நாட்டை நிலைநிறுத்த போராடி வரும் ரிசர்வ் வங்கிக்கு வயது 90!

 













ரிசர்வ் வங்கிக்கு வயது 90


இன்று அனைத்து ஜனநாயக அமைப்புகளும் சீரழிவுப்பாதையில் உள்ளன. காவிக்கட்சி ஆட்கள் உள்ளே புகுந்து எளிய மக்களின் நம்பிக்கையாக உள்ள அனைத்து அமைப்புகளையும் உருக்குலைத்து வருகிறார்கள். அதில் முக்கியமான அமைப்பு, ரிசர்வ் வங்கி. 


1935ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி தொடங்கப்பட்ட மத்திய வங்கி நிர்வாக அமைப்பு. நாட்டிலுள்ள அனைத்து வங்கிகளுக்குமான நெறிமுறைகள், நிதி நிர்வாகம், பணநோட்டுகள் மேம்பாடு, பணவீக்கம் கட்டுப்பாடு, வட்டிவிகிதம், வங்கிமுறையை சீரமைப்பது ஆகியவற்றை செய்து வருகிறது. தொண்ணூறாண்டு பயணத்தில் நிறைய ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து வந்துள்ளது ரிசர்வ் வங்கி. 


செயல்பாடு ஏப்ரல் ஒன்று என்றாலும் திட்டம் தொடங்கியது, 1935ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி. அப்போதே அரசியலமைப்பு சட்டப்படி உரிமைகள், கடமைகள், வகுத்து தனியாக சுயாட்சியாக செயல்படுவதற்கான சிந்தனைகள் வடிவம் பெற்றுவிட்டன. முதல் ஆளுநராக ஆஸ்பர்ன் ஆர்கெல் என்பவர் பொறுப்பேற்றார். சிடி தேஷ்முக் என்பவர் முதல் இந்திய ஆளுநராக பொறுப்பேற்றார். 


பிரிவினை காலத்தின்போது பாகிஸ்தான், இந்தியா என இருநாடுகளுக்குமான நிதி நிர்வாகத்திற்கு பொறுப்புள்ள அமைப்பாக ரிசர்வ் வங்கி இருந்தது. பொதுவாக, சுயாட்சி பெற்ற அமைப்புதான். ஆனால் அரசியல் கட்சிகள் அதிகாரத்தை பயன்படுத்தி வளைக்க முயலும்போது அதை எதிர்த்து நிற்பதும் உண்டு. 


தொண்ணூற்றி ஒன்றாம் ஆண்டு. கச்சா எண்ணெய் விலை பேரளவில் அதிகரித்தது. அதை வாங்க இந்தியாவிடம் அந்நிய செலாவணி கையிருப்பில்லை. அப்போது ரிசர்வ் வங்கி, தன்னிடமிருந்த 46 டன் தங்கத்தை இங்கிலாந்து வங்கியில் அடமானம் வைத்து அந்நிய செலாவணியைப் பெற்றது. ஏறத்தாழ அந்த நடவடிக்கையை எடுக்காவிட்டால் இந்தியா திவாலாகும் நிலையி்ல் இருந்தது. அந்த காலகட்டத்தில் ரூபாயின் மதிப்பு மூன்று நாட்களில் இருமுறை மதிப்பிழந்தது. 


தொண்ணூற்று ஒன்று முதல் ஐந்து (1991-95)வரையிலான காலகட்டத்தில் தனியார் வங்கிகள் தொடங்கப்பட உரிமம் வழங்கப்பட்டது. கடன் வழங்கியோர் விதித்த வட்டிக்கு கட்டுப்பாடு இல்லாமல் ஆனது. அதுவரை ரூபாயை மாற்றுவதற்கு இருந்த கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டன. வியாபாரம் சற்று இலகுவாக மாறத் தொடங்கியது. 


