18. கௌதம் அதானி பதிலளிக்க வேண்டிய கேள்விகள் - மோசடி மன்னன் அதானி - இறுதிப்பகுதி

 26.2021ஆம் ஆண்டு, குழுமத்தின் நிதித்துறை தலைவராக ராபிசிங் பொறுப்பு வகித்தார். அப்போது குழுமத்தின் பங்குகளை விற்பனை செய்வது தொடர்பாக சர்ச்சை எழுந்தது. 2021ஆம் ஆண்டு, ஜூன் 16 அன்று,என்டிடிவியில் கொடுத்த நேர்காணலில் ராபி சிங், “மொரிஷியஸில் உள்ள நிதி நிறுவனங்கள் அதானி குழுமத்தில் புதிதாக நிதியை முதலீடு செய்யவில்லை. தங்களின் பிற அதானி நிறுவன பங்குகளை விலக்கிக்கொண்டனர்” என்று கூறினார். ஹிண்டன்பர்க்கின் ஆய்வாளர்கள் கூற்றுப்படி, அப்போது நிதி நிறுவனங்கள் அதானி க்ரீனில் புதிய முதலீடுகளைச் செய்தனர். அந்த சமயத்தில் அதானி குழும முதலீட்டாளர்கள் பங்குச்சந்தை விதிப்படி, தங்கள் பங்கு அளவை குறைத்துக்கொள்ள நினைத்தார்கள். இந்த செயல்பாட்டிற்கு, அதானி குழுமம் என்ன பதில் தரப்போகிறது?

27.1999-2005 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அதானி குழும முதலீட்டாளர்கள், தனிநபர்கள், எழுபதிற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கு முறைகேட்டில் ஈடுபட்டதாக செபி குற்றம்சாட்டி அவர்களை விசாரித்தது. இதுபற்றி கௌதம் அதானியின் கருத்து என்ன?

28. அதானி எக்ஸ்போர்ட்ஸ் (தற்போது, அதானி என்டர்பிரைசஸ்) நிறுவனத்தின் பங்குகளை அதானி குழும முதலீட்டாளர்களும், பங்குத்தரகரான கேட்டன் பரேக்கும் சேர்ந்து  பல்வேறு மோசடிகளில் ஈடுபடுத்தினர். இதை செபி கண்டுபிடித்து விசாரித்தது. அதானி குழுமத்தின் பதினான்கு தனியார் நிறுவனங்களின் பங்குகள், பங்குத்தரகர் கேட்டன் பரேக்கின் நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டன. பங்குச்சந்தையில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டவரான கேட்டன் பரேக்கிடம், அதானி குழுமம் கொண்டுள்ள தொடர்பு எத்தகையது?

29. குஜராத்தின், முந்த்ரா துறைமுகத்தில் நிதி தொடர்பாக கேட்டன் பரேக்கிடம் தொடர்புகொண்டதாக அதானி குழுமம் பதில் கூறியது. முதலீட்டு நிதியைப் பெறுவதற்காக பங்கு முறைகேட்டில் ஈடுபடலாமா? நிதியைப் பெறுவதற்கான ஒரே வழியாக அதானி குழுமம் இதைத்தான் கருதுகிறதா?

30. பங்குசந்தையில் செயல்பட தடை விதிக்கப்பட்டபோதும், கேட்டன் பரேக் பங்குத் தரகு வேலைகளை செய்துவருகிறார். அவருக்கும் அதானி குழுமத்திற்குமான உறவு பற்றி அதானி விளக்குவாரா, அல்லது கேட்டன் பரேக்கின் நிறுவனங்களோடு தொடர்புகொண்டுள்ள வினோத் அதானி பற்றியும் கூறுவாரா?

31. அதானி குழும முதலீட்டாளர்கள், கடன்களைப் பெறவே பங்குகளின் விலையில் முறைகேடுகளை செய்து அதனை ஊதிப் பெரிதாக்கினார்களா? இப்படியான சூழலில் ஈக்விட்டி பங்குகளை வாங்கிய முதலீட்டாளர்கள், அவர்களின் நிறுவனங்கள் எவரேனும் பாதிக்கப்பட்டார்களா?

32. 2007ஆம் ஆண்டு, வினோத் அதானி பங்குதாரராகவும், தலைவராகும் உள்ள நிதி நிறுவனத்திற்காக, பிவிஐ என்ற மருந்து நிறுவனத்தின் பங்குகளை மோசடியாளரான தர்மேஷ் தோஷி வாங்கினார். தர்மேஷ் தோஷிக்கும் அதானி குழுமத்திற்கும், வினோத் அதானிக்குமான தொடர்பு என்ன?

33. முன்னர் தர்மேஷ் தோஷிக்கு சொந்தமான  லெர்மின் கேபிடல் நிறுவனத்திலிருந்து வினோத் அதானியின் நிறுவனத்திற்கு 1 மில்லியன் டாலர்கள் பரிவர்த்தனை ஆனது. லெர்மின் நிறுவனத்தை தர்மேஷ் தோஷி நிர்வாகம் செய்தபோதுதான் பல்வேறு பங்குகளை வாங்கி மோசடிகளை செய்தார். இதுபற்றி கௌதம் அதானியின் விளக்கம் என்ன?

34. அதானி  குழுமத்தில் ஏழு பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் உள்ளன. அதில், 578 துணை நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் 2002ஆம் ஆண்டில் மட்டும் 6,025 வணிகப் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. பொதுவாக முதலீட்டாளர்கள் எளிமையான நிதிக்கட்டமைப்பு கொண்ட நிறுவனங்களில்தான் முதலீடு செய்வார்கள். அதானி குழும நிறுவனங்களின் உள்கட்டமைப்பு, வணிகப் பரிவர்த்தனைகள் சிக்கலானவை. இதன் நிர்வாக அமைப்பு, செயல்பாடு குழப்பமாக இருப்பதன் காரணம் என்ன?

