பெண்களுக்கு உடற்பயிற்சி அவசியத்தேவை ஏன்?








 திருமணமான பெண்கள், ஆண்கள் என இரு பாலினத்தவருமே உடற்பயிற்சி செய்வது குறைந்துபோய்விட்டது. அதிக ஆர்வம் காட்டுவதில்லை. இதன் காரணமாக நாற்பது வயதிலேயே அறுபது,எழுபது வயது ஆனவர்கள் போல தளர்ந்து தசைகள் தொங்கிப்போய் கண்களுக்கு கீழே கறைபடிந்துவிடுகிறது. குறிப்பாக பெண்களுக்கு உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைவதால், எலும்பு பலவீனமாகிறது. இதை சரிசெய்ய எடைப் பயிற்சிகளை செய்யவேண்டும். அதாவது, ஜிம்மில் எடைகளை தூக்கிப் பயிற்சி செய்யவேண்டும். 


எடைகளை தூக்கி உடற்பயிற்சி செய்தால் உடல் பெரிதாக மாறிவிடும். அழகு குறைந்துவிடும் என நினைப்பது மூடநம்பிக்கை. உடற்பயிற்சிகளை செய்யத் தொடங்கியவர், தினசரி செய்யும் வேலையை ஊக்கமாக செய்யமுடியும். காயம்படாது. எலும்பு முறிவு, சுளுக்கு, தசைப்பிடிப்பு ஆகியவை தவிர்க்கமுடியும். 


ஏரோபிக், டாய்ச்சி, எடைப்பயிற்சி என பல்வேறு பயிற்சிகள் உண்டு. ஒருவரின் உடலைப் பொறுத்து எது சௌகரியமோ அதை தேர்ந்தெடுத்து செய்யலாம். அனைத்து உடற்பயிற்சியிலும் பயன்கள் உண்டு. சிலருக்கு ஜிம்மில் சென்று பயிற்சிகளை செய்வதற்கு கூச்சம் இருந்தால், வீட்டில் செய்வதற்கான முயற்சிகளை செய்யலாம். கருவிகளை  வாங்கிப்போட்டு பட்டியல் போட்டு பயிற்சிகளை செய்யத் தொடங்கலாம். 


உடற்பயிற்சியை செய்யாதபோது படிக்கட்டில் ஏறி இறங்குவது, குழந்தைகளை தூக்குவது ஆகியவை கூட கடினமாக மாறும். இதற்கு காரணம், தசைகள் பயிற்சிக்கு பழகாததே. நூறு கிராம் உருளைக்கிழங்கு சிப்ஸை நாற்பது ரூபாய்க்கு வாங்கித் தின்றுகொண்டே லிப்டில் சென்று வந்துகொண்டிருந்தால், உடல் பலவீனமடைவது உறுதி. தவிர்க்கவே முடியாது. அமெரிக்காவில் 47-98 வயது வரையிலான 30 ஆயிரம் பெண்களை சோதித்தனர். இதில் உடற்பயிற்சிசெய்த பெண்களுக்கு இதயநோய், நீரிழிவு, பக்கவாதம் ஆகியவை ஏற்படும் வாய்ப்பு குறைவாக உள்ளது தெரிய வந்தது. 


வீட்டுவேலைகள். தோட்ட வேலைகள், நிற்பது ஆகியவற்றை உடற்பயிற்சிகள் என சிலர் நம்பலாம். ஆனால் முறையான உடற்பயிற்சி கிடையாது. இதனால் கலோரி குறையும் என நினைக்காதீர்கள்.யோகாவைக் கூட செய்யலாம். முறையான வழிகாட்டி மூலம் செய்தால் கிடைக்கும் பயன்கள் ஏராளம். அதை கவனத்தில் கொள்ளவேண்டும். உடற்பயிற்சியை தினசரி செய்தாலே அதன் பயன்களை மெல்ல கண்கூடாகவே பார்க்கலாம். சிலருக்கு உடல் அமைப்பை பொறுத்து பயன்கள் தெரிய காலமாகலாம். 


டைம் வார இதழ் 

pinterest

கருத்துகள்