பெண்களைக் கொன்று தோட்டத்திலும், வீட்டிலும் புதைத்து வைத்த கொலைகாரர்!

 










கிறிஸ்டி - ஜான் ரெஜினால்டு ஹாலிடே

1898ஆம் ஆண்டு யார்க்‌ஷையரில் பிறந்தவர். சிறுவயதில் இருந்தே பெற்றோரின் அன்பு கிடைக்காதவர். வீட்டில் பெற்றோரால் தண்டனை மட்டுமே அளிக்கப்பட்டவர். இதனால் அடிக்கடி குற்றங்கள் செய்து சிறை சென்று வர தொடங்கினார். பள்ளியில் படிக்கும்போது, போலீஸ்துறையில் கிளர்க் ஆவதுதான் கனவு. ஆனால், அங்கு செய்த திருட்டு காரணமாக பள்ளியை விட்டு விலக்கப்பட்டார். பிறகு அப்பாவின் கார்பெட் தொழிற்சாலையில் வேலைசெய்தார். ஆனால் அங்கும் திருட்டை தொடர்ந்த காரணத்தால், வீட்டை விட்டே அடித்து விரட்டப்பட்டார்.

பிறகு ராணுவத்தில் சேர்ந்தவர், முதல் உலகப்போரில் பங்கேற்று காயம்பட்டு  ஐந்து மாதங்கள் கண் பார்வையை இழந்திருந்தார். பிறகு, மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பேச்சு சரியாக வரவில்லை. 1920ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பிறகு ஒரு விபத்தில் சிக்கி தலையில் கடுமையாக அடிபட்டது. தற்காலிக பணியாக அஞ்சலகத்தில் வேலை செய்தார். அங்கும் மனிதர் சும்மாயிருக்கவில்லை. ஏராளமான பணவிடைகளை திருடினார். இதற்காக குற்றம்சாட்டி புகார் கொடுக்கப்பட, ஏழு மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.ஜானின்  வாழ்க்கை முழுக்க துக்கம் துயரம்தான் துணையாக வந்தது. 

பிறகு கிறிஸ்டி தனது மனைவியைக் கூட்டிக்கொண்டு லண்டனில் உள்ள ரிலிங்க்டன் எனும் இடத்திற்கு வந்தார். இங்குதான் அவர் ஏராளமான கொலைகளை செய்தார். கிறிஸ்டிக்கு முதலில் பலியானவர், ரூத் ஃப்ரூரஸ்ட். ஆஸ்திரிய அகதியான இவரை கழுத்தை நெரித்துக்கொன்றபடியே உடலுறவு கொண்டார். பிறகு ரூத்தின் உடலை தனது தோட்டத்தில் பாதுகாப்பபாக புதைத்தார். அந்த நேரத்தில் அவரது மனைவி வீட்டில் இல்லை என்பதை பயன்படுத்திக்கொண்டார். அடுத்து, வானொலி தொழிற்சாலையில் வேலை செய்த சக பணியாளரான முரியல் எடி என்பவரைக் கொன்றார். தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கிறிஸ்டியின் வீட்டுக்கு வந்தவரை, இதோ உன்னை குணமாக்குகிறேன் என்று சொல்லி விஷவாயுவை பாய்ச்சி கொன்றார். இவரும் ரூத்தின் உடல் புதைக்கப்பட்ட இடத்தையே அடைந்தார்.

கிறிஸ்டியின் குற்றங்களை காவல்துறை முன்னமே கண்டுபிடித்திருக்கலாம். ஆனால், காவல்துறை அந்தளவு புத்திசாலியாக இல்லை. டிமோத்தி ஈவன்  என்பவர் கிறிஸ்டியின் வீட்டருகே வசித்தார். இவர், தனது மனைவியையும் மகளையும் கொன்று புதைத்துவிட்டு காவல்துறையிடம் தகவல் சொன்னார். அவர்கள் வந்தபோது, போலீஸ் நாய், கிறிஸ்டியின் தோட்டத்தில் புதைத்திருந்த மண்டையோட்டை தோண்டி எடுத்துவிட்டது. ஆனால் கிறிஸ்டி நாயை நுட்பமாக துரத்திவிட்டார். மண்டையோட்டையும் மறைத்துவிட்டார். இதனால் காவல்துறை அவரை அப்போது கண்டுபிடிக்கவில்லை. பின்னாளில் அந்த வீட்டுக்கு வாடகைக்கு வந்தவர்கள் பிணங்களைக் கண்டுபிடித்து காவல்துறையை அழைத்தனர். அப்போது கிறிஸ்டி மாட்டிக்கொண்டார்.

படம் - பின்டிரெஸ்ட் 
 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்