35. மொரிஷியஸ் நாட்டில் உள்ள 38 நிறுவனங்கள், வினோத் அதானி, சுபீர் மித்ரா ஆகியோருக்கு, தொடர்புடையவையாக உள்ளன. ஐக்கிய அரபு அமீரகம், சைப்ரஸ், சிங்கப்பூர் என பல்வேறு வரிச்சலுகை கொண்ட நாடுகளில் அதானி குழுமச் சார்புடைய நிறைய நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களிலிருந்து அதானி குழுமத்திலுள்ள நிறுவனங்களுக்கு நிதி பரிவர்த்தனையாகிறது. ஆனால் இதுபற்றிய வெளிப்படையான தகவல்கள் தெரிவிக்கப்படுவதில்லை. இதற்கு அதானி என்ன விளக்கம் கொடுக்கப்போகிறார்?

36. பங்குதாரர், தலைவர், இயக்குநர் என நிறுவனங்களின் பல்வேறு பதவிகளை வினோத் அதானி வகிக்கிறார். அப்படி இயங்கும் நிறுவனங்களின் பெயர் என்ன? அவை எந்தெந்த நாடுகளில் செயல்பட்டு வருகின்றன?

37. அதானி குழுமத்தின், பட்டியலிட்ட நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றோடு வினோத் அதானிக்குள்ள உறவு என்ன?

38. வினோத் அதானியின் நிறுவனங்கள் பற்றிய 13 வலைத்தளங்கள் உள்ளன, இவை அனைத்துமே ஒரேநாளில் தொடங்கி இயங்கி வருபவை. வழங்கி வரும் சேவைகள் கூட ஒரே மாதிரியானவை. யாருக்கும் புரியாதவை. உண்மையில் இந்த நிறுவனங்கள் செய்துவரும் வணிகம் என்ன மாதிரியானவை?

39. வினோத் அதானி நடத்தும் நிறுவனத்தின் வலைத்தளத்தில் ‘நிறுவனத்திற்கும் வாடிக்கையாளருக்கும் இடையில் விற்பனை, விநியோகம் போன்ற சேவையை’ செய்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் இதற்கான அர்த்தம் என்ன?

40. மொரிஷியஸிலுள்ள க்ருனால் ட்ரேட் அண்ட் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனம், அதானி குழுமத்திலுள்ள தனியார் நிறுவனத்திற்கு 253 மில்லியன் டாலர்களைக் கடனாக வழங்கியது. இதற்கு அதானியின் விளக்கம் என்ன?

41. வினோத் அதானி நிர்வாகம் செய்யும் ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள நிறுவனம், எமர்ஜிங் மார்க்கெட் இன்வெஸ்ட்மென்ட் டிஎம்எம்சி . இதற்கு, வலைத்தளம் இல்லை. லிங்க்டு இன் தளத்தில் ஊழியர்களின் தகவல்களும் இல்லை. வணிகப் பரிவர்த்தனைகளும் செய்யாத நிலையில், அதானி பவர் நிறுவனத்தின் துணை நிறுவனத்திற்கு, 1 பில்லியன் டாலர்களைக் கடனாக வழங்கியுள்ளது. இந்த நிதிக்கான வருமான ஆதாரம் என்ன?

42. வினோத் அதானியின் மற்றொரு நிறுவனமான வகோடர் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனமும் ஊழியர்கள், வலைத்தளம் இல்லாமல் இயங்குகிறது. இந்த நிறுவனம், அதானி குழுமத்தின் தனியார் நிறுவனத்திற்கு 85 மில்லியன் டாலர்களை கடனாக வழங்கியுள்ளது. இந்த நிறுவனம் பற்றி அதானி குழுமம், தெளிவான தகவல்களைத் தெரிவிக்கவில்லை. இதற்கு அதானியின் விளக்கம் என்ன?

43. வகோடர் நிறுவனத்தின் நிதியாதாரம் என்ன?

44. 2013-2015ஆம் ஆண்டு, அதானியின் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் துணை நிறுவனங்களிலிருந்து சிங்கப்பூரிலுள்ள தனியார் நிறுவனத்திற்கு தொடர்ச்சியான வணிகப் பரிவர்த்தனைகள் நடைபெற்றன. சிங்கப்பூரிலுள்ள நிறுவனத்தை வினோத் அதானி நிர்வாகம் செய்கிறார். இந்த விவரங்களை அதானி குழுமம், வெளிப்படையாக தெரிவிக்காதது என்?

45. சிங்கப்பூரைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தை வினோத் அதானி நிர்வாகம் செய்கிறார். இதில் வணிகப் பரிவர்த்தனை நடந்த உடனே அதன் சொத்து மதிப்பு ஆவணங்களில் பதிவு செய்யப்படுகிறது. ஆனால் இப்படி நடந்த வணிகப் பரிவர்த்தனை அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் ஆவணத்தில் இடம்பெறவில்லை.

இதன்மூலம் நிறுவனத்தின் சொத்து மதிப்பில் ஏற்படும் சேதத்தைத் தவிர்க்க முயல்கிறார்களா? ஒரு நிறுவனத்திலிருந்து பரிவர்த்தனையாகும் சொத்து, அடையாளம் தெரியாத தனியார் நிறுவனத்திற்கு செல்கிறது. அதை உடனே பதிவு செய்வதற்கான காரணம் என்ன?

46. வெள்ளிக் கட்டிகளை விற்கும் வணிக நிறுவனம் ஒன்று அதானி இன்ஃப்ரா நிறுவனத்திற்கு 202 மில்லியன் டாலர்களை கடனாக வழங்கியது. ஆனால் இந்த கடன் கொடுத்த நிறுவனத்திற்கு வலைத்தளமோ அல்லது வணிகம் செய்து வருவதற்கான எந்த அடையாளங்களுமே இல்லை. இந்த நிறுவனம் பற்றி அதானி விளக்குவாரா?

47. தொடர்பில்லாத நிறுவனம், அதானியின் நிறுவனத்திற்கு கடன் வழங்குவதற்கான காரணம், தேவை என்ன? இந்த வெள்ளி பார் விற்கும் நிறுவனத்திற்கான நிதியாதாரம் என்ன?