1982ஆம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திரா காந்தி, திட்டக்குழுவில் செயலாளராக இருந்த மன்மோகனை ஆர்பிஐ ஆளுநராக மாற்றினார். ஐஜி படேலுக்கு பிறகு மன்மோகன் அதன் ஆளுநரானார். 1985ஆம் ஆண்டு ஜனவரி பதினான்காம் தேதி வரை அங்கு பணியாற்றிய மன்மோகன், வங்கி சீர்திருத்தங்கள், நிதிக்கொள்கை செயல்பாடுகளை வலுவாக்க திட்டங்களை உருவாக்கினார் . செயல்படுத்தினார். 


சர்வதேச கடன் வணிக வங்கி என்ற வெளிநாட்டு வங்கிக்கு அனுமதி அளிக்க மன்மோகன் சிங் மறுத்தார். இந்த வங்கிக்கு பின்னணியில் பாகிஸ்தான் நாட்டு தொழிலதிபர் ஆகா ஹாசன் அபேடி இருந்தார். இவ்விவகாரம் காரணமாக  வங்கிகளுக்கு உரிமம் வழங்கும் அதிகாரத்தை ஆர்பிஐயிடமிருந்து பறிக்க அமைச்சரவை மூலம் முயற்சிகள் நடைபெற்றன. இதனால், நொந்துபோன மன்மோகன் தனது பணிவிலகல் கடிதத்தை நிதி அமைச்சர், பிரதமர் என இருவருக்கும் அனுப்பி வைத்தார். இதுபற்றி மன்மோகன் சிங்கின் மகள் தமன் சிங் எழுதிய ''ஸ்ட்ரிக்ட்லி பர்சனல் - மன்மோகன் அண்ட் குர்சரண்'' என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அன்றைய ஆளும் அரசு, வெளிநாட்டு வங்கிக்கு ஆர்பிஐ உரிமம் வழங்கி செயல்பட அனுமதிக்கவேண்டும் என விரும்பியது. ஆனால் மன்மோகன் அதை ஏற்கவில்லை. 


இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்வராஜ் பால் என்ற தொழிலதிபரின் நிறுவனங்களை வாங்குவது தொடர்பான விவகாரத்திலும் மன்மோகனுக்கும், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கும் வேறுபட்ட கருத்துகள் இருந்தன. இந்த விவகாரத்தில் மன்மோகன் ஆளுநர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு திட்டக்குழுவிற்கு மாற்றப்பட்டார். இந்த முடிவை அப்போதைய பிரதமர் ராஜிவ்காந்தி எடுத்ததாக முகர்ஜி தன்னுடைய 'டர்புலன்ட் இயர்ஸ்' என்ற நூலில் எழுதியுள்ளார். 


ரிசர்வ் வங்கி ஆளுநர்களுக்கும், நிதி அமைச்சர்களுக்குமான உறவு எப்போதுமே சீராக இருந்ததில்லை. இந்த வகையில் ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த சுப்பாராவ், அன்றைய நிதியமைச்சரான சிதம்பரத்தை தன்னுடை கருத்துகளை என்மீது திணிக்கிறார். பிரதமர் கூட என்னை இதுபற்றிய விவரங்கள் கேட்கவில்லை. நான் என்னுடைய கருத்தை கூறியபிறகும் தன்னுடைய கருத்தை என்மீது திணிக்க முயல்கிறார்கள் என்று கருத்து கூறினார்.


 அடுத்து முக்கிய விவகாரத்தைப் பார்ப்போம். ரிசர்வ் வங்கி ஆளுநரான உர்ஜித் படேல் என்பவர், ஆர்பிஐ உபரி டிவிடெண்டை மத்திய அரசுக்கு வழங்கவேண்டும் என காவிக்கட்சி மிரட்டியதால் இரண்டே ஆண்டுகளில் வேலையை ராஜினாமா செய்துவிட்டு சென்றுவிட்டார். இ்ங்கும் நிதியமைச்சகத்தின் நெருக்கடி முக்கியமான காரணி. 


