இடுகைகள்

கே.என்.எஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நிலவொளிரும் மலைகள் - முத்தாரம் கடைசிபக்க நேர்காணல்கள் - மின்னூல் வெளியீடு

படம்
  முத்தாரம் இதழ் தொடக்கத்தில் பொது அறிவுக் களஞ்சியமாக மாற்றப்படாதபோது, கிளுகிளுப்பான தொடர்களைக் கொண்டு சற்று ஜனரஞ்சமாக இருந்தது. வயதான அதன் வாசகர்கள அதில் நிறைய சரித்திரக் கதைகளைப் படித்திருப்பார்கள். எனது பணிக்காலத்த்தில் பொது அறிவுக் களஞ்சியம் என்ற வகையில் அதன் கேப்ஷனுக்கு ஏற்ப ஏதேனும் மாற்றங்களை செய்யவேண்டும் என முயன்றேன்  தடைகள் இருந்தாலும் விடாப்பிடியாக நின்று பக்க எண்கள் வடிவமைப்பு, தொடருக்கான லோகோ ஆகியவற்றை தனியாக வரைந்து வாங்கி பயன்படுத்தினோம் இந்தியா டுடேவின் சில நேர்காணல்களை படித்தேன். அதில் கடைசிபக்க நேர்காணல் நன்றாக இருக்கும். குறைந்த கேள்விகள், வடிவமைப்பு நுட்பமாக இருக்கும். இன்று வரைக்கும் அந்த இதழில் அப்பகுதி தடைபடாமல் வருகிறது. பெரும்பாலும் சினிமா பிரபலங்கள் வருவார்கள். அந்த ஐடியாவை உருவி, வடிவத்தை மாற்றி முத்தாரத்தில் பயன்படுத்தியதுதான் கடைசிபக்க நேர்காணல், இதை முத்தாரம் மினி என்று பெயர்வைத்து செய்தோம்.  அப்போது குங்குமம் முதன்மை ஆசிரியர் கே.என். சிவராமன் புதிதாக வந்திருந்தார். பத்திரிகையாளர் தி.முருகன் வேறு இதழுக்கு சென்றிருந்தார். திரு.கே.என்.சிவராமன் அவர்கள் குங்கும

சூரியனைப் போற்றுவதென்பது.. புதிய மின்னூல் வெளியீடு - இன்டர்நெட் ஆர்ச்சீவ் தளம்

படம்
  குங்குமம் வார இதழில் பணியாற்றுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என முதலில் நினைக்கவில்லை. கோகுலவாச நவநீதன் தலைமை உதவி ஆசிரியராக இருந்த காலம் அது. திரு.முருகன் அப்போது குழும இதழ்களின் முதன்மை ஆசிரியர். அவர்தான் என்னை முத்தாரம் இதழுக்கான உதவி ஆசிரியராக தேர்ந்தெடுத்தார். குறைந்த சம்பளம், ஏராளமான வேலைகள் எனக்கு பரிசாக கிடைத்தன.  எனக்கு அன்றிருந்த பெரிய மகிழ்ச்சி, வெள்ளி மலரில் சினிமா கட்டுரைகள், தொடர் எழுதிக்கொண்டிருந்த எனது வழிகாட்டியாக நினைத்த திரு. கே.என்.சிவராமன் சாரை அருகிலிருந்து பார்க்கும் வாய்ப்பும், காலை வணக்கம் சொல்லும்போது அவரின் முகத்தை பார்க்க முடியும் என்ற மனநிறைவும்தான்.   மொழிபெயர்ப்பு என்பது நானாக முனைந்து கற்றுக்கொண்டதுதான். அதில் நிறைய பிழைகள் உண்டு. தவறுகள் உண்டு. முத்தாரத்தில் உதவி ஆசிரியராக இருந்தபோதும் கூட எனது பெயரில் கட்டுரை வருவது கடினமாக இருந்தது. அதற்கென வெளியில் இருந்து வரும் பல்வேறு தகவல்களை படித்து சரிபார்த்து போட்டால் போதும் என்பதும் முதன்மை ஆசிரியரின் உத்தரவு. குங்குமத்தில் பணியாற்றியவரான இன்னொரு நபர் உடல்நிலை குறைவால் விடுப்பு எடுக்கத் தொடங்க, குங்குமத்த

ஆசிரியர் கே.என்.சிவராமன் தந்த சுதந்திரம்! - மனமறிய ஆவல்!

படம்
ஆசிரியர் கே.என்.சிவராமன் முத்தாரம் அறிவியல் இதழ் என்பதால் முடிந்தவரை அரசியல் குறுக்கீடுகள் இருக்கவில்லை. ஆசிரியர் கே.என்.எஸ் கொடுத்த சுதந்திரம் இல்லையென்றால் அதில் உருப்படியான எந்த விஷயங்களும் வந்திருக்காது. நான் அங்கு பணிசெய்யும்போது, காலை எட்டு மணியென்றால் இருவரும் வந்து உட்கார்ந்து வேலை செய்துகொண்டிருப்போம். காலையில் நேரத்திலேயே வந்து பணிசெய்வதை விரும்புபவர், காலை 8.30 க்குள் அன்றைக்கான ஃபார்மை எழுதி முடித்துவிடுவார். லே அவுட் ஆட்கள் வந்ததும் பிரிண்ட் அவுட் எடுத்து கொடுத்துவிட்டு டீ குடிக்கச் சென்றுவிடுவார். அப்புறம் என்ன பரபரவேலைகள்தான். மேட்டர் சொல்லிவிட்டு சால்ஜாப்பு சொல்லித் தப்பிக்க முடியாது. நான் அப்படித்தான் என்பார் கே.என்.எஸ். மாலனிடம் பத்திரிகைத் தொழில் கற்றவர். ஜனரஞ்சகம் முதல் தீவிர இலக்கிய இதழ்கள் வரை படிக்கும் வித்தியாசமான அறிவுஜீவி அவர். நிறைய நூல்களைப் பார்த்தால் போதும். உடனே படிங்க என்று வைத்துக்கொள்ளவே கொடுத்திருக்கிறார். அவரும் லக்கி - யுவகிருஷ்ணா சாரும் கொடுத்த நிறைய புத்தகங்களை வாங்கிப் படித்திருக்கிறேன். 11 27.11.2018 அன்புள்ள நண்பர் முருகு