48. மொரிஷியஸ் நாட்டைச் சேர்ந்தது, கார்டெனியா ட்ரேட் அண்ட் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனம். இந்த நிறுவனத்திற்கு வலைத்தளம் இல்லை. லிங்க்டு இன்னில் ஊழியர்கள் பற்றிய விவரங்கள் இல்லை. இந்த நிறுவனத்தின் தலைவர்களில் ஒருவரான சுபீர் மித்ரா, அதானி குழும நிறுவனங்களின் தலைவராக இருந்தவர். இந்த நிறுவனம், அதானி இன்ஃப்ரா நிறுவனத்திற்கு 692 மில்லியன் டாலர்களைக் கடனாக வழங்கியது. ஆனால், இந்த நிறுவனம் பற்றிய வெளிப்படையான தகவல்களை அதானி தெரிவிப்பாரா?

49.   அதானி குழும நிறுவனத்திற்கு, கடன் வழங்கும் தேவை என்ன, கார்டெனியா நிறுவனத்தின் நிதியாதாரம் என்ன?

50. அதானி குழுமத்தின் பணியாற்றும் பணியாளர் ஒருவர் நடத்தும் நிறுவனம், மைல்ஸ்டோன் ட்ரேட்லிங்க்ஸ். இந்த நிறுவனமும்  தங்கம், வெள்ளி விற்கிற வணிக நிறுவனம்தான். மைல்ஸ்டோன், அதானி இன்ஃப்ரா நிறுவனத்தில் 101 மில்லியன் டாலர்களை முதலீடு செய்தது. ஆனால் இதைப்பற்றிய விவரங்கள் ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை. அப்படி குறிப்பிடப்படாததன் காரணம் என்ன?

51. இப்படி முதலீடு செய்வதற்கான தேவையும் காரணமும் என்ன? மைல்ஸ்டோன் நிறுவனத்தின் அடிப்படை நிதியாதாரம் என்ன?

52.  மொரிஷியஸிலுள்ள குரோமோர் ட்ரேட் அண்ட் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனம் ஒரு நாள் இரவில், தனது பங்குகளை அதானி பவர் நிறுவனத்தோடு இணைத்தது. இதற்காக கிடைத்த தொகை 423 மில்லியன் டாலர்கள். அதாவது, அதன் பங்கு மதிப்பு உயர்ந்தது. குரோமோர் நிறுவனத்தின் தலைவர் சாங் சுங் லிங். இவரும், வினோத் அதானியும் ஒரே முகவரியை வீட்டு முகவரியாக கொடுத்திருந்தனர். சாங் சுங் லிங், அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு நிதியைப் பெற்றுத்தரும் இடைத்தரகராக பங்காற்றியுள்ளார் என டிஆர்ஐ ஆவணங்கள் கூறுகின்றன. அதானி குடும்பம் கட்டுப்படுத்தும் குரோமோர் என்ற நிறுவனம் பற்றி, அதானி என்ன விளக்கம் கொடுக்கப்போகிறார்?

53. அதானி குழுமத்தோடு சாங் சுங் லிங்கிற்கு என்ன விதமான உறவு உள்ளது? குறிப்பாக வினோத் அதானியுடன் உள்ள தொடர்பு என்ன?

54. கடந்த பனிரெண்டு ஆண்டுகளாக அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் 63 பில்லியன் டாலர்களை பிஎம்சி புராஜெக்ட்ஸ் என்ற ஒப்பந்த நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. இந்த நிதி, பல்வேறு கட்டுமான ஒப்பந்தங்களை உருவாக்குவதற்காக வழங்கப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு டிஆர்ஐ செய்த விசாரணையில் பிஎம்சி என்ற நிறுவனம், அதானி குழுமத்தின் போலி நிறுவனங்களில் ஒன்று என தெரிய வந்துள்ளது. பல்வேறு கட்டுமான திட்டங்களை செய்யும் நிறுவனம் போலியானதுதானா என அதானி விளக்க வேண்டும்.

55. பிஎம்சி புராஜெக்ட்ஸ் நிறுவனத்திற்கு வலைத்தளம் ஏதுமில்லை. முகவரியில் கொடுக்கப்பட்ட தொடர்புஎண் அதானி குழுமத்திற்கு சொந்தமானது. பிஎம்சியில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு, தாங்கள் எந்த நிறுவனத்தில் வேலை செய்கிறோம் என்பதில் குழப்பம் நிலவுகிறது. உண்மையில் அதானி குழுமம் நடத்தும் போலி நிறுவனம்தான் பிஎம்சியா?

56. பிஎம்சி புராஜெக்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் சாங் சுங் லிங்கின் மகன் என புதிதாக கிடைத்த ஆவணங்கள் கூறுகின்றன. தைவான் நாட்டு ஊடகங்கள், இவரை அதானி குழுமத்தின் பிரதிநிதி என்று அழைக்கின்றன. அரசு விழாவில் சாங் சுங்கின் மகன், அதானி பெயர் அச்சிட்ட அட்டையைப் பிடித்தபடி நிற்கும் புகைப்படம் ஒன்று ஊடகங்களில் வெளியானது. அப்படியெனில் பிஎம்சி புராஜெக்ட்ஸ் என்பது போலி நிறுவனம் என உறுதியாகிறது. எனவே, தைவான் அரசு பிஎம்சி நிறுவனத்தைப் பற்றி ஏற்கெனவே அறிந்திருக்கிறது என எடுத்துக்கொள்ளலாமா?

57. இப்படியிருக்கும் பட்சத்தில் அதானி குழுமம் தனது வணிகப் பரிவர்த்தனைகளை போலி நிறுவனத்தோடு தொடரவேண்டிய அவசியம் என்ன?

58.  2020ஆம் ஆண்டு ஆதிகார்ப் என்டர்பிரைசஸ் நிறுவனம், 97,000 டாலர்களை மொத்த வருமானமாக சம்பாதித்தது. இந்த நிறுவனத்திற்கு, அதே ஆண்டில் நான்கு அதானி குழும நிறுவனங்கள் 87.4 மில்லியன் டாலர்களைக் கடனாக வழங்கியது. இந்த தொகை ஆதிகார்ப் நிறுவனத்தின் 900 ஆண்டு கால வருமானம். எதற்காக இந்தளவு பெரிய தொகை ஆதிகார்ப் என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது என கூற முடியுமா?

