இடுகைகள்

ஜிம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அன்றைய காலம் தொட்டு இன்றைய வரையில்.... உடற்பயிற்சி

படம்
  காலம்தோறும் உடற்பயிற்சி 1500 கி.மு மெக்சிகோவில் பெருகிய ஆல்மெக் மக்களின் குடியேற்றம் புதிய விளையாட்டை உருவாக்கியது. பெரிய ரப்பர் வளையத்திற்குள் வீரர்கள் தங்கள் இடுப்பு, கால்களை பயன்படுத்தி உள்ளே புகுந்து வெளியே வரவேண்டும்.  1400 கி.மு பரோகா கல்லறையில் மன்னர்கள் குத்துச்சண்டை, வில் போட்டி, ஓடுதல் ஆகியவற்றில் மக்களை ஊக்குவித்திருப்பது தெரிய வந்துள்ளது.  776 கி.மு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறத் தொடங்கியது. ஒருவர் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது நாடு பிற நாடுகள் மீது போர்தொடுக்க உதவும் என நம்பினர்.  1316 இரு சுவர்களுக்கு நடுவில் கைப்பந்து விளையாடும் பழக்கம் பிரெஞ்சு நாட்டில் இருந்தது. இந்த விளையாட்டிற்கு ஜீ டி பாமே என்று பெயர்.  14-15ஆம் நூற்றாண்டு மத்தியகால ஐரோப்பாவில் கும்பலாக கால்பந்து விளையாடுவது வழக்கமாக இருந்தது. எந்த வரைமுறையும் இல்லாமல் கால்பந்தை உதைத்து விளையாடும் இந்த விளையாட்டு போட்டிகள் பலவும் வன்முறையில் முடிந்தன. எனவே. இந்த விளையாட்டு தடைசெய்யப்பட்டது.  1553 ஸ்பெயின் நாட்டு மருத்துவர் கிறிஸ்டோபல் மென்டெஸ் என்பவர், முதல் உடற்பயிற்சி நூலை எழுதி வெளியிட்டார். நடைபயிற்சி செய்வத

உடற்பயிற்சியே ஒரு மருந்துதான்!

படம்
  உடற்பயிற்சியே ஒரு மருந்துதான்! உடற்பயிற்சி செய்யவே ஒருவர் சற்றேனும் ஆரோக்கியமாக இருக்கவேண்டும். யோகா செய்ய பொறுமை தேவை. ஆனால் எடைகளை தூக்க, கயிறுகளை இழுக்க, பலம் தேவை. இப்படி செய்யும் உடற்பயிற்சி ஒருவருக்கு மருந்தாக செயல்படுகிறது என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். உடற்பயிற்சி செய்பவர்கள், திண்ணென்ற மார்பை பிறருக்கு காட்ட முயல்வார்கள். ஆனால் அதை பயில்வதன் மூலம் நோயை விரட்ட முடியுமா? மார்க் டர்னோபோலோஸ்கி என்ற ஆராய்ச்சியாளர், முன்கூட்டியே வயதாகுவதை ஏற்படுத்தும் மரபணு பிரச்னை தொடர்பாக ஆராய்ந்தார். இதில், உடற்பயிற்சி செய்தவர்களுக்கு நோயின் பாதிப்பு சற்று குறைவாக இருந்தது. பொதுவாக உடல் ஆரோக்கியம் என்ற வகையில் உடற்பயிற்சி சரிதான் என்பவர்களும் கூட பயிற்சிகளை அடர்த்தியாக தீவிரமாக செய்யத் தொடங்குபவர்களை நேரத்தை வீணடிக்கிறான் என்பார்கள். உண்மையில், உடற்பயிற்சி முன்கூட்டியே நோய்களை தடுப்பதோடு, உடலில் உள்ள நோய்களின் பாதிப்பையும் குறைக்கிறது என்பதே உண்மை.  ஆராய்ச்சியாளர் மார்க், எலிகளை வைத்து செய்த சோதனையில் பல்வேறு உண்மைகளைக் கண்டறிந்தார். அதில், உடற்பயிற்சி செய்ய பயிற்றுவிக்கப்பட்ட எலிகளின் ரத்தத்தில

மரபணு தடுத்தாலும் உடல் எடையைக் குறைக்க முடியும்!

