இடுகைகள்

ஓடிடி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கதையும் இயக்குநரும்தான் படத்திற்கு மிக முக்கியம்! - ராஜ்குமார் ராவ், இந்தி சினிமா நடிகர்

படம்
  ராஜ்குமார் ராவ் இந்தி சினிமா நடிகர் நீங்கள் பதாய் டோ படத்தில் நடித்த ஓரினச்சேர்க்கையாளர் பாத்திரமான ஷர்துல் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இதற்கு உங்கள் நீங்கள் எப்படி தயார் செய்துகொண்டீர்கள்? ஷர்துல் பாத்திரம் பிற ஓரினச்சேர்க்கையாளர் பாத்திரம் போல இருக்க கூடாது என முன்னமே நினைத்தோம். அந்த பாத்திரம் உண்மையாக இருக்கவேண்டுமென நினைத்தோம். சிறுநகரம் ஒன்றில் பிறந்து வளர்ந்தவனின் வாழ்க்கையில் பாலியல் என்பது சிறுபங்கு வகிக்கிறது. ஆனாலும் அது முக்கியமானது. தன்னை வெளிக்காட்டாமல் அவன் வாழ்கிறான். அவனைப் போலுள்ள பிறர் அவனை தொடும்போது அது அவனுக்கு தெரிந்துவிடுகிறது. அவன் விழிப்பாகவே இருக்கிறான். நானும் படத்தின் இயக்குநரான வர்தான் குல்கர்னி இந்த நீளத்திற்குத்தான் பாத்திரம் பற்றி பேசினோம். இதைத்தாண்டி கூடுதலாக நான் ஏதும் செய்யவில்லை. காதல் என்பது நீங்கள் உணர்வது அதனை வெளிக்காட்டலாம்.  ஷர்துல் ஒரு ஆணழகன். கட்டழகு உடலுக்காக பயிற்சி செய்தது கடினமாக இருந்தது. நான் சைவ உணவு சாப்பிடுபவன் என்பதால், சற்று கடினமான சவால்தான். ஆனாலும் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டேன். ஆண்மைத்தன்மை கொண்ட நாயகன் என்பதால்தான் பா

மொழியைப் பேச தெரியாமல் இன்னொரு மொழி படத்தில் நடிக்க முடியாது! - அர்ஜூன் ராம்பால், இந்தி நடிகர்

படம்
  அர்ஜூன் ராம்பால், இந்தி நடிகர் அர்ஜூன் ராம்பால் இந்தி நடிகர் லண்டன் டயரிஸ் படத்தில் உங்களுடைய பாத்திரம் தனிப்பட்ட ரீதியில் தாக்கம் ஏற்படுத்தும்படி இருந்ததா? தனியாக யாரும் இல்லாமல் ரகசியங்களை தேடித்திரியும் துப்பறிவாளன் ஒருவரின் கதை. பொதுவாக நாம் அனைவரும் பெருந்தொற்று காலத்தில் தனியாக இருந்திருப்போம். அப்போது கூட நமக்கென குடும்பம், மனிதர்கள் என ஒரு வட்டாரம் இருந்திருக்கும். ஆனால் இப்படி ஏதுமின்றி ஒரு மனிதன் இருந்தால் எப்படியிருக்கும்? நான் ஏற்று நடித்த பாத்திரம் அப்படித்தான் எனக்குள் சுவாரசியமான தாக்கத்தை ஏற்படுத்தியது.  ஓடிடி உங்களுக்கு சவாலான பாத்திரங்களை வழங்கியதா? அப்படி சொல்ல முடியாது. கடந்த சில ஆண்டுகளாக நான் நடித்த பல படங்கள் தவறான தேர்வுகளைக் கொண்டவை. அபர்ணா சென்னின் தி ரேப்பிஸ்ட், தாக்கத் ஆகிய படங்களை நான் தேர்ந்தெடுத்தேன். இவை உண்மையில் நடந்த நிகழ்ச்சிகளை அடிப்படையாக கொண்டவை. நீங்கள் தெலுங்கு நடிகர் பவன் கல்யாணுடன் நடிக்கவிருப்பதாக தகவல் கிடைத்ததே? நடிக்க கேட்டார்கள். எனக்கு தெலுங்கு மொழி தெரியாது. இந்த நிலையில் அங்கு போய் எப்படி நடிப்பது என நான் என்னால் முடியாது என மறுத்துவ

திரையுலகில் இருந்த அதிகார விளையாட்டை எதிர்கொள்ள கல்வி உதவியது! - ஸ்வரா பாஸ்கர், இந்தி நடிகை

