இடுகைகள்

இழப்பீடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இனவெறி கொடுமைக்கு இழப்பீடு வேண்டும்! - இது பார்படோஸ் புரட்சிக்குரல்

படம்
  பார்படோஸிலுள்ள தேவாலயம் இனவெறிக்கும் கொத்தடிமைத்தனத்திற்கும் இழப்பீடு வேண்டும்! பார்படோஸ், இன்று குடியரசு நாடு, ஆனால், அங்கு நானூறு ஆண்டுகளுக்கு மேலாக கறுப்பின கொத்தடிமைகளை கொண்டிருந்தது. அங்கு விளைந்த கரும்பை விளைவித்தவர்கள் கறுப்பினத்தவர்கள்தான். கரும்பு விளைச்சலுக்கு டிராக்ஸ் ஹால் என்ற பகுதி புகழ்பெற்றது. லட்சக்கணக்கான கறுப்பினத்தவர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்டு கொத்தடிமைகளாக வேலை பார்க்கவைக்கப்பட்டனர். இப்படி வந்தவர்களில் வெள்ளையர்களின் கொடுமை, காலநிலை, நோய் என பல்வேறு சிக்கல்களால் முப்பதாயிரம் பேருக்கும் மேல் இறந்தனர். இந்த தொழிலாளர்களைப் பற்றிய ஆவணங்களைக் கூட வெள்ளை முதலாளிகள் மறைத்து, பின்னர் அதை நெருப்புக்கு இரையாக்கினர். அதனால் பெரிதாக நிலைமை ஏதும் மாறிவிடவில்லை. வெள்ளையர்கள் இன்றும் வசதியானவர்களாகவே வாழ்கின்றனர். கறுப்பினத்தவர்கள் இழப்புகளை சந்தித்து அதிலிருந்த மீண்டு வர பல தலைமுறைகள் ஆகிவிட்டது. இன்று அங்கு வேலை செய்தவர்களின் பேரன், பேத்திகள் என அனைவரும் இணைந்து தங்கள் முன்னோர் அங்கு கொத்தடிமைகளாக இருந்து உழைத்த உழைப்பிற்கு இழப்பீடு கேட்டு வருகின்றனர். இ

கொடைக்கானலை உருக்குலைத்து வரும் பாதரசக் கசிவு!

படம்
  எழுத்தாளர் அமீர் சாகுல் கொடைக்கானலில் கசியும் பாதரசம் ஆங்கிலோ டச்சு   நிறுவனம் யுனிலீவர், இந்த நிறுவனத்திற்கு சொந்தமான இந்திய நிறுவனம், இந்துஸ்தான் யுனிலீவர். இதன் தொழிற்சாலை கொடைக்கானலில் அமைக்கப்பட்டுள்ளது. 1980ஆம் ஆண்டு தொடங்கி தெர்மோகோல் தயாரிப்பு யுனிலீவரின் தொழிற்சாலையில் நடந்து வருகிறது. இங்கு சரியான பாதுகாப்பு அணுகுமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை. இதன் காரணமாக தொழிற்சாலையில் வேலை செய்த இருபத்தெட்டு பேர் உயிரிழந்தனர். 2001ஆம் ஆண்டு க்ரீன்பீஸ் அமைப்பும், உள்ளூர் மக்களும் இணைந்து போராடியதால் தொழிற்சாலை மூடப்பட்டது. தொழிற்சாலை மூடப்பட்டாலும் கசிந்த பாதரசத்தால் இயற்கை வளமும் கெட்டது. ஊழியர்களும் நரம்பு நோய்கள், சிறுநீரக பாதிப்பு ஆகிய சிக்கல்களுக்கு உள்ளாகினர். இதற்கு என்ன பதில் என சூழல் அமைப்புகளும், ஊழியர்களும் போராட 2016ஆம் ஆண்டு, யுனி லீவர் நிறுவனம் வேலை செய்த 591 முன்னாள் ஊழியர்களுக்கும் குறிப்பிட்ட தொகையை வழங்குவதாக அறிவித்தது. இந்த விவகாரம் பற்றி முன்னாள் பத்திரிகையாளரும், க்ரீன்பீஸ் அமைப்பைச் சேர்ந்தவருமான அமீர் சாகுல் நூல் ஒன்றை எழுதியிருக்கிறார். ஹெவி மெட்டல் ஹவ் எ குள

