இடுகைகள்

ரத்தசாட்சி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அசுரகுலம் 3- ரத்தசாட்சி மின்னூல் வெளியீடு

படம்
  அசுரகுலம் 3 ரத்தசாட்சி மின்னூல் வெளியீடு   ரத்தசாட்சியை எழுதவேண்டும் என தீவிரமான எண்ணம் அண்மையில்தான் எழுந்தது. பொதுவாகவே மின்னூல்களை ஜெயமோகன் போல ஆயிரம் பல்லாயிரம் பக்கங்களில் எழுதுவது எனக்கு உடன்பாடில்லை. எனவே இதுவும் 75 பக்கங்களைக் கொண்ட நூல்தான். எனவே எளிதாக நீங்கள் கிண்டில் மூலம் வாசித்துவிட முடியும். ரத்தசாட்சி, அசுரகுலத்தின் வரிசையில் கொலைகாரர்களின் குற்றம் மற்றும் உளவியல் பற்றி பேசுகிறது. இதன் வரிசை உடலுறவு, கோபம், பணம் என எதை அடிப்படையாக கொண்டு கொலைகளை குற்றங்கள் நடத்தப்படுகிறது என்பதை ஆராய்கிறது. நூலில் நடைபெறும் குற்றங்கள் பெரும்பான்மையானவை மேற்குலகை அடிப்படையாக கொண்டவை. பொதுவாக மேற்குலகில் அறிவியல் வளர்ந்திருப்பதோடு குற்றங்களை ஆவணப்படுத்தி வைக்கும் பழக்கமும் உண்டு. இந்த வகையில் குற்றங்களின் தொடர்ச்சி, அதன் குறிப்பிட்ட அடையாளங்கள், தன்மை, குற்றவாளிகள் என எளிதாக அடையாளம் கண்டு குற்றவாளிகளை கைது செய்கிறார்கள். அடையாளங்களை வைத்து சீரியல் கொலைகாரர்களை காவல்துறையினர் கைது செய்கின்றனர். அதேசமயம் குற்றவாளிகளே காவல்துறையினருக்கு சிலி பிடிமானங்களைக் கொடுத்து முடிந்தால்

ரத்தசாட்சி - அசுரகுலம் 3 - தொடர் வரிசை நூல் அட்டைப்படம் வெளியீடு

படம்
  விரைவில் அமேசான் வலைத்தளத்தில்.... நன்றி  எஸ்ஆர் எலக்ட்ரிகல் சரவணன் 

குடும்பங்களை அழிக்கும் டெர்மினேட்டர் - அனடோலி

  மனிதர்கள் அமைதியாகத்தான் இருப்பார்கள். ஆனால் சூழ்நிலை கொந்தளிப்பாக மாறும்போது அவர்களின் உள்ளே உள்ள ஆவேசம் வெளியே தெரியவரும். காதலோ, நட்போ, தொழிலோ ஏதோ ஒருவகையில் ஒருவருக்கு ஏமாற்றம் தருகிறது. சில சமயங்களில் ஒட்டுமொத்த உலகமே தன்னை வஞ்சித்ததாக ஒருவர் உணரும்போது வஞ்சகர் உலகத்தை பழிவாங்க குற்றங்களில் ஈடுபடுகிறார். இந்த வகையில் கோபம், வன்மம், பழிக்குப்பழி, உடலுறவுக்கான சாகச உணர்வு ஆகியவை மனிதர்களை பெரும்பாலும் கொலைகளை செய்ய வைக்கிறது. பாகிஸ்தானின் லாகூரில் ஜாவேத் இக்பால் இப்பபடிப்பட்ட மனிதர்களில் ஒருவர். தெருவில் வாழும் ஆதரவற்ற சிறுவர்களுக்கு உணவு, இருப்பிடம் தருகிறேன் என கூட்டிச் சென்று கொன்று அமிலத்தில் கரைத்துவிடுவார். இரு சிறுவர்களை அடித்ததாக அவர் மீது காவல்துறை புகார் இருந்தது. ஆனால் காவல்துறை அதை தீர விசாரிக்காமல் விட்டுவிட்டனர். இதனால் நூறு தாய்களை அழவைக்கும் செயலை செய்தார். ஆம். நூறு சிறுவர்களைக் கொன்று உடலை அமிலத்தில் கரைத்து அந்த நீரை பாதாள சாக்கடையில் விட்டார். நான் நினைத்தால் ஐநூறுக்கும் மேற்பட்ட சிறுவர்களை கொன்றிருக்க முடியும். ஆனால் என் மனதில் நூறு தாய்களை அழ வைக்கவேண்டும்