59. ஆதிகார்ப் நிறுவனம், தனக்கு கடனாக கிடைத்த நிதியை உடனடியாக பட்டியலிடப்பட்ட நிறுவனமான அதானி பவருக்கு வழங்கியது. அதானி குழுமத்தில் உள்ள பணத்தைக் கொண்டு செல்லப் பயன்படும் அல்லது மடைமாற்றும்  இடைநிலை நிறுவனமாக ஆதிகார்ப் செயல்படுகிறதா?

60.  கடந்த ஐந்து ஆண்டுகளாக அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள், ‘அதானி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் மேனேஜ்மென்ட் சர்வீசஸ்’ என்ற தனியார் நிறுவனத்திற்கு 21.1 பில்லியன் டாலர்களை வழங்கிவருகிறது. நிதி வழங்கிய நிறுவனங்களே அடிப்படை கட்டுமானங்களை உருவாக்கித் தரும் நிறுவனங்கள்தானே? பிறகு எதற்கு தனியார் நிறுவனம் ஒன்றுக்கு நிதி வழங்கப்படுகிறது?

 61. பட்டியலிடப்பட்ட நிறுவனமான அதானி என்டர்பிரைசஸ், பிரிட்டிஷ் தீவில் உள்ள பிவிஐ என்ற நிறுவனத்திற்கு 100 மில்லியன் டாலர்களை கடனாக வழங்கியது. இந்த நிறுவனம் அதானி குடும்பத்தினரால் நிர்வாகம் செய்யப்படுகிறது. ஆஸ்திரேலியா நாட்டு நிலக்கரி சுரங்கத்திற்கான காப்புத்தொகையாக பரிவர்த்தனை தொகை பயன்படுத்தப்பட்டது என அதானி குழுமம் கூறியது. பட்டியலிடப்பட்ட நிறுவனம் எதற்காக அதானி குழுமத்தின் தனியார் நிறுவனத்திற்கு நிதியளித்து உதவ வேண்டும்?

62. அதானி குழுமத்தில், கடந்த எட்டு ஆண்டுகளில் ஐந்து நிதித்துறை தலைவர்கள் மாறியிருக்கிறார்கள். அதானி குழும நிறுவனங்களில் முக்கியமான நிதித்துறை பதவியில் உள்ளவர்களை தக்க வைத்துக்கொள்ள முடியாததற்கு என்ன காரணம்?

63. நிதித்துறை தலைவர்கள் தாங்களாகவே பணியை விட்டு விலகுவதற்கான காரணங்கள் என்ன?

64. அதானி க்ரீன் எனர்ஜி, அதானி போர்ட்ஸ்,  அதானி பவர் ஆகிய நிறுவனங்களில் ஐந்து ஆண்டுகளில் 3 நிதித்துறை தலைவர்கள் மாறியுள்ளனர். அதானி கேஸ் மற்றும் அதானி ட்ரான்ஸ்மிஷன் ஆகிய நிறுவனங்களிலும், நான்கு ஆண்டுகளில் நிதித்துறை தலைவர்கள் மாறியுள்ளனர். அதானி குழுமம், நிறுவனத்தின் உயர் பொறுப்பிலுள்ள நிதித்துறை தலைவர்களை தக்க வைத்துக்கொள்ள தடுமாறுவது ஏன்?

65. தமது பணியை விட்டுவிட்ட அல்லது  விலகிய நிதித்துறை தலைவர்கள் அவ்வாறு செய்வதற்கு முக்கியமான காரணங்கள் என்ன?

66. அதானி என்டர்பிரைசஸ், அதானி டோட்டல் கேஸ் ஆகிய இரு நிறுவனங்களுக்கும் கணக்கு தணிக்கை செய்து ஒப்புதல் வழங்கும் நிறுவனத்தின் பெயர், ஷா தாந்தரியா. இந்த சிறு நிறுவனத்தின் பழைய வலைத்தளத்தை சோதித்தபோது, நான்கு கூட்டாளி நிறுவனங்களும், பதினொரு ஊழியர்களும் இருப்பது தெரிய வந்தது. நடத்தும் அலுவலகத்திற்கு மாதம் ரூ.32 ஆயிரம் வாடகை கட்டுகிறது. இந்த நிறுவனம், 640 மில்லியன் டாலர்கள் முதலீடு கொண்ட நிறுவனத்திற்கு கணக்கு தணிக்கை செய்த அனுபவம் கொண்டது. அதானி குழுமம், தனது நிறுவனத்திற்கு திறமை வாய்ந்த பெரிய புகழ்பெற்ற கணக்குத் தணிக்கை நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்திருக்கலாமே?

67. அதானி கேஸ் நிறுவனத்தின் கணக்கு தணிக்கைகளைப் பார்த்து ஒப்புதல் அளித்தவருக்கு வயது 23. இந்த வயதில், அவர் அப்போதுதான் தனது படிப்பை முடித்துவிட்டு வந்திருப்பார். நாட்டின் மிகப்பெரிய வணிக நிறுவனத்தின் கணக்குகளை பார்த்து சிக்கல்களை ஒழுங்கு செய்யும் திறமையை, 23 வயதுடைய இளைஞர் கொண்டிருப்பாரா?

68. அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் கணக்குளைப் பார்த்து ஒப்புதல் அளித்தவருக்கு  வயது 24. இந்த வயதில் ஒருவருக்கு நாட்டின் மிகப்பெரிய வணிக நிறுவனத்தைப் பார்த்து அதை புரிந்துகொண்டு கணக்கு வழக்குகளை சரிபார்ப்பது எளிதாக இருக்க முடியாது. இதை எப்படி அவர் கவனத்துடன் திறனுடன் செய்திருக்க முடியும்?

