இடுகைகள்

இயற்பியல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஸ்டீபன் ஹாக்கிங் தினம்! - ஜனவரி 8

படம்
அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்கை யாரும் அறியாமல் இருக்க முடியாது. இயற்பியல், வானியல் சார்ந்த துறைகளில் பல்வேறு கண்டுபிடிப்புகளை தனது ஆய்வின் வழியாக சொன்னவர். முழு உடலும் செயலிழந்துபோனாலும் வீல்சேரில் உட்கார்ந்து பல்வேறு அறிவியல் சாதனைகளை உருவாக்கியவர். ஜனவரி 8, 1942ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்டில் பிறந்தவர் ஸ்டீபன். இவரது பெற்றோர் மருத்துவர்கள். குடும்பமே படிப்பாளிகளைக் கொண்டது. படிப்பை முக்கியமானதாக எடுத்துக்கொண்டவர்கள். ஆக்ஸ்போர்ட் பல்கலையில் இயற்பியல் படிப்பில் பட்டம் பெற்றவர். 1962 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலையில் சேர்ந்தும் படித்தார். 1963ஆம் ஆண்டு ஸ்டீபனின் உடலில் மோட்டார் நியூரான் தொடர்பான நோய் இருப்பதைக் கண்டுபிடித்தனர். இதற்குப்பிறகு, அவரது முழு உடலும் செயலிழந்துபோனது. பின்னர்தான், அவரது முக தசைகளின் இயக்கத்திற்கு ஏற்ப அதனை பேச்சாக மாற்றும் கருவியை உருவாக்கினர். இதன் வழியாக அவர் பிறருடன் தொடர்புகொள்ள முடிந்தது. உடல் இத்தனை பிரச்னைகளைக் கொண்டிருந்தாலும் கூட இயற்பியலில் பல்வேறு அறிவியல் கருத்துகளைக் கண்டுபிடிக்கவும், அதனை உலகிற்கு சொல்லவும் உழைத்தார். கருந்துளை பற்றிய கருத்

வேலைக்கு பயணிக்கும் தொலைவு - டேட்டா ஜங்க்ஷன்

படம்
  ஒருவர் மாங்காடு, அல்லது மடிப்பாக்கத்திலிருந்து ராயப்பேட்டை வருவது என்றால் தினசரி அவர் எத்தனை மணிக்கு கிளம்பவேண்டும்? கணித லாஜிக் கிடையாது என்பதால் மனதில் தோன்றும் விடையை நீங்கள் சொன்னால் போதும். குறைந்தது 30 நிமிடங்களை பயணத்திற்கென ஒதுக்கவேண்டும். போக்குவரத்து நெரிசல் கூடினால் அமைச்சர்கள் நகர்வலம் வந்தால் இன்னும் நேரம் கூடும்.  1994ஆம் ஆண்டு சீசர் மார்செட்டி, பயணம் செய்வதில் மனிதர்களின் குணங்களை பற்றி ஆராய்ந்தார். இதனை மார்செட்டி கான்ஸ்டன்ட் என்று அழைக்கின்றனர். இவரது ஆய்வுப்படி ஒருநாளில் ஒருவர் ஒரு மணிநேரத்தை பயணத்திற்கென ஒதுக்கிவிடுகிறார். இந்த வகையில் அமெரிக்காவில் 30 நிமிடங்கள் என கணக்கு போட்டால், அமெரிக்காவில் 27, இங்கிலாந்தில் 29, கனடாவில் 26 நிமிடங்கள் செலவாகின்றன.  காலம்தோறும் எப்படி நகரங்கள் மாறுகின்றன, அதற்கேற்ப பயணம் செய்து மனிதர்கள் எப்படி வேலை செய்கிறார்கள் என்பதை மார்செட்டி ஆய்வு செய்தார். இப்போது அதுதொடர்பான தகவல்களைப் பார்ப்போம்.  1800களில் ரோம், வெனிஸ், பெர்லின் ஆகிய நாடுகளில் மக்கள் தினசரி வேலைக்கு நடந்து சென்ற தூரம் 5 கி.மீ.  ஒருவரால் முப்பது நிமிடங்களில் நடக்க முட

காலப்பயணம் செய்து தன் தாயின் உயிரைக் காப்பாற்றும் மகனின் பாசம் வென்றதா? - ஆலிஸ் - கொரியத் தொடர் - 16 எபிசோடுகள்

