இடுகைகள்

முயல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நிலவுக்குச் சென்று எஸ்பெல் இனக்குழுவைக் காப்பாற்றும் டோராமன் - நோபிடா டீம் - டோராமன் -மூன் எக்ஸ்ப்ளோரேஷன்

படம்
  டோராமன் – நோபிட் குரோனிக்கல் – மூன் எக்ஸ்ப்ளோரேஷன் ஜப்பான் மாங்காஅனிமேஷன் நோபிட் பள்ளி மாணவன். ஒருநாள் நிலவில் ஆய்வுக்கு அனுப்பப்பட்ட ரோவர் ஏதோ ஒரு சக்தியால் தாக்கப்பட்டு பழுதாகிறது.. அதைப்பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடுகிறான் நோபிட். அதற்கு டோராமன் ரோபோ உதவுகிறது. நோபிட்டும் டோராமன்னும் சேர்ந்து நிலவுக்கு மந்திரக்கதவு மூலம் போகிறார்கள். அங்கு சென்று, களிமண்ணால் முயல்களை உருவாக்கி முயல்களுக்கான உலகத்தை உருவாக்குகிறார்கள். இந்த நேரத்தில் நோபிட்டின் பள்ளியில் லூகா என்ற சிறுவன் சேர்கிறான். எப்போதும் தொப்பி அணிந்தபடியே இருப்பவன் வினோதமான தெரிகிறான். அவன் நோபிட்டின் நிலவு பற்றிய கருத்துகளைக் கேட்டு ஆச்சரியப்படுகிறான். அவன் நிலவு பற்றி செய்யும் ஆராய்ச்சிகளை அறிய நினைக்கிறான். அப்படித்தான் பள்ளி நண்பர்கள் பலரும் சேர்ந்து நோபிட்டின் வீட்டிலுள்ள மந்திரக்கதவு மூலம் நிலவுக்கு செல்கிறார்கள். அங்கு வாழ்பவர்களுக்கும் லூகாவிற்கும் தொடர்பு உள்ளது. இதுபற்றிய கதையை பார்த்து தெ(பு)ரிந்துகொள்ளுங்கள்.   இந்த தமிழ் படத்திற்கு டப்பிங் பேசியவர்கள் சிறப்பாக வேலை செய்திருக்கிறார்கள். பள்ளி மாணவர்கள் க

நம்மை பிரிக்கும் வெறுப்பு வேண்டாம்; ஒன்றுசேர்க்கும் அன்பு போதும் - ஜூடோபியா

படம்
  ஜூடோபியா டிஸ்னி கிராமத்தில் கேரட் விவசாயம் செய்யும் பெற்றோர். பாரம்பரியத் தொழிலான கேரட்டை விளைவித்து விற்பதைக் கைவிட்டு சிறுவயது ஆசையான காவல்துறை வேலைக்கு செல்லும் ஹாப்ஸ் என்ற முயல், ஜூடோபியா நகருக்குச் செல்கிறது. அங்கு சென்று சந்தித்த சவால்கள் என்ன, சாதித்த சாதனைகள் என்ன என்பதுதான் கதை. படத்தை சாதாரணமாக பார்த்தால் சாதாரண முயல் காவல்துறை அதிகாரியாகும் சாதனைக் கதை போலத் தெரியும். ஆனால், இன வேற்றுமை, வன்முறைக்கு எதிரான ஏராளமான செய்திகளை, போலிச்செய்திகளை பிரிவினைகளை பரப்பும் ஊடகங்களைப் பற்றியும் படம் மறைமுகமாக பேசுகிறது. படத்தை தனித்துவமான ஒன்றாக மாற்றுவதும் அதுதான். சிறுவயதில் பெற்றோர் வழியாக அல்லது சுய அனுபவம் வழியாக மனதில் பதியும் விரோதம், பகை எப்படி பல்வேறு முன்முடிவுகளை எடுக்க வைக்கிறது. நிறைய மனிதர்களை பாதிக்கிறது என்பதை படம் கலைப்பூர்வமாக நெகிழ்ச்சியூட்டும் காட்சிகள் வழியாக சொல்லுகிறது. ஹாப்ஸ்   என்ற முயல் கிராமத்தில் வாழ்கிறது. அங்கு பள்ளியில் நாடகம் ஒன்றில் நடிக்கிறது. அதில் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறது. அப்படியே அதே வேலைக்கு முயற்சி செய்யவேண்டும் என்பதே ஆசையாகிறது

உலக மக்களை குரங்குகளாக்கும் கிறுக்கு வில்லனைத் தடுக்கும் உதவாக்கரை நாயகன்! - லூனி ட்யூன்ஸ்

படம்
            லூனி ட்யூன்ஸ்  Written by Larry Doyle Based on Looney Tunes by Warner Bros. Music by Jerry Goldsmith Cinematography Dean Cundey Directed by Joe Dante படத்தில் நாயகன், நாயகி என நாம் நினைத்துக்கொள்வது இரண்டு கார்ட்டூன் பாத்திரங்கள்தான். இவர்களுக்கு உதவி செய்ய இரண்டு நடிகர்கள் உள்ளனர். அப்படித்தான் படத்தை ஈகோவும் அதிக எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்க்கவேண்டும்.  படம் முழுக்க குழந்தைகளுக்காக அர்ப்பணிப்பாக எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து காட்சிகளும் முழுக்க லாஜிக் இல்லாத மேஜிக்கிற்காகவே எடுக்கப்பட்டவை என்பதால் சோபாவில் சாய்ந்துகொண்டு ரிலாக்சாக பார்க்கலாம்.  அக்மே என்ற தொழில்நிறுவனம் உளவுத்துறை அதிகாரிகளை கடத்தி் வைத்துள்ளது. எதற்காக? அவருக்குத்தான் நீலக்குரங்கு எனும் வைரத்தை எடுக்கும் வழி தெரியும். அதனை அவர் தானாக எப்படி சென்று எடுக்கமுடியும். அந்தளவு புத்தி வேலை செய்தால், அவர் எதற்கு உளவுத்துறை அதிகாரியை கடத்தி வைக்கவேண்டும். உளவுத்துறையின் மகன் வந்து வைரத்தை எடுத்து வந்து கொடுத்துவிட்டு அவரை மீட்டுப்போக வேண்டும் என்பதுதான் அக்ரிமென்ட்.  இந்த வைரத்தை எடுக்கும் பயணத்தில் வார்னர்ஸ் பிர