அமெரிக்காவின் முதல் விண்கலம் - ஸ்கைலேப்

படம்
  அமெரிக்கா உருவாக்கிய முதல் விண்கல ஆராய்ச்சி மையம், ஸ்கைலேப். 1973ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதி, நாசா இதனை விண்ணில் ஏவியது. மூன்று விண்வெளி வீர ர்களுடைய குழு இந்த விண்கல ஆராய்ச்சிக் கலத்தில் நூற்றுக்கும் அதிகமான ஆராய்ச்சிகளை செய்தனர். இதில் புவிவட்டபாதை, பூமியைப் பற்றிய ஆராய்ச்சி, சூரியனைப் பற்றிய ஆய்வக ஆய்வு என நிறைய விஷயங்களை அங்கு செய்தனர் . ஸ்கைலேப் விண்ணில் ஏவப்பட்டு பதினொரு நாட்கள் கழித்து மே 25 அன்று மூன்று விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு கிளம்பினர். சார்லஸ் கான்ராட், பால் வெய்ட்ஸ், ஜோசப் கெர்வின் ஆகியோர் தான் கிளம்பிய மூவர். இவர்கள் விண்கலத்திற்கு சென்று நிறைய பழுதுகளை நீக்கினர்.மைக்ரோமெட்ராய்ட் கவசம், சோலார் பேனல் பழுதுப்பட்டிருந்தது  அடுத்த குழுவினர் 1973ஆம் ஆண்டு ஜூலை மாதம் விண்ணுக்கு கிளம்பினர். இவர்கள் அங்கு சென்று 59 நாட்கள் இருந்தனர். பணியாற்றினர்.  1974ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்ற மூன்றாவது குழுவினர். 84 நாட்கள் விண்ணில் இருந்தனர். பிறகு மெல்ல ஸ்கைலேப்பின் செயல்பாடுகள் குறையத் தொடங்கின. நாசா, கீழிருந்து அனுப்பிய கட்டளைகள் மூலம் விண்கலத்தின் சுற்றுப்பாதை மாற்றப்பட்டது. பூமிய

கங்கை ஆற்றால் நிலமிழந்த மக்கள் - கண்டுகொள்ளாத மாநில, மத்திய அரசுகள்!

படம்
கங்கை ஆற்றால் அரிக்கப்படும் நிலம்!  கடல், ஆறு ஆகியவற்றால் நிலப்பரப்பு அரிக்கப்பட்டு வருவது காலம்தோறும்  நடந்துவருகிறது. மேற்கு வங்கத்தின், மால்டா, முர்ஷிதாபாத், நாடியா ஆகிய மாவட்டங்களில் 400 சதுர கி.மீ. நிலப்பரப்பு அரிக்கப்பட்டுள்ளது. இதை மாநில அரசின் ஆய்வே, வெளிப்படுத்தியுள்ளது. கங்கை ஆறு மூலமாக நிலப்பரப்பு அரிக்கப்படுவது புதிதாக நடக்கவில்லை. அறுபது ஆண்டுகளாக நடந்த  மண் அரிப்பு, பெருமளவு நிலப்பரப்பை சிதைத்துள்ளது. மண் அரிப்பின் பாதிப்பால், பல லட்சம் மக்களின் வீடுகள் அழிந்துவிட்டன. இதோடு அவர்களின் விளைநிலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றன. ஃபராக்கா தடுப்பணை மேற்கு வங்கத்தில் கட்டப்பட்டு இருந்தாலும் கூட கங்கையின் சீற்றத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மால்டாவிலிருந்த மசூதி, பள்ளிக்கட்டடம் உள்ளிட்டவை கங்கை ஆற்று நீரால் சிதைந்தன. இப்படி நடந்த சம்பவத்திற்கு மத்திய, மாநில அரசு என இரண்டுமே எந்த உதவியையும் செய்யவில்லை. ”ஆண்டுக்கு 73 கோடியே 60 லட்சம் டன்கள் வண்டல் மண் கங்கை ஆற்றில் படிகிறது. அதனை புனரமைத்தாலே பாதிப்புகள் குறையும். இதில் 32 கோடியே 80 லட்சம் டன் வண்ட

