அன்றைய காலம் தொட்டு இன்றைய வரையில்.... உடற்பயிற்சி
காலம்தோறும் உடற்பயிற்சி
1500 கி.மு
மெக்சிகோவில் பெருகிய ஆல்மெக் மக்களின் குடியேற்றம் புதிய விளையாட்டை உருவாக்கியது. பெரிய ரப்பர் வளையத்திற்குள் வீரர்கள் தங்கள் இடுப்பு, கால்களை பயன்படுத்தி உள்ளே புகுந்து வெளியே வரவேண்டும்.
1400 கி.மு
பரோகா கல்லறையில் மன்னர்கள் குத்துச்சண்டை, வில் போட்டி, ஓடுதல் ஆகியவற்றில் மக்களை ஊக்குவித்திருப்பது தெரிய வந்துள்ளது.
776 கி.மு
ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறத் தொடங்கியது. ஒருவர் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது நாடு பிற நாடுகள் மீது போர்தொடுக்க உதவும் என நம்பினர்.
1316
இரு சுவர்களுக்கு நடுவில் கைப்பந்து விளையாடும் பழக்கம் பிரெஞ்சு நாட்டில் இருந்தது. இந்த விளையாட்டிற்கு ஜீ டி பாமே என்று பெயர்.
14-15ஆம் நூற்றாண்டு
மத்தியகால ஐரோப்பாவில் கும்பலாக கால்பந்து விளையாடுவது வழக்கமாக இருந்தது. எந்த வரைமுறையும் இல்லாமல் கால்பந்தை உதைத்து விளையாடும் இந்த விளையாட்டு போட்டிகள் பலவும் வன்முறையில் முடிந்தன. எனவே. இந்த விளையாட்டு தடைசெய்யப்பட்டது.
1553
ஸ்பெயின் நாட்டு மருத்துவர் கிறிஸ்டோபல் மென்டெஸ் என்பவர், முதல் உடற்பயிற்சி நூலை எழுதி வெளியிட்டார். நடைபயிற்சி செய்வதே ஆரோக்கியமான உடற்பயிற்சி என கருத்து தெரிவித்தார்.
1786
தினசரி இரண்டு மணிநேரங்களுக்கு குறையாமல் உடற்பயிற்சி செய்வது நல்லது என தாமஸ் ஜெஃபர்சன் கருத்து தெரிவித்தார்.
1824
நடனம், ஐஸ் ஸ்கேட்டிங், குதிரையேற்றம் கடந்து பல்வேறு உடற்பயிற்சிகளை செய்ய பெண்களும் ஊக்குவிக்கப்பட்டனர்.
1915
உடல்நலமில்லாதவர்கள் தவிர பிறர் அனைவரும் வயது பேதமின்றி தினசரி உடற்பயிற்சி செய்வது அவசியம் என அமெரிக்க சர்ஜன் ஜெனரல் அலுவலகம் செய்தி வெளியிட்டது.
1939
ஆக்ஸ்ஃபோர்ட், கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகங்கள் உடற்பயிற்சி பற்றி ஆராய்ந்தன. அதன் அடிப்படையில், உடற்பயிற்சிக்கு எதிரான கருத்துகள் தவறானவை என நிரூபிக்கப்பட்டது.
1977
நடிகர் அர்னால்ட் நடித்த பம்பிங் அயர்ன் என்ற படம் மேற்கு நாடுகளில் வெளியானது. இந்த படம் காரணமாக, உடற்பயிற்சி மோகம் தீவிரமானது.
1982
நடிகை ஜேன் ஃபாண்டா உடற்பயிற்சி வீடியோ ஒன்றை வெளியிட்டார். 17 மில்லியன் பிரதிகள் விற்ற வீடியோ காரணமாக உடற்பயிற்சி என்பது அனைவரின் கவனத்திற்குள்ளானது.
