சமூகத்தை பழிக்குப்பழி வாங்க துடித்த பாய் - பாய் பாவோஷான்

 




பாய் பாவோஷான்

பாய், சீனாவைச் சேர்ந்த தொடர் கொலைகாரர். மொத்தம் பதினைந்து கொலைகளை நம்பிக்கையோடு செய்தவர். 1980ஆம் ஆண்டு முதல் கொலையை செய்தார். பிளானிங் சற்று சொதப்பிவிட்டது. பிடிபட்டவருக்கு கொலை முயற்சி என வழக்கு பதிவு செய்து பதிமூன்று ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டது.

அப்போதே சமூகத்தை இரண்டில் ஒன்று பார்க்கவேண்டும் என்று தீர்மானித்தார். 1996ஆம் ஆண்டு பாயின் பழிக்குப்பழி தொடங்கியது. பெய்ஜிங்கில் காவலர் ஒருவரைத் தாக்கி துப்பாக்கி ஒன்றைத் திருடிக்கொண்டு சென்றார். டெமோ காட்ட, அதை வைத்து ஒருவரைக் கொன்று, ஆறுபேர்களை தாக்கி காயப்படுத்தினார்.

ஹெபாய் எனும் பகுதிக்கு சென்றபோது சிகரெட் வியாபாரியைக் கொன்று கொள்ளையடித்தார். பிறகும் கூட கொலை வெறி அடங்கவில்லை. மற்றொரு காவல்துறை காவலரைத் தாக்கி ரைபிளை கொள்ளையடித்தார். உரும்கி எனும் நகருக்குச் சென்றவர், பத்து நபர்களைக் கொன்றார். இதில், காவல்துறையினர், பொதுமக்கள் ஆகியோரும் அடக்கம். இதைச் செய்யும்போது அவருக்கு சில கூட்டாளிகள் இருந்தனர். கொலை செய்யும்போது கூட்டாளிகள் தேவைப்பட்டனர். ஆனால் கொல்லப்பட்டவர்களிடமிருந்து 1,80,000 டாலர்களைக் கொள்ளையடித்தபோது பணத்தை எதற்காக பகிரவேண்டும். அத்தனை பணமும் எனக்கே எனக்கென இருந்தால் என்ன தவறு என்று பாய் நினைத்தார். பாய் நினைத்ததும் அவரது கையில் இருந்த துப்பாக்கி தோட்டாக்களை துப்பியது. கூட்டாளிகள் அதிர்ச்சியுடன் சரிந்து விழ, ஒட்டுமொத்த பணமும் பாய்க்கு வந்து சேர்ந்தது

 இந்த நேரத்தில் சீனாவெங்கும் பாய்க்கு ‘பொதுமக்களின் எதிரிகளில் முதன்மையானவர்’ என புகழ் கிடைத்தது 1997ஆம் ஆண்டு பெய்ஜிங்கிற்கு வந்தவரை காவல்துறையினர் கைது செய்தனர். பதினான்கு கொலைகளை செய்ததாக குற்றம் ஏற்றவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1998ஆம் ஆண்டு மே மாதம் பாய்க்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.

படம் 

பின்டிரெஸ்ட்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்