69. அதானி கேஸ், அதானி என்டர்பிரைசஸ் ஆகிய இரு நிறுவனங்களின் ஆண்டு கணக்கு அறிக்கைகளைப் பார்த்து ஒப்புதல் கொடுத்த கணக்குத் தணிக்கையாளர்களின் வயது 28. இவ்வளவு குறைவான வயதில் அனுபவங்களே இல்லாத நிலையில் அதானி குழுமத்தின் கணக்கு வழக்குகளை பார்த்து ஒப்புதல் அளிக்க முடிந்தது எப்படி?

70. அதானி பவர் நிறுவனத்தின் கணக்கு தணிக்கையை, எர்னஸ்ட் அண்ட் லிவிங்  என்ற கணக்குத் தணிக்கை நிறுவனம் பொறுப்பேற்று செய்தது. 700 மில்லியன் டாலர்கள் அளவிலான நிறுவன மதிப்பை, கணக்குத் தணிக்கை நிறுவனம் ஏற்கவில்லை. முதலீடு  மற்றும் கடன் ஆகிய வகையில் நிறுவனத்தின் மதிப்பு பற்றி அதானி என்ன கூற விரும்புகிறார்?

71. அதானி பவர் நிறுவனத்தின் மதிப்பு பற்றிய விவகாரத்தில், கணக்குத் தணிக்கையாளர் எந்த பகுதியை ஏற்க மறுத்தார்?

72. அதானி குழுமம் மீது டிஆர்ஐ உள்பட ஏராளமான அரசு அமைப்புகள் பல்வேறு மோசடி புகார்களைக் கூறியுள்ளன. 2004-2006 காலகட்டத்தில், வைரம் விற்பனை தொடர்பான மோசடியில் அதானி எக்ஸ்போர்ட்ஸ் லிட் என்ற நிறுவனம் சிக்கியது. 3 மடங்கு அதிகமாக வைரங்களை ஏற்றுமதி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த விவகாரத்தில் 34 நான்கு நிறுவனங்கள் பங்கு கொண்டிருந்தன. திடீரென அதிகரித்த வணிக ஏற்றுமதி அளவு பற்றி அதானி கூற முடியுமா?

73. ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய நாடுகளில் உள்ள பல்வேறு நிறுவனங்களும் வைர ஏற்றுமதி விவகாரத்தில் தொடர்புடையவை என வழக்கு ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. வினோத் அதானி தொடர்புடைய நிறுவனங்கள் பற்றி அதானி என்ன கூறப்போகிறார்?

74. 2011ஆம் ஆண்டு மத்திய அரசின் குறைகேள் அதிகாரி, கர்நாடகத்தில் நடைபெற்ற சுரங்க ஊழல் பற்றி 466 பக்கத்தில் அறிக்கை ஒன்றை தயாரித்தார். அதில் அதானி குழுமமே, 12 பில்லியன் டாலர்கள் மதிப்பில் நடைபெற்ற இயற்கை வள கொள்ளைக்கு அடிப்படையான காரணம் என குறிப்பிட்டிருந்தார். இதில், அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதும் முக்கியமானது. இந்த அறிக்கை மற்றும் வழக்கில் சமர்பிக்கப்பட்ட ஆதாரங்கள் பற்றி அதானி என்ன விளக்கம் கொடுக்க நினைக்கிறார்.?

75. 2014ஆம் ஆண்டு, ஐக்கிய அரபு அமீரகத்தில் போலி நிறுவனங்களை நடத்தி வரும் வினோத் அதானி மூலம் அதானி குழுமம் நிதியை முறைகேடாக பெற்று பயன்படுத்துகிறது என டிஆர்ஐ குற்றம்சாட்டியது. மின் உற்பத்தி பொருட்களை அதிக விலை மதிப்பு கொண்டதாக மாற்றிய வழக்கு அது. எலக்ட்ரோஜன் இன்ஃப்ரா நிறுவனம் மூலம் மின் உற்பத்திப் பொருட்கள் பெறப்பட்டிருந்தால், அதற்கான காரணம் என்னவென்று கூற முடியமா?

 76. மின் உற்பத்தி பொருட்களுக்கான உண்மை விலை என்ன? வினோத் அதானி தனது நிறுவனங்கள் மூலம் அதானி குழுமத்திற்கு வழங்கிய சேவைகள் என்னென்ன?

77.  டிஆர்ஐ விசாரணையில், வினோத் அதானியின் நிறுவனம் மூலம் 900 மில்லியன் டாலர்கள், மொரிஷியஸிலுள்ள அதானி குழுமத்தின் தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதைபற்றி அதானியின் கருத்து என்ன?

78. அதானி குழுமத்தில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு பணம் பரிவர்த்தனையானபிறகு என்னவானது? அதன் பரிவர்த்தனைகள் என்ன?

79. வினோத் அதானியின் தனியார் நிறுவனம் செய்த வணிகப் பரிவர்த்தனைகளை, டிஆர்ஐ ஆவணங்களில் பதிவு செய்துள்ளது. ஆனால், இந்த நிறுவனம் குற்றச்சாட்டில் இடம்பெறவில்லை. இதுபற்றி அதானி என்ன விளக்கம் தரப்போகிறார்?

80. துபாய், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளிலுள்ள போலி நிறுவனங்கள் மூலம் நிலக்கரியின் இறக்குமதி மதிப்பை அதிகரித்ததாக மோசடி குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிறுவனங்களை அதானி தொடர்புகொண்டுள்ளாரா, ஏன், எப்படி?

 81. 2019ஆம் ஆண்டு, சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த பான் ஆசியா கோல் ட்ரேடிங் என்ற நிறுவனம், நிலக்கரியை அதானி குழுமத்திற்கு விற்பதற்கான ஒப்பந்தத்தைப் பெற்றது. இந்த நிறுவனத்தைப் பற்றி தேடியபோது, இதன் வலைத்தளத்தில் வணிகம் பற்றி எந்த விவரங்களும் இல்லை. நிறுவனம் சார்ந்த ஊழியர்களின் பெயர்களும் இல்லை. எதற்காக அதானி குழுமம், ஒரு சிறு நிறுவனத்தை நிலக்கரி விற்பனைக்காக தேர்ந்தெடுக்கவேண்டும்? இந்த நிறுவனத்தை தேர்ந்தெடுக்க என்ன மாதிரியான தேர்வுமுறைகள் பயன்பட்டன?

