இடுகைகள்

புத்தர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பௌத்தம் அறிவோம் - வழிகாட்டும் புத்தரின் நெறிகள்

படம்
புத்தர் காலமாகிவிட்ட நிலையில் அவர் எப்படி நமக்கு உதவி செய்ய முடியும்? மின்சாரத்தை கண்டறிந்த பாரடே இறந்துவிட்டார்தான். ஆனால் நாம் இன்றும் மின்சாரத்தைப் பயன்படுத்திக்கொண்டுதானே இருக்கிறோம். ஆன்டி பயாடிக் மருந்தைக் கண்டுபிடித்து லூயி பாஸ்டர் இன்று நம்மோடு இல்லை. ஆனாலும் கூட அவரின் கண்டுபிடிப்பு மக்களின் உயிரைக் காத்துக்கொண்டுதானே உள்ளது. ஓவியத்துறையில் பல உன்னத படைப்புகளை உருவாக்கிய லியனார்டோ டாவின்சி காலமாகி பல்லாண்டுகள் ஆகிறது. அவரது ஓவியங்களைக் காணும்போது மகிழ்ச்சி கிடைக்கிறது. ஊக்கம் பெற்றுக்கொண்டேதான் இருக்கிறோம் அல்லவா? வரலாற்று நாயகர்களும், நாயகியரும் இறந்து பல நூறு ஆண்டுகளானாலும் கூட அவர்களின் லட்சியங்கள், நம்பிக்கை நமக்கு ஊக்கம் கொடுப்பவை. நீங்கள் கூறியதுபோல புத்தர் காலமாகி இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகள் ஆகிவிட்டதுதான். ஆனால், அவர் கற்பித்த கொள்கைகள், நெறிகள், கூறிய அறம், காட்டிய பாதை இன்றும் பல்லாயிரக் கணக்கான மக்களுக்கு ஊக்கம் தந்து வருகிறது. வழிகாட்டியாக அமைந்துள்ளது. புத்தரின் வார்த்தைகள் பல நூறு மக்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளது. இறந்து பல நூறு ஆண்டுகளாயினும் புத்தருக...

புத்தர் இறந்துவிட்டார். அவர் நமக்கு எப்படி உதவுவார்?

  பௌத்தம் - கேள்வி பதில்கள் புத்தர் இறந்துவிட்டார். அவர் எப்படி நமக்கு உதவ முடியும்? பாரடே, லியனார்டோ டாவின்சி, லூயி பாஸ்டர் ஆகியோர் இன்று உயிருடன் இல்லை. ஆனால், அவர்கள் கண்டுபிடித்த விஷயங்கள் நமக்கு உதவிக்கொண்டுதானே இருக்கின்றன. அவர்களின் உழைப்பும் ஆராய்ச்சியும் பல லட்சம் பேர்களுக்கு ஊக்கமளித்து வருகிறது. அது மாறவில்லைதானே? புத்தர் இறந்து பல நூறு ஆண்டுகள் ஆனாலும் கூட அவரின் சொற்கள் இன்றைக்கும் நமது வாழ்க்கையை செழிப்பாக்க வழிகாட்ட உதவிக்கொண்டுதான் உள்ளன. புத்தருக்கு மட்டுமே இத்தகைய பெருமை உரியதாகும்.  புத்தர் கடவுளா? இல்லை. அவர் தன்னை கடவுள் என்று எங்கேயும் கூறிக்கொண்டதில்லை. அவர் இறைவனின் பிள்ளை அல்ல. அவரின் தூதரும் அல்ல. அவர் தன்னை நேர்த்தி செய்துகொள்ள முயன்ற மனிதர். நாம் அவரைப் பின்பற்றி ஒழுங்கு செய்துகொள்கிறோம்.  அவர் கடவுள் அல்லாதபோது அவரை மக்கள் வழிபடுவது எதற்காக? உங்கள் ஆசிரியர் வகுப்பறைக்குள் பாடமெடுக்க வரும்போது எழுந்து நின்று மரியாதை அளிக்கிறீர்கள். தேசியகீதம் பாடும்போது, அசையாமல் நின்று அதற்கு மரியாதை தெரிவிக்கிறீர்கள். இதைப்போன்றதுதான் புத்தரை வழிபாடு செய்வது...