ஆளுநர் ஒய் வி ரெட்டி தலைமையிலான ரிசர்வ் வங்கி, 2008ஆம் ஆண்டின் பொருளாதார மந்தநிலையை ஒருங்கிணைந்த நிர்வாகம், கட்டமைப்பு, சிறிது அதிர்ஷடம் மூலம் கடந்து வந்தது. சுப்பாராவ் காலத்தில் தாராளவாத கொள்கைகள் மூலம் இந்தியா பொருளாதார வளர்ச்சியைப் பெறத் தொடங்கியது. ஆளுநர் ரகுராம் ராஜன், தனது பதவிக்காலத்தில் உலகளவில் ரூபாயை பிரபலப்படுத்தினார். வங்கிகள் கிளைகளை தொடங்கக்கூட உரிமம் பெற வேண்டியிருந்தது. அதை நீக்கினார். இதனால் வங்கிகள் தங்களது வணிக செயல்பாட்டை சுதந்திரமாக செய்யத் தொடங்கின. 


2016ஆம் ஆண்டு, நவம்பர் எட்டு அன்று இரவில் பிரதமர் மோடி பணமதிப்பு நீக்கத்தை அறிவித்தார். காந்தியின் புகைப்படம் கொண்ட ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அரசால் அறிவிக்கப்பட்டது. செல்லாது போன கரன்சி தாளுக்கு மாற்றாக, ஐநூறு, இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் புதிதாக அச்சடிக்கப்பட்டு நிதானமாக வெளிவந்தன. 


வங்கிகளில் செல்லாது போன பணத்தைக் கொடுத்து வேறு நோட்டுகளை மாற்றிக்கொள்ள மக்கள் இரவு பகல் என இல்லாமல் க்யூவில் காத்திருந்தனர். ஒரே நாளில் ஒட்டுமொத்த ஏழை, விளிம்பு நிலையில் வாழும் மக்கள் கையில் காசு இல்லாமல் உணவின்றி தவிக்கத் தொடங்கினர். அதேநேரம், ரொக்கமில்லாமல் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் முறை வலுக்கட்டாயமாக செயல்பாட்டிற்கு வந்தது. யுபிஐ வசதி இப்படியான காலத்தில் அமலுக்கு வந்ததுதான். அன்றைய நாளில் வெற்றிகரமாக இயங்கியது, பேடிஎம் என்ற ஒரே ஒரு நிறுவனம்தான். அந்த நிறுவனத்தின் வணிக நடவடிக்கைகளையும் ரிசர்வ் வங்கி இப்போது நிறுத்தி வைத்துவிட்டது.   


கறுப்பு பணத்தை ஒழிக்கவென கூறப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கை மூலம் ஏழை, விளிம்பு நிலை மக்கள் அழிக்கப்பட்டனர். பிறர், பொருளாதாரரீதியாக ஒடுக்கப்பட்டனர். ஏராளமான தொழில்நிறுவனங்கள் மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு மூலம் பயன் பெற்றதை விட இழந்ததே அதிகம். நஷ்டம், தொழிலகங்களை மூடுதல் என்பது தினசரி நடக்கும் செய்திகளாக மாறின. நாட்டின் உள்நாட்டு உற்பத்தி 1.5 சதவீதத்திற்கு சரிந்தது. ரிசர்வ் வங்கி நாட்டில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பேரிடரையும் சமாளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. அன்றைய ஆளுநராக இருந்தவர் உர்ஜித் படேல். 

பெருந்தொற்று காலத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்தவர், சக்திகாந்த தாஸ். தாராளவாத கொள்கை மூலம் பணவீக்கம் அதிகரித்தது. அதைக்குறைக்க வட்டி சதவீதத்தை மாற்றி மாற்றி அமைப்பதே நடப்பு ஆளுநரின் பணி. அதை சிறப்பாக செய்து வருகிறார். 


ஐஇ கட்டுரையைத் தழுவியது


தீரன் சகாயமுத்து - பிரதர்ஹூட் சொசைட்டி 

pinterest

கருத்துகள்