படம்
                  ஆலிஸ் கொரிய தொடர் 16 எபிசோடுகள்     Genre: Science fiction, Romance Developed by: SBS TV Written by: Kim Kyu-won, Kang Cheol-gyu, Kim Ga-yeong August 28 – October 24, 2020   டிவியில் காலப்பயணம் மாதிரி மையப்பொ ருளை எடுத்து ரசிக்க வைக்கமுடியுமா ? ஏன் முடியாது என்று சொல்லி சாத்தியமாக்கியிருக்கிறார் ஆலிஸ் தொடர் இயக்குநர் . காலப்பயணம் என்றால் ஏராளமான சிஜி காட்சிகள் தேவை , தேடுதல் , கொலை , குற்றங்கள் தேவை என்று பலர் நினைப்போம் . ஆனால் இந்த தொடர் முழுக்க உணர்ச்சிகரமான உறவுகளை மட்டுமே மையமாக வைத்து எடுத்திருக்கிறார்கள் . இதனால் பெரிய ஜிம்மிக்ஸ் வேலைகள் , எதிர்கால மனிதர்களின் தொழில்நுட்பம் என்று கவலைப்படவேண்டியதில்லை . பார்க் ஜின் , காவல்துறையில் வேலை செய்யும் கேப்டனுக்கு அடுத்த இரண்டாம் நிலை அதிகாரி . இவரது மேலதிகாரி கோ . இவர்தான் அம்மா இறந்தபிறகு , பார்க் ஜின்னை தனது பிள்ளை போல வீட்டில் தங்க வைத்து வளர்க்கிறார் . இதற்கு என்ன காரணம் என்று தேடினால் , 2010 க்கு கதை செல்கிறது . அங்கு ஜின்னின் அம்மா , அப்பா இல்லாமல் பையனை 19 ஆண்டுகளாக வளர்க்க

இருபது அறிவியல் மொழிபெயர்ப்பு நேர்காணல்களைக் கொண்ட நூல்! - அறிவியலே உலகு- அன்பரசு சண்முகம்

படம்
  இந்த நூலில் இருபது அறிவியல் மொழிபெயர்ப்பு நேர்காணல்கள் உள்ளன. கணிதம், இயற்பியல்,வானியல், செயற்கை நுண்ணறிவு, உளவியல் சார்ந்த துறை வல்லுநர்கள் தங்களது ஆராய்ச்சி பற்றி பேசியுள்ளனர்.  இந்த நூல் எழுதப்பட முன்மாதிரி பாரதி புத்தகாலய ஆசிரியர் இரா. நடராசன் ஆவார். அவரது நேர்காணல் ஒன்றை பாரதி  புத்தகாலயத்தின் புதிய புத்தகம் பேசுது இதழில் படித்தேன். அதற்குப்பிறகுதான் அறிவியல் நேர்காணல்களை எழுதலாம் என்ற எண்ணம் மனத்தில் வலுப்பட்டது. அப்படி உருவானதுதான் இந்த நூல்.  நேர்காணலின் இறுதியில் மூலக்கட்டுரையை படிப்பதற்கான க்யூஆர் கோடு உள்ளது. எனவே, படிக்கும் வாசகர்கள் அதனைப் பயன்படுத்தி மூலக்கட்டுரையை வாசித்து அறிவியலாளர்கள் பற்றி கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.  மொழிபெயர்ப்பு நேர்காணல்கள் எந்தெந்த வலைத்தளங்களிலிருந்து பெறப்பட்டுள்ளன என்ற தகவலும் இறுதிப்பக்கங்களில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த நூலை வாசிப்பவர்களுக்கு அறிவியல் துறையில் ஈடுபடுவதற்கான ஆர்வம் வரவேண்டுமென்பதே இலக்கு. வாசியுங்கள் நன்றி! https://www.amazon.in/s?k=ariviyalae+ulagu&i=digital-text&ref=nb_sb_noss அன்பரசு சண்முகம்

ஐஐடி டூ அரசுப்பள்ளி ஆசிரியர்!