போக்சோ சட்டத்திற்கு வயது 10!

படம்
  1 வரும் நவம்பர் மாதம் வந்தால் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் சுரண்டல், குற்றங்கள் தொடர்பான போக்சோ சட்டத்திற்கு வயது 10 ஆகப்போகிறது.  2012ஆம் ஆண்டு மே 22 அன்று போக்சோ சட்டம் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வந்தது. உறுப்பினர்கள் வாக்களித்து ஏற்கப்பட்டு நவம்பர் 14 அன்று நடைமுறைக்கு வந்தது. இதில் ஆபாசப்படும், பாலியல் சுரண்டல், வல்லுறவு செய்யப்படும், சீண்டப்படும் குழந்தைகளை பாதுகாக்க முடியும். இதற்கான விசாரணைகள் அனைத்துமே பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுசரணையான வழியில் இருக்கும். இதுதான் சட்டத்தின் சிறப்பம்சம்.  நகரங்களில் பதிவாகும் போக்சோ வழக்குகள்  திருச்சி - 177 சென்னை - 1404 கோவை - 284 சேலம் - 361  மதுரை -440 திருநெல்வேலி - 198  திருப்பூர் - 187 2012ஆம் ஆண்டு போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை -43 2020ஆம் ஆண்டு பதிவான போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை -3,187 2 கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழ்நாடு அரசு முதல்வர் ஸ்டாலின், பள்ளி வளாகத்தில் நடக்கும் பாலியல் குற்றங்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இந்த வழக்குகளை வேகமாக பதிவு செய்து நடவடிக்கை எடுப்பது பற்றியும் பேசினார்

தாமதமாகும் இழப்பீட்டுப் பணம்! - கடத்தலில் மீட்கப்படுபவர்களுக்கு கிடைக்காத நீதி!

படம்
கருப்பு இந்தியா கொல்கத்தாவில் கடத்தல் தொழிலிருந்து மீட்கப்படுபவர்களுக்கு கிடைக்கவேண்டிய இழப்பீட்டு பணம் வழங்கப்படாமல் இருக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது. 2016 ஆம் ஆண்டிலிருந்து  2019 வரையிலான அரசின் இழப்பீட்டு திட்டத்தின் வழியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு 1 சதவீத நிவாரணத்தொகை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. எஸ்எல்எஸ்ஏ எனும் இத்திட்டத்தில் கடத்தலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கி வருகிறது கொல்கத்தா அரசு. இதில் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து விசாரணை என்ற பெயரில் பலமணி நேரங்கள் காக்க வைக்கின்றனர். ஆனால் அதற்கான இழப்பீட்டை முழுமையாக வழங்குவதில்லை. பலரும் இதன் காரணத்தால் நீதிமன்றத்தை நாடி தங்களுக்கு நிவாரணம் பெறும் நிலைமை உள்ளது. தேசிய குற்ற ஆவணக்காப்பகத்தின் தகவல்படி, நடப்பு ஆண்டிலும் கடந்த ஆண்டிலும் மனிதர்களை கடத்திச்செல்லும் சம்பவங்கள் இங்கு அதிகரித்த வண்ணம் உள்ளன. 2012 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் மட்டும் 3500 கடத்தல் சம்பவங்கள் இங்கு நடைபெற்றுள்ளன. சன்ஜோக் எனும் ஐந்து வழக்கறிஞர்களைக் கொண்ட குழு இதற்கான தகவல்களை நாடு முழுவதும் தேடி சேகரித்துள்ளது. சன்ஜோக் குழுவைச்

தடுப்பூசி சதவீதம் வீழ்ச்சியுற்று வருகிறது!

