இடுகைகள்

அமைப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தொழில்நுட்பத்தை மக்கள் அதிகாரத்துவ அமைப்புகள் எப்படி பயன்படுத்துகின்றன?

படம்
          தொழில்நுட்பம் என்பது ஒருவரை குறிப்பிட்ட செயலை செய்யவைக்கிறது என்று கூற முடியாது. ஆனால் செய்யும் செயல்பாட்டை சற்று எளிமைபடுத்தி வேகமாக செய்யலாம். இணையம் வந்தபோது இந்தியாவின் வடக்குதேச தற்குறிகள், வெளிநாட்டினரின் நிர்வாண படங்களைக் கேட்டு சமூக வலைதளங்களில் தொந்தரவு செய்தனர். ஆக, தொழில்நுட்பம் என்பது உங்கள் மனதில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடாது. அதை நீங்கள்தான் தாழ்ந்துபோகாமல் காக்கவேண்டும். இப்போது விமானச்சேவை விலை குறைவாக வந்துவிட்டதால், வடக்குதேச தற்குறிகள் அயல்நாடுகளுக்கு சென்று அங்கு பொது இடங்களில் அநாகரிகங்களை அரங்கேற்றி வருகிறார்கள். உலகநாடுகளில், இந்தியா என்ற நாட்டிற்கு பெரிய நல்லபெயர் கிடையாது என்பதால், வடக்குதேச தற்குறிகளின் செயல்களால் பெரிய பாதிப்பில்லை. ஆனால், நேர்மையாக படித்து சென்று அமைதியாக வேலை செய்பவர்கள் தங்களை இந்தியர்கள் என்று சொல்லிக்கொள்ள முடியாது. எனவே, அவர்கள் ஒன்றியத்தின் பெயரைக் கூறாமல் தெற்குதேசத்திலுள்ள மாநிலங்களின் பெயர்களை குறிப்பிட்டு வருகிறார்கள். தொழில்நுட்பம் என்பது உங்களுக்கு வாய்ப்புகளை வழங்குகிறது. உங்கள் மனம் சரியான ...

மக்கள் அமைப்பாக திரண்டு கேள்வி கேட்க வேண்டும் - பாயும் பொருளாதாரம்

படம்
      4 பாயும் பொருளாதாரம் கனிம வளங்களைப் பொறுத்தவரை அவற்றை ஒருமுறை விற்றுவிட்டால் பிறகு அதை பெற முடியாது. அவை தீர்ந்துவிடக்கூடிய வளங்கள். மேய்ச்சல் நிலம் உள்ளது என்றால் அங்கு செம்மறி ஆடுகளை ஓட்டிச்சென்று மேய்ப்பார்கள். பலரும் ஒருவரை பின்பற்றி ஒருவர் என மேய்ச்சல் தொழிலை செய்வார்கள். இதெல்லாமே லாபம் வருவதைப் பொறுத்துத்தான். லாபம் வந்தால் அந்த தொழில் இல்லையா வேறு தொழில். குறிப்பிட்ட கிராமத்தினரே மேய்ச்சல் நிலத்தை அடிப்படையாக கொண்டு வாழ்க்கை நடத்துகிறார்கள் என்றால் நிலைமை என்னாகும்? மேய்ச்சல் வெளி ஆதாரம் புல். அது விரைவில் தீர்ந்துபோகும். அப்போது ஆடுகளுக்கு உணவிற்கு என்ன செய்வது? மக்கள் குறிப்பிட்ட மரங்களை, வைப்பு நிதி திட்டங்களை கண்ணை மூடிக்கொண்டு அவர் செய்கிறார் இவர் செய்கிறார் என இறங்கி செய்தால் மோசம் போவது உறுதி. அனைவருமே ஒரே திசை நோக்கி சென்றால் இயற்கை வளங்களை பகிர்ந்தாலும் கூட வெற்றி வாய்ப்பு மங்கும். புதிய யோசனைகளில் தொழில்களை செய்யவேண்டும். பாருங்கள் இளம் ஸ்டார்ட்அப் மாணிக்கங்கள், தோசைகளில் புதுமை செய்கிறார்கள். வாசனைப் பொருட்களில் சமோசா போன்ற வாசனைகளை கொண்டு வருகிறா...

கல்வி, செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சிக்கென வாரி வழங்கிய தொழிலதிபர்கள்!