பௌத்தம் வெறும் தத்துவம்தானா? - கேள்வி பதில்கள்

படம்
  பௌத்தம் என்றால் என்ன? பௌத்தம் என்றால் விழித்தெழுவது என்று பொருள். பௌத்த மதத்தின் அடிப்படை தத்துவமே, மனிதர்களை விழித்தெழச் செய்து விழிப்புணர்வுடன் இருக்கச் செய்வதுதான். தனது 36 வயதில் விழிப்புணர்வு பெற்ற சித்தார்த்த கௌதமர், புத்தர் என அழைக்கப்படுகிறார். உலகம் முழுக்க 300 மில்லியன் மக்கள் பின்பற்றும் மதமான பௌத்தம், உருவாகி 2500 ஆண்டுகளுக்கு மேலாகிறது. ஆசியாவில் தோன்றினாலும் இப்போது அமெரிக்கா, ஐரோப்பாவில் செல்வாக்கு பெற்றுவருகிறது.  பௌத்தம் என்பது வெறும் தத்துவம்தானா? தத்துவம் என்பதற்கு அறிவின் மீதான அன்பு என்று ஆங்கிலச் சொற்களை பிரித்தால் பொருள் வரும். இதுவே பௌத்த மதத்தை சிறப்பாக சுருக்கமாக விளக்குகிறது. அறிவுசார்ந்த புரிதலை ஆழமாக்கி விரிவாக்கி அனைத்து உயிரினங்களுக்கும் நண்பனாக இருப்பதை பௌத்தம் வலியுறுத்துகிறது. அன்பையும் இரக்கத்தையும் அடிப்படையாக கொண்ட பௌத்தம், வெறும் தத்துவமல்ல. அது மானுடத்தின் உயர்ந்த தத்துவம்.  புத்தர் என்பவர் யார்? கி மு 563. இந்தியாவின் வடக்குப்பகுதியில் அரச குடும்ப வாரிசு பிறந்தது. அந்த குழந்தையின் பெயர்தான் சித்தார்த்தன். உலகின் சோகங்கள் தாக்காமல்...

மனிதர்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் - தீக நிகாயம் - பௌத்த மறைநூல்

படம்
  தீக நிகாயம் நூல் அட்டை தீக நிகாயம் பௌத்த மறைநூல் மு கு ஜெகந்நாத ராஜா தமிழினி விலை ரூ.140 பாலி மொழியில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்த்திருக்கிறார் ஆசிரியர். இதனால் நூல் முக்கியத்துவம் பெறுகிறது. பாலி மொழியில் உள்ள சொற்கள், சமஸ்கிருத மொழியில் உள்ள சொற்களைப் பற்றி முன்னமே விவரித்துவிடுகிறார்கள். இதனால் நூலை படிக்கும்போது பெரிதாக தடுமாறவேண்டியதில்லை. புத்தர் கூறியது என நிறையப் பேர் எழுதுவார்கள். ஆனால் இந்த நூல் இப்படியாக கேட்டிருக்கிறேன் என்று சொல்லி எழுதப்பட்டுள்ளது. அந்த வகையில் பௌத்த மறைநூல் என கூறியதற்கு ஏற்பவே உள்ளது. மோசமில்லை. சமண புத்தர் ஓரிடத்தில் தனது சீடர்களோடு அமர்ந்திருக்கிறார். அங்கு அவரைப் பார்க்க பல்வேறு மன்னர்கள், விவசாயிகள், பிராமணர்கள், குறு நில மன்னர்கள், பிற சமயங்களை கடைபிடிக்கும் ஆட்கள் வருகிறார்கள். அங்கு வந்து கேள்விகளைக் கேட்கிறார்கள். இந்த முறையில் புத்தர் ஏராளமான சூத்திரங்களை வரிசையாக சொல்லிக்கொண்டே வருகிறார். அவர் கூறும் உபதேசங்களை மனம் ஒன்றிக் கேட்டு தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக்கொண்டது போலவே வாசகர்களும் மனம் ஒன்றிப் படித்தால்தான் புத்தர...

