பெண்களின் காதல் வழியாக மூவேந்தர்களின் வீரம் வெளிப்படும் படைப்பு -- முத்தொள்ளாயிரம்
முத்தொள்ளாயிரம் - மூலமும் உரையும் நாராயண வேலுப்பிள்ளை 100க்கும் அதிகமான பாடல்கள் நன்றி - இரா மோகனவசந்தன் முத்தொள்ளாயிரம் நூலில் மூவேந்தர்கள் பற்றிய பாடல்கள் உள்ளன. அவையும் அக்காலத்திற்கேற்ப காதல், போர், ஆட்சி, படைத்திறன், அறம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு அமைந்துள்ளது. இந்த பாடல்களை ஒருவர் வாசிக்கும்போது தமிழ்நாட்டை ஆண்ட மன்னர்கள் பற்றியும் அவர்களுக்கு வழங்கி வந்த பெயர்கள் பற்றியும் அறியலாம். அதோடு, மன்னரை காதலித்த பெண்கள் தங்கள் காதலை வெளிப்படுத்த எதையெல்லாம் உவமையாக கொள்கிறார்கள் என்பதும் கூட ஆச்சரியப்படுத்தும். பழந்தமிழ் வார்த்தைகள் வாசிக்கும்போதே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன. அதிலும் ஒரு பாடலில் சேரனைப் புகழ்ந்து வருகிறது. அதில் பெண், தனிக்கதவம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். அதாவது, மன்னர் மீதுள்ள மகளின் காதலை அறிந்த தாய், ஊரார் தூற்றுவார்களே என்று அஞ்சி வீட்டின் வாயில் கதவை அடைத்துவிடுகிறார். அந்த கதவுதான் தனிக்கதவம் என பாடலில் சுட்டப்படுகிறது. இப்படி கதவை மூடிவிட்டால், வதந்தி பரப்புபவர்கள் அமைதியாக இருந்துவிடுவார்களா என்று தோழியிடம் கேட்கிறார்....