இடுகைகள்

நோம் சாம்ஸ்கி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மொழி என்பது மனிதர்களுக்கே உரிய சிறப்பு அம்சம் - நோம் சாம்ஸ்கி

படம்
  நோம்ஸ் சாம்ஸ்கி மொழியியலாளர், தத்துவவாதி, அறிவுத்திறன் சார்ந்த அறிஞர், சமூக செயல்பாட்டாளர் என சொல்லிக்கொண்டே போகலாம். அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் யூதப்பெற்றோருக்குப் பிறந்தார். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில்  தத்துவம், மொழியியல் என இரண்டு பாடங்களை படித்தார். முனைவர் பட்டங்களை நிறைவு செய்தார். 1955ஆம் ஆண்டு, எம்ஐடியில் சேர்ந்தவர் 1976இல் அங்கு பேராசிரியரானார்.  நவீன மொழியியல் சிந்தனை மக்களுக்கு பரப்பியதில் முக்கிய பங்காற்றிய ஆளுமை. அரசியல் கருத்துகளை வெளிப்படையாக பேசுவது, அரசதிகாரத்தை தீவிரமாக எதிர்ப்பது என நோம் சாம்ஸ்கி எதையும் விட்டுவைக்கவில்லை. அதனாலேயே இவரது பெயரைக் கூறினாலே சர்ச்சையும் கூடவே வந்துவிடும். அறிவியல் பங்களிப்புக்காக ஏராளமான விருதுகளை வென்றுள்ளார். மொழியியல் அறிஞர் கரோல் ஸ்காட்ஸ் என்பவரை மணந்தார். இவரது மனைவி 2008ஆம் ஆண்டு மரணித்தார்.  முக்கிய படைப்புகள்  1957 சின்டாக்டிக் ஸ்ட்ரக்சர்ஸ்  1965 கார்டீசியன் லிங்குயிஸ்டிக்ஸ் 1968 லாங்குவேஜ் அண்ட் மைண்ட் நோம் சாம்ஸ்கி, மொழி என்பது மனிதர்களுக்கான சிறப்பான அம்சம் என்று கருத்து கூறினார். இதில், பல ஆய்வாளர்களுக்கு வேறுபட

மொழி என்பது உடல் உறுப்பு போன்று வளர்ச்சி பெறக்கூடியது - நோம் சாம்ஸ்கி

படம்
  20ஆம் நூற்றாண்டில் கற்றல் கோட்பாட்டை பி எஃப் ஸ்கின்னர், ஆல்பெர்ட் பண்டுரா என இருவரும் சேர்ந்து உருவாக்கினர். அதில் முக்கியமானது, மொழி மேம்பாடு. மொழியைக் கற்பதில் சூழலுக்கு முக்கியமான பங்குண்டு. ஸ்கின்னர், குழந்தைகள் ஒருவர் பேசும் குரலை முதலில் அடையாளம் கண்டுகொள்கிறார்கள். பிறகு அதை போலசெய்தல் போல பேசுகின்றனர். பேசும் சொற்கள், வார்த்தைகளின் அர்த்தம் தெரிந்துகொள்ள முயல்கின்றனர். இதில், குழந்தைகளின் பெற்றோரின் அங்கீகாரம், பாராட்டுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. பாராட்டு, அங்கீகாரம் வழியாகவே ஊக்கம் பெற்று புதிய வார்த்தைகளைக் கற்கத் தொடங்குகின்றனர். பண்டுரா, போலச் செய்தலை இன்னும் விரிவாக்கினார். குழந்தைகள், பெற்றோர் பேசுவதை திரும்பக்கூறுவதோடு, அவர்களின் தொனி, பேசும் வாக்கிய அமைப்பு ஆகியவற்றையும் கவனத்தில் கொள்கிறார்கள் என்று விளக்கினார்.  மொழியியல் அறிஞர் நோம் சாம்ஸ்கி, மேற்சொன்ன கருத்துகளை, கோட்பாடுகளை தீர்மானமாக மறுத்தார். ஒருவர் மொழியைக் கற்பது, உடலில் பிற உறுப்புகள் மெல்ல வளர்ந்து மேம்பாடு அடைவதைப் போலவே நடைபெறுகிறது. அது பரிணாமவளர்ச்சி சார்ந்தது. அதில் சூழல், பெற்றோர் பங்களிப்பு என்பத