இடுகைகள்

கனிமங்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புவியியல் - கனிமங்களை அறிவோம்

படம்
  இரும்பு (Iron) பூமியின் அடிப்பரப்பில் இரும்புத்தாது 5 சதவீதம் உள்ளது. இரும்புத்தாது தனியாக கிடைப்பது அரிது. பெரும்பாலும் நிக்கலுடன் சேர்ந்துதான் கிடைக்கிறது. 7.5 சதவீதம் நிக்கல் கலந்த இரும்பின் பெயர், காமாசைட் (Kamacite). 50 சதவீத நிக்கல் கலந்துள்ள இரும்பிற்கு, டேனைட் (Taenite) என்று பெயர். இந்த வகைக்குள் வராமல் உள்ள இரும்பு நிக்கல் கலவைக்கு டெட்ராடேனைட் (Tetrataenite) என்று பெயர். இந்த வகை தாதுவை விண்கற்களில் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.  மேற்கூறிய தாது வகைகள் துகள்களாக அல்லது வட்ட வடிவில் கிடைக்கின்றன. நிலவு மற்றும் சூரியனில் இரும்புத்தாது இருப்பதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.  பிஸ்மத் (Bismuth) பிஸ்மத், மத்திய காலத்திலிருந்தே மக்களின் பயன்பாட்டில் உள்ளது. 1450ஆம் ஆண்டு ஜெர்மானிய துறவி பாசில் வேலன்டைன் (Basil Valentine), பிஸ்மத் உலோகத்தை முதன்முதலில் குறிப்பிட்டார். பளபளப்பான, வளையக்கூடிய தன்மை கொண்டது.பெரும்பாலும் இளஞ்சிவப்பு நிறத்தில் கிடைக்கிறது. தகரம், காரீயம், செம்பு ஆகியவற்றுடன் சேர்ந்து தாதுவாக கிடைக்கிறது.  இதனை பிற உலோகங்களோடு இணைத்து உலோக வார்ப்புகளைச் ச

வினோதரச மஞ்சரி - ரேடியோ தகவல்தொடர்பு, கனிமங்களின் வகைகள்

படம்
ரேடியோ தகவல் தொடர்பு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், தகவல்தொடர்பு மெதுவாக நடைபெற்று வந்தது. பிறகுதான் ரேடியோ அலைகள் கண்டறியப்பட்டன. மின்காந்த அலைகளில் ரேடியோ அலையும் ஒன்று.இதன்மூலம் தொலைவிலுள்ள ஒருவருக்கு எளிதாக தகவல் அனுப்பி, பதிலைப் பெறமுடியும். இதற்கு உதவுவதுதான் டிரான்ஸ்சீவர் (Transceiver).இதில் உள்ள ஆன்டெனா மூலம் சிக்னல்களைப் பெற்று பதில் அனுப்ப முடியும். டிரான்ஸ்மிட்டர் மற்றும் ரீசிவர் என இரு பணிகளையும் தனது பெயருக்கு ஏற்ப டிரான்ஸ்சீவர் கருவி செய்கிறது.  மலையேறும் வீரர்கள், டிரான்ஸ்சீவரைப் பயன்படுத்துகிறார்கள். இதன்மூலம் மலையேற்றக் குழுவில் யாராவது விபத்து காரணமாக காணாமல் போனாலும், கருவியில் உள்ள சிக்னல் மூலம் எளிதாக கண்டுபிடிக்க மீட்க முடியும். போக்குவரத்திற்கு பயன்படும் காருக்கான ஸ்மார்ட் கீ, ரேடியோ அலை மூலமே இயங்குகிறது. இதன்மூலம் காரின் கதவுகளை திறப்பது, மூடுவது, காரின் இஞ்சினை ஆன் செய்வது ஆகியவற்றை செய்யலாம்.  2 போர்னைட் (Bornite) இயற்கையில் கிடைக்கும் வண்ணமயமான கனிமங்களில் இதுவும் ஒன்று. போர்னைட், செம்பு மற்றும் இரும்பு கொண்ட சல்பைட் வடிவம். இதற்கு, ஆஸ்திரியாவைச் சேர்ந்த  கனி

மேக்வாவிலுள்ள கனிமங்களைப் பிரித்தெடுக்க முடியுமா?

படம்
பிபிசி ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி எரிமலை மேக்மாவில் நமக்கு கனிமங்கள் கிடைக்குமா? உண்மையாகச் சொன்னால் கிடைக்காது. ஏன் என்றால், மேக்மா பாறைகளை உருக்கியபடி வரும் ஒரு நீர்மம். அதில் கனிமங்கள் உள்ளது உண்மை என்றாலும் அதனை அடர்த்தியான தன்மையில் மாற்றினால் மட்டுமே பயன்படுத்த முடியும். மேக்மாவை குளிரவைத்து கனிமங்களை திட நிலையில் பெறலாம். மேக்மாவை நீரில் கரைத்து அதிலிருந்து கனிமங்களை பிரித்தெடுக்க முயற்சிக்கலாம். நன்றி: பிபிசி