பரிசும் தண்டனையும் - பாயும் பொருளாதாரம்
6 பாயும் பொருளாதாரம் ஒரு தொழில்துறையில் போட்டிக்கு அதிக நிறுவனங்கள் இல்லாமல் இரண்டே இரண்டு நிறுவனங்கள் இருந்தால் அதை ஒலிகோபோலி என்று குறிப்பிடுகிறார்கள். இதில் ஒரு நிறுவனம் செய்யும் விலைகுறைப்பை இன்னொரு நிறுவனமும் எதிர்கொண்டு அதற்கேற்ப தன்னை மாற்றியமைக்கவேண்டும். இல்லையெனில் வணிகத்தில் பாதிப்பு ஏற்படும். லாபமும், நஷ்டமும் இரு நிறுவனங்களின் செயல்பாட்டிலும் உள்ளது. ஒன்றையொன்றைச் சார்ந்தே வணிகத்தின் ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. கட்டுமானம், தொலைத்தொடர்பு ஆகிய துறைசார்ந்த பெரிய நிறுவனங்கள் வெளிநாட்டின் நிறுவனங்களை எதிர்க்க தங்களுக்குள் ஒப்பந்தம் செய்துகொண்டு இயங்குவதுண்டு. இதை கார்டெல் என குறிப்பிடலாம். இப்படி தங்களுக்குள் ஒப்பந்தம் செய்துகொண்டு இயங்குவது, அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும். பல்வேறு நாடுகளிலும் இப்படியான வணிகப்போக்கு நடவடிக்கையை சட்டவிரோதம் என்று அறிவித்துள்ளனர். எலன் மஸ்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் வழியாக தொலைத்தொடர்பு வசதியை இந்தியாவில் வழங்கப்போகிறார் என்றால் இந்திய மக்களுக்கு மகிழ்ச்சியான செய்திதான். ஆனால், ஆட்சித்தலைவருக்கு அணுக்கமான குஜராத் தொழிலதிப...