படம்
  எஸ்.பவிஷ், படுகர் இனத்தைச் சேர்ந்தவர். ஊட்டியிலுள்ள துனேரி பகுதியைச் சேர்ந்தவர். பவிஷ், ஐஐடி இந்தூரில் இயற்பியல் படித்துவிட்டு, துனேரியிலுள்ள அரசு மாதிரி பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்துவருகிறார். முனைவர் பட்டம் பெறும் முனைப்பில் இருந்தவரை மாற்றியது அவரது நண்பர்கள்.  கிராமத்திலிருந்து ஐஐடி வரை சென்ற ஒருவர் மாணவர்களுக்கு பெரியளவில் ஊக்கமூட்டி உதவ முடியும் என கூறியதால் ஆசிரியராக பணியாற்ற பவிஷ் ஒப்புக்கொண்டிருக்கிறார். விவசாயக்குடும்பத்தைச் சேர்ந்த பவிஷ், ஐந்தாவது வரை உள்ளூர் பள்ளியில் படித்திருக்கிறார். பின்னர் காக்குச்சி, காரமடை என பள்ளிப்படிப்பு விரிவடைந்தது. பிளஸ் 2 படிப்பு முடிந்தபிறகு கோவைக்கு பஸ் ஏறியவருக்கு, பிஎஸ்ஜி கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைத்தது.  கணினி பொறியியல் பட்டம் பெற்றவர் முதுகலைப் பட்டம் பெற ஐஐடி இந்தூருக்கு சென்றுபடித்தார். ”நான் முனைவர் படிப்பிற்கான தயாரிப்பில் இருந்தபோதுதான் எனது நண்பர்கள் கிராமத்து மாணவர்கள் பற்றி கூறினார்கள். அவர்களுக்கு பாடம் பற்றி உதவினால் நன்றாக இருக்கும் என்றார்கள். எனவே, நான் தன்னார்வமாக அவர்களுக்கு ஆசிரியராக பணியாற்றி வருகிறேன்”’ என்றார

விண்வெளி பொறியியல் துறையில் வேலை கிடைப்பது எப்படி?

படம்
  விண்வெளி பொறியியல் துறை அறிவியல்துறையில் இன்று பெரும் வரவேற்பு பெற்று வருவது, விண்வெளி பொறியியல் துறை. விமானம் மற்றும் விண்கலத்தின் வடிவமைப்பு, மேம்பாடு ஆகியவற்றை உருவாக்கும் துறை இதுவே. இன்று உணவுகளை வீடுகளுக்கு டெலிவரி செய்யும் டிரோன்கள் முதல் ராக்கெட்டுகள் வரையிலான தயாரிப்புகளை மேற்கொள்வது இத்துறையினர்தான்.  இதற்கு அடிப்படையானது, இயற்பியலில் ஆற்றல், விசை, இயக்கம் குறித்த அறிவுதான். கூடவே கணிதத்தின் உதவியும் தேவை. இதில் ஏற்படும் சிறிய தவறும் கூட விமானம் மற்றும் விண்கலத்தின் இயக்கத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும். விண்வெளி பொறியியல்துறையினர், செயற்கைக்கோள், விமானம், விண்கலங்கள் ஆகியற்றைத் தயாரிக்கின்றனர். அதோடு அதன் வடிவமைப்பு, சோதனை, பராமரிப்பு என அனைத்து விஷயங்களையும் மேற்கொள்வார்கள்.  கல்வியை பிரமாதமாக கற்றுவிட்டீர்கள். ஆனால், இதற்கான வேலை எங்கு கிடைக்கும்? போயிங், நாசா, ஸ்பேஸ் எக்ஸ், லோக்கீது மார்ட்டின், ஜேபிஎல், ஜெனரல் எலக்ட்ரிக் என ஏராளமான நிறுவனங்கள் விண்வெளி பொறியியலாளர்களை வரவேற்க காத்துக் கிடக்கின்றன. இதில் வேலைவாய்ப்புகள் என்பது நிறைய மாறுபடும். சில பொறியாளர்களுக்கு

நம்ப முடியாத ஹைட்ரஜன் சக்தி! - இயற்பியல் பிட்ஸ்

படம்
  இயற்பியல்  பிட்ஸ் இயற்பியலில் பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று கண்டுபிடிப்புகள் நிகழ நிகழ அதுகுறித்த ஆச்சரியங்களும் வெளிப்படுகின்றன. அதில் சிலவற்றைப் பார்ப்போம்.  நேர்ப்பாதையில் ஒளிக்கதிர்கள்! டார்ச் லைட்டிலிருந்து வரும் ஒளி நேராக பாய்ந்து பொருள் மீது படிய, நமக்கு அப்பொருள் கண்ணுக்கு தெரிகிறது. இதன் பொருள், ஒளிக்கற்றைகள் நேராகத்தான் பயணிக்கும் என்பதல்ல. அவை பல்வேறு வடிவங்களுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும். 2010 ஆம் ஆண்டு கணினி முறையில் உருவான ஹாலோகிராம், பல்வேறு வடிவங்களில் வளைந்து நெளிந்து உருவங்களைக் காட்டியது.  நம்ப முடியாத ஹைட்ரஜன் சக்தி! ஹைட்ரஜன் மூலம் வாகனங்களை இயக்கமுடியுமா என ஆராய்ச்சி செய்து வருகிறது அறிவியல் உலகம். இதற்கு முக்கியக் காரணம், சூரியன் ஹைட்ரஜன் ஹீலியத்தை எரித்துதள்ளும் வேகம்தான். ஹைட்ரஜனை 620 மெட்ரிக் டன்களும், ஹீலியத்தை 616 மெட்ரிக் டன்களும் நொடிக்கு எரித்துத்தான் சூரியன் பளீரென ஒளிருகிறது. மனிதர்களின் கதிர்வீச்சு! நாம் பயன்படுத்தும் பொருட்கள் மட்டுமல்ல நமது உடலே கதிர்வீச்சுகளை வெளியிடும் தன்மை கொண்டதுதான். மனிதர்களின் உடல்  ஆயிரம் வாட் அளவுக்கு வெப்பத்தை வெளியி

சுவாரசியமாக கத்துக்கலாம் வாங்க! - யூடியூப் இருக்க கவலை என்ன?