82. அதானி குழுமத்தைச் சேர்ந்த  நிறுவனத்தின் முன்னாள் தலைவரே பான் ஆசியா நிறுவனத்தின் இயக்குநர் என தெரிய வந்துள்ளது. அதானி குழுமம், பான் ஆசியா நிறுவனத்தைப் பற்றி விளக்கமாக கூறமுடியுமா?

 83. 2019ஆம் ஆண்டு நிலக்கரி ஒப்பந்தம் வெற்றிகரமாக நடைபெற்றது. பிறகு, பான் ஆசியாநிறுவனம், அதானி குழுமத்திலுள்ள தனியார் நிறுவனத்திற்கு 30 மில்லியன் டாலர்களை வழங்கியது. ஒரே ஒரு பங்குதாரரைக் கொண்ட சிங்கப்பூர் நிறுவனத்தில் இருந்து அதானி குழுமத்தின் தனியார் நிறுவனம் நிதி பெற்றது ஏன்? பட்டியலிடப்பட்ட நிறுவனம் எதற்காக சிறு நிறுவனத்தை நிலக்கரியை விற்பதற்காக தேர்ந்தெடுத்தது?

84. பத்திரிகைகளுக்கு ஊடகங்களுக்கு வழங்கும் பேட்டியில் விமர்சனங்களை வரவேற்கிறேன் என்று கூறியவர், கௌதம் அதானி. அதானி குழும வரி மோசடிகளைப் பற்றிய எழுதிய பரஞ்சோய் குகா மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தது ஏன்?

85.2021ஆம் ஆண்டு அதானி குழுமம் பற்றிய காணொலியை பதிவிட்ட யூட்யூப் பதிவரை எதிர்த்து வழக்கு பதிவு செய்தது ஏன்?

86. பிறரின் பார்வைக்கோணங்களை புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன் என்று கூறிய கௌதம் அதானி, தனது நிறுவனங்களைப் பற்றிய உண்மைகளை வெளியே கொண்டுவரும் பத்திரிகையாளர்கள் மீது வழக்கு தொடருவது ஏன்? ஆஸ்திரேலியாவில் சூழல் செயல்பாட்டாளரை தனியார் நிறுவன துப்பறிவாளரை வைத்து பின்தொடர வைத்தது எதற்காக?

87. அதானி குழுமம் எந்த முறைகேடுகளிலும் ஈடுபடாதபோது,  அதை விமர்சிக்கும் சாதாரண பத்திரிகையாளர்களின் மீது வழக்கு பதிவது ஏன்?

88. நல்நோக்கத்திற்கான வளர்ச்சி என்ற சுலோகனை அதானி குழுமம் கொண்டிருக்கிறது. அதற்கேற்ப தனது நிறுவனம் செயல்படுகிறது என அதானி நம்புகிறாரா?


மேற்கோள் பகுதிகள்

 

[1] The list of 7 excludes the recent acquisition of Ambuja Cements and ACC.

[2] The recently-listed Adani Wilmar is the only company on the table not included in MSCI India.

[3] In ACC and Ambuja Cements, the Adani Group shareholders (promoters) had pledged their entire holdings just after the acquisition, as per the September 2022 disclosures.

[4] Gautam Adani is not Chairman of Adani Wilmar, but serves as Chairman of Adani EnterprisesAdani Green EnergyAdani PortsAdani PowerAdani Total GasAdani Transmission

[5] Even though immediate family members are positioned in key leadership roles, Adani has not publicly revealed any succession plans.

[6] Historical exchange rates throughout are based on Reserve Bank of India (RBI) statistics, unless otherwise sourced.

[7] Samir Vora is the brother of Gautam Adani´s wife, based on our review of his corporate registration and passport details for Priti Adani, indicating the father’s name Sevantilal Vora.

[8] Directorships as of mid-2009 included Adani Power (Overseas), Adani Global FZEAdani Global LtdAdani Global PteAdani Shipping Pte and Chemoil Adani Pte as well as a shareholding in AEL and part of Adani Power promoter group.

[9] He stepped down from Adani Global Pte in August 2010, Adani Shipping in March 2011 and Adani Power Pte in April 2011, according to Singaporean Corporate Filings and what appears to be a blog by Vinod Adani himself. Vinod Adani´s son Pranav, nephew of Gautam Adani, is a director in the Adani Group´s agro, oil and gas business and a director of AEL. Vinod´s daughter Krupa Adani is married to Suraj Mehta, son of fugitive diamond dealer Jatin Mehta, who is now reportedly hiding out from Indian justice in the Caribbean. [See Part 1 for more on Jatin Mehta´s links to the Monterosa offshore funds]

[10] The other 2 Adani Group companies report elevated promoter group holdings, though not on the brink of critical thresholds, as above. (1) Adani Ports (65.13%) (2) Adani Green Energy (60.75%). (Source: BSE December 2022 Shareholding Patterns 12)

[11] Major Adani peers have much smaller insider holdings, making Adani an outlier: (i) Reliance Power, 24.99% (ii) Tata Power, 46.86% (iii) Tata Steel, 33.90% (iv) Reliance Industries Ltd., 50.49% (v) Jindal Steel and Power, 61.20%. [Source: Recent BSE Shareholding Patterns 12345]

[12] LEI data is a global corporate database that is standardized, and regularly registered and verified to help provide key information on global companies.

[13] Given that only holdings above 1% are disclosed, the entities could hold stakes in other Adani stocks without being required to disclose those additional holdings.

[14]  Alastair Guggenbühl-Even has also served on the board of Swiss-Indian Chamber of Commerce (SICC), and was a director in an Indian entity, BTS Investment Advisors, which was registered to a Monterosa email and also displayed Monterosa’s website on corporate pages.

[15] Alastair Guggenbühl-Even served on the board of the following companies where Jatin Mehta was also a director: Forever Precious Jewellery and Diamonds Limited (30 September 2006 to 9 December 2008), Revah Corporation Limited (23 January 2007 to 9 February 2008) and Carbon Accessories Limited (2 May 2007 to 9 December 2008). [12]

[16] Per the 2005 annual report of Gudami International, Chang Chung-Ling held 1,999,999 shares of the company and Joseph Selvamalar held 1 share. [Pg. 3] In the diamond scam investigation, Chang Chung-Ling was disclosed as a director of Adani Global Pte and Adani Global Ltd.

[17] Gudami International was also named in a government investigation into bribery in the Agusta Westland scam, per local media reports.

[18] The leaked emails appear to have come from one of more than 30,000 emails presented in a May 2017 fraud trial in a UK court involving an alleged front company for Dharmesh Doshi. [Pg. 10]

[19] Doshi became a fugitive around mid-2002, per SEBI documents, roughly 3-1/2 years prior to the email correspondence. [SEBI Order Section 3.2.4]

[20] The Twitter account leaking the documents seems to correspond to Sunil Jain, CPA. Jain was the former CFO of First International Group and Jermyn Capital Group, and is referenced in the leaked emails. Jain was convicted of fraud against his employer in 2017. The emails were leaked in the run up to trial, at a time when he would have had access to such sensitive documents.

[21] The general reporting threshold in the shareholding pattern uploaded on the exchange website is above 1% of equity. If a holder falls below 1%, it generally moves out of public sight, unless there are other ad-hoc non-statutory required disclosures. It is thus not known whether New Leaina is still a shareholder or not.

[22] As per the disclosures to parliament, New Leaina was (and might still be) a shareholder in Adani Total Gas, Adani Power, Adani Enterprises and Adani Transmission.

[23] Per Mauritius company records, Amicorp is both the secretary and management company for at least 7 of the offshore entities operated by Adani promoters. It has also supplied directors to its entities: Endeavour Trade and Investment, Flourishing Trade and Investment Ltd, Afro Asia Trade and Investments Ltd, Worldwide Emerging Market Holding Ltd, Infinite Trade and Investment, Fortitude Trade and Investments, and Acropolis Trade and Investment (where Vinod Adani is a director). (See Appendix 1)

[24] Further tying New Leaina to Amicorp, Phoenix Global Investment Fund, the third largest New Leaina shareholder, states it is administered by Amicorp in a placement memorandum.  One of the board members of that shareholder – Ume Management – is led by director Edgar Victor Lotman, who is also on the board of Amicorp Bank.

[25] Per the new Leaina Investment website, the entity is reachable at P.O. Box 23293 at the address of Amicorp.

[26] The three individuals appeared as the controllers of Amicorp’s UK subsidiary until September 2021, as we discovered in a search of UK corporate records.

[27] These 17 entities include, Altroz Trade and Investment, Athena Trade and InvestmentsBirch Trade and InvestmentDelphinium Trade and InvestmentDome Trade and InvestmentEfficacy Trade and InvestmentFervent Trade and InvestmentGardenia Trade and InvestmentGlobal Resources Investment HoldingHarmonia Trade and InvestmentHibiscus Trade and InvestmentJuventus Trade and InvestmentsOasis Trade and InvestmentOrbit Trade and InvestmentPrimrose Trade and InvestmentResurgent Trade and InvestmentXcent Trade and Investment. The entities are registered at Amicorp’s Mauritius address and have either Vinod Shantilal Shah (aka Vinod Adani) as a director or Subir Mittra (CEO of Adani’s family office).

[28] These include (1) New Leaina Investments Limited (2) LGOF Global Opportunities Fund and (3) Connecor Investment Enterprise Ltd

[29] This can be verified by the change in shareholding between 28th and 29th January 2021 as disclosed in Cypriot screen shots from Cyprus’ corporate registry  [1,2]

[30] The domain for Trustlink’s website is currently for sale but earlier versions are archived on Wayback Machine.

[31] Adani-listed companies stopped providing granular disclosure of the top 10 shareholders after their FY 2020 annual reports.

[32] Put in simple terms, delivery volume = total volume minus day-trading activity. In the Indian market, retail investors, local corporates, and local proprietary firms are allowed to day trade (“intra-day trading”).

[33] Opal, despite its large shareholdings, does not appear to be actively trading in the Indian markets.

[34] Transactions include both buys and sells; calculations use delivery volume as per NSE and BSE

 exchanges combined; figures may not sum exactly due to rounding.

[35] This was summarised in the appeal order, which was successful but then was over-turned by the Supreme Court (the highest court in India). The suspension came into force in 2016, per a broker update.

[36] The estimated variance is due to lack of disclosure on how much a fund held before crossing the 1% shareholding disclosure trigger. For example, APMS Investment Fund, which held 2.26% in June 2019, must have bought a minimum of 1.27% of the equity (i.e. 2.26% – 0.99%) to a maximum of 2.26%.

[37] We analyzed trading volume on both stock exchanges where Adani Green Energy trades, the Bombay Stock Exchange (BSE) and the National Stock Exchange (NSE). The total traded volume between March 31, 2019, and June 13, 2019, was 74,614,575 shares, representing approximately 4.8% of equity. Our calculations demonstrate a minimum additional shareholding of 6.85%. Therefore, it likely would have been impossible that the increase in shareholdings could have been obtained through open market purchases of existing shares.

[38] The stock rose from INR 209.55 – 443.1 with a high of INR 478.

[39] The brokerage was named Jermyn Capital and was controlled by Dharmesh Doshi (associate of Ketan Parekh), according to the judge’s closing remarks in the case of Regina v Sunil Kumar Jain [2017]. It has since been renamed to Orbit Investment Securities Services Limited.

[40] Records show that Jayechund Jingree was a director of Mauritius-based Adani Global Ltd in 2004. Note that the spelling in the two records are different by one character (Jayechund vs. Jaychund). Both records show the exact same birth month and year for the individual. Other records similarly use the alternative spelling while also listing Jaychund’s same company email. These factors indicate that the naming conventions apply to the same individual.