படம்
  அள்ளிக்கொடுத்த கரங்கள் உலகிலுள்ள பெரும்பாலான தொழிலதிபர்கள் ஆண்டுதோறும் தங்களுடைய செல்வத்தில் குறிப்பிட்ட பகுதியை, தங்களுடைய அறக்கட்டளைக்கு ஒதுக்கி வருகின்றனர். பிற தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் வழங்குகிறார்கள். இதில் கணிசமான பகுதி கல்விக்கும், தொழில்நுட்ப ஆராய்ச்சிகளுக்கும் செல்கிறது. போர்ப்ஸ் இந்தியா ஆசியா பசிபிக் பகுதியில் இப்படி அள்ளிக்கொடுத்தவர்களைப் பற்றிய பட்டியலை வெளியிட்டுள்ளது. மொத்தம் பதினைந்து பேர் இப்பட்டியலில் உள்ளனர். அவர்களைப் பற்றிய விவரங்களைப் பார்ப்போம்.  ஜப்பானைச் சேர்ந்த தொழிலதிபர் டாகேமிட்சு டகிஸாகி. இவர், 2.6 பில்லியன் மதிப்பிலான பங்குகளை தன்னுடைய பவுண்டேஷனுக்கு வழங்கியுள்ளார். ஆஸ்திரேலியாவின் ஆண்ட்ரூ, நிக்கோலா ஃபாரஸ்ட் ஆகியோர் 3.3 பில்லியன் மதிப்பிலான பங்குகளை தொண்டு நிறுவனமான மிண்டெரூவுக்கு வழங்கியுள்ளனர்.  பெரும்பாலான பணக்காரர்கள் உயர்கல்வி, ஆராய்ச்சி, செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றுக்காக தங்களது செல்வத்தை தானமாக வழங்கியுள்ளனர். மிட்டியா குழும நிறுவனர், ஹே ஷியாங்ஜியான் 140 மில்லியன் டாலர்களை செயற்கை நுண்ணறிவு, காலநிலை மாற்ற ஆராய்ச்சிக்காக ஒதுக்க...

அறிவியல் முறைகளைக் கண்டுபிடித்த தியோடர் ஸ்க்வான்!

படம்
  தியோடர் ஸ்க்வான் தியோடர் ஸ்க்வான் (theodor schwann 1810 - 1882) 1810ஆம் ஆண்டு ஜெர்மனியிலுள்ள நியூயஸ் என்ற நகரில் பிறந்தார். அச்சுத்தொழில் செய்துவந்த லியோனார்ட் ஸ்ச்வான் என்பவருக்கு நான்கு மகன். 1834ஆம்  ஆண்டு மருத்துவராக பட்டம் பெற்றார். ஜோகன்னஸ் முல்லர் என்ற தனது பேராசிரியருக்கு ஆராய்ச்சியில் உதவியாளராக இணைந்தார்.  நுண்ணோக்கியில் ஏற்பட்டு வந்த பல்வேறு முன்னேற்றங்களை கவனித்து வந்தார் தியோடர். பொருட்களை பதப்படுத்துதலில் ஈஸ்டின் பங்களிப்பு  பற்றிய ஆய்வின் முன்னோடி.  இவருக்குப் பிறகுதான் நோய்க்கிருமிகள் பற்றி பிரெஞ்சு நுண்ணுயிரியாளர் லூயிஸ் பாஸ்டர் ஆராய்ச்சி  செய்து சாதித்தார்.  இதைத் தவிர செரிமானத்திற்கு உதவும் என்சைம்கள், தசை மற்றும் நரம்பு மண்டலம் ஆகியவற்றின் பணிகளை ஆராய்ந்து வந்தார். வயிற்றில் செரிமானத்திற்கு உதவும் வேதிப்பொருளான பெப்சினைக் கண்டறிந்தார். விலங்கின் திசுக்களிலிருந்து பெறப்பட்ட முதல் என்சைம் இதுவே.    லீஜ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரியும் வாய்ப்பை ஏற்றார்.  இவர் கண்டுபிடித்த பல்வேறு அறிவியல் முறைகளுக்காக இன்றும...

கண்களின் அமைப்பு நாட்டிற்கு நாடு மாறுபடுவது ஏன்?

படம்
giphy மிஸ்டர் ரோனி மனிதர்களுக்கு விதவிதமான கண் அமைப்புகள் உள்ளது ஏன்? கண்களின் மேல் இமை கீழே உள்ள கண்களை இணைப்பதில்தான் இவை மாறுகின்றன. இமைகளுக்கு முக்கிய பணி, கண்களை பல்வேறு பருவச்சூழல் மாறுபாடுகளிலிருந்து காப்பதுதான். எனவே நிலப்பரப்பு சார்ந்து மனிதர்களுக்கு கண்களின் அமைப்பு மாறுபடுகிறது. தெற்காசியர்கள், கிழக்கு ஆசியர்கள், அமெரிக்கர்கள் ஆகியோருக்கு கண்களின் அமைப்பில் இந்த வேறுபாடு தெளிவாக தெரியும். இதனை எபிகான்திக் ஃபோல்டு என்கிறார்கள். நன்றி - பிபிசி