படம்
  RealLifeLore நம் வாழ்க்கையில் இப்படியெல்லாம் கேள்வி கேட்கமுடியுமா என்ற அளவில் ஏராளமான கேள்விகளைக் கேட்டு பதில் சொல்கிறது இந்த சேனல். 29 லட்சம் பேர் பின்தொடரும் இந்த சேனலில், இருவாரங்களுக்கு ஒருமுறை வீடியோக்களைப் பதிவிடுகின்றனர். மூன்றாம் உலகப்போரில் பாதுகாப்பான இடம் எது, பூமியை எவ்வளவு ஆழம் தோண்டலாம், நம்மால் கேட்க முடிந்த அதிகபட்ச ஒலி அளவு என கேள்விகளைக் கேட்டு வியக்க வைக்கின்றனர்.  https://www.youtube.com/channel/UCP5tjEmvPItGyLhmjdwP7Ww/featured CrashCourse தமிழ், ஆங்கிலம் என படித்தாலும் இதைத் தாண்டிய பல விஷயங்களைப் படிக்கும் ஆர்வம் மாணவர்கள் பலருக்கும் உண்டு. உதாரணமாக, நாடகம், புராணம், ஊடகம், அறிவியல் வரலாறு என பல்வேறு படிப்புகள் என கற்றுத் தருவது இந்த யூடியூப் சேனலின் சிறப்பு. அமெரிக்கர்களான நிக்கோல் ஸ்வீனி, கேரி அன்னே பில்பின், மைக் ருக்னெட்டா ஆகியோர் பாடங்களை சுவாரசியமாக கற்றுத் தருகின்றனர். 9 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த சேனலைப் பின்தொடர்கின்றனர் . https://www.youtube.com/user/crashcourse/featured Mike Boyd  மாதம் அல்லது வாரம் தோறும் புதிய சவாலை ஏற்று சாதிப்பது மைக்கின் சி

மகத்தான இயற்பியல் ஆளுமைகள்! - அல்ஹசன், ஆர்க்கிமிடிஸ், லூயிஸ் ஆல்வரெஸ்

படம்
  அல்ஹசன் (Alhazen 965 -1040) அல்ஹசம் பல்துறை வல்லுநர். வடிவியல், இயற்பியல், மருத்துவம், வானியல் ஆகிய துறைகளில் வித்தகர். பியூட் எமிரேட்டிலுள்ள பஸ்ரா எனும் நகரத்தில் (இராக்) அல்ஹசன் பிறந்தார். இவரது உருவம் கூட தோராயமாக வரையப்பட்டதுதான்.  அரசு அமைச்சராக பணியாற்றிய அல்ஹசன், தனக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் கணிதம், வானியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் கண்டுபிடிப்புகளைச் செய்தார். கண்ணாடிகள் பற்றி அல்ஹசன் எழுதிய புக் ஆஃப் ஆப்டிக்ஸ் நூல் (Book of  Optics) முக்கியமானது. வாழும் காலத்தில் 90 கண்டுபிடிப்புகளை உருவாக்கியவர், கணிதம் மற்றும் ஆடியியல் துறைகளில் முக்கியமான கண்டுபிடிப்புகளைச் செய்துள்ளார்.  2 ஆர்க்கிமிடிஸ் (கி.மு.287 - கி.மு.212) முந்தைய காலத்தைச் சேர்ந்த செவ்வியல் கண்டுபிடிப்பாளர். கணிதவியலாளர், இயற்பியலாளர், வானியலாளர், ஆயுத வடிவமைப்பாளர் என பல்வேறு பணிகளில் வல்லுநர்.  தோராயமாக கி.மு.287 ஆம் ஆண்டு பிறந்த ஆர்க்கிமிடிசின் தந்தை, வானியலாளர். இவர், சிசிலி எனும் தீவிலுள்ள சைரகஸ் எனும் நகரில் பிறந்து வளர்ந்தார்.  சிறிய அளவில் விசையைப் பயன்படுத்தி பெரிய பொருட்களை நகர்த்தும் விதத்தைக் கண்

ஹைட்ரஜன் கசிவைக் கண்டுபிடிக்கும் புதிய வடிவமைப்பிலான சென்சார்! - தொழிற்சாலை, மருத்துவப் பயன்பாடுகளுக்கானது.

