புத்தர் என்பவர் யார்? - குதிரைச்சாணம் என்கிறார் ஹான்
அமைதி என்பது நாமே
திக் ஹியட் ஹான்
தமிழில்: ஆசைத்தம்பி
க்ரியா
அமைதி, மகிழ்ச்சி இவை கிடைக்க என்ன செய்யவேண்டும் என்பதை எளிமையான வார்த்தைகள், கதைகளுடன் கூறியிருக்கிறார் ஹான்.
புத்தர் என்பது சிலையா, அல்லது தத்துவமா, மந்திரங்களா என்பது பற்றிய தத்துவப்பகுதி அசரவைக்கிறது. நம்பவே முடியாத எளிமையுடன் இந்நூலை தமிழாக்கம் செய்திருக்கிறார் ஆசைத்தம்பி.
உலகத்தோடு ஒத்துவாழ்வதற்கான பயிற்சிகளும் நூலின் பின்னால் கொடுக்கப்பட்டுள்ளன. தியானம், யோகம் என்பது தனிப்பட்ட ஆன்மிக வளர்ச்சி என்பதோடு நிறுத்தாமல் அநீதி என்றால் தயங்காமல் நீங்கள் குரல் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தும் இடத்தில் ஹான் வேறுபடுகிறார்.
நூல், தியானம், மோட்சம் உள்ளிட்ட விஷயங்களைப் பேசினாலும் பேசுகின்ற மொழி மிக இனிமையானதாக இருப்பதால் நம்மால் இடறல் இன்றி வாசிக்க முடிகிறது. நிதானமாக அசைபோட்டு நூலை படியுங்கள். திபெத்தில் பயணிக்கும் வெண்மேகங்களின் வாசனையை நுகரலாம். பனியின் சில்லிப்பு மனதிலும் படரக்கூடும்.
- கோமாளிமேடை
நன்றி: த.சக்திவேல்.