படம்
தடுப்பூசிகள் ஆபத்தானவையா ? தடுப்பூசிகளில் நீர்த்துப்போன நுண்ணுயிரிகள், பாதி செயல்திறன் கொண்ட வைரஸ்கள், வேறு சில உயிரிகளின் நச்சுகள் இருக்கும். இவை உடலில் சென்றவுடன் நோய் எதிர்ப்பு சக்தி, இவற்றை எதிர்க்கும். இவை குழந்தையின் உடலில் நோய் வரும் முன்னரே செலுத்தப்படும். எதற்காக, நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுவதற்காக. இதனை நாம் செய்யாதபோது, நோய் தாக்கினால் தாங்கும் சக்தி நமக்கு இருக்காது. சற்று நீர்த்த நிலையில் நோய்க்கிருமிகளைத்தான் நாம் தடுப்பூசியாக குழந்தைகளுக்குச் செலுத்துகிறோம். அவை நோய் பற்றிய நினைவை குழந்தைகளுக்கு ஏற்படுத்துகிறது. இதனால்தான் குழந்தைகள் போலியோ, க க்குவான் இருமல், அம்மை போன்ற நோய்களிலிருந்து தப்பிக்க முடிகிறது. இங்கு நான் கூறுவது அறிவியல் பூர்வமான உண்மை. அதேசமயம் தடுப்பூசிகள் ஏற்படுத்தும் பக்கவிளைவுகளும் உண்டு. அனைவருக்கும் பொதுவாக மருந்து என்பது உலகில் கிடையாது. சில மருந்துகள் சிலருக்கு காய்ச்சலையும், வயிற்றுப்போக்கு போன்ற பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தி உயிரையும் கூட பறிக்கலாம். இன்றைய தகவல்படி உலகம் முழுவதும் சரியான தடுப்பூசிகள் போடப்படாமல் 30 லட்சம் குழந

தடுப்பூசி இழப்பீடு தருகிறார்களா?

படம்
தடுப்பூசிகள் நல்லது என பல்வேறு அமைப்புகள் சொன்னாலும் அமெரிக்காவில் தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுகள், மரணத்திற்கான இழப்பீட்டை அரசு வழங்கி வருகிறது. ஆயிரமோ, லட்சமோ அல்ல கோடிகளில்.. இதுவரையில் 4 பில்லியன் டாலர்களுக்கு மேல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமெரிக்க அரசு இழப்பீட்டை வழங்கியுள்ளது. அமெரிக்க அரசு வெளியிட்ட அறிக்கைப்படி, 2013-17 ஆண்டுகளில் மட்டுமே 229 மில்லியன் டாலர்களை செலவு செய்துள்ளது அரசு. தோராய இழப்பீட்டுத்தொகை 4, 30,000 டாலர்கள். இருபது ஆண்டுகளாக அமெரிக்காவில் அம்மை நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தடுப்பூசி அவசியம் என்று சொல்லும்போது அதற்கு எதிராக இழப்பீட்டு அமைப்பையும் அரசு நடத்தி வருவதோடு, இழப்பீட்டையும் வழங்கிவருவது மக்களுக்கு தடுப்பூசி மீதான சந்தேகத்தையும் ஏற்படுத்தாதா? தடுப்பூசிகளைத் தயாரிப்பது தனியார் மருந்து நிறுவனங்கள்தான். ஆனால் மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவுகளுக்கு இழப்பீடு அளிப்பது அமெரிக்க அரசு. இதனால் மக்களின் வரிப்பணம் தேவையில்லாமல் வீணாகிறது. லாபம் தனியார் நிறுவனங்களுக்கு, நஷ்டம் மக்களுக்கு எனும் லாபமுறையை அமெரிக்க அரசு வணிக நிறுவனங்களோடு