படம்
            ஹைட்ரஜன் கசிவைக் கண்டுபிடிக்கும் சென்சார் ! பட்டாம்பூச்சியின் இறக்கையில் உள்ள போட்டோனிக் நானோ அமைப்பை பார்த்து ஆராய்ச்சியாளர்கள் வியந்தனர் . தற்போது , அந்த வடிவமைப்பில் ஹைட்ரஜன் சென்சார் ஒன்றை உருவாக்கியுள்ளனர் . ஆஸ்திரேலியாவின் மெல்பர்னிலுள்ள ஆர்எம்ஐடி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த யிலாஸ் சப்ரி , அஹ்மது கன்ட்ஜானி ஆகிய ஆராய்ச்சியாளர்களே இதன் பிரம்மா . புதிய ஹைட்ரஜன் சென்சார் , தொழில்துறையிலும் , ஹைட்ரஜன் வாயுவை சேமிக்கும் இடங்களிலும் , மருத்துவச்சோதனைகளிலும் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது . புதுப்பிக்கும் ஆற்றல் மூலமான ஹைட்ரஜன் வாயுவை உருவாக்கி சேமித்து வருகின்றனர் . எளிதில் தீப்பற்றும் தன்மை கொண்டதாக வாயுவாக ஹைட்ரஜன் உள்ளது . எனவே , அதன் கசிவை துல்லியமாக கண்டறியும் திறன் கொண்ட சென்சார்களின் தேவை உள்ளது . தற்போது சந்தையில் கிடைக்கும் சென்சார்களில் உள்ள உலோக ஆக்சைடு அடுக்குகள் ஹைட்ரஜனை கண்டுபிடிக்க உதவுகின்றன . இவற்றில் மின்சாரத்தை கட்டுப்படுத்தும் பாதுகாப்பு அமைப்புகள் உள்ளன . 150 டிகிரி செல்சியஸிற்கும் மேலான வெப்பநிலையில் செயல்படும் இவை , பல்வேறு

புவிஈர்ப்பு அலைகளை கண்டுபிடிக்கும் ரேடியோ தொலைநோக்கிகள்! - எட்ஜெஸ் ஆர்கேட் 2 தொலைநோக்கிகளின் மற்றொரு பயன் இதுவே!

படம்
              புவிஈர்ப்பு அலைகளைப் பற்றி ஆராய உதவும் ரேடியோ தொலைநோக்கிகள் ! உலகில் பல்வேறு இடங்களில் நிறுவப்பட்டுள்ள ரேடியோ தொலைநோக்கிகள் , காஸ்மிக் கதிர்களை பதிவு செய்து வருகின்றன . இதன் மூலம் உலகம் தோன்றியது எப்படி என்ற ஆராய்ச்சி நடைபெற்றுவருகிறது . கூடுதலாக அதிக அலைநீளம் கொண்ட ஈர்ப்பு அலைகளையும் பதிவு செய்யமுடியும் என்பது அறியப்பட்டுள்ளது . ஜெர்மனி , ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த இயற்பியலாளர்கள் இதனை சோதித்து வருகின்றனர் . 2015 ஆம் ஆண்டு ஈர்ப்பு அலைகள் இன்டர்ஃபெரோமெட்டரி அளவீடு மூலம் கண்டறியப்பட்டன . லீகோ (LIGO) மற்றும் பிற கண்காணிப்பகங்கள் மூலம் லேசர் ஒளிக்கற்றைகள் பல கி . மீ . தூரம் குழாய் வழியாக சென்று வருவதை அளவிட்டன . பூமி வழியாக ஈர்ப்பு அலைகள் செல்வதால் , ஒளி அலைகளைப் போலவே இவையும் சிற்சில மாற்றங்களுக்கு உட்பட்டன . புவியீர்ப்பு அலைகளின் அலைநீள அளவு 10 Hz முதல் 10 Khz வரை என இன்பெரோமீட்டர் மூலம் லீகோ கண்காணிப்பகம் அளவிட்டுள்ளது . இதன் பொருள் , இந்த அலைகளை முழுமையான நாம் இன்னும் அறியவில்லை என்பதாகும் . விண்ணிலுள்ள லிசா கண்காணிப்பகம் (LISA) மூல

ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த திரவ வடிவிலான கண்ணாடி! - புதிய நீள்வட்ட வடிவிலான மூலக்கூறுகள் கொண்ட பொருள்