2008
வை ஃபிட் நிறுவனம், மக்கள் தங்கள் அறைக்குள்ளேயே உடற்பயிற்சிகளை செய்யும் கருவிகளை அறிமுகப்படுத்தியது. இதைப் பயன்படுத்தி யோகா, ஏரோபிக்ஸ், பளுதூக்கும் பயிற்சிகளை ஒருவர் செய்யலாம்.
------------------------
400 கிமு
ஹிப்போகிரேட்ஸ், நடைபயிற்சி, குத்துச்சண்டை, புஷ்அப் ஆகிய பயிற்சிகள் நோயைத் தடுப்பதோடு தசைகளை வலுவாக்கும், செரிமானத்திற்கு நல்லது என்று கூறினார்.
200 கிமு
சத்தம் போட்டு படிப்பதை உடற்பயிற்சி என்று தத்துவவாதி செல்சஸ் கூறினார். இப்படி செய்வதை வியர்வை வெளிவந்தால் நிறுத்திக்கொள்ளலாம் என்றார்.
இதே காலகட்டத்தில் விலங்குகளான மான், புலி, குரங்கு, நாரை ஆகியவற்றின் உடல்மொழியைக் கொண்ட உடற்பயிற்சியை ஹூவா துவோ பரிந்துரை செய்தார். இதன் மூலம் வயதாவது தள்ளிப்போடப்படுவதோடு, உடலும் எடையற்று இருக்கும் என கூறப்பட்டது. இதுவே டாய்ச்சி பயிற்சியின் அடிப்படை.
1769
ஸ்காட்லாந்து மருத்துவர் வில்லியம் பூச்சன், மனிதர்களுக்கு நேரும் நோய்கள், பிரச்னை, ஆயுள் குறைவுக்கு முறையாக உடற்பயிற்சி செய்யாததே காரணம் என்றார்.
1772
நெஞ்சுவலி வந்த நோயாளிக்கு, மரத்தை அறுக்கும் வேலையை முப்பது நிமிடங்கள் செய்தபிறகு குணமாகிவிட்டது என ஆங்கில மருத்துவர் வில்லியம் ஹெபர்டன் கூறினார்.
1780
பக்கவாதம் அல்லது அறுவை சிகிச்சை செய்தபிறகு ஒருவரின் உடல் நல்ல நிலைக்கு திரும்ப உடற்பயிற்சி முக்கியமானது.
1951
அமெரிக்காவில் ஜாக் லாலேன் என்பவர் ஃபெமிலியர்ஸ் அமெரிக்கன்ஸ் என்ற தொடரை நடத்தினார். முப்பது ஆண்டுகள் நடந்த நிகழ்ச்சியில், உடற்பயிற்சிக் கருவிகள், செய்யும் முறைகள் பற்றி விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.
1960
முன்னாள் அமெரிக்க அதிபர் கென்னடி, உடற்பயிற்சி செய்பவர்களுக்கு உடல் கட்டுக்கோப்பாக இருக்கும் என ஸ்போர்ட்ஸ் இல்லஸ்டிரேட் பத்திரிகையில் கட்டுரை ஒன்றை எழுதினார்.
2014
அமெரிக்காவில் மாரத்தான் ஓட்டப்போட்டிகள் மீது காதல் அதிகரித்தது. இதில் பங்குபெறுபவர்களின் எண்ணிக்கை அரை மில்லியனை தாண்டியது. இறுதிக்கோட்டை எட்டிப்பிடிப்பதிலும் விடாமுயற்சி காட்டினர்.
2020
பெருந்தொற்று வந்த காரணமாக உடற்பயிற்சி நிலையங்களில் ஆண்டு சந்தா கட்டியதோடு பயிற்சிக்கும் ஆட்கள் குவிந்தனர். வீட்டுக்குள்ளும் உடற்பயிற்சி செய்வதற்கான இடம், கருவிகளை மக்கள் வாங்கத் தொடங்கினர்.
மெரில் ஃபேப்ரி
டைம் வார இதழ்
கருத்துகள்
கருத்துரையிடுக