மனிதர்களைக் கொல்வது வேடிக்கையானது - கார்ல் பன்ஸ்ராம்

படம்
    ரகசியமான உலகை உருவாக்கி அதில் தன்னைத்தானே மோகம் கொள்ளும் செயல்களை செய்தல், வாய்ப்பு வரும்போது கொலைகளை செய்வது, கொலைகளை செய்யத் தொடங்கி எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்டே செல்வது, குற்றங்களிலிருந்து ரகசியமாக தன்னை விடுவிக்கும் வழியைக் கண்டறிவது, சூழலுக்கேற்ப செயல்படுவது, மனதில் உள்ள விரக்தியை தொடர்ச்சியாக மறுசுழற்சி செய்து கோபத்தை ஆறாமல் பார்த்துக்கொள்வது ஆகியவை முக்கியமான உளவியல் அறிகுறிகளாக வல்லுநர்கள் கூறுகிறார்கள். கோபத்தை நாம் எங்கு பயன்படுத்துகிறோம், நமது கட்டுப்பாட்டில் உள்ளவர்களின் மீதுதானே, குறிப்பாக சொல்லவேண்டுமெனில் எதிர்க்க முடியாதவர்களின் மீது. அந்த வகையில் விலைமாதுக்கள், நோயாளிகள், குழந்தைகள் கொலையாளிகளின் முக்கியமான இலக்காகிறார்கள். இவர்களை எளிதாக தாக்கி தன் மனதிலுள்ள கோபத்தை, வலியை  அவர்களுக்கு கொலையாளிகள் காட்டுகிறார்கள்.  எளிமையாக இக்கருத்தை கூறவேண்டஉமெனில் பலவீனர்கள் மீது அதிகாரத்தை காட்டி அவர்களை அடிபணியச் செய்தல். பெண்களை வல்லுறவு செய்து இன்பம் அனுபவிக்கும் தொடர் கொலைகாரர்கள் தங்களது செயலின் மூலம் மனதிலுள்ள கோபத்தை விரக்தியை வெளிக்காட்டுகிறார்கள். கொலை என்பது இங்கு

ஸிசோபெரெனியாவில் காதில் கேட்கும் குரலால் கொலை செய்தவர்கள்!

படம்
  அமிஷ் எழுதிய சிவன் முத்தொகுதி நூலில் விகர்மா என்ற கருத்தை முன்வைக்கிறார். இதை தீண்டாமை என முற்போக்கு ஆட்கள் பொருள் கொள்ளவும் அதிக வாய்ப்புள்ளது. அதாவது, சமூகத்தில் முழுமையான செல்வங்களோடு ஊனப்படாமல், வாரிசுகளை இழக்காமல், கணவனை இழக்காமல் வாழ்பவர்கள் அரசின் பொது இடங்களில் புழங்கலாம். மேற்சொன்னபடி இல்லாமல் எதிர்மறையாக ஊனமானவர்கள், உறவுகளை இழந்த ஆதரவற்றவர்கள், கணவனை இழந்த பெண்கள் ஆகியோர் விகர்மா என அடையாளப்படுத்தப்பட்டு அவர்கள் வெளியே செல்வதற்கான தனிப்பட்ட நேரத்தை அரசு குறிப்பிடும். அப்போது மட்டுமே அவர்கள் வெளியே புழங்கலாம். மற்ற நேரங்களில் மூடப்பட்ட அறைகளில் தனியாக இருக்கவேண்டும். இவர்களுக்கு அரசு மானிய உதவிகளை வழங்கும். சிவன் இதை ஏன் என கேள்வி கேட்கும்போது, சமூக வாழ்க்கையை வாழ முடியாதவர்கள், உறவுகளை இழந்தவர்கள், குழந்தை இல்லாதவர்கள் ஆகியோர் மனதில் வருத்தம், சோகம் ஆகிய உணர்ச்சிகளை கொண்டிருப்பார்கள். இவர்களை பொது இடத்தில் புழங்கவிட்டால் ஆபத்துகளை ஏற்படுத்துவார்கள். பிறரின் மகிழ்ச்சியை குலைப்பார்கள் என அரசர் காரணம் சொல்லுவார். சிவன் எதற்கு இந்த சமூகத்தீமைக்காக இந்தளவு பொங்குகிறார் என்றால

கொலை செய்து ரத்தம் குடித்தால்தான் திருப்தி!

