நிலவுக்குச் சென்று எஸ்பெல் இனக்குழுவைக் காப்பாற்றும் டோராமன் - நோபிடா டீம் - டோராமன் -மூன் எக்ஸ்ப்ளோரேஷன்
டோராமன் – நோபிட் குரோனிக்கல் – மூன் எக்ஸ்ப்ளோரேஷன்
ஜப்பான்
மாங்காஅனிமேஷன்
நோபிட் பள்ளி மாணவன். ஒருநாள் நிலவில் ஆய்வுக்கு அனுப்பப்பட்ட
ரோவர் ஏதோ ஒரு சக்தியால் தாக்கப்பட்டு பழுதாகிறது.. அதைப்பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடுகிறான்
நோபிட். அதற்கு டோராமன் ரோபோ உதவுகிறது.
நோபிட்டும் டோராமன்னும் சேர்ந்து நிலவுக்கு மந்திரக்கதவு
மூலம் போகிறார்கள். அங்கு சென்று, களிமண்ணால் முயல்களை உருவாக்கி முயல்களுக்கான உலகத்தை
உருவாக்குகிறார்கள். இந்த நேரத்தில் நோபிட்டின் பள்ளியில் லூகா என்ற சிறுவன் சேர்கிறான்.
எப்போதும் தொப்பி அணிந்தபடியே இருப்பவன் வினோதமான தெரிகிறான்.
அவன் நோபிட்டின் நிலவு பற்றிய கருத்துகளைக் கேட்டு ஆச்சரியப்படுகிறான். அவன் நிலவு
பற்றி செய்யும் ஆராய்ச்சிகளை அறிய நினைக்கிறான். அப்படித்தான் பள்ளி நண்பர்கள் பலரும்
சேர்ந்து நோபிட்டின் வீட்டிலுள்ள மந்திரக்கதவு மூலம் நிலவுக்கு செல்கிறார்கள். அங்கு
வாழ்பவர்களுக்கும் லூகாவிற்கும் தொடர்பு உள்ளது. இதுபற்றிய கதையை பார்த்து தெ(பு)ரிந்துகொள்ளுங்கள்.
இந்த தமிழ் படத்திற்கு
டப்பிங் பேசியவர்கள் சிறப்பாக வேலை செய்திருக்கிறார்கள். பள்ளி மாணவர்கள் குழுக்களில்
பருமனான பையன், நெல்லை தமிழ் பேசுகிறான். கேட்க நன்றாக இருக்கிறது. முரட்டுத்தனமாக
வீரம் கொண்டவனும் அவன்தான். ஆமையான மோசோவும் நன்றாக உள்ளது.
படத்தில் வில்லனே, செயற்கை நுண்ணறிவுதான். டயபோலா என்ற
பாத்திரத்தில் காகேயா கோளை முற்றிலும் அழிக்க நினைக்கிறது. பிறகு காகேயாவில் இருந்த
தப்பிய ஈதர் சக்தி கொண்ட எஸ்பெல் இனத்தைப் பிடித்து அவர்களது சக்தி மூலம் உலகை ஆக்கிரமிப்பது
வில்லனின் சாதுர்ய திட்டம். இதை எப்படி நோபிட், டோராமன் ஆகியோர் முறியடிக்கிறார்கள்
என்பதே இறுதிக்காட்சி. இந்த அனிமேஷன் படத்தில் அறிவியலுக்கு புறம்பான பல்வேறு கோட்பாடுகளைப்
பற்றி பேசியிருக்கிறார்கள். குறிப்பிட்ட அடையாளக் குறியீட்டை அணிந்தால் அந்த கோட்பாடு
கொண்ட உலகம் தெரியும் என கூறுவது கற்பனை என்றாலும் பார்க்க நன்றாக இருக்கிறது.
படத்தில் நோபிட்டாவைப் போலவே இருக்கும் முயல் ஒன்று வருகிறது.
அதற்குபெயர் நோபிட். அனைத்தையும் ரிவர்ஸாக செய்யும் பழக்கம் கொண்ட முயல். அடுத்து,
நோபிட்டா களிமண்ணால் செய்த ராட்சத முயல் ஒன்றும் படம் நெடுக வருகிறது.
லூக்கா தனது வாழ்க்கை, வரலாறு பற்றி சொல்லும்போது நமக்கே
ஆச்சரியமாக இருக்கிறது. இறுதியாக படம் முடியும்போது சற்று நெகிழ்ச்சியாக கூட இருக்கிறது.
ஈதர் சக்தியை எஸ்பெல் மக்கள் பயன்படுத்துவதைப் பார்க்க நன்றாக இருக்கிறது.
அறிவியலை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தினால் வாழ்க்கை எப்படியிருக்கும்,
சுயநலனுக்கு தன்னை பாதுகாக்க மட்டுமே பயன்படுத்தினால் எப்படியிருக்கும் என்பதை சொல்லியிருக்கிறார்கள்.
ஜாலியான முறையில்தான் என்பதால் படத்தைப் பார்த்து சந்தோஷப்படலாம்.
நோபிடாவின் உடல்மொழிக்கு ஏற்ப அவரது குரலை சற்று இழுத்தாற்போல
செய்து இருக்கிறார்கள். கொஞ்சம் உறுத்தினாலும் படத்தில் அதையும் சற்று நேரத்தில் பழகிக்கொள்ளலாம்.
படம் பார்த்தால் ரோபோட் பூனை உங்களை வசீகரிக்கும் என்பது நிஜம்.
ஜாலியான ஆராய்ச்சி
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக