒரு மணிநேரம் அல்லது இரண்டு மணிநேரம் காத்திருந்திருப்போம். அப்போது நாம் ஒரு மாத இதழைப்புரட்டியபடி () மற்றவர்கள் பேசுவதைக்கேட்டுக் கொண்டோ () நம் உறவினர்கள் நோயினால் துன்பப்படுவதை பார்த்துக்கொண்டோ குழப்பமான நிலையில் அமர்ந்திருப்போம்.

                ஆனால் ஹரியானா, பானிபட் பகுதியைச்சேர்ந்த அர்ஸ்ஷா தில்பாகி(16), மருத்துவருக்காக காத்திருந்த ஒரு நாளின் நேரத்தை மிகவும் பயன்பாடான கருவி ஒன்றினை உருவாக்குவதற்கான அடித்தளம் ஒன்றினை ஏற்படுத்திக் கொண்டார்.

                “பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு பேசும் திறன் இழந்த நோயாளி ஒருவர் அழுதுகொண்டிருப்பதை கவனித்தேன்என்று கூறுகிற அர்ஸ் பானிபட்டில் டிஏவி பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கின்ற மாணவராவார்.                இந்த சம்பவம் தொடர்புகொள்வதில் ஏற்படும் இடையூறுகள் எப்படி ஒருவரை ஆதரவற்றவராக மாற்றுகிறது என்பதை அர்ஸ்க்கு உணர்த்தியது. பின் அவர் கண்ட புள்ளிவிவரங்களின் படி, பேச்சுத்திறன் இழந்தவர்களின் சராசரி வாழ்நாள் 20 ஆண்டுகளாகவே  இருந்தது அவரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. “ஒரு மனிதன் சுவாசித்தாலே போதும் நீண்டகாலம் வாழலாம் என்று அப்போது நினைத்திருந்தேன்என்கிறார் அர்ஸ் தன் அப்போதைய மனநிலையை நினைத்துக்கொண்டே.

                எனவே அர்ஸ்டாக்எனும் மாற்று தகவல்தொடர்பு கருவியை ஏமியோடிராபிக் லேட்ரல் ஸ்க்லோரோசிஸ் () லூ ஜேரிக் உள்ளிட்ட நோய்களினால் பாதிக்கப்பட்டு பேச்சுத்திறன் இழந்த நோயாளிகளுக்காக உருவாக்கத்தொடங்கினார். இந்தக்கருவி நோயாளிகளின் மூச்சை பேச்சாக மாற்றித்தரும். இந்தக்கருவி கூகுள் அறிவியல் விழாவில்(2014) தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய 15 கண்டுபிடிப்பாளர்களில் ஒருவராக மாற்றியிருக்கிறது. ஆசியாவில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இவர் ஒருவரே. கூகுள் வாக்காளர்களின் விருதிற்கும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

                மும்பையில் நடந்த டெட்எக்ஸ் கேட்வே கூட்டத்தில்டாக்கருவியை அறிமுகப்படுத்தியிருக்கும் அர்ஸ் அதன் செயல்பாடுகளை விவரிக்கிறார்.

                ‘டாக்கருவியில் முதல்பகுதி ஆங்கிலம் மூலம் ஒன்பது குரல்களை ஆண் மற்றும் பெண் என வெவ்வேறு வயதுக்கேற்றவாறு கொண்டுள்ளது. இரண்டாவது பகுதி குறிப்பிட்ட கட்டளைகளை மற்றும் வார்த்தைகளை கொண்டுள்ளது. இக்கருவியின்விலை 100 டாலருக்கும் குறைவுதான்.

                ‘டாக்கருவி பல்வேறு கௌரவங்களைத்தொடர்ந்து பெற்று வருகிறது. நொய்டாவில் நடைபெற்ற புதிய கண்டுபிடிப்புகளின் தொடக்கம் இந்தியா எனும் விழாவில் இரண்டாம் பரிசை வென்றிருக்கிறது. ஆனால் அர்ஸ்க்கு மிகப்பெரிய பரிசாக கிடைத்தது என்று அவரே கருதுவது, ‘டாக்கருவியினைக் கண்டுபிடித்து அதன் மூலம் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள முனைந்த நோயாளிகளின் பதில்கள்தான். “டாக் கருவியினை ஒரு ஆண்டுகாலமாக உருவாக்கி, அதனை பார்கின்சன் நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தவரிடம் சோதித்தபோது, நேர்மறையான ஆதரவைப்பெற்றேன். இக்கருவி அவர் முகத்தில் புன்னகையை ஏற்படுத்தியதுஎன்று அந்த நினைவுகளை எண்ணியபடி பேசுகிறார் அர்ஸ்.