படம்
  பீட்டர் வில்லியம் சல்கிளிப் என்பவர், இங்கிலாந்தில் ஜாக் தி ரிப்பர் என்ற கதையை படித்தோம் அல்லவா? அதை முறையைக் கையாண்டவர். ஆனால் இன்னும் கொஞ்சம் ஸ்பீடு ஏத்து மாமா என டிஎஸ்பி இசையில் கூறுவதைப் போல குரூரத்தை இரண்டு ஸ்பூன் சேர்த்தார். பீட்டர், ஜாக்கைப் போலவே காவல்துறையினருடன் தனது கொலைகளைப் பற்றி பேசியவர்தான். ஆனால் காவல்துறை தீவிரமாக செயல்பட்டு அவரைப் பிடிக்கும்போது பதினைந்து பேர்களின் உயிர் பறிபோனது. பிழைத்தவர்களும் ஏன் பிழைத்தோம் என்ற அளவுக்கு உடல் உறுப்புகள் சிதைக்கப்பட்டிருந்தன. முதலில் விலைமாதுக்களை தேடிப்பிடித்து குத்திக்கொல்ல ஆரம்பித்தார். குத்துவது என்றால் சாதாரணமாக அடிவயிற்றில் ஓங்கி குத்திக்கொல்வதோடு நிற்கவில்லை. கண்கள், கழுத்து, மார்பு, வயிறு, பெண் குறி என பதினான்கு முறை குத்திக்கொல்வது பீட்டரின் பாணி. இதனால் ஒருவர் உயிர்பிழைப்பது கடினம். அப்படி உயிர் பிழைத்து வாழ்ந்தால் அவரை பார்ப்பது நமக்கு கஷ்டமாக இருக்கும். அந்தளவு உடல் உறுப்புகளை உருக்குலைத்துவிடுவார் பீட்டர். விலைமாதுக்கள், வேலை செய்யும் பெண்கள், கல்லூரி மாணவர்கள் என கொலைக்கு தேவையான பொருட்களை மாற்றிக்கொண்டார். ஏன் இ

இயற்கை பேரிடர்களைத் தவிர்க்க கொலை செய் என காதில் சொன்ன குரல் - முலின்

படம்
  அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான கோப்ரா பார்த்திருக்கிறீர்களா|? படம் நீளம் அதிகம். சுவாரசியம் குறைவு என வணிக ரீதியில் தோற்றுப்போய்விட்டது. நாம் அதைப்பற்றி கவலைப்பட வேண்டும். படத்தில் நாயகர்களில் ஒருவர் அதாவது கணக்கு ஆசிரியருக்கு ஸிஸோபெரெனியா இருக்கும். கற்பனை காட்சிகள் தோன்றும், மனதில் நிறைய பாத்திரங்களோடு பேசிக்கொண்டிருப்பார். அதேதான். அதேபோல காதில் கேட்கும் குரல் கொலை செய்யச் சொல்லியது என பதிமூன்று பேர்களை போட்டுத்தள்ளிய நபர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் முலின். கலிஃபோர்னியாவின் சாண்டா குரூஸ் பகுதியில் நிறைய கொலைகளை இவர் செய்துவந்தார். கத்தி, பிஸ்டல், ரிவால்வர், பேஸ்பால் மட்டை ஆகியவற்றை எப்போதும் தன்னோடு வைத்திருந்தார். அப்புறமென்ன, தேவையான மனிதர்கள் வெளியே உலவும்போது குத்தியோ, சுட்டோ, சிதறடித்தோ கொல்வார். ஏன் இந்த கொலைவெறி?   இப்படி செய்யச் சொல்லி இயற்கைதான் சொன்னது. அப்போதுதான் இயற்கை பேரிடர்கள் என்னனுடைய நகரைத் தாக்காது என வெளிப்படையாகவே சொன்னார் முலின். கொலைகளை 72 தொடங்கி 73 வரையிலான காலகட்டத்தில் செய்தார். இதற்கான தொடக்கம் 1969ஆம் ஆண்டு உருவானது. அப்போது தலையை மொட்டையடித

