கடவுளின் ஆணைக்கு இணங்கி பெண்களை கொலை செய்தவர் - ஹார்வி லூயிஸ்

 









ஹார்வி லூயிஸ்

பெண்களைக் கொன்ற வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி. சட்டம் சீர்திருத்தம் செய்யப்பட்ட காலத்தில் அதன் பயனை அனுபவித்தார். இப்படி சட்ட ரீதியாக பயன் பெற்றவர் அதைப் பயன்படுத்தி திருந்தியிருக்கலாம். ஆனால், ஹார்வி அப்படி ஏதும் செய்யவில்லை. 1951ஆம் ஆண்டு மரணதண்டனை ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டது. ஒன்பது ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்த பிறகு  1960ஆம் ஆண்டு,  பிணை வழங்கப்பட்டது.

ஹார்வியைப் பொறுத்தவரை சிறைக்கு முன்னும் பிறகும் எந்த மாற்றமும் இல்லை. கொள்ளை, கொலை, தாக்குதல் என்றுதான் வாழ்ந்தார். இதற்காக, 1965ஆம் ஆண்டு பதினைந்து ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் நல்லவிதமாக நடந்துகொண்டதற்காக தண்டனை குறைக்கப்பட்டு  1969ஆம் ஆண்டு விடுதலையானார். தண்டனைகள், சிறை என்பதெல்லாம் ஹார்வி விஷயத்தில் எதிர்மறையாகவே மாறிப்போனது. சமூகத்தையும், அதில் இடம்பெற்ற பெண்களையும் கடுமையாக வெறுக்கத் தொடங்கினார்.

இரண்டு முறை விதவைப் பெண்களை திருமணம் செய்தார். ஆனால் யாரிடமும் நெருக்கமாக இல்லை. அவர் பாட்டிற்கு காரை எடுத்துக்கொண்டு தனியாக சுற்றி வந்துகொண்டிருந்தார். இதனால் ஹாரியின் திருமண வாழ்க்கை அவருக்கு மட்டுமல்ல, திருமணம் செய்த பெண்களுக்கு கூட பயனே இல்லாமல் போய்விட்டது. நாளிதழில் வேலைக்கு ஆட்கள் தேவை என விளம்பரம் கொடுத்து, அதில் வேலை கேட்டு வந்த கேத்தி மில்லர் என்ற பெண்ணைக் கொன்றார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு எவரெட் என்ற இடத்தில் பிளாஸ்டிக் க்ஷீட்டில் சுற்றப்பட்ட நிலையில் கேத்தியின் நிர்வாண உடல் கிடைத்தது. சுத்தியால் அடித்து மண்டை சிதறடிக்கப்பட்டு கொல்லப்பட்டிருந்தார்.

மாகாணங்களுக்கு இடையில் சென்று கொலை செய்து விட்டு திரும்பிவிடுவதாக ஹார்வியை காவல்துறை சந்தேகப்பட்டது. இதனால் பல்வேறு வழக்குகளை தொடர்புபடுத்தி பார்ப்பது கடினமாக இருந்தது. அதுதான் ஹார்விக்கான பலமாக அமைந்தது. 

வழியில் காணும் பெண்களை போகும் வழியில் இறக்கிவிடுவதாக பரிவோடு கூறுவது, பிறகு காரில் ஏறியவர்களை ஆளரவம் இல்லாத இடத்தில் சுத்தியை வைத்து மண்டை உடைப்பதாக சொல்லி வல்லுறவு செய்து, முன்னமே சொன்னபடி சத்தியசந்தனாக கபாலத்தை சிதறடித்துவிட்டு செல்வதே வாடிக்கை. இதில் சில பெண்களை சுய இன்பம் அனுபவிக்கச்செய்து பார்வையாளராக பார்த்து ரசிப்பதும் உண்டு.

அமெரிக்க, கனடா ஆகிய இடங்களில் பெண்களை கடத்தி வல்லுறவு செய்வதற்கான இடங்களை மேப்பில் குறித்து வைத்து செயல்பட்டவர், ஹார்வி. காவல்துறையில் சிக்கியபிறகு, ‘’கடவுள் என் காதில் சொன்னார். எனவே, சுத்தியை வைத்து அடித்து கொன்று ஆணையை நிறைவேற்றினேன்’’ என சொன்ன கதையை நீதிபதி நம்பவில்லை. 150 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது. இதில் குற்றவாளி நல்லவிதமாக நடந்துகொண்டால் அவருக்கு நாற்பது ஆண்டுகள் மட்டுமே தண்டனை  அனுபவித்திருந்தால் போதுமானது. வெளியே விட்டுவிடுவார்கள். நீதிபதி கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில் தனது மனதிருப்திக்கு அப்படி தண்டனையை எழுதியிருக்கிறார்.

படம் - பின்டிரெஸ்ட் 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்