படம்
                ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த திரவ வடிவிலான கண்ணாடி ! ஜெர்மனி , நெதர்லாந்து நாட்டு விஞ்ஞானிகள் கான்ஃபோகல் மைக்ரோஸ்கோப்பி எனும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி திரவ வடிவிலான கண்ணாடியை கண்டறிந்திருக்கிறார்கள் . கண்ணாடி என்பது உறுதியாக இருந்தாலும் அதன் அமைப்பு பற்றி விஞ்ஞானிகள் அறியவேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன . நீள்வட்ட கூழ்மமான இதிலுள்ள துகள்கள் அலைந்தபடி உள்ளன . குளிர்சாதனப்பெட்டியில் உள்ள ப்ரீசரில் உறைதல் எப்படி நடக்கிறது என கவனித்திருக்கிறீர்களா ? பிளாஸ்டிக் தட்டில் உறைதல் என்பது குறிப்பிட்ட வரிசைப்படி நடைபெறும் . நடுவிலிருந்து ஐஸ்ட்ரே உறையத்தொடங்கும் . ஆனால் கண்ணாடி கிரிஸ்டல் வடிவில் அமைந்தது அல்ல . இதன் காரணமாக கண்ணாடி திரவ வடிவிலிருந்து திட வடிவிற்கு மாறும்போது செயல்பாடுகள் வரிசைப்படியாக நடைபெறுவதில்லை . எனவே , கண்ணாடி பற்றி அறிந்துகொள்ள ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள் . ஜெர்மனியைச் சேர்ந்த கான்ஸ்டான்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இதற்கான வேதிக்கலவையை உருவாக்கி சோதித்து திரவ வடிவிலான கண்ணாடியை அடையாளம்

கனவை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்காதீர்கள்!

படம்
நேர்காணல் ஜிம் அல் கலீலி, க்வாண்டம் இயற்பியலாளர்(சர்ரே பல்கலைக்கழகம், இங்கிலாந்து) நீங்கள் வளரும்போது என்னவாக ஆசைப்பட்டீர்கள்? நான் முதலில் கண்டுபிடிப்பாளராக மாறவே ஆசைப்பட்டேன். பிறகு ராக் இசைக்கலைஞனாக விரும்பினேன். கால்பந்து அணிக்கு விளையாட நினைத்தேன். நீங்கள் யாருக்கேனும் அறிவுரை சொல்ல வேண்டுமென்றால் என்ன சொல்லுவீர்கள்? நான் என் மனைவி ஜூலியைத் திருமணம் செய்தபோது எனக்கு பொருளாதார நெருக்கடி இருந்தது. அதைப்பற்றி நான் பேசியபோது, நீ அதைப்பற்றி கவலைப்படாதே, உன் கனவுகளைப் பின்பற்றி செல். நாம் இந்த கஷ்டங்களைச் சமாளித்துக்கொள்ளலாம் என்று கூறினார். அதனால்தான் நான் முனைவர் படிப்பை படிக்க முடிந்தது. நான் பெற்ற பிறருக்குச் சொல்ல விரும்பும் அறிவுரையும் இதுதான். நீங்கள் செய்யும் பணியை எளிமையாகச் சொல்லுங்கள் பார்ப்போம். நான் ஒரு கண்டுபிடிப்பாளன். பயணியும் கூட. அறிவியல் முடிவுகளை சிந்தனைகளை மக்களிடம் கூற முயற்சிக்கிறேன். நான் ஒரு க்வாண்டம் இயற்பியலாளர். அவ்வளவுதான். உயிருடன் இருப்பவரோ இறந்தவரோ விஞ்ஞானி ஒருவரைச் சந்திக்கவேண்டும். யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள்.  ஆல்பர்ட் ஐன்

பால்வெளியில் ரேடியோ அலைகளின் வீச்சு! - ஜாலியாக அறிவியல் கற்போம்!