பெண்களைக் கொன்று தோலை உரித்து அறைக்கலன்களை உருவாக்கிய வினோதன் - எட்வர்ட்

படம்
  1957ஆம் ஆண்டு அமெரிக்க காவல்துறையினர் ஒரு அதிர்ச்சியான வழக்கை சந்தித்தனர். அவர்கள் ஒரு கொலை வழக்கு சம்பந்தமாக வசதியான மனிதர் ஒருவரைப் பார்க்கச் சென்றனர். சென்ற இடம் ஒரு பண்ணை வீடு. 195 ஏக்கர் பரப்பு. அங்கு விசாரிக்க சென்றபோது செல்வந்தர் எட்வர்ட் கெயின் அங்கு இல்லை. ஆள் இல்லையே சுற்றுப்புறத்ததை பார்ப்போம் என காவல்துறை அதிகாரிகள் பண்ணை வீட்டுக்குள் நுழைந்தனர். சமையல் அறையில் ஏதோ ஒரு பெண் தலைகீழாக இருப்பது போல தெரிந்தது. என்னடா இது இப்படியெல்லாம் சீன பொம்மைகள் வந்துவிட்டனவா என்று பாரத்த காவலர்கள் மிரண்டனர். உண்மையில் ஒரு பெண்ணை தலையை மட்டும் வெட்டி முண்டத்தை தலைகீழாக எட்வர்ட் தொங்கவிட்டிருந்தார். இதுதான் டீசர். அப்படி இறந்த பெண்மணி பெர்னிஸ் வார்டன் அல்லது மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன மேரி ஹோகன் என இருவரில் ஒருவர் என காவல்துறையினர் முடிவுக்கு வந்தனர். பிறகு வீட்டுக்குள் உள் அறைகளை எட்டிப் பார்த்தனர். வினோதமான நெடி மூக்கை வருடியது. நாற்காலிகளுக்கான குஷன் மனித தோலால் செய்யப்பட்டது. ஒரு சிறு பெட்டியில் பெண்குறி அறுத்து பதப்படுத்தப்பட்டிருந்தது.   குடல்களை குளிர்பதனப் பெட்டியில்

தஸ்தயேவ்ஸ்கி நாவலைப் படித்துவிட்டு பெண்களை வல்லுறவு செய்த பிராடி மைரா ஜோடி!

படம்
  ரஷ்ய எழுத்தாளர் பியோதர் தஸ்தயேவ்ஸ்கி   பொதுவாக தொடர் கொலைகாரர்கள் தங்களின் மனநிலையை பிறருடன் ஒப்பிட்டுப் பார்த்து யாருடன் சரியான பொருத்தம் இருக்கிறதோ அவர்களுடன் பொருத்திக்கொள்வார்கள். இனி நீங்கள் படிக்கப்போகும் நபரும் கூட அப்படித்தான் கொஞ்சம் கோக்குமாக்கான ஆள். தஸ்தயேவ்ஸ்கி எழுதிய குற்றமும் தண்டனையும் படித்துவிட்டு அதிலுள்ள பாத்திரம் ஒன்றின் செயல்களின் மீது ஈர்க்கப்பட்ட குற்றவாளி, மெல்ல அப்படியே அதன் ஆதர்சமாக கொலைகளை செய்யத் தொடங்கனார். இதெல்லாம் நம்புகிறமாதிரியாக இருக்கிறதா என்றால் சூப்பர் |ஸ்டார் படங்களை ரசிகர்கள் யாராக நினைத்துக்கொண்டு பார்க்கிறார்கள். அதே மனநிலைதான். அந்த மனநிலையை ஒருவர் ஒரு மணிநேரம் கொண்டிருக்கலாம். ஆனால் வாழ்நாள் முழுக்க பித்தேறி திரிந்தால் எப்படியிருக்கும்? இயான் பிராடி. பிரிட்டனைச் சேர்ந்தவர். இவர் சிறையில் இருந்தபோது எழுதிய சுயசரிதை நூலின் பெயர் தி கேட்ஸ் ஆஃப் ஜானுஸ். அதில் தனது உலகைப் பற்றிய உண்மைகளை விவரித்திருப்பார். குற்றமும் தண்டனையும் நூலில் உள்ள ரஸ்கோல்னிகோவ் என்ற பாத்திரத்தை தனது ஆதர்சமாக கொண்டு குற்றவாழ்க்கையை தொடங்கினார். நூலில் இந்த பாத்திரம்