இந்து சமூகத்தில் அடிப்படை மாற்றங்கள் நிகழாதபோது ஆழமான வலியை மனதில் உணர்ந்தவர் அம்பேத்கர் - அசோக் கோபால்

படம்
  அம்பேத்கர் சுயசரிதை- நவாயனா இடதுபுறம் - ரவிக்குமார், திருமாவளவன், நவாயனா பதிப்பகத் தலைவர் அசோக் கோபால், வரலாற்று பட்டதாரி. 2003ஆம் ஆண்டு முதல் பி.ஆர். அம்பேத்கரைப் பற்றி படித்து ஆய்வு செய்து வருகிறார். அம்பேத்கரின் தனிப்பட்ட வாழ்க்கை, அரசியல் செயல்பாடு, காந்தியுடனான உறவு என பல்வேறு விஷயங்களைப் பற்றி மராத்தி, ஆங்கில மொழியில் இருந்து படித்து வருகிறார். இதன் விளைவாக நிறைய விஷயங்கள் தெரிய வந்துள்ளன. அதைப்பற்றி அவரிடம் பேசினோம்.   இதுபற்றி   எ பார்ட் அபார்ட் – தி லைஃப் அண்ட் தாட் ஆஃப் பி.ஆர். அம்பேத்கர் என்ற நூலை எழுதியுள்ளார். நூலை நவாயனா பிரசுரித்துள்ளது. நெடுநாட்களுக்குப் பிறகு, அம்பேத்கரின் வாழ்க்கை பற்றிய முழுமையான நூல் வெளிவந்துள்ளது. நூலை எழுதுவதற்கான பணியைப் பற்றி கூறுங்கள். 2003ஆம் ஆண்டு, அம்பேத்கரைப் பற்றி படிக்கத் தொடங்கினேன்.   நான் மிக குறைவாக அறிந்த மனிதரைப் பற்றி முழுமையாக அறிவதே நோக்கம். இந்த ஆய்வுப் பணியில் அவரைப்பற்றி எழுதப்பட்ட நூல்களில் கூறப்பட்டதைவிட, அவரே தன்னைப் பற்றி கூறியதை விட, நிறைய விஷயங்களை அறிய முடிந்தது. குறிப்பாக, அம்பேத்கர் புத்தம...

பிராமணர்களை நிராகரித்து வேதங்களை புறக்கணித்து புத்தர் காட்டும் தம்ம நெறி - புத்தரும் அவர் தம்மமும் - அம்பேத்கர்

படம்
 புத்தரும் அவர் தம்மமும் - அம்பேத்கர்  தமிழில் பெரியார் தாசன் வெளியீடு பெரியார் தாசன்  புத்தரின் வாழ்க்கை, அவரது கொள்கைகள் பற்றிய நூல். இதை அம்பேத்கரே ஆராய்ந்து எழுதியிருக்கிறார். அம்பேத்கர் எழுதிய நூல்களில் புத்தரும் அவர் தம்மமும் நூல் முக்கியமானது. இந்தியாவில் உள்ள மதங்களில் பௌத்தம் முக்கியமானது. நிர்வாக ரீதியாக இந்து மதத்தில் பௌத்தம் சீக்கியம் உள்ளடங்கியது என தேசியவாதிகள் கூறுகின்றனர்.  பௌத்தம் எவ்வாறு வேதங்களிலிருந்த மாறுபட்டுள்ளது என்பதை உயர்வெய்திய புத்தர் விளக்குகிறார். நூலின் பக்கங்கள் ஐநூறுக்கும் அதிகமானவை. அவை அனைத்திலும் கூறப்படும் விஷயங்களைப் படித்தால் மதம் என்பது என்ன, அது மனிதர்களுக்கு பயன்படும் விதம் ஆகியவற்றை தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.  பௌத்தத்திலுள்ள பல்வேறு கொள்கைகளை திருடி தன்னை சற்றே மாற்றிக்கொண்டாலும் பிராமணத்துவம் மனிதர்களின் முன்னேற்றத்திற்கு காரணமாக அமையவில்லை. ஒட்டுமொத்த சமூக அமைப்பும் சுரண்டலுக்கானதாகவே இருக்கிறது. மனிதகுல முன்னேற்றத்திற்கானதாகவே மதம் அமையவேண்டும். அவ்வாறு அமையாதபோது, அதன் தேவையே இல்லை என புத்தர் பிராமணத்துவத்தை, வேத ...

