முதியவர்களைக் கொல்வதே கடவுளாகும் வழி!

 







ஆஸ்திரியா நாடு, அங்குள்ள வியன்னாவில் லைன்ஸ் பொது மருத்துவமனையை பலரும் மறக்கமுடியாது. மருத்துவமனையின் பிரமாண்டத்தை 2 ஆயிரம் ஊழியர்களே உங்களுக்கு சொல்லுவார்கள். அங்கு எல்லாம் நன்றாக நடந்துகொண்டுதான் இருந்தது. ஆனால் திடீரென  சிகிச்சை பெற்று வந்த எழுபது வயதிற்கும் அதிக வயதுடையவர்கள் இறந்துபோக தொடங்கினார்கள். இப்படி வயதானவர்கள் இறந்துபோனால் பலரும் என்ன  நினைப்பார்கள்? தள்ளாமைதான் காரணம் என நினைப்பார்கள். காரணம் அதுவல்ல.

 1983ஆம் ஆண்டு தொடங்கி 1989ஆம் ஆண்டு வரையில் 42 பேர் காலமானார்கள். ஆனால் இதெல்லாம் அதிகாரப்பூர்வ கணக்குதான். ஆனால் இறுதியாக என்ன நடந்தது என்று தெரிய வந்தபோது, பலருக்கும் பேரதிர்ச்சி.  300க்கும் மேற்பட்டோர் நோயாளிகளாக சேர்ந்து உடல் நலிவுற்று இறந்தனர். இப்படி இறந்தவர்களின் இறப்புக்கு காரணம், மரணதேவதைகள்தான். நான் இங்கு சொல்வதற்கு பின்னணியாக, பேய் எல்லாம் கிடையாது. அத்தனையும் சூழ்ச்சி நிறைந்த மனிதர்கள்தான்.

வேக்னர் என்ற இரவு நேர வேலைக்கு வந்த செவிலியர்தான் கொலைகளுக்கான முக்கியமான காரணம். 1983ஆம் ஆண்டு தனது  23 வயதில், முதல்கொலையைச் செய்தார். முதன்முதலில் 77 வயதுப் பெண்மணி ஒருவரை அவரது விருப்பத்தின் பெயரில் கொன்றார். ஆனால், இப்படி கொல்வது வேக்னருக்கு தான் கடவுள் போல என்ற எண்ணத்தைக் கொடுத்தது. இதனால், அவர் தனகென ஒரு குழுவை அமைத்துக்கொண்டு  கொலை செய்யும் கோதாவில் குதித்தார். கொலையை ஆத்மார்த்தமாக அனுபவித்துச் செய்தார்.

இவரது குழுவைப் பார்ப்போம். க்ரூபர். செவிலியர் பள்ளியில் படித்து இடையில் படிப்பை இடைநிறுத்தியவர். கல்யாணம் ஆகுவதற்கு முன்னரே குழந்தையைப் பெற்றவர். குழந்தை பெறுவதெல்லாம் தனிப்பபட்ட விஷயம் அல்லவா?  ஐரீன் என்பவர், க்ரூபரை விட இரண்டு வயது மூத்தவர். இவருக்கு மணமாகிவிட்டது. ஆனால் கணவர் பல்வேறு பெண்களுடன் ஜல்சா செய்யும் டைப்பான ஆசாமி. பாருங்கள். இந்த விவகாரமும் தனிப்பட்ட சமாச்சாரத்திற்கே போகிறது.  அடுத்து மேயர். இருப்பதிலேயே இவர்தான் வயதானவர். தோராயமாக பாட்டி. வேக்னரைவிட இருபது வயது மூத்தவர். யூகோஸ்லேவியாவிலிருந்து வந்தவர். இந்த  மூவரும்தான் கூட்டணி அமைத்து கொலைகளை செய்தனர்.

வேக்னர், நீர் குணப்படுத்துதல் எனும் முறையைக் கண்டுபிடித்தார். இந்த வகையில் மூக்கைப் பிடித்துக்கொண்டு நோயாளிகளின் வாயில் நிறைய தண்ணீரை ஊற்றினால் அது நுரையீரலில் சென்று சேரும். பிணக்கூராய்வு செய்தால் கூட நீரில் மூழ்கி இறந்தவர் போலவே  தெரியும். இந்த நுட்பத்தைப் பயன்படுத்தி வயதானவர்களை கொலை செய்தனர். கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றது. அதில்தான் நான்கு மரணதேவதைகளும் மாட்டிக்கொண்டனர். வேலை முடிந்தபிறகு நால்வரும் ஜாலியாக மருந்து அருந்திவிட்டு செய்த. செய்யப்போகும் கொலைகளைப் பற்றி பேசுவது வாடிக்கை.

அப்படி இறந்த அவர்களால் கொல்லப்பட்ட பெண்மணி பற்றி பேசிக்கொண்டிருந்தனர். வேக்னர் எப்போதும் நம்பும் கடவுள் அவரை கைவிட்ட தருணம் அது. அருகில் லைன்ஸ் மருத்துவமனை மருத்துவர் பெண்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு, காவல்நிலையத்தில் போய் புகார் செய்துவிட்டார். ஆறுவாரங்கள் விசாரணை நடந்தபிறகு, நால்வரும் கைதானார்கள். வேக்னர்தான் கொலைகாரத் தலைவி என முடிவானது. அவர் 39 கொலைகளை செய்ததாக வாக்குமூலம் கொடுத்தார். காவல்துறையால் நிரூபிக்க முடிந்தது 15 மட்டுமே.இதனால் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. மேயருக்கு 15 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கினர். க்ரூபருக்கும் சிறை தண்டனை வழங்கினர். இந்த நேரத்தில் கொலைகள் நடைபெற்ற வார்டில் உள்ள மருத்துவருக்கு தண்டனை இல்லையா என யாராவது யோசித்தீர்களா? எக்ஸேவியர் என்ற அந்த மருத்துவரை மருத்துவமனை நிர்வாகம் பணி இடைநீக்கம் செய்தது அவ்வளவுதான்.

 

படம் - பின்டிரெஸ்ட்

கருத்துகள்