என்கிரிப்சன் செய்யப்பட்ட கொலைத்தகவல்கள் - ஸோடியாக் கொலைகாரர்

படம்
  வாழ்க்கையே பா.வெங்கடேசன், கோணங்கி ஆகியோரின் நாவல்கள் போல இருக்கிறதென்று சொன்னால் யாராவது நம்புவார்களா? ஆனால் ஜோடியாக் என்ற கொலைகாரர் தனது கொலைகளை அப்படித்தான் செய்து வந்தார். அமெரிக்காவில் குறிப்பாக பெண்களைக் கண்டால் மட்டும் குத்துக்கு பத்து என்பது போல கத்தியால் கூடுதலாக குத்திக் கொன்றார். அவரை காவல்துறை என்ன முயற்சி செய்தும் பிடிக்கமுடியவில்லை. இன்று ஜோடியாக் என அமேசானில், கூகுள்பிளே புக்ஸில் டைப் செய்து தேடினால் நிறைய நூல்கள் கிடைக்கும். ஜோடியாக் கொலைகாரர் புகழ்பெற்ற காலம் 1968 முதல் 1984 காலகட்டமாகும். ஜோடியாக் கொலைகாரர் தான் யார், செய்த கொலைகளைப் பற்றிய தகவல்களை பத்திரிகைகளுக்கு அனுப்பி வைத்துவிட்டுத்தான் காரியங்களை செய்தார். ஆனால் கூட அவரைப் பிடிக்க முடியவில்லை. காரணம் என்ன, அவர் கோடிங் பற்றி தெரிந்த ஆள். எனவே தனது கடிதங்களைக் கூட கோடிங்காக எழுதி அனுப்புவார். கூடவே பாழும் பத்திரிகளை இன்று வரை இரண்டுபிரதி நூல் அனுப்புங்கள். படித்து விமர்சனம், மதிப்புரை எழுதுகிறோம் என்பார்களே என்று ஸ்டாம்புகளையும் கூடவே அனுப்பி வைத்த நல்ல மனிதர்தான் ஜோடியாக். ஆனால் என்ன கோபம் வந்தால் மட்டும் எதி

நீட்ஷேவின் கருத்தால் கொலை செய்ய கிளம்பிய அறிவுஜீவிகள்!

படம்
  நீட்ஷே சினிமா பார்த்து திருடினேன் என்ற வார்த்தைகளை டெய்லி புஷ்பம், தந்தி போன்ற நாளிதழ்களில் சாதாரணமாக பார்த்திருப்பீர்கள். இப்படி சொல்லும் நாளிதழ்கள் அந்த பிரபலங்களை வைத்துதான் சம்பாதிக்கிறார்கள். ஆனால் செய்திகளை குற்றவாளி சொன்னதாகவே வெளியிடுவார்கள். உண்மையில் குற்றவாளியின் மனம் தான் செய்தது சரிதான் என வாதிட இதுபோன்ற புற காரணங்களை எடுத்துக்கொள்கிறது. சினிமாதான் ஒருவரை தூண்டியது, குற்றங்களில் ஈடுபட்டார் என்றால் அதே சினிமாவில் அறம் சார்ந்த உணர்வுகளை ஏற்படுத்தும் படங்கள் ஏகத்துக்கும் உண்டே, அவை குற்றவாளியின் மனதை மாற்றவில்லையா? பொதுவாக மனித மனம் தான் செய்யும் காரியத்திற்கு காரண காரியங்களை எளிதாக உருவாக்கிக்கொள்ளும். இன்று பொதுவெளியிலும் அறியாமை வெளிப்பட தான் சொல்லுவதே உண்மை என்று பேசுகிறார்கள் பாருங்கள். இவர்கள் நவீன குற்றவாளிகள். பின்னணியல் குற்றச்செயல்களை செய்துகொண்டும் இருக்கலாம். இந்த வகையில் நீட்ஷே என்ற தத்துவ அறிஞரைப் பற்றி வாசித்திருப்பீர்கள். இவர் அவர் வாழ்ந்த காலத்தை முன்வைத்து சில கருத்துகளை கோட்பாடுகளை சொன்னார். அதில் ஒன்றுதான், பலவீனர்கள் மீது அதிகாரம் செலுத்தித்தான் நாம்

சுயமோக கொலைகாரர்கள்!