[41] AOC-1 Subsidiaries disclosures details the number of subsidiaries as found in the 2022 Annual reports. BSE’s related party disclosures list out the separate related party transactions. [1234567]

[42] A 2014 DRI investigation into gross over-valuation of import goods (involving PMC Projects, Adani Enterprises, Vinod entities and others) alleged transaction values of INR 18.87 billion, or approximately U.S. $232 million at current exchange rates. [Pg. 93] Another DRI show cause notice against Adani Power (also involving offshore entities belonging to Vinod Adani) alleged U.S. $808 million of over-valuation at the time. [Pg. 71] See Part 5 for more details.

[43] Universal Trade and Investments was a Vinod Adani-associated entity until it was acquired by Total in January 2021.

[44] Krunal is also mentioned in an Indian Foreign Direct Investment (FDI) report that lists its flows into Adani companies as among the 25 largest FDI investments identified in the city of Ahmedabad from 2000 to 2015. Adani related entities appear on this list 8 times, with almost all investments coming from various entities in Mauritius.

[45] The ultimate holding company of Sunbourne is Adani Properties Pvt. Ltd, per the 2020 Annual Report of Sunbourne. [Pg. 6] Sunbourne was previously named Adani Developers.

[46] Early filings for Sunbourne refer to a Mauritius entity named “Krunal Oil Marketing Pvt. Ltd.” Using the Mauritius company number (C58854) we were able to establish that Krunal Oil Marketing Pvt Ltd was the previous name of Krunal Trade and Investment. [12]

[47] Adani Enterprises FY20 annual report shows long term borrowings from Sunbourne of INR 5 billion and short term borrowings of INR 4.8441 billion.

[48] Emerging Markets’ website says it was founded in 2015 and is managed by Subir Mittra, the head of the Adani Family investment office.

[49] Adani Estates 2020 Annual Report shows a compulsorily convertible debentures (CCDs) investment of INR 6.09 billion (U.S. $85 million at the time) [Pg. 16]

[50] We speculate that the “works in progress” may refer to portions of the railway connecting the coal mine and the port.

[51] INR 47.2 billion profit after minority interests minus INR ~2.5 billion from 4 years of losses from the private entity. Adani Enterprises profit per year (INR billion): 2015: 19.48 [Pg. 36] 2016: 10.4 [Pg. 143] 2017: 9.8 [Pg. 34] 2018: 7.5 [Pg. 38]

[52] Calculated using nominal value of the Compulsorily Convertible Debentures (CCDs) i.e. INR 100.

[53] Laxmiprasad Chaudhary has been a director in Adani Estate Management since 2013. Yogesh Ramanlal Shah was a director in Adani Power Dahej (2015), Adani Transmission (India) Ltd (2015) and Kutchh Power Generation (2015).

[54] The address is in the Anand Milan Complex, per a corporate information provider.

[55] Rajesh Mandapwala, shareholder of Milestone Tradelinks, has been a long-standing employee of Adani Enterprises. We checked the old shareholding patterns, which showed Rajesh “B” Mandapwala. Normally taking the likely father’s name, the B=Bhogilal. The information also matches his LinkedIn profile.

[56] Samir Vora, the brother-in-law of Gautam Adani was a director from 2008 until the entity was amalgamated into the parent in Financial Year 2013. [Pg. 4]; Rakesh Shah, another of Gautam Adani’s brothers-in-law, was a director from 2004 until 2008 according to corporate databases. Saurin Shah, a longtime executive of the Adani Group, according to the same tribunal, was a director from 2004 until the company merged with its parent.

Separately, Milestone Tradelinks is also a shareholder in India TV (a fact that we do not think has come into public conscience at a time when Adani has acquired another media entity: NDTV)

[57] According to our calculations: 115 (INR per share on April 1st) x 213,236,910 (shares) x 1/44.463 (INR/USD on April 1st), which differs from the implied exchange rate used in the cited Reuters article.

[58] The entity was called Adani Exports Ltd. at the time, later renamed.

[59] The calculation uses either total revenue or total income, found in less comprehensive earlier annual filings.  

[60] One of the original PMC shareholders was Malay Mahadevia. [Pg. 11] Mahadevia was described as a “childhood friend” of Gautam Adani in a recent biography and is one of the original PMC shareholders, per PMC Projects Articles of Association. [Pg. 11] Mahadevia now serves as CEO of Adani’s airport business – AAHL.

[61] This is disclosed in NQXT Holdings’ financial statements, the holding company of NQXT. [Pg. 3]. Atulya Resources is known to belong to the Adani Family.

[62] Adani Enterprises had 156 subsidiaries, per the AOC-1 regulatory disclosure. Adani Total Gas has no subsidiaries, though it does have Joint Ventures. [Pg. 459 – 471]

[63] Note that during our investigation, the website of Shah Dhandharia was taken down. Anticipating this, we took screenshots before it was taken down and independently archived the website through The Wayback Machine.

[64] Out of various scandals that Adani was involved in, the iron-ore scandal was said to be worth U.S. $12 billion [1], the coal pricing scandal around U.S. $4.4 billion [2] and the power equipment scandal (involving Adani Power) estimated to be about INR 39 billion, over U.S. $800 million at the time of the alleged offences. [3]

[65] The DRI investigation said the imported equipment was to be deployed in two units of Adani´s power plant at Maharashtra (APML) and at another in Rajasthan (APRL) that were under construction at the time.

[66] Pan Asia Coal Trading Pte is now called Pan Asia Tradelink Pte, per Singapore Corporate Records.

[67] S/O refer to “Son of”, sometimes used by Singaporeans. We searched for any articles connecting Mr. Chetan Kumar to the coal trade, but the only information we found described his experience as focused on the Singaporean real estate sector.

[68] Sell side refers to the part of the financial industry that is involved in the creation, promotion, and sale of stocks. (Investopedia)

 


வினோத் அதானியின் நிறுவனங்கள்


நன்றி:

வலைத்தளம்

https://hindenburgresearch.com/adani/

திரு. இரா.முருகானந்தம்

கருத்துகள்