படம்
இயற்பியல் பால்வெளியில் ரேடியோ அலைகள்! கோள்களிலிருந்து ரேடியோ சிக்னல்கள் கிடைத்தது என நாளிதழில் அறிவியல் செய்திகள் படிக்கும்போது, பலருக்கும் சந்தேகம் வரும்; அதென்ன ரேடியோ சிக்னல்கள் என்று. விண்வெளியில் இருந்து வரும் கதிர்வீச்சுகளோடு கிடைக்கும் ரேடியோ அலைகளைத்தான் வானியலாளர்கள் இப்படிக் குறிப்பிடுகின்றனர். பால்வெளியிலிருந்து பல்வேறு அடையாளம் காணப்படாத செயல்பாடுகளின் விளைவாக, வரும் ரேடியோ அலைகளை 2013 ஆம் ஆண்டுக்கு முன்னதாக வானியலாளர்கள் குழப்பத்துடன் பார்த்து வந்தனர். இன்று கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள ரேடியோ ஆன்டனாவில் தினசரி பத்திற்கும் மேற்பட்ட ரேடியோ அலை வெடிப்புகள் பதிவாகி வருகின்றன. ரேடியோ அலைகள் பால்வெளியில் எப்படி உருவாகின்றன? பிரகாசமான பொருளிலிருந்து வரும் ஒளி, எலக்ட்ரான்களையும் வேறு பல துகள்களையும் கொண்டுள்ளது. இது பழைய துகள்களை உடைத்து மின்காந்த அலை ஊடகத்தை உருவாக்குகிறது. இதிலுள்ள எலக்ட்ரான் அணுக்கள், ரேடியோ அலைகளை உருவாக்குகின்றன என்பதே ஆய்வாளர்களின் ஆய்வு அறிக்கை. இது பற்றிய ஆய்வு அறிக்கை arxiv.org வலைத்தளத்தில் பதிவாகியுள்ளது. ரேடியோ அலைகள் அரித

அறிவியல் நூல்கள் விமர்சனம்!

படம்
புத்தக அறிமுகம் இன்று உலகில் மைக்ரோசாஃப்ட், லினக்ஸ், ஆப்பிள் ஆகிய இயக்க முறைகள் எப்படி தங்கள் பாதுகாப்பை ஒழுங்கு படுத்திக்கொள்கின்றன. சைபர் குழுக்களின் பல்வேறு தாக்குதல்கள்தான் இவற்றை சாதிக்கின்றன. பொதுவாக வணிக நிறுவனங்கள், தங்கள் நிறுவனப் பொருட்களை விற்றவுடன் மற்ற மக்களின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை மறந்துவிடுகிறார்கள். இதனை நினைவுபடுத்தும் பல்வேறு சைபர் குழுக்கள் உலகம் முழுக்க தீவிரமாக வேலை செய்கின்றனர். கல்ட் ஆப் டெட் கவ் அப்படி ஒரு சைபர் குழுதான். பெயர் தெரிந்தளவு உறுப்பினர்கள் வெளியே தெரியாமல் செயற்பட்டு பல்வேறு டெக் நிறுவனங்கள் தம் பாதுகாப்பை சரி செய்துகொள்ள இடைவிடாமல் தொந்தரவு கொடுத்த தன்னார்வலர்கள் குழு இது. இந்நூல் இவர்களைப் பற்றித்தான் கூறுகிறது. உக்ரைனின் செர்னோபிலில் நடந்த அணுஉலை விபத்தை நீங்கள் மறக்கவே முடியாது. காரணம், இதனால் ஏற்பட்ட கதிர்வீச்சு இன்றுவரை பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இன்று சுற்றுலாவுக்கான இடமாக மாறினாலும், கதிர்வீச்சு, அணு உலை பற்றிய கவனத்தை ஏற்படுத்திய வகையில் செர்னோபில் மிக முக்கியமானது. இந்நூல் விபத்து ஏற்பட்ட மணிநேரத்தை

சார்பியல் விதிக்கு வயது 100!

படம்
சார்பியல் தியரிக்கு வயது 100! 1919 ஆம் ஆண்டு பிரபல இயற்பியலாளர் ஐன்ஸ்டீனால் கூறப்பட்ட சார்பியல் தியரிக்கு இந்த ஆண்டு நூறு வயதாகிறது. 1919 ஆம் மே 29 அன்று ஏற்பட்ட சூரிய கிரகணம், ஐன்ஸ்டீனின் சார்பியல் தியரியை அறிவியலாளர்  மட்டுமல்ல மக்களுக்கும் புரிய வைத்தது. சிறப்பு சார்பியல் விதி, பொது சார்பியல் விதி என இருவிதிகள் உண்டு. இங்கு கூறப்படுவது பொது சார்பியல் விதி. இதன் அடிப்படையில்தான் இன்று விண்வெளி ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இப்போது சார்பியல் விதி எளிய வடிவில்: எழுபது கி.மீ வேகத்தில் செல்லும் பேருந்தில்  சென்று கொண்டிருக்கிறீர்கள். இப்போது உங்கள் கையிலுள்ள பந்தை முன்னோக்கி பத்து கி.மீ. வேகத்தில் எறிகிறீர்கள். பந்தின் வேகம் என்ன என்று உங்களைக் கேட்டால், பத்து கி.மீ. என்று கூறுவீர்கள். பேருந்துக்கு வெளியே நிற்பவர், எண்பது கி.மீ. வேகத்தில் பந்தை எறிந்தீர்கள் என்பார். ஒருவர் இருக்கும் இடம் சார்ந்து பொருளின் வேகத்தைப் புரிந்துகொள்கிறார். வேகம் என்ற இடத்தில் ஒளியைப் பொறுத்துங்கள். இங்கு வேறுபாடு, ஒளியின் வேகம் மாறாது என்பதுதான். இதுதான் பொது சார்பியல் விதி.  சூரியன் போன்ற

இயற்பியல் பிட்ஸ்!

