பணியாளர்களைக் கொன்றால்தான் முதலைக்கு உணவு கிடைக்கும்!
ஜோபால்
1892ஆம் ஆண்டு பிறந்த முதலை விரும்பி. முதலை நேயர்.
சோசியபிள் இன் என்ற ஹோட்டலை நடத்தி வந்தார் ஜோ பால். இவருக்கு நிறைய மனைவிகள் உண்டு.
முதலைகளுக்கு இறைச்சியை தனது கையால தூக்கி வீசுவது பிடித்தமானது. ஒருமுறை இவரது குளத்தில்
அழுகிய இறைச்சி வாடை வருகிறது என அருகில் வாழ்ந்த வீட்டுக்காரர் கூறினார். அதற்கு ஜோ
டக்கென துப்பாக்கியை எடுத்துக்கொண்டு அதை தடவியபடியே, ‘’அழுகிய இறைச்சியை முதலைக்கு
போட்டேன். அதுதான் காரணம்’’ என்று சொன்னார். துப்பாக்கி கையில் இருக்க சமாதானம் ஏற்படாமல்
இருக்குமா என்ன?
டெக்ஸாஸின் எல்மண்டோர்பில் வாழ்ந்தவர், ஜோபால். எல்லோருடனும்
பேசும் ஜோவியலான ஆள்தான். ஆனால் அவரது இருளான பகுதியை பலரும் அறியவில்லை.ஜோ பாலைப்
பற்றி பலரும் அறிய வந்தது, அவரது ஹோட்டலில் வேலை செய்த பெண் பணியாளர்கள் காணாமல் போன
சம்பவத்தின் போதுதான்… முதல்முறை ஒரு பெண் பணியாளர் காணாமல் போனார். காவல்துறை சம்பிரதாய
சடங்காக ஜோவிடம் கேள்வி கேட்டபோது, அந்த பெண் வேறு வேலை தேடி போனதாக கூறிவிட்டார்.
சரி சொன்ன பதில்தான் லாஜிக்காக இருக்கிறதே என நினைத்து விட்டுவிட்டார்கள், ஆனால் அடுத்தடுத்து
பெண்கள் காணாமல் போனபோது ஜோவுக்கும் சமாதானங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படி
அவர் சொன்ன விஷயங்களையும் சாக்குபோக்குகளையும் காவல்துறை முழுமையாக நம்பவில்லை. ஏனெனில்
காணாமல் போன பணியாளர்களின் உடைகள் ஹோட்டலில்தான் இருந்தன.
ஜோவின் மனைவியர் குழுவில் கூட நிறையப் பேர் இறந்துபோனார்கள்.
சிலர், ஜோ பெண்களை வெட்டி உடல் துண்டுகளை முதலைக்கு உணவாக தூக்கிப்போட்டதை பார்த்ததாக
காவல்துறைக்கு நம்பர் சுழற்றி சொன்னார்கள்தான். ஆனால் காவல்துறைக்கு ஆதாரம் வேண்டுமே?
அப்போதுதானே நீதி தேவதைக்கு பாதகமின்றி நீதியை காப்பாற்ற முடியும். இதற்கான முயற்சிகளை
காவல்துறை எடுத்தபோது ஜோ அதற்கும் மேலும் தாமதிக்கவில்லை.ஹோட்டலை அடைத்தார். ட்ராயரைத்
திறந்து துப்பாக்கியை எடுத்து, தன்னைத்தானே
சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். ஜோ வளர்த்த முதலைகள், வனவிலங்கு காட்சி சாலைக்கு
தானமாக வழங்கப்பட்டன.
கருத்துகள்
கருத்துரையிடுக