படம்
                ஸ்வரா பாஸ்கர் நடிகை தானு வெட்ஸ் மானு படத்தில் பாயல் என்ற பாத்திரத்தில் நடித்து மக்களின் அபிமானம் பெற்றவர் . அனார்கலி ஆப் ஆரா என்ற படத்திலும் தனது நடிப்பை கவனிக்க வைத்தார் . ராஸ்பரி படத்தில் பாலியல் ஆர்வம் கொண்டவராக நடிப்பது , வீர் டி வெட்டிங் படத்தில் சுய இன்பம் அனுபவிக்கும் பெண் என ஸ்வரா பாஸ்கர் நடித்த பல்வேறு பாத்திரங்கள் பார்வையாளர்களுக்கு புதிய அனுபவம் தந்தவை . பல்வேறு பாத்திரங்களின் வழியாக நடந்த உங்கள் பயணத்தை எப்படி பார்க்கிறீர்கள் ? ஒருவர் நடிக்கும் பாத்திரத்தின் வழியாக பெண்களை வலிமையாக காட்டும் படங்கள் உருவாகிறது என்பதை நான் நம்பவில்லை . ஒருவர் தனது துறையில் வலிமையாக வெற்றியைக் கொடுக்கும்போது அவருக்கு நட்சத்திர அந்தஸ்து கிடைக்கிறது . சிறந்த நடிகர் ஒருவர் நடிக்கும்போது அதன் நீளம் அதனை பாதிப்பதில்லை . நாட்டில் உள்ள சிறந்த நடிகர்களான ஜானி வாக்கர் , பிரான் , அம்ரிஷ் ஆகியோர் முக்கியமான சிறிய பாத்திரங்களில்தான் நடித்து புகழ்பெற்றார்கள் . ஒவ்வொரு நடிகரும் அவரது பாத்திரத்தை நாயகராகவே நினைக்கிறார் . இந்த வகையில் நான் நடிக்கும் துணைநடிகை பாத்திர

ஓடிடி தளங்களும் சினிமாவைப் போல டிரெண்டை செட் செய்யும் காலம் தூரத்தில் இல்லை! ஜிதேந்திரகுமார், நடிகர்

படம்
                  ஜிதேந்திரகுமார் நடிகர் நீங்கள் ஐஐடி காரக்பூரில் படித்துவிட்டு மும்பைக்கு வந்தவர் . ஆழ்வார் நகரிலிருந்து வந்த உங்களுக்கு எப்படி நடிகராகும் ஆர்வம் வந்தது ? நீங்கள் நகருக்கு வருகிறீர்கள் . அங்கு உங்களுக்கு யாரையும் தெரியவில்லை என்பது கடினமான ஒன்றுதான் . ஆனால் நான் யூட்யூப் பிரபலமாக இருக்கும்போது நகருக்கு வந்தேன் . அப்போது தி வைரல் பீவர் குழுவினருக்காக நான் வீடியோக்களை இணைந்து பணிபுரிந்து வழங்கியுள்ளேன் . டிவிஎப் பிட்சர்ஸ் எனும் தலைப்பில் நாங்கள் வீடியோக்களை உருவாக்கி புகழ்பெற்றிருந்தோம் . சில போராட்டங்கள் இருந்தாலும் எப்போதும் வேலை இருந்தது . நாங்கள் டிஜிட்டல் ஊடகத்தில் தொடர்களை தயாரிக்க நினைத்தோம் . இதற்காக தயாரிப்பாளர்களை சந்தித்தபோது , இப்படி தொடர்களை தயாரிப்பது முக்கியமானது . எதிர்காலத்தில் திரைப்படங்களும் கூட இப்படி வெளியாகும் என்பதை கூறினோம் . இந்த வகையில் இப்படியொரு ஊடகம் உருவானது புதியவர்களுக்கு நிறைய வாய்ப்புகளைத் தரும் . அப்படியென்றால் நீங்கள் டிஜிட்டல் ஊடகத்தை அறிமுகப்படுத்தியவர் என்று கூறலாம் அல்லவா ? ஆம் நீங்கள் அப்படியும்