                டாக் கருவிக்காக காத்திருக்கும் வளர்ச்சிக்குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட பெற்றோரிடமிருந்து வந்த மின்னஞ்சல் ஒன்றினை படிக்கிறார் அர்ஸ். ‘’எனது மகனால் பேசமுடியாது. ஆனால் உங்களது கருவியின் மூலம் அவன் கூறும் லவ் யூ  என்ற வார்த்தையை நான் கேட்க முடியும்’’.

                அர்ஸ் இதுபோன்ற நிகழ்ச்சிகளை முக்கியமானதாக கருதுகிறார். தன்னுடைய பங்கினை உலகிற்கு அளித்திருப்பதாக கருதுவது இதுபோன்ற நிகழ்வுகளின்போதுதான் என்று கருதுகிறார். அடுத்த ஐந்தாண்டுக்கான திட்டம் என்னவென்று அவரிடம் கேட்டபோது ‘’ மனிதர்களுக்கு பயன்படுகின்ற, தேவைப்படுகின்றடாக்கருவி போன்ற ஒன்றினை உருவாக்கவேண்டும். தொழில்நுட்பம் சார்ந்த ஒன்று என்பதில்லை. சமூகப்பிரச்சனைகளை தீர்க்கும் விதமாக, உலகத்தை சிறந்த வாழ்விடமாக மாற்றும் ஒன்றாக அது இருக்கவேண்டும். அதைத்தான் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறேன் ’’ கனவுகள் கண்களில் பொலிய கூறுகிறார்.

                இவரது அடுத்த திட்டம்டாக்கருவியினை 100 மில்லியன் மக்களில் பேசும் திறனிழந்த பலருக்கும் கொண்டுபோய் சேர்க்கும் செயல்பாடுதான். ‘’ எதிர்காலத்தில் இந்தக்கருவி இன்னும் மேம்பட்டதாகவும், எளிதில் கிடைக்¢கக் கூடியதாகவும் இருக்கவேண்டும்’’. என்கிறார் அர்ஸ் தில்பாகி. 2015 ஆண்டின் இறுதியில் பயனர்களுக்கு கிடைக்கும் விதமாக கிடைக்கச்செய்யும் விதமாக திட்டமிட்டு வருகிறார் இவர்.

அர்ஸ்டாக்கருவியை உருவாக்கியதோடு தன் பள்ளிக்கான பாடங்களையும் படிப்பதில் குறிப்பிட்ட ஒழுங்குமுறைகளை உருவாக்கி இரண்டையும் சமநிலையாக பாவிக்கிறார்.

‘’ எனது நாள் அதிகாலை 5 மணிக்குத் தொடங்கும். பள்ளிக்குச் சென்றுவிட்டு மதியம் ஒரு மணிக்கு திரும்புவேன். பிறகு தொடர்ந்து படிப்பேன். சிறிது நேரம் விளையாடிவிட்டு, என் ஆராய்ச்சியில் மூழ்கிவிடுவேன். இன்னும் சிறிது பணியாற்றினால்  ‘டாக்கருவியினை இன்னும் சிறந்ததாக மாற்ற முயற்சித்து வருகிறேன் என்று கூறும் அர்ஸ்டாக்கருவி தனது சமூகப்பொறுப்பினை அதிகரிக்க உதவியது என்றும் குறிப்பிடுகிறார்.

இவரது பெற்றோரின் ஆதரவு இவரின் முயற்சியும், நோக்கமும் குலையாது இருக்க பெரிதும் உதவியிருக்கிறது. ‘’ எனது பெற்றோர்கள்தான் என் ஆலோசகர்கள். அவர்கள்தான் என் பெரும் பலம் மற்றும் எனது முடிவுகளுக்கான ஆதரவாளர்கள். இன்னும் சிறப்பாக இக்கருவியைத் தயாரிக்க  என்னை ஊக்கப்படுத்தினார்கள்’’ என்கிறார் அர்ஸ் பெருமிதத்துடன்.

‘’ ஒன்றை உருவாக்குவது என்பது எனக்கு மிகப்பிடித்தமானது. உண்மையான கண்டுபிடிப்பு என்பது வாழ்க்கையை நீங்கள் பார்க்கும் விதத்தில் உருவாகிறது. எப்போதுமே நான் என்ன செய்துவிடமுடியும்? என்று கேட்காதீர்கள். அதற்கு பதிலாக இப்பிரச்சனையைத்தீர்க்க நான் செய்ய முடியும்? என்று யோசிக்கலாம். குறிப்பிட்ட காரணம் அல்லது பிரச்சனையைத் தீர்க்க உண்மையோடும், அக்கறையோடும் முயன்றால் அந்த இடத்தில் இருந்து சிக்கல்கள் விலகிவிடும்’’ என்கிறார் அர்ஸ்.

                                                நன்றி: டெக்கான் கிரானிக்கல்,  30.11.2014.



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்