படம்
  இயற்கையாகவே சிலருக்கு உடல் பழனி படிக்கட்டு போல கட்டாக இருக்கும். திருமணமானபிறகு, செல்வச்செழிப்பில் பூரித்தால் உடல் சற்று பூசினாற்போல மாறி குனுக் மினுக் என மாறுவார்கள். ஆனால் சிலர் வெளியேற்றம் நாவலில் வரும் குற்றாலிங்கம் போல வேளைக்கு இருபத்தைந்து இட்லிகளை உள்ளே இறக்கினாலும் உடலில் வேறுபாடே தெரியாது. பரம ரோகியாக இருந்தாலும்கூட யோகி போல வெளியே தெரிவார்கள். அத்தனைக்கும் காரணம் என்ன? மரபணுக்கள்தான்.  சிலருக்கு அடிப்படையான உடற்பயிற்சி செய்து நாற்றம் பிடித்த சோயா சங்சை ஊறவைத்து தின்றாலே உடல், கீரை சாப்பிட்ட பாப்பாய் போல கட்டாக அமைந்துவிடும். ஆனால் இன்னும் சிலர் என்னென்னமோ உடற்பயிற்சி செய்தாலும் கூட உடலில் சுண்டைக்காய் அளவு மாறுதல் மட்டுமே தெரியும். இதற்கெல்லாம் காரணம் நாம் செய்த வினை அம்புட்டு பலமாக இருக்குதோ என நினைத்து கவலை கொள்ள வேண்டியதில்லை. மரபணு காரணமாக சில பிரச்னைகள் வந்தாலும் கூட நம்மால் முடிந்த பிரயத்தனங்களை செய்தால் போதும் உடல் எடை குறைவதோடு உடல் கட்டமைப்பும் பலம் பெறும்.  சோத்துக்கு பஞ்சமில்லாதவர்கள்தான் உடற்பயிற்சி பற்றி யோசிக்கவேண்டும். உடல் எடை என்றாலே அவர் கண்டிப்பாக பசி, பட

வேலூரின் தனித்துவமான பாடிபில்டர்! - சங்கீதா

படம்
  வேலூரில் உள்ள மார்க்கெட்டில் சுமைகளை தூக்குவதுதான் சங்கீதாவின் ஒரே வேலை. சட்டை, பேண்ட் போட்டு வேலைக்கு தயாராக இருக்கிறார். தினசரி இப்படி வேலை செய்தால்தான், வீட்டில் உள்ள இரு குழந்தைகளைக் காப்பாற்ற முடியும். 35 வயதான சங்கீதாவை விட்டு கணவர் விலகிப் போய்விட்டார்.  தினக்கூலியாக இப்படி வேலை பார்த்தாலும் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்வதுதான் சங்கீதாவின் முக்கியமான லட்சியம். அண்மையில் இங்கு நடைபெற்ற பெண்களுக்கான பாடி பில்டர் போட்டியிலும் பங்கேற்று வெற்றி பெற்றிருக்கிறார்.  நான் பேண்ட் சர்ட் போட்டிருப்பதை பார்த்து நிறையப் பேர் எதற்கு இந்த உடை என்று கேட்டிருக்கிறார்கள். எனது வேலைக்கு இது உதவியாக இருக்கிறது. நான் நேர்மையற்ற எந்த விஷயத்தையும் செய்யவில்லை. நான் இப்போது பாடிபில்டர் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு, என்னை விமர்சனம் செய்தவர்கள் கூட பாராட்டுகிறார்கள் என்றார் சங்கீதா.  ஜிம்மில் சங்கீதாவிற்கு பயிற்சி கொடுப்பவர், குமரவேல் என்ற ஜிம் மாஸ்டர். இவர் கொடுத்த ஊக்கத்தில்தான் சங்கீதா போட்டிகளுக்கு தயாராகி வருகிறார். பாடிபில்டிங் என்பது அதிக செலவு பிடிக்கும் துறை. பயிற்சி மட்டுமல்ல. சத்தான உணவ