புத்தரை நிர்மாணிக்கும் ஆப்கன் அரசு- கலாசார மறுமலர்ச்சி!

படம்
மீண்டும் புத்தர்! 2001 இல் ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளால் சிதைக்கப்பட்ட புத்தரின் சிலைகள் ,தற்போது அமெரிக்க அரசின் உதவியுடன் சீரமைக்கப்பட்டு வருகின்றன. ”புத்தரின் சிலைகளைச் சீரமைப்பதன் மூலம் எங்கள் கலாசாரத்தை மீட்கிறோம்” என்கிறார் அருங்காட்சியக மியூசிய இயக்குநரான மொகமத் ரஹிமி. மாற்றுத்திறனாளி ஐ.ஏ.எஸ்! கேரளத்தின் திருவனந்தப்புரத்தில் துணை ஆட்சியராக பார்வைத்திறன் அற்ற பிரஞ்சல் பாடீல் பதவி ஏற்றிருக்கிறார். மகாராஷ்டிரத்தைச்சேர்ந்த இவர் 2016 இல் யுபிஎஸ்சி தேர்வு எழுதி வென்றவர். சமூகநீதித்துறையின் முதன்மைச் செயலராக பணியாற்றவுள்ள பிரஞ்சல், இந்தியாவின் முதல் பார்வைத்திறன் அற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆவார். நிலவில் இங்கிலாந்து! இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்பேஸ்பிட் எனும் நிறுவனம், 2021இல் நிலவிற்கு ரோவரை கொண்டு செல்ல உள்ளது.  விண்வெளிக்கு 1.3 கி.கி. எடைகொண்ட ரோவரை ஆஸ்ட்ரோபாடிக்  நிறுவன லேண்டர் கொண்டு செல்லும். அறிவியல் நிகழ்ச்சியில் இச்செய்தியைக் கூறியுள்ளார் ஸ்பேஸ்பிட் நிறுவனத் தலைவரான பாவ்லோ தனாஸ்யுக். மின் சிக்கனம்! பஞ்சாபில் மின்சார வாரியம் மின்சாரத்தையும், நீர...

புத்தர் என்பவர் யார்? - குதிரைச்சாணம் என்கிறார் ஹான்

அமைதி என்பது நாமே திக் ஹியட் ஹான் தமிழில்: ஆசைத்தம்பி க்ரியா அமைதி, மகிழ்ச்சி இவை கிடைக்க என்ன செய்யவேண்டும் என்பதை எளிமையான வார்த்தைகள், கதைகளுடன் கூறியிருக்கிறார் ஹான். புத்தர் என்பது சிலையா, அல்லது தத்துவமா, மந்திரங்களா என்பது பற்றிய தத்துவப்பகுதி அசரவைக்கிறது. நம்பவே முடியாத எளிமையுடன் இந்நூலை தமிழாக்கம் செய்திருக்கிறார் ஆசைத்தம்பி. உலகத்தோடு ஒத்துவாழ்வதற்கான பயிற்சிகளும் நூலின் பின்னால் கொடுக்கப்பட்டுள்ளன. தியானம், யோகம் என்பது தனிப்பட்ட ஆன்மிக வளர்ச்சி என்பதோடு நிறுத்தாமல் அநீதி என்றால் தயங்காமல் நீங்கள் குரல் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தும் இடத்தில் ஹான் வேறுபடுகிறார். நூல், தியானம், மோட்சம் உள்ளிட்ட விஷயங்களைப் பேசினாலும் பேசுகின்ற மொழி மிக இனிமையானதாக இருப்பதால் நம்மால் இடறல் இன்றி வாசிக்க முடிகிறது. நிதானமாக அசைபோட்டு நூலை படியுங்கள். திபெத்தில் பயணிக்கும் வெண்மேகங்களின் வாசனையை நுகரலாம். பனியின் சில்லிப்பு மனதிலும் படரக்கூடும். - கோமாளிமேடை நன்றி: த.சக்திவேல்.