யாரும் ரீடேக்கை தேவையின்றி எடுக்க மாட்டார்கள்! - சஞ்சய் மிஸ்ரா, இந்தி நடிகர்

படம்
                  சஞ்சய் மிஸ்ரா இந்தி நடிகர்   இந்நாட்களில் உங்களை இயக்குவது எது ? நான் இப்போது நிறைய படங்களில் நடித்து வருகிறேன் . முதலில் ரோகித் ஷெட்டியின் சர்க்கஸ் படத்தில் நடிக்கிறேன் . இரண்டாவது , சினிமாவில் சிறந்த திறமையுள்ளவர்களுடன் பணியாற்றுவது . அந்த வகையில் நான் சந்தோஷ் சிவனுடன் பணியாற்றுகிறேன் . அவரிடம் உதவியாளராக வேலை செய்யவேண்டும் என்பது எனது ஆசை . அவர் இயக்கும் படத்தில் நான் நடிக்கவுள்ளேன் . அடுத்து பச்சன் பாண்டே படத்தில் நடிக்கவுள்ளேன் . இப்போதைக்கு நான் கவனத்தில் கொண்டுள்ளது இவைதான் . அடுத்து மார்ச்சுக்குப் பிறகுதான் பார்க்கவேண்டும் . நீங்கள் சாணக்யா படத்தில் 25 டேக்குகளை எடுத்தீர்கள் என்று ஒருமுறை கூறினீர்கள் . அது ஏன் ? இல்லை . உங்களுக்கு நீங்கள் நடிக்கும் ஷாட் போதுமானதாக இல்லாமல் இருக்கலாம் . அதனால்தான் அந்தளவு எண்ணிக்கை தேவைப்படுகிறது . இப்போது நடிக்கும் சர்க்க்ஸ் படத்தை எடுத்துக்கொள்ளுங்கள் . அதில் ஒரு காட்சிக்கு 19 டேக்குகள் எடுத்தேன் . ரோகித்திற்கும் எனக்கும் அதில் ஏதோ தவறு தென்பட்டது . நாங்கள் அதை வேடிக்கையாகவே எடுத்துக்கொண

ஓடிடி பிளாட்பாரங்களுக்கான தணிக்கை தடை பாதிப்பை ஏற்படுத்துமா? டேட்டா கார்னர்

படம்
                  நவம்பர் 9 அன்று , இணையத்தில் வெளியாகும் படங்கள் , பாடல்கள் , பேச்சு உள்ளிட்ட அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படுவதாக அறிவிக்கப்பட்டது . இதனை தகவல்தொடர்பு மற்றும் ஒளிபரப்புத்துறை கட்டுப்படுத்தும் . இதன் கீழ் இனி அனைத்து ஓடிடி சேவை வழங்கும் நிறுவனங்களும் , சமூக வலைத்தளங்கள் , இணையதளங்கள் வரும் . இந்த நிறுவனங்கள் இருக்கும் வெளிநாட்டு முதலீடுகளுக்கும் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது . இந்த வகையில் 26 சதவீதம் வெளிநாட்டு முதலீடுகள் மட்டுமே இவற்றில் இருக்கும் . மேற்கண்ட முதலீட்டிற்கு மேல் உள்ள செய்தி நிறுவனங்ளள் இதுபற்றிய விவரங்களை மத்திய அரசுக்கு வழங்கவேண்டும் . இதில் நிறுவனத்தின் இயக்குநர் , தலைவர் , உறுப்பினர்கள் என பல்வேறு விவரங்கள் இருக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது . அக்டோபர் 15, 2021 ஆம் ஆண்டிற்குள் வெளிநாட்டு முதலீடுகள் 26 சதவீதமாக்கப்படவேண்டும் என்ற மத்திய அரசு காலவரம்பு நிர்ணயித்துள்ளது . இதுபற்றி டிஜிபப் நிறுவனம் , மத்திய அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து ஊடகங்களை கட்டுப்படுத்த நினைக்கிறது . அரசின் இதுபோன்ற

ஓடிடி திரைப்படங்களை மக்கள் பார்ப்பது தியேட்டர்கள் இல்லாத காரணத்தால்தான்!

படம்
        கௌதம் தத்தா இயக்குநர், பிவிஆர் சினிமாஸ்       கௌதம் தத்தா இயக்குநர், பிவிஆர் சினிமாஸ் சினிமா துறை இப்போது எப்படி இருக்கிறது? வருமானம் பூஜ்ஜியமாகிவிட்டது. 4500 பணியாளர்கள் வரை வேலையிலிருந்து நீக்கிவிடும் இக்கட்டு நேர்ந்துள்ளது. பாதுகாப்பு, சுத்தம் செய்வது ஆகிய பணிகளைச் செய்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போது மால்கள் மெல்ல திறக்கப்பட்டு வருகின்றன. தியேட்டர்களை திறக்க அரசு உத்தரவிடும் என காத்திருக்கிறோம். தியேட்டர்களை திறக்க ஏன் இவ்வளவு தாமதமாகிறது? அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கச்சொல்லி தியேட்டர்களை அனுமதிக்கலாம். நாங்கள் சிரமப்படுகிறோம் என்பதை அரசு உணர்ந்திருக்கும் என நினைக்கிறேன். கடந்த ஆறு மாதங்களில் இத்துறை சார்ந்தவர்கள் இக்கட்டான சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளனர். உங்கள் நிறுவனம் எப்படி நிலையை சமாளித்தது? மிகவும் கடினமான சூழ்நிலைதான். எங்கள் நிர்வாக குழு முதலில் சம்பள வெட்டு நடவடிக்கையை தொடங்கி இருமாதங்களுக்கு அமல் படுத்தியது. பின்னாளில் சம்பளவெட்டு கடுமையாக இருந்தது. தியேட்டர்கள் தொடங்கப்பட்டால என்ன மாதிரியான திட்டங்களை செயல்படுத்தவிருக்கிறீர்கள் டிஜிட்டல் வழியில் ட