படம்
      அமெரிக்காவில் மேரிலேண்டில் பெல்ட்வே ஸ்னைப்பர் என்ற கொலைகாரர்கள் உருவாகி வந்தனர். இவர்கள் 2002ஆம் ஆண்டு பிரபலமாக இருந்தனர். ஊடகங்கள் இவர்களைப் பற்றிய செய்தியை ஏகத்துக்கும் வெளியிட்டு மக்களின் பயத்துக்கு நெய் வார்த்தனர். இவர்களின் கொலை பாணி என்பது எளிதானது. ஆனால் பிறர் கண்டுபிடிப்பது கடினம். காரில் அமர்ந்து செமி ஆட்டோமேடிக் துப்பாக்கியை வைத்து வந்தவர் போனவர் என யாரையும் கவலைப்படாமல் குறிவைத்து சுட வேண்டியதுதான். தோட்டா எங்கிருந்து வருகிறது என கண்டுபிடிப்பதற்குள் ஏகப்பட்ட உயிர்கள் போயிருக்கும். இவர்கள் தங்கள் தில்லுக்கு துட்டு கிடைக்கும் என உறுதியாக நம்பி கடிதம் ஒன்றை காவல்துறைக்கு அனுப்பினர். உங்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறோம். நீங்கள் எங்களை கடவுள் என அழைக்கவேண்டும் என கடிதம் எழுதியிருந்தனர். காவல்துறை அந்த கடிதத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அது கொலைகாரர்களின்  மனநிலையை வெளிப்படையாக வெளிப்படுத்துவது. சென்ற அத்தியாயத்தில் கூறிய சமாச்சாரம் உங்கள் நினைவில் இருக்கும் என நினைக்கிறேன். துப்பாக்கித் தோட்டா செலவுக்கு கூட ஆகாத வழியில் எதற்கு மக்களை கொல்ல வேண்டும்? காசுக்காகத

கல்யாண வீடுன்னா மாப்பிள்ளை, இழவு வீடுன்னா பொணம் - என்பிடி ஆளுமைகள்

  அமெரிக்காவில் மேரிலேண்டில் பெல்ட்வே ஸ்னைப்பர் என்ற கொலைகாரர்கள் உருவாகி வந்தனர். இவர்கள் 2002ஆம் ஆண்டு பிரபலமாக இருந்தனர். ஊடகங்கள் இவர்களைப் பற்றிய செய்தியை ஏகத்துக்கும் வெளியிட்டு மக்களின் பயத்துக்கு நெய் வார்த்தனர். இவர்களின் கொலை பாணி என்பது எளிதானது. ஆனால் பிறர் கண்டுபிடிப்பது கடினம். காரில் அமர்ந்து செமி ஆட்டோமேடிக் துப்பாக்கியை வைத்து வந்தவர் போனவர் என யாரையும் கவலைப்படாமல் குறிவைத்து சுட வேண்டியதுதான். தோட்டா எங்கிருந்து வருகிறது என கண்டுபிடிப்பதற்குள் ஏகப்பட்ட உயிர்கள் போயிருக்கும். இவர்கள் தங்கள் தில்லுக்கு துட்டு கிடைக்கும் என உறுதியாக நம்பி கடிதம் ஒன்றை காவல்துறைக்கு அனுப்பினர். உங்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறோம். நீங்கள் எங்களை கடவுள் என அழைக்கவேண்டும் என கடிதம் எழுதியிருந்தனர். காவல்துறை அந்த கடிதத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அது கொலைகாரர்களின்   மனநிலையை வெளிப்படையாக வெளிப்படுத்துவது. சென்ற அத்தியாயத்தில் கூறிய சமாச்சாரம் உங்கள் நினைவில் இருக்கும் என நினைக்கிறேன். துப்பாக்கித் தோட்டா செலவுக்கு கூட ஆகாத வழியில் எதற்கு மக்களை கொல்ல வேண்டும்? காசுக்காகத்