படம்
நீர் ஒரே நேரத்தில் சூடாகவும் மாறும் உறையவும் செய்யும். இதனை  டிரிபிள் பாயிண்ட் (Triple point)என்று கூறுகின்றனர். வெப்பம் மற்றும் அழுத்தம் காரணமாக நீர் திட, திரவ, வாயு நிலைகளுக்கு மாறும். மூக்கு கண்ணாடிகள் இல்லாதபோது, உங்கள் கையில் உள்ள விரல் இடைவெளியில் பார்க்கும்போது, எதிரிலுள்ள பொருட்களை ஓரளவு தெளிவாக காணமுடியுமாம். கி.மு.650 ஆம் ஆண்டு கிரேக்கர்களால் உருவான அறிவியல் துறை இயற்பியல். Physics  என்ற வார்த்தைக்கு இயற்கையிலிருந்து பெற்ற அறிவு என்று பொருள். நவீன ஜிபிஎஸ் முறை தொழில்நுட்பம் ஐன்ஸ்டீனின் E=MC 2 சூத்திரப்படி இயங்குகிறது.செயற்கைக் கோள்கள், ரேடியோ அலைகள் மூலம் தகவல்களை பரிமாற்றம் செய்கின்றன. தகவல்: MinutePhysics படம் - கிராபிக் ரிவர் - பின்டிரெஸ்ட் ஸ்

சிம்மெட்டரி வடிவம் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி இயற்பியலாளர்கள் ஏன் சிம்மெட்டரி வடிவம் குறித்து பேசியபடி இருக்கிறார்கள்? சிம்மெட்டரி என்பது வரிக்குதிரைகளின் உடலிலுள்ள பேட்டர்ன்கள் போலத்தான். இதனைப் பேசக்காரணம், அவை எதிர்காலத்தில் ஆற்றல் துறையில் பயன்படும் என்று அவர்கள் நம்புகிறார்கள். சிம்மெட்டரிகளின் தொடர்பு பற்றி நூறாண்டுகளுக்கு முன்பே ஜெர்மன் கணிதவியலாளர் எம்மி நோதர் கூறியிருக்கிறார். இது விண்வெளியில் உள்ள ரகசியங்களைக் கண்டுபிடிக்க உதவும் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர். நன்றி: பிபிசி படம் பின்டிரெஸ்ட்

அறிவியலில் நகைச்சுவை சாத்தியமா?

படம்
நேர்காணல் எலைன் வான் வெல்டன் பிபிசி நிகழ்ச்சியில் பங்கேற்றவராக உங்களை மக்கள் பார்ப்பது இப்போது தெரியவந்துள்ளது. ஆனால் நீங்கள் ரகசியமான ஆய்வாளராக இருந்திருக்கிறீர்கள்.  ரைட். நான் ரகசியமான ஆய்வாளர் என்று கூறுவதில் பெருமைப்படுகிறேன். இது என்னுடைய சிறுவயது கனவு. நான் லண்டனிலுள்ள இம்ப்ரீயல் கல்லூரியில் எம்எஸ்சி இயற்பியல் படித்தேன். நான் முனைவர் பட்டம் பெறவில்லை என்றாலும் பிளாஸ்மா பிசிக்ஸ் படித்துள்ளேன். பல்வேறு டிவி நிகழ்ச்சிகளில் காமெடியாக நடித்துள்ளேன். என் வாழ்க்கையே பெரும் சோதனைதான். உங்களுடைய இயற்பியல் பின்னணிதான் அறிவியல் பற்றிய வெப் சீரிஸ் செய்யக் காரணமா? நான் அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்சில், நான் காமெடி நடிகராக நடித்து வந்தேன். மாணவர்களுக்கு கணிதம், அறிவியல் சொல்லித்தரும் ஆசிரியராகவும் பணிபுரிந்துள்ளேன். பிறருக்கு பாடம் சொல்லித்தருவது எனக்கு பிடித்த பணி. கிரேசி சயின்ஸ் தொடரும் அப்படி ஒன்றுதான். உங்கள் மனதிலிருந்து சொல்லுங்கள் நீங்கள் காமெடி நடிகரா அல்லது அறிவியலாளாரா? நான் இரண்டையும் சொல்ல மாட்டேன். நான் ஆணாதிக்கம் கொண்ட இந்த இரண்டு துறைகளிலும் பொருந்திப்போகும