இடுகைகள்

கேப்சா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பாதுகாப்பில் மேம்படத்தொடங்கும் கேப்சா - புதிய மேம்பாடுகள் பற்றிய பார்வை

படம்
  கேப்சா என்பதை இணையத்தை பயன்படுத்துபவர்கள் உறுதியாக எதிர்கொண்டிருப்பார்கள். எழுத்துகளை, பாடல்களை தரவிறக்கும்போது திடீரென கேப்சா தோன்றும். சிறியதும் பெரியதுமான எழுத்துகள் வளைந்து இருக்கும். அதை சரியாக பதிவிட்டால் தரவிறக்கம் நடக்கும். இல்லையெனில் காரியம் கைகூடாது. எழுத்து, படம் என கேப்சா பல்வேறு வகையாக உள்ளது. இப்போது ஒலியைக் கூட கேப்சாவாக வைக்கத் தொடங்கிவிட்டனர். ஒலியைக் கேட்டுவிட்டு அதன் ஒற்றுமையை பதிவிடவேண்டும்.  கேப்சா எதற்காக, வலைதளத்தில் தகவல்களை ஹேக்கர்கள் திருடாமல் இருக்கத்தான். வலைதளத்தில் சிலர் கோடிங்குகளை பயன்படுத்தி, அதை தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. இதை தடுக்கவே கேப்சா பயன்படுகிறது. கூகுள் ரீகேப்சா என்ற வசதியை வழங்குகிறது. இதில் ஒருவர் தனது வலைதளத்தை பதிவு செய்து உண்மையான பயனர் பற்றிய தகவல்களை அறியலாம். வலைதளத்தில் அதிகரிக்கும் போக்குவரத்து உண்மையானதா இல்லையா என ஆராய்ந்து கண்டுபிடிக்க கூகுள் உதவுகிறது. இன்று ஒருவர் தகவல்களை பாதுகாக்க இணையத்தில் உள்ள பாட்கள், அல்காரிகம், செயற்கை நுண்ணறிவோடு மோதவேண்டியுள்ளது.  கம்ப்ளீட்லி ஆட்டோமேட்டட் பப்ளிக் டூரிங் டெஸ்ட் டு டெல் கம்ப்யூட்