உடலைக் கிழித்து, எலும்பை உடைத்து இன்பம் அனுபவித்தால் சுகம்! - ரத்தசாட்சி - அசுரகுலம் 3

படம்
  வாழ்க்கையை சுவாரசியப்படுத்துவது எது? மிக்சிங்கிற்காக பயன்படுத்தும் பொடாரன் கம்பெனியின் பச்சை டிலோ என்று பதில் சொல்லக்கூடாது. அப்படி கலந்து குடித்தால் மகிழ்ச்சி. அதுதான் மகிழ்ச்சி என மனம் கற்பனை செய்கிறதே அதுதான். அந்த கற்பனைதான் வாழ்க்கை, வறட்டென காய்ந்த தேங்காய் நார் போல இழுத்தாலும் இசைவாக நம்மை வாழ வைக்கிறது. நாம் எடுக்கும் முடிவுகள் அனைத்திலும் இறந்தகாலத்தின் சுவடுகள் உண்டு. அந்த அனுபவங்களை வைத்துத்தான் நிகழ்காலத்தை அணுகுகிறோம். இதை ஓஷோ, ஜேகே என அனைவருமே தவறு என்றுதான் சொல்லுவார்கள். ஆனால் அப்படி எளிதாக நினைவுகளை, கற்பனைகளை கழற்றி எறிவது சாத்தியமானதாக என்ன? சில விஷயங்களை கற்பனை செய்துகொண்டு அதிலிருந்து மீண்டு வருகிறோம். ஒரு கட்டத்தில் கற்பனை மகிழ்ச்சி குறைந்துபோய் லைவாக செய்யலாமே என நினைக்கும்போதுதான் பிரச்னை தொடங்குகிறது. ஆசை என்பது படங்கள், காட்சிப்படம், மனிதர்கள் என தூண்டப்பட்டு கொண்டே இருக்கிறது. காம வேட்கையுடன் ஒருவர் குற்றங்களை செய்யத் தொடங்கினால் காம கொலைகாரர்கள் வேட்டை ஆரம்பம் என தீர்மானித்துக்கொள்ளலாம். ராபர்ட் பாபி லாங். வயது 31. காகாசிய நாட்டைச் சேர்ந்தவர். இவருக்கு

பாலியல் கற்பனைகளை பிராக்டிக்கலாக செய்தால் - ரத்தசாட்சி - அசுரகுலம் 3

படம்
  காமம் மனிதர்களுக்கு எப்போதும் தீராத பசி என்பது காமம்தான். வயிற்றுப்பசி என்பது தீர்க்க கூடியது. ஆனால் காமப்பசி என்பது ஆகாயம் அளவு எரியும் நெருப்புக்கு சிறு கரண்டியில் நெய் ஊற்றுவது போலத்தான். அது நெருப்புக்கு ஆகுதி ஆகாது. காமத்திற்காக கொலை செய்பவர்கள் என தனி பட்டியல் உண்டு. இவர்களை குற்றவியல் வல்லுநர்கள் சாகச கொலைகார ர்கள் என்கிறார்கள். பெரும்பாலும் இந்த கொலைகாரர்கள் மாய உலகை கற்பனை செய்துகொள்பவர்கள். பிற பாலினத்தவர்களின் உள்ளாடைகள், விலங்குகளின் உடல் பாகங்கள் என தேடி சேகரிப்பவர்களாக இருப்பார்கள்.   அமெரிக்காவின் ஒரேகான் பகுதியைச் சேர்ந்தவர் ஜெரோம். இவருக்கு பெண்களின் கால்கள், குதிச்செருப்புகள், உள்ளாடைகள் என்றால் பேராசை. தன் வீட்டிற்கு அருகிலுள்ள பெண்களின் உள்ளாடைகள், செருப்பு ஆகியவற்றை திருடி சேமிக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் மனதில் ஆசை வளர, பெண்களை கொலை செய்யத் தொடங்கினார். அப்போதும் கால்களை தனியாக வெட்டி வைத்து பாதுகாத்தார். இதில் இன்னும் சற்று பெரிய பட்ஜெட்டில் சந்தோஷப்பட்டவர் ஒருவர் உண்டு. அவர் பெயர் சில்வெஸ்டர் மதுஸ்கா. இவர் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்தவர். இரு ரயில்களை ம

முடிஞ்சா என்னைப் புடி என சவால் விட்ட ஜாக் - ரத்தசாட்சி - அசுரகுலம் 3

படம்
  முடிந்தால் என்னைப் பிடி இப்போது |ஜாக்கின் கதைக்கு வருவோம். மேற்சொன்ன கதைகள் எல்லாம் காவல்துறையினர் யாரேனும் புகார் மூலம் கண்டுபிடித்தவைதான். ஆனால் ஜாக்கைப் பொறுத்தவரை அவர் கொலை சம்பவங்களை சுவாரசியமாக செய்ததை உலகத்திலுள்ள 300 பத்திரிகைகள் பிரசுரித்தன. உண்மையில் இப்படி உலகம் முழுக்க தன்னைப் பற்றி விஷயங்கள் தெரியவேண்டுமென ஜாக் நினைத்திருக்கலாம். லண்டன் நகரத்தின் கிழக்கு புறத்தில் உள்ளது ஒயின்சேப்பல் பகுதி. இங்கு வெள்ளிக்கிழமை ஆக.31, 1888 அதிகாலை ஒரு மணி இருக்கலாம். பாலி நிக்கோலஸ் என்ற விலைமாதுப் பெண் ஜாக்கால் கொலை செய்யப்பட்டார். பாலியின் தொண்டை அறுக்கப்பட்டிருந்தது. அணிந்திருந்த ஸ்கர்ட் கலைந்திருக்க, கால்கள் விரிக்கப்பட்டிருந்தன. வயிறு கத்தியால் கிழிக்கப்பட்டு இருந்தது. பெண் குறியில் கீறல்கள் இருந்தன. விலைமாது என்பதால் கொலை பெரிதாக யாரையும் ஈர்க்கவில்லை. அடுத்த கொலை ஒரு வாரத்திற்கு பிறகு காலையில் நடைபெற்றது. கொலையானவர் பெயர், அன்னி சாப்மேன். இவரது வயிறு கத்தியால் அறுக்கப்பட்டு குடல் இடது தோள் மேல் விழுந்து கிடந்தது. வயிறு, தலை ஆகிய இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தன. பிறப்புறுப்பில

மதமும், மாந்த்ரீகமும் மனிதர்களை வேட்டையாடியபோது....

படம்
அசுரகுலம் - ரத்தசாட்சி  நிறைய கொலைகளை செய்ய திட்டமிட்டுள்ள தொடர் கொலைகாரர், நான்கு இடங்களையாவது தேர்வு செய்து கொல்வார்.  உள்ளூர், வெளியூர் என இடங்கள் மாறுபடுவது உண்டு. செய்யும் கொலைகளுக்கான இடைவெளி என்பது மெல்லல குறையும். இது கொலை செய்வதன் மகிழ்ச்சி காரணமாக ஏற்படுவது. மகிழ்ச்சியும் அதிகம் கிடைக்கவேண்டுமென்பது அழுத்தமாக மாறும்போது கொலைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். கொலை செய்வதற்கான இடைவெளி இருக்கிறதென்றால், கொலைகாரர் நேரம், தயாரிப்பு, திட்டமிடல் ஆகியவற்றை செய்துகொண்டிருக்கிறார் என உறுதியாக கூறலாம். கொலை செய்யும் தொடர் கொலைகாரர்களுக்கு நோக்கம் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். கொலை செய்தால் மனது சந்தோஷமாக இருக்கிறது என ஒருவர் சொன்னால் அவரை நீங்கள் என்ன சொல்வீர்கள்? புணர்ச்சி, திருட்டு, கொள்ளை என லட்சியத்திற்காக மனிதர்களை கொல்பவர்களே அதிகம். முதல் சீரியல் கொலைகாரர் யார் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் வந்திருக்கும். இங்கிலாந்தில் மக்களை இரவில் தெருவிறங்கி நடக்கவே யோசிக்கவைத்த கொலையாளி  ஜேக் தி ரிப்பர்.ஆறு வாரங்களில் நான்கு கொலைகளை செய்து உலக ஊடகங்களை லண்டனின் ஒயிட்சாப்பல் பகுதியை நோக்கி திர