பகிர்தலின் பகல்வேளைகளும், இரவுப்பொழுதுகளும்

பகிர்தலின் பகல்வேளைகளும், இரவுப்பொழுதுகளும்
                                                      கஸரக்கட்டன்

பகிர்தல் பல்வேறு அபாயங்கள் குறித்தும் பேசலாம். ஆனால் அதில் ஒரு மகிழ்ச்சி இருக்கிறது. பாதுகாப்பின்மை இருக்கிறது. நம் மனம் எப்போதும் ஒரு பாதுகாப்பு தேடுகிற ஒன்றாக இருக்கிறது. சாய்ந்து கொள்ள மொட்டைமாடி சுவர் தேவைப்படுகிறது.

சென்னையில் லோகேஷ் என்னும் திரைப்பட போஸ்டர்களை வடிவமைக்கும் ஒருவரை சந்தித்தேன். ஆள் மிக இறுக்கமானவர் போல. நிறைய பேர் வாழ்க்கையில் கபடி விளையாடியிருக்கிறார்கள் இதைச் சொல்லக் காரணம் அவரின் சினிமா தளம்தான். முகத்தில் எந்தவித உணர்ச்சியும் தெரியவில்லை என்று பயமாக இருந்தது. எப்போதும் போல நான் பேசி என்னை நானே கிண்டல் பகடியாக பேசினாலும் நகரத்திற்குரிய போக்கில் எந்த பதிலும் பேசாமல் அதிகபட்சமாக ‘ம்’ என்றார்.

ஒவ்வொரு  மனிதனும் பகிர்ந்துகொள்ளப்பட வேண்டியவன்தான். பகலை சமாளித்துவிடலாம். ஆனால் இரவு அப்படி அல்ல. மனதை கலங்கடிக்கக் கூடியது. அப்படியே மனதினுள்ளிருக்கும் அனைத்தையும் ஓட விடும் கண்முன்னே. அதனால் இரவு நேரத்தில் ஒரு மனிதனை அணுக முயற்சி செய்தால் பலன் கிடைக்கக்கூடும். நான் இரவில் கண்ட மனிதர்களின் சந்திப்புகளே இதன் ஆதாரமாக உள்ளது. சிலருக்க நாட்களாகலாம். ஏதோ ஒரு நேரம். ஒரு மனதின் ரகசியங்களெல்லாம் அப்படியே மெல்ல திறந்து வழிகிறது. அதை திறந்து மனதோடு நீங்களிருந்தால் அறியலாம். இல்லாவிட்டாலும் பிரச்சனையில்லை. மனிதர்களை அறிபவன் அதன் வழியே தன்னையேதான அறிகிறான். பகிர்தல் பல ஆபத்துகளை உருவாக்கலாம். அதுதான் அதன் இயல்பே. அப்படித்தானே இருக்கமுடியும்.




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்