இடுகைகள்

தெரியுமா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆபத்திலுள்ள தனது மகனை/மகளைக் காப்பாற்ற தாயைத் தூண்டுவது எது?

படம்
  தெரியுமா? தெர்மோரெகுலேஷன் (Thermoregulation) நமது உடல் 37 டிகிரி செல்ஸியஸ் என்ற வெப்பநிலையை எப்போதும் சீராகப் பராமரித்து வருகிறது. இந்த வெப்பநிலையில்தான் மனித உடலின் செல்கள், சீராக வேலை செய்யும் பண்பைக் கொண்டுள்ளன. உடலைக் குளிர்விப்பதில் தோல், மூக்கு ஆகியவை முக்கியமானவை. வெளிப்புற வெப்பம் அதிகரிக்கும்போது , மூளையின் சமிக்ஞைப்படி தோல் உடலில் உள்ள நீரை வேர்வைத் துளைகள் வழியாக வியர்வையாக வெளியேற்றுகிறது. இதன் விளைவாக,  உடலின் வெப்பம் கட்டுப்படுத்தப்படுகிறது. மூக்கின் வழியாக உள்ளே சென்று, வெளியேறும் சுவாசக் காற்றும் உடலின் வெப்பநிலையை சீராகப் பராமரிக்க உதவுகிறது.   உணர்ச்சிகர வலிமை (Hysterical Strength) தன் குழந்தைக்கு ஆபத்து நேரும்போது, தாய் இதுவரை தன்னால் நினைத்தே பார்த்திராத செயலை செய்வார். அதாவது, காருக்குள் சிக்கிய குழந்தையை மீட்க காரை தனியாகவே தூக்குவது போல.. இப்படி நடைபெறுவதற்கு அறிவியல் ஆதாரங்கள் கிடையாது. ஆனால், உயிருக்கு ஆபத்து வரும்போது அட்ரினலின் ஹார்மோன் சுரக்கிறது. இதன் விளைவாக, குறிப்பிட்ட நேரத்திற்கு தசைகள் இறுக்கமாகி வலிமை அதிகரிக்கிறது. இந்த நிலையில் அதிவேகமாக ஓட, எடையை

செம்பு, பிளாட்டினத்தின் தோற்றம்!

படம்
  தெரியுமா? செம்பு தொன்மைக் காலத்தில் மனிதர்கள் பயன்படுத்திய முதல் உலோகம், செம்பு என புவியியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.  கி.மு. 8000 இல், அன்றைய மனிதகுலம் கற்களுக்குப் பதிலாக செம்பை பயன்படுத்த தொடங்கினர் என மானிட ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். கி.மு. 4000இல், எகிப்தியர்கள்  செம்பை உருக்கி அச்சுக்களில் பயன்படுத்த தொடங்கினர்.  பிற்காலங்களில் செம்புடன்,தகரத்தை சேர்த்து வெண்கலத்தை உருவாக்கப் பயன்படுத்தினர். பொதுவாக செம்பை எளிதாக உருக்கி, பல்வேறு வார்ப்புகளைச் செய்யலாம். இதன் காரணாக, மக்கள் வீட்டுக்குப் பயன்படும் குழாய்களைச் செய்ய செம்பையே நாடினர்.   பிளாட்டினம் 1500களில் ஸ்பெயின் நாட்டினர், பிளாட்டினத்தை முதல்முறையாக கண்டுபிடித்து ஆவணப்படுத்தினர்.  பிளாட்டினா டெல் பின்டோ (Platina del pinto)என்ற வார்த்தையிலிருந்துதான் பிளாட்டினா என்ற வார்த்தை உருவானது. இதற்கு சிறிய வெள்ளி என்று பொருள். மக்கள் தொடக்கத்தில் இதனை, தூய்மைப்படுத்தப்படாத வெள்ளி என்று முதலில் கருதினர்.  சுரங்கத்தில் இரும்பு மற்றும் மெக்னீசியம் மிகுந்துள்ள பாறைகளில் இருந்து பிளாட்டினம் அதிகளவு பெறப்படுகிறது